அலைகள் புகைப்படக் கண்காட்சிஅலைகள் புகைப்படக் கண்காட்சி
மார்ச் ஒன்று முதல் மூன்று தேதிகளில் டான் பாஸ்கோ அலைகள் மீடியா திருச்சியில் ஒரு புகைப்பட கண்காட்சியை சிறப்பாக நடத்தியிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு புகைப்படக் கலைஞர் ஆர்வமுடன் பங்கேற்று இருநூற்றுக்கும் அதிகமான புகைப்படங்களை சமர்ப்பித்திருகின்றனர்.  ஒவ்வொரு படமும் ஈர்த்துக்கொள்ளும் அழகியல் படிவங்கள். முதல் பரிசுபெறும் பங்கேற்புக்கு அலைகள் அவார்டும் பணப்பரிசும் உண்டு.

சர்வதேச தரம் வாய்ந்த ஒரு அரங்கில் நூற்றுக்கணக்கில் படங்களை பார்ப்பது ஒரு அருமையான அனுபவம். திருச்சியின் புதுத் திறமைகளுக்கு ஒரு நல்ல மேடையமைத்து தந்ததற்காவே அலைகளை ஆயிரம் முறை பாராட்டலாம். மின் தடையிலும் படங்களை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் வேறு! ஒரு ஷூட்டிங் லைட்டை மூன் லைட்டிங் எபக்டில் வைத்திருந்தார்கள்.

எனது நண்பர் திரு சகாய் அலைகளில் பயிற்றுனராக இருப்பதால் கண்காட்சி குறித்து முகநூலில் பகிர்ந்திருந்தார். எனக்கும் இந்த துறையில் ஆர்வம் இருந்தால் மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காவே சென்றேன். ஞாயிற்றுகிழமை என்பதால் சகாயின் ஒரு நாள் ஓய்வையும் பறித்துக் கொள்கிறோமே என்ற எண்ணம் வேறு. நான் அலைகளை அடைந்த பொழுது சாகாய் அங்கு இல்லை ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் மையத்தின் இயக்குனர் பாதர் பிரான்சிஸ் கமாலியேல் அருமையாக பழகினார். 

மிக பொறுமையாக ஒவ்வொரு சிறந்த படத்தையும் எனக்கு விளக்கினார். சில நிமிடங்களிலேயே நிறுவனத்திற்கு ஒரு சிறந்த இயக்குனர் கிடைதிருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அலைகளின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு பாதர் கமாலியேல் காரணமாக இருப்பார் என்றே நான் நினைக்கிறன். 

அலைகள் மீடியா டான் பாஸ்கோ நிறுவனத்தால் மணிகண்டம் பகுதியில் நடத்தப்படுகிற ஒரு நிறுவனம். பல்வேறு சமுக நலப் பணிகளை சிறந்த முறையில் நடத்திவரும் இந்த நிறுவனம் இளைஞர் முன்னேற்றத்தை தனது முக்கிய இலக்காக கொண்டது. 

இந்த மீடியா மையம் சர்வதேச தரம் வாய்ந்த வீடியோ எடிட்டிங், ரெகார்டிங், அனிமேஷன் மற்றும் புகைப்படக் கலை பயிற்சிகளை பாரதிதாசன் பல்கலை கழகத்தின் அங்கீகாரத்துடன் அளித்து வருகிறது. பயிற்சிக்கு பயன்படுத்தும் ஒரு கணிபொறியின் விலை மட்டும் எட்டு லெட்சம்! இன்னொரு டெலி ஜூம் லென்சின் விலை ஒன்றரை லெட்சம். 

கொஞ்சம் படைப்பாற்றலுடன் இந்தத் துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களின் புனித தலம் இந்த நிறுவனம். உங்களுக்கு தெரிந்து அருகாமை மாவட்டங்களில் யாரேனும் ஆர்வமுள்ள இளைஞர்கள் இருந்தால் வழிகாட்டுங்கள். இன்னொரு பி சி ஸ்ரீ ராம் உருவாகட்டும்!

அன்பன்
மது
மேலும் விவரங்களுக்கு இணையத்தளம் http://www.dbiice.in/index.htm
பின் குறிப்பு
இந்த கண்காட்சி குறித்து எனக்கு தெரிவித்து ஒரு நாள் அருமையான படங்களை பார்க்கும் அனுபவத்தையும்  நட்பையும் தந்த திரு. சகாய் அவர்களுக்கு எனது நன்றிகள். எனது வகுப்பறை பயன்பாட்டிற்கு தந்த காணொளிகளுக்கு இன்னும் கொஞ்சம் நன்றிகள்.
$$$$$$$$$$ரிலாக்ஸ்$$$$$$$$$$$


இந்த வார காணொளி

$$$$$ஒரு ஹாஸ்யம்? $$$$$
ஏரோப்ளேனை கண்டுபிடித்தவன் - அமெரிக்காக்காரன்.

அணுகுண்டை கண்டுபிடிச்சவன் - அமெரிக்காக்காரன்

ரேபிஸூக்கு மருந்து கண்டுபிடிச்சவன் - ஃப்ரெஞ்சுக்காரன்.

பென்சிலினை கண்டுபிடித்தவன் - இங்கிலாந்துகாரன்.

முதன்முதலா நிலாவுக்கு ராக்கெட்டை அனுப்பியவன் - ரஷ்யாக்காரன்.

இந்தியாக்காரன் என்னதான்யா கண்டுபிடிச்சான்?

இந்தியாக்காரன் செய்த ஹெலிகாப்டர் ஊழலைக்கூட இத்தாலி நாட்டுக்காரந்தான் கண்டுபிடிச்சானாம்.

அடப்பாவிகளா இதக்கூட நீங்க கண்டுபிடிக்கலையா?


- Rajesh Deena

Comments

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை