கொஞ்சம் வெப்


1992 ஆம் ஆண்டு நேரு யுவ கேந்திரா  மூலம் கணிப்பொறிஎனக்கு அறிமுகம் ஆனது. அப்போது வெறும் 150 ரூபாய்களை பெற்றுக்கொண்டு ஒரு 50 பேருக்கு டி பேஸ், லோட்டஸ் 123, மற்றும் போர்ட்ரான் மென்பொருட்களை கற்றுத்தந்தனர் . சாப்ட் டெக் என்ற கணிப்பொறி நிறுவனம் நேரு யுவ கேந்திரா நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்த பயிற்சியை நடத்தியது. திரு. சுரேஷ் (தற்போதய என்.எம் பல்தொழில்நுட்ப கல்லூரி முதல்வர்),  அவர்கள்தான் இந்த கணிபொறி நிறுவனத்தின் அதிபர். திரு. செந்தில் குமார், (புதுகையின் செல்வந்த குடும்பங்களில் ஒன்றான எம்.எஸ். ரியல் எஸ்டேட் குடும்பத்தின் கடைக்குட்டி), எங்கள்   கணிபொறி பயிற்றுனர். 

டி பேஸ் ஒரு அருமையான டேட்டா பேஸ் மென்பொருள். இதை பழகிகொண்டால் மற்ற டேட்டா பேஸ் மென்பொருட்கள் இயங்கும் விதம் எளிதாக புரியும். நாங்கள் கொடுக்கும் 150 ரூபாய்க்கு 200 கட்டளைகளை சொன்னால் போதுமானது என முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.இன்றளவும் ஒரு எளிய சக்திவாய்ந்த டேட்டா பேஸ் மென்பொருள் டி பேஸ்.அடுத்தது லோட்டஸ் 123. அன்று / கட்டளைகளை விழுந்து விழுந்து படித்தது நினைவிற்கு வருகிறது. இப்படி துவங்கிய என் கணிப்பொறி அறிமுகம் 24 மணிநேரமும் கணிப்பொறியை குறித்து பேசியதால் நண்பர்கள் வட்டத்தில் எரிச்சலுக்கு ஆளானது தனிக்கதை.

இந்தமாதிரி பெயர் எடுப்பது ஆபத்தானது என்பது ஒருநாள் புரிந்தது. நண்பர் நவஜோதி திடீரென ஒருமுறை கூப்பிட்டு ஒரு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு வலைத்தளம் வேண்டும் என்றும் உடனடியாக அதனை வடிவமைக்க வேண்டும் என்றார்.

வலை அடிமையாக இருந்தபோதும் இதெல்லாம் எனக்கு சரிவராத வேலை. இருந்தாலும் என் நண்பன் பாலா சொன்ன 8M நிறுவனமும் அதில் அவர் நைஸ் கணிப்பொறி நிறுவனத்திற்கு வலைத்தளம் அமைத்ததும் நினைவில் வர சரி ஜோதி வந்துரு என்று ஒரு வலைதளத்தை அமைத்து அதற்க்கு பணத்தையும் பெற்றுக்கொண்டேன்.

பின்னர் தான் நான் செய்தது ஒரு சப் டொமைன் என்பதும் வலைதளத்திற்கு நிறய மெனெக்கெட வேண்டும் என்பதும் தெரிந்தது. இருக்கவே இருக்கிறான் ஜோதி விளக்கமாக பேசி அதே நிறுவனத்திற்கு ஒரு வலைத்தளம் மைக்ரோ சாப்ட் பப்ளிஷரில் செய்து மானாஸ் ஹோஸ்டிங் நிறுவனத்தில் ஹோஸ்ட் செய்தேன். மைக்ரோ சாப்ட் பப்ளிஷர் ஒரு அருமையான வலை மென்பொருள்.

பின்னர் தான் தெரிந்தது  மைக்ரோ சாப்ட் பப்ளிஷர் எப்படி தளப் பக்கங்களை பதிவிடுகிறது என்று. இந்த ஆட்டம் சரிவராது என்று ட்ரீம் வீவர் பக்கம் ஒதுங்கினேன். இன்னும் சில நிறுவனங்களுக்கு ட்ரீம் வீவர் மூலம் தடவி தடவி வலைத்தளங்களை அமைத்தேன்.

என் நாம் ஒரு வலைதளத்தை ஆரம்பிக்க கூடாது என்று www.eltex.in என்கிற ஒரு தளத்தை  செய்து ஒருவருடம் சும்மாவே வைத்திருந்து மூடினேன். பின்னர் www.malartharu.com உதயமானது.  பல்வேறு நண்பர்களின் பங்களிப்புடன்
ஆரோக்கியமான முறையில் வளர்ந்துவருகிறது.

இந்த இரண்டு ஆண்டு அனுபவத்தில் நான் புரிந்துகொண்டது ஒன்றுதான். எவ்வளவு குறைவாக கோடிங் எழுதுகிறோமோ அவ்வளவு அதிகமாக காண்டன்ட் எழுத முடியும். எனவே எழுத்தில் ஆர்வம் உள்ளவர்களின் தேர்வு வலைபூதான் என்பதயும் உணர்ந்தேன். எனவே என்னுடய malartharu.blogspot.in வலைப்பூவை www.malartharu.org என்கிற டொமைனுடன் இணைத்தேன்.

உங்களுக்கு இதன் மகிழ்வு புரியும் என்று நினைக்கிறேன். மணிக்கணக்கில் ட்ரீம் வீவர் போராட்டம் தேவையற்றது. முழு நேரத்தையும் எழுத பயன்படுத்தலாம்!

இதேபோல் ஒரு வெப் ஆதரிங் கருவி இருந்தால் எபடீருக்கும் ?
இருக்கே  drupal. இது ஒரு அற்புதமான கருவி. எளிமையாக சொல்லவேண்டும் என்றால் தினத்தந்தியின் தற்போதய வடிவமைப்பு ட்ருபால் கொண்டுதான் செய்யப்பட்டது. எனது முகநூல் நண்பர் சிவ தனுஷ் இந்த வடிவமைப்புக் குழுவில் ஒருவர்.

எனது நண்பர் பிரதீப் பலமுறை நீங்கள் ஏன் ஜூம்லாவில் வெப் செய்யக்கூடாது என்றுகேட்டதுண்டு. ஜூம்லாவா என்று அவரை ஒரு முறை முறைத்துவிட்டு ட்ரிம் வீவரில் ஆழ்ந்துவிடுவேன். ஒரு நாள் அவர் ட்ருபால் வெப்சைட் ஒன்றை நிறுவிக்காட்டும்வரை அதன் சக்தி புரியவில்லை எனக்கு.

ட்ருபால் ஒரு இலவச எளிமையான சக்திவாய்ந்த ஒரு சாதனம். ஆனால் என்னுடய ஹோஸ்ட் இந்த வசதியை தரக்கூடிய தொழில்நுட்ப குழுவோடு இல்லை. எனவே இப்போதைக்கு ட்ரீம் வீவர்தான்.

கூடிய விரைவில் ஒரு ட்ருபால் தளம் ஒன்றை தருகிறேன்.

இப்போதைக்கு நன்றி நண்பர்களே பிறகு சந்திப்போம்.Share on Google Plus

About Kasthuri Rengan

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...