ஆசிட் வீச்சு வைரல்சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு பலரை பாதித்து அதன் மூலம் திரும்ப திரும்ப நிகழ்வதே வைரல் நிகழ்வு. வழக்கம் போல இதில் நல்ல வைரல் நிகழ்வுகளும் உண்டு தீய வைரல் நிகழ்வுகளும் உண்டு.

நல்ல வைரல் நிகழ்வுகள்
அரசியல் கட்சிகள் நெசவாளர்களின் ஒட்டிப்போன வயிறுகளுடன் கஞ்சித்தொட்டி பிரியாணி பாக்கட் விளையாட்டை நடத்திக்கொண்டிருந்த பொழுது மதுரை யாதவா கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒரு நாள் காலை வணக்கக் கூட்டத்தில் கைத்தறி துணிகளை அணிந்தனர். இது ஒரு வைரல் நிகழ்வாக மாறி தமிழகத்தின் அத்துணை கல்லூரிகலின் மாணவர்களும்  பெருமிதத்தோடு இதை செய்தனர். இது ஒரு ஆரோகியமான வைரல் நிகழ்வு. 

தீய வைரல் நிகழ்வுகள்
சமீபத்திய செய்திகளின்படி இளம் பெண்கள் ஆசிட் தாக்குறுதல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வினோதினி இப்போ வித்யா நாளை யார்? பெண்ணை சக மனுசியாக நினைக்கப் பயிற்றுவிக்காத சமூக சூழல் ஒரு பிரதான காரணம். மனுவின் நீட்சிதான் இது. எனக்கில்லையாஅப்போ யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பது நமது புரையோடிப்போன ஆணாதிக்க சமூகத்தின் நீட்சியே அன்றி வேறென்ன?

வித்யா 
வைரலை நிறுத்த முடியுமா?
முடியும். சட்ட ரீதியில் ஆசிட் விநியோகத்தை கண்காணிப்பது முதல் படி என்றால், இந்த மாதிரி தாக்குதலில் ஈடுபடும் மன முதிர்வற்ற மிருகங்களை கடினமாக தண்டிப்பதன் மூலம் இந்த வைரலை முற்றிலும் தடுக்கலாம். ஊடகங்கள் இதுகுறித்து விளக்கமாக விமர்சிப்பது அவசியம்.
கல்வி முறையும் பெற்றோர் அறிவுரையும் சிறு வயதிலிருந்து பெண்ணை ஒரு சக மனுசியாக பார்க்கப் பழக்க வேண்டும். இது ஒன்றுதான் நிரந்தர தீர்வு. 

குறிப்பாக சில ஊடகங்கள் வினோதினியின்மீதான ஆசிட் வீச்சை மறைமுகமாக ஆதரித்து வருவதும். பெண்ணிய அமைப்புகள் இதற்கெதிராக சட்டப் போரட்டங்களை நடத்தாததும் நல்ல சகுனமாக தெரியவில்லை. 

நல்ல வைரல் நிகழ்வுகள் சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவும். தீய வைரல் நிகழ்வுகள் சமூக சீர்கேடு. இப்போதைக்கு விநோதினிக்காகவும், வித்யாவிற்காகவும் பிரார்த்திப்பதை தவிர வேறு வழியில்லை.

பிரார்த்தனைகளுடன்


மது
Share on Google Plus

About Kasthuri Rengan

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...