கொஞ்சம் புதிய அறிவியல்

அறிவியல் உலகில் விவாதிக்கப்படும் சில தகவல்கள் (1)

எல்.ஈ.டி பல்புகள் குறைந்த மின்செலவில்அதிக வெளிச்சத்தை தருவது நாம் அறிந்ததே. இனி அவை கூடுதலாக ஒன்றையும் செய்யும். அது தகவல் பரிமாற்றம். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் ஒரு கட்டிடத்தின் ஏதோ மூலையில் இருக்கும் ஒரு எல்.ஈ.டி விளக்கின் மூலம் இன்னொருமூலையில் உள்ள கணிப்பொறிக்கு தகவல்களை அனுப்பவோ பெறவோ முடியம் என்பது கொஞ்சம் சுஜாதா டைப் விவகாரம்தான். ஆனால் இது இப்போது  சோதனைச்சாலையில் வெற்றி அடைந்துள்ளது .

ஜெர்மனியின் பிரோன்கொபர் நிறுவனம் இதற்கான கருவியை வடிவமைத்திருக்கிறது. தற்போது ஒரு ஜெராக்ஸ் தாளின் அளவில் இருக்கும் இக்கருவி மிகச்சிறியதாக செய்வதற்காக ஆய்வகத்தில் காத்திருக்கிறது. சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து இது செம்மைப்படுத்தப்பட்டு வெளிவரும். விமானங்களின் பயணிகள் திரைப்படங்களை ஒளிபரப்ப இக்கருவி பயன்படும்போது கேபிள்களை குறைத்து விமான எடையைக்குறைக்கும். இதன் மூலம் விமானங்கள் அதிக மைலேஜ் தரும். மேலும் போட்டான்கள் மூலம் தகவல் பரிமாறப்படுவதால் இக்கருவி அறுவைசிகிச்சை அரங்குகளிலும் பயன்படும்.


Comments

Popular posts from this blog

ஜான் விக் 3

வழிபாடு இல்லா சிவன் கோவில்கள்

பத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்