மெர்ஸிடிஸிலிருந்து ஒரு புதிய கார்….(BIOME Concept Car)ஹிட்லரால் நிதியளிக்கப்பட்டு உலகின் முன்னனி கார் நிறுவனமாக விஸுவரூப வளர்ச்சி பெற்று நிற்கும் நிறுவனம் மெர்ஸிடிஸ். தற்போது ஒரு புதிய கான்சப்ட் காரை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
பயோமி என்கிற பெயரில் வந்த்திருக்கும் இந்தக் கார் நானுறு கிலோ எடை கொண்டது. முழுக்க முழுக்க பயொ ஃபைஃபரால் ஆனது. இதெல்லாம் மேட்டர் கிடயாது.

இந்தக் காரை அசம்பிள் செய்து உருவாக்க இயலாது.  விதையிலிருந்து வளர்த்து உருவாக்கவேண்டும்! இதற்காக ஆறு விதைகளில் இருந்து இந்தக் கார் வளர்க்கப் படும். நான்கு விதைகளில் இருந்து நான்கு சக்கரங்களும் ஐய்ந்தாவது விதையிலிருந்து காரின் வெளிப்புறமும் ஆறாவது விதையிலிருந்து காரின் இண்டீரியரும் வளரும்! 

இந்த தொழிழ்நுட்பத்தை நிறைவு பெற செய்ய இன்னும் முப்பது வருடங்களாகும் என்கிறது மெர்ஸிடிஸ். 

கீரை விதைத்த காலமெல்லாம் போய் கார்விதைக்கும் காலம்.
இன்னும் என்ன புதிய அறிவியல் வளர்ச்சியெல்லாம் சாத்தியப்படுத்த காத்திருக்கிறதோ காலம்?

காத்திருப்போம்
அன்பன்
மது.

Comments

Popular posts from this blog

ஜான் விக் 3

விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 2 வீரபாண்டிய கட்டபொம்மன்