நீங்கள் தடை செய்ய வேண்டிய இன்னொரு படம்

வெர்டிகல் லிமிட் படத்தில் கே டூ மலை சிகரத்தை அடைய பாகிஸ்தானுக்கு செல்வான் ஹீரோ, அப்போ சில காட்சிகள் வரும்  பாங்கிற்கு பின் பாகிஸ்தானிய இராணுவ தளபதி சொல்லுவார் ஒ நாலு மணி இந்தியர்களை எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பின்னர் பீரங்கிகளை இந்தியாவை நோக்கி திருப்பி ஒன் டூ த்ரீ அல்லாகு அக்பர் என்று முழங்கி வெடிப்பார்கள். அந்த படத்தை நீங்களும் நானும் ரசித்து தானே பார்த்தோம்?


என்றும் என் பிரியத்திற்குரிய  முஸ்லீம் சகோதர்களுக்கு, மதம் என்பது மனிதனை நல்வழிப் படுத்தவே, அது எந்த மதமாக இருந்தாலும் கடவுளின் பெயரை சொல்லி வன்முறையில் இறங்குவது கடவுளை சாத்தனின் நிலைக்கு கொணர்வதே.

ஒருபுறம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது நீங்கள் ஒன்றிணைந்திருப்பது, இருந்தாலும் உங்கள் எதிர்ப்பை நீங்கள் இஸ்லாம் காட்டும் சாத்வீக வழியில் தான் பதிவு செய்திருக்கவேண்டும்.

இஸ்லாத்தை இகழ்வோனை வெட்டு என்பது மட்டும்தான் நபி மொழியா?  அவர் உங்கள் வீட்டில் 7 1/2 பவுண் தங்கம் இருந்தால் ஏழைகளுக்கு எவ்வளவு செய்யவேண்டும் என்ற சொன்ன அளவுகள் மறந்துவிட்டதா?

டிசம்பர் ஆறு எனக்கும் ஒரு கருப்பு தினமே, நீங்கள் என்போன்ற பெருவாரி மாற்று மத சகோதரர்களிடம் இருந்து விலகி ஏன் தனியாக நிற்கிறீர்கள்? நீங்கள் மட்டுமே போராடி நீதி பெற முடியாது,

நீங்கள் போராட இன்னும் நிறய நல்ல மேன்மையான சமுக காரணங்கள் இருக்க இது எப்படி இவ்வளவு பெரிய பிரச்சனையாச்சு?

அன்வர் பாலசிங்கத்தின் கருப்பாயி என்கிற நூர்ஜகான் படித்தீர்களா யாரவது?

திரைஉலகு எப்படி நிகழ் கால பிரச்சினைகளை மறக்கடிக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு நல்ல உதாரணம்?

தாஜ்மாகாலை சிவன் கோவில் என்கிற கொடூர மனநோயாளிகளுக்கும் உங்களுமான வித்யாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறீர்கள் என்ற வருத்தம் மட்டுமே மிச்சம்.

Comments

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை