புதிதாய் ஒரு டைனோ தகவல் (Microraptor)டைனோசர்கள் அவை வாழ்ந்த காலத்திலும் சரி கற்படிமானம் அடைத்த பொழுதும் சரி நமது ஆர்வத்தை தூண்டுவதாகவே இருக்கின்றன. அவை குறித்த ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன. புதிய ஆச்சர்யங்களை தந்துகொண்டே இருக்கின்றன.

மைக்ரோராப்டர் என்ற ஒரு பறக்கும் டைனோ மீன்களை பிடித்து சாப்பிட்டு இருப்பதை கண்டறிந்திருகிறது அல்பர்ட்டா பல்கலைக்கழக ஆய்வுக் குழு. சீனாவின் ஒரு எரிமலை படிவுகளில் கிடைத்த ஒரு மைக்ரோராப்டர் பாசிலை ஆய்வு செய்த பொழுது அதன் வயிற்றுபகுதியில் இருந்த மீன் மிச்சங்கள் ஒரு ஆச்சர்யத்தை தந்தன.
மைக்ரோராப்டர் பலபரப்புகளில் பறந்து திரிந்ததையும் கண்டுபிடித்துள்ளது இக்குழு. சற்றே முன்புறம் சாய்ந்த பற்கள் மீனை அப்படியே பிடித்து காற்றில் தூக்கிப் போட்டு கவ்வி  சாப்பிட தோதாக இருப்பதை பார்த்து வியக்கிறது குழு.

ஒரு கழுகை போன்ற மைக்ரோராப்டர் பல்வேறு வகையான உணவை உட்கொண்டிருப்பதை இந்த ஆய்வு கண்டுபிடிதிருக்கிறது. சிறிய பறவைகளை மட்டுமே இது உண்ணும் என்ற முந்தய எண்ணத்தை இது மாற்றியுள்ளது. ஒரு பறக்கும் டைனோ மீனை பிடித்து சாப்பிடும் என்பதை நிருபித்த முதல் நிகழ்வு இதுதான்! 

அழிஞ்சு போன விலங்குகளை கொண்டாடுவது இருக்கட்டும் இருக்க விலங்குகளை காப்பது எப்படி?

யோசிங்க பாஸ்

அன்பன்
மது

Share on Google Plus

About Kasthuri Rengan

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...