கனவு மெய்ப்பட வேண்டும்

வாசிப்பு அனுபவப்பகிர்வு

கனவு மெய்ப்பட வேண்டும்
தமிழருவி மணியன்


தமிழருவி மணியன், தமிழர்கள் தங்களின் இரைப்பையின் இரைச்சலில் மறந்துபோன மனசாட்சியின் மெல்லிய குரல். தனது கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற நூலில் பாரதியை அவனது பன்முக ஆளுமையை விரிவாய்த் தெளிவாய் எழுதியிருக்கிறார். பாரதி எழுத்திலும் சொல்லாட்சியிலும் எவ்வாறெல்லாம் புரட்சி செய்தான் என ஆசிரியர் விளக்கும் பொழுது நமக்கு பாரதி என்கிற சிகரத்தின் சாதனைகள் புரிகிறது.

பாரதி எப்படி திலகரின், காந்தியாரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டுசென்றானோ அதேபோல் அவர்கள் எங்கேனும் சமத்துவத்திற்கும் சகோதர தத்துவத்திற்கும் எதிராக பேசினாலோ எழுதினாலோ வீறுகொண்டு அவர்களின் நிலைப்பாடுகளை விவாததிர்க்குட்படுதுவதும் பாரதியின் பணியாகவே இருந்ததை அறிய முடிகிறது.
பாரதி எந்த அடிப்படையிலே வர்ண பகுப்பை அணுகினான் என்பதை அவனது பார்வையிலும் சுவாமி விவேகானதரின் பார்வையிலும் ஒப்பிட்டு நோக்கும்போது நமக்கு பாரதியின் பிரமாண்டம் புரிகிறது. சுவாமிகளின் அனைவர்க்கும் பூணுல் சூளுரை இருபிறப்பாளர்களோடு நின்றுபோன நிலையில் பாரதியின் கனலிங்கதிற்கு பூணுல் அணிவிக்கும் நிகழ்வு பல ஒளியாண்டுகள் முந்தியிருப்பதை உணரமுடிகிறது. காலஎந்திரத்திலேறி பாரதியின் வாழ்காலதிற்க்கே செல்லும் அனுபவத்தை இந்நூல் தருவதை மறுக்கமுடியாது. பாரதி குறித்த தெளிவான ஆழமான பார்வையைக் கொண்டது இந்நூல்.

சில நேரங்களில் விரிவான நிகழ்வுகளில் பதிவு ஒரேமுறையில் இந்நூலைப் படிக்க இயலாமற் செய்வதையும் உணரமுடிகிறது. வாசகன் சிறிது சிறிதாக பக்கம் பக்கமாக படிப்பதை உறுதிசெய்கிறது இந்நூல். பாரதியை மட்டுமில்லாது நாம் ஜீவா, அம்பேத்கார், சுவாமி விவேகனந்தர், நிவேதிதா அம்மயார் மற்றும் திலகரையும் இந்நூலில் சந்திக்க முடிகிறது.

சாதி குறித்தோ மதம் குறித்தோ எழுதுபவர்கள் இன்றும்கூட மனதிற்குள் ஒரு பட்டிமன்றத்தை நடத்தி மழுங்கல் வார்த்தைகளால் மழுப்பிக்கொண்டிருக்கும்போது அன்று பாரதி பேச்சு எழுத்து கவிதை என அனைத்திலும் சமரசம் இல்லாமல் சமராடியது புரிந்தால் அவனை ஏன் யுகக்கவி என அழைக்கிறார்கள் என்று புரியும்.

நூல் தலைப்பு : கனவு மெய்ப்பட வேண்டும்
ஆசிரியர் : தமிழருவி மணியன்
பதிப்பகம் : விகடன் பிரசுரம்
விலை : 85/- ரூபாய்கள்.

நூலினைப் பெற

vikatan link

Comments