நாகசாமி “நூலின்” நாசவேலை





நாகசாமி “நூலின்” நாசவேலை
ஆக்கம் : பேராசிரியர். க. நெடுஞ்செழியன் 
1996 இல் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தபோது உலக மொழி வரலாற்றையும் படிக்கிற வாய்ப்பு கிடைத்தது.
மொழிகளுக்கெல்லாம் மூல மொழி பிராட்டோ இந்தியன் மொழி. இதிலிருந்து கிளைத்த நார்த் ஜெர்மானிக் மொழியிலிருந்து எழுந்ததுதான் இன்றய ஆங்கிலம். 
ஆனால் இன்னொரு கிளை என்னை பலத்த அதிர்வுக்குள்ளாக்கியது. அது இந்திய மொழிகள் எப்படி வந்தன என்கிற இன்னொரு உப பிரிவு. மரப்படத்தில் (Tree Diagram) இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாகவே குறிப்பிடப் பட்டிருந்தது. அது ஓர் உலகலாவிய அளவில் நிறுவப்பட்ட ஒரு வரைபடம் என்பது தமிழ் மொழி குறித்து அதுகாறும் இருந்துவந்த எனது பெருமித உணர்வில் சிகரட்டால் சுட்டது. 
இப்போ உள்ள மரப்படத்தில் தமிழையே காணோம்!

உலகின் பல்வேறு அறிஞர்களின் ஒரு சர்வதேச அங்கீகரிப்புடன் வந்த  அவமானகரமான அந்த மரப்படத்தை நான் நம்ப ஆரம்பித்தேன். தமிழின் தொன்ன்மை குறித்து பல்வேறு அறிஞர்கள் முழங்கியதெல்லாம் வெறும் அரசியல் கூச்சல் என்றே நினைக்க ஆரம்பித்தேன். 

சில வருடங்களுக்குப்பின் ஒஎன்ஜிசி எண்ணை ஆய்வின் போது பூம்புகார்க்கருகே கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கடல்கொண்ட நகரம், அது திராவிட நாகரிகத்தை சேர்ந்தது என்றும் பதினோராயிரம் வருடங்களுக்கு முந்தியது எனவும் செய்திகள் வந்தபின் ஆகா நம்பள நல்லா அடிசிருக்கான்டா ஆப்பு என புரிந்தது. 

தமிழின் தொன்மையை நிறுவ இது போன்ற அறிவியல்பூர்வமான ஆய்வுகள் அவசியம், அவசரம். இருந்தாலும் தமிழ் கூவி அதனை ஏணியாக பயன்படுத்தி மேலே போன எந்த ஒரு தலைவனும் அறிஞனும் இதுகாறும் பூம்புகார் ஆழ்கடல் ஆய்விற்கு மத்திய அரசை தூண்டவில்லை. நம்மவர்களின் மொழிப்பற்று ஆகா ரகம். அம்புட்டுத்தான் அவர்கள் லச்சணம். 

இந்தக் குமுறல்களோடு நான் இருந்தபோது அண்ணன் மகா.சுந்தர் எதேச்சையாக பேரா.க.நெடுஞ்செழியன் அவர்களின் நாகசாமி “நூலின்” நாசவேலை என்கிற நூலை கொடுத்தார்கள். 

ஆகா பதிமூன்றே பக்கங்களில் பேராசிரியர் பதிவு செய்திருக்கிற தகவல்கள் தமிழர் வரலாற்றில் கவனமாக பதிவு செய்யப்படவேண்டியது.

பக்கம் ஏழிலிருந்து

இந்திய எழுத்து முறை வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்களில் முதன்மையானவராக எண்ணத்தக்கவர் ஏ.சி. பர்னெல் அவர்கள், அவர்,இந்திய எழுத்து முறைகளுக்கெல்லாம் முன்னோடியானது தமிழ் எழுத்து முறையே என்று நிறுவினார். தமிழ் எழுத்து முறையை அடிப்படையாக கொண்டு, பாலி, பிராகிருத மொழிகளுக்கென்றுள்ள சில ஒலிகளுக்கான எழுத்து வடிவங்களையும் இணைத்துக்கொண்டு உருவானதே அசோகன் பிராமி என்கிறார் பர்னல். அத்துடன் அமையாது, சமஸ்கிருத இலக்கண இலக்கிய ஆசிரியர்கள் தமிழகம் வருவதற்கு முன்பாகவே, தமிழுக்கென்று தனித்த வரிவடிவம் இருந்ததென்றும் அவ்வரிவடிவம் முழுமைபெற்று திகழ்ந்தது என்றும் உறுதிப்படுத்தினார்.

பக்கம் எட்டிலிருந்து

இந்திய தொல்லியல் துறை இயக்குனராக இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற முனைவர்.கே.வி. ரமேஷ் அசோகன் பிராமிக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பாண்டிய நாட்டில் தமிழ் எழுத்து முறை சீர்மை பெற்று விளங்கியது என்று கூறுகிறார். (Book: Jaina Art and Architecture in Karnataka. K.V


இத்தகைய சிறந்த அறிஞர்களின் கருத்தை பேரா. க.ராசன் அவர்களின் அண்மைக்கால ஆய்வுகளும் உறுதி செய்து வருகின்றன. சில ஆண்டுகளுக்குமுன் கம்பம் அருகே புலிமான் கோம்பையில் அகழ்ந்தெடுத்த நடுகல்லில் உள்ள எழுத்து முறையும் தொடரும் கி மு ஆறாம் நூற்றாண்டிற்கு முந்தியதேன்று உறுதிசெய்தார் ராசன்.

சென்ற ஆண்டு பழனிக்கருகே பொருந்தல் ஆற்றங்கரை அகழாய்வில் இரசனுக்கு கிடைத்த பானை வைக்கப்பட்டிருந்த மண் புரிமனையில் (கலவடை) எழுதும் பானைக்குள் இருந்த நெல்லும் அமெரிக்க நாட்டுக்கு அனுப்பி ஆராயப்பட்டன அங்கு உறுதி செய்த ஆய்வின் முடிவின்படி கிமு700   முதல் கிமு 490 வரைக்குமான காலப்பகுதியை சேர்ந்தவை அவை என்பது உறுதியாயிற்று.
---

இதைப் போன்ற அறிவியலால் நிறுவப்பட்ட சான்றுகளைக் கொண்டு தமிழின் தோற்றம் வளர்ச்சி குறிந்த சான்றுகள் பதிவு செய்யப்படவேண்டியது அவசியம். எதிர்கால சந்ததியர் தமிழ் குறித்து ஒரு பெருமித உணர்வுகொள்ள இது வழிவகுக்கும்.
மேலும் இதைப்போன்ற ஆய்வுக்கண்டுபிடிப்புகள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கொண்டாடப்படுதலும் அவசியம். செய்வார்களா நமது இலக்கிய அமைப்புகளின் பொருப்பாளர்கள்.

ஆயிரம் நாசசாமிகள் வந்தாலும் உண்மை வரலாற்றின் ஏதோ ஒரு இடுக்கிலிருந்து கசிந்து மணம்பரப்பும் என்பதே நியதி. தனது நூலுக்கு பரிசை வெல்ல நாசசாமிக்கு தமிழை அசிங்கப்படுதவேண்டியிருகிறது.


இன்னும் விடை தெரியா ஓராயிரம் வினாக்களோடு மீண்டும் சந்திப்போம்.
அன்பன்
மது

பிற்சேர்க்கை
இந்த அருமையான நூலைத்தந்த தமிழாசிரியர் மகா.சுந்தர் அவர்களுக்கும் அவரை நான் சந்திக்க தளமமைத்து தந்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்திற்கும் என்றென்றைக்கும் என் நன்றிகள்.
இந்தப் பதிவு தொடர்பாக இணையத்தை மேய்ந்தபோது கிடைத்த உன்னொரு அதிர்ச்சி.


Comments