சோ ஸ்வீட் வலைப்பூ 1

பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்

எனது இணய சஞ்சரிப்புகள் அனைத்தும் ஜாக்கி சேகரின் வலைப்பூவை பார்க்காது நிறைவடையாது. மனுஷன் அப்படி ஒரு சிநேகமாய் எழுதுவார். ரொம்ப நாள் வாசிப்பின் பின் தல ஒரு ஜாலி பேர்வழி என்றுமட்டும் நினைதிருந்தேன். அய்யாவிற்கு எங்கிருந்துதான் டைம் கிடைக்குமோ தெரியாது அத்துணை படங்களையும் பார்த்துவிட்டு விமர்சனம் எழுதிக்குமித்துவிடுவார். நானும் ஒரு படப்பைத்தியம் என்பதால் அய்யாவோட வலைப்பூவை வெறிகொண்டு மேய்வது வாடிக்கை. திரைவிமர்சனம், சென்னை வாழ்வியல் குறிப்புகள் என பல பதிவுகள் ஜாலி ரகம். குறிப்பா ஐயாவோட ஏ ஜோக் பகுதி பார்த்துட்டு சுத்த நாரப்பயலகீரானே என்றுதான் மனம் நினைத்தது.
புதிதாக பதிய வருபவர்களுக்கு நான் ஜாக்கியின் பக்கங்களையும் அவரது சைட் மீட்டரையும் காண்பிப்பது வழக்கம். ஒரு நல்ல பீல் கிடைக்கும் அல்லவா.
புதுவருசமும் அதுவுமா (நமக்கு இந்த எழுமிச்ச பழத்தை எடுத்துக்கிட்டு காக்காபுடிக்கிற வேலையெல்லாம் இல்லாத காரணத்தினால்) நம்ம வலைப்பூவை படிப்போம் என்று உட்கார்ந்தேன். சில பதிவுகளின் பின்னர் அம்மா என்றோர் பதிவு. பய என்ன செண்டிமெண்டா தாக்றானே என நினைத்து படிக்க ஆரம்பித்தேன். முதல் சில வரிகளுக்குள் அந்தப்பதிவின் ஒவ்வொரு எழுதும் எனது இதயத்தில் இறங்க முடிக்கும்முன் கண்கள் குளமகட்டிவிட்டன.

ஜாக்கியின் வெற்றி வெறும் திரைவிமர்சனங்கள் மட்டும் அல்ல அவரது பாசாங்கில்லா எழுத்தில் இருப்பதை உணர்த்த தருணம் அது. ஜாக்கீயினால் எடுக்க இயலாமற்போன அவரின் தாயாரின் புகைப்படம் வாசிப்போர் அனைவரின் இதயத்திலும் சட்டமிட்டு மாட்டப்பட்டிருக்கும். தனது இயலாமையை அன்னை மீது கோபமாய் வெடித்ததை நினைவுகூரும் நேர்மைதான் சேகரை உயர்த்தி உள்ளது.
அந்த பதிவை அப்படியே பிரின்டவுட் எடுத்து வைத்திருக்கிறேன் வகுப்பில் என்றாவது ஒருநாள் மாணவர்களுடன் பகிர்வதற்காக.
என்னை நெகிழ்த்திய அந்த பதிவு
http://www.jackiesekar.com/2009/08/blog-post_30.html
ஜாக்கியின் சில திரை விமர்சனங்கள்
http://www.jackiesekar.com/2012/02/marina-2012.html
http://www.jackiesekar.com/2012/01/faces-in-crowd2011.html
http://www.jackiesekar.com/2011/11/mayakkam-enna-2011.html
புதிய பதிவர்களை ஆர்வமூட்ட நான் பயன்படுத்தும் பதிவு
http://www.jackiesekar.com/2011/12/1000-post.html

Comments

Popular posts from this blog

ஜான் விக் 3

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 2 வீரபாண்டிய கட்டபொம்மன்