Posts

Showing posts from September, 2013

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் Prophet Mohmed's Golden Words

Image
1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.

ஒரு புகைப்பட தொகுப்பு ஜே சி ஐ புதுக்கோட்டை சென்ட்ரலின் வெள்ளி விழாவிற்காக part 3

Image

ஒரு புகைப்பட தொகுப்பு ஜே சி ஐ புதுக்கோட்டை சென்ட்ரலின் வெள்ளி விழாவிற்காக part 2

Image

ஒரு புகைப்பட தொகுப்பு ஜே சி ஐ புதுக்கோட்டை சென்ட்ரலின் வெள்ளி விழாவிற்காக part1

Image

மனிதம் மரித்த சென்னையில் ஒருநாள் !

Image
அது ஒரு உச்சிவெயில் நேரம். ஒரு வேலையாக வில்லிவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தபோதுதான் அயனாவரம் ஜாயிண்ட் ஆபிஸ் பேருந்து நிறுத்தத்தில் தான் அந்த மனிதம் மரித்த துன்பகரமான காட்சி என் கண்ணில் பட்டது. கடைகளும் ஆட்களும் வந்துபோகும் நெருக்கடியான நடைப்பாதையில் அலங்கோலமாக விழுந்து கிடந்தார் ஒரு பெண்மணி.

அவரைச் சுற்றி சில பெண்களும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார்கள். பக்கத்தில் கடைகள் இருக்கின்றன.. ஆட்கள் வந்து போய் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் தரையில் கிடக்கும் அந்த பெண்மணி ஒரு பொருட்டாக படவில்லை. எல்லோரும் அவரை கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

மனசு கேட்காமல் வண்டியை நிறுத்திவிட்டு பக்கத்துலப்போய் மூச்சு இருக்கானு பார்த்தேன். வயிறு ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. குடி போதையில் தன்னிலை மறந்து மயங்கிக் கிடக்கிறார் என்பது தெரிய வந்தது. உடனே ஒரு தண்ணீர் பாக்கெட் வாங்கிக் கொண்டு அவரை தட்டி எழுப்பினேன்.

எழுந்து உட்கார்ந்து மடக் மடக்கென்று தண்ணீரைக் குடித்து முடித்தவர், திடிரென என் கால்களைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார். எனக்கு சங்கடமாய்டுச்சு. காலை அவரிடமிருந்த…

ஒரு பிரமிக்க வைக்கும் சமூக சாதனை..

Image
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கோவை சிங்கா நல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரியாமல் இருக்காது. அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே .
நம்முடைய கோவையில் எவ்வளவோ வழிகளில் பொதுமக்களின் பணத்தைப் பல வழிகளில் , தொழில் தர்மத்துக்குப் புறம்பாக அபகரிக்கும் பல நிறுவனங்கள், தனி நபர்கள் , மருத்துவர்கள், உணவகங்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியவர்களுக்கு இடையே, தான் சம்பாதித்த பணம் முழுக்க பொது மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படும் சில நம்பிக்கை மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் இன்று நாம் பார்க்கப் போவது , சாந்தி கியர்ஸ் திரு பி.பழனிசாமி அவர்கள். தன் மனைவியின் நினைவாக "சாந்தி சோஷியல் செர்வீசெஸ்" என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர்.

அவர்கள் மேற்கொண்டிருக்கும் நற்காரியங்களில் சில :

1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை…

மறுமுகம் !

Image
சமீபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக கவிஞர் தங்கம் மூர்த்திக்குப் பாராட்டுவிழா நடைபெற்றது. கவிஞர் தங்கம் மூர்த்தியை எனக்கு அறிமுகம் இல்லை. என் நண்பர்கள் அடிக்கடி அவரின் பெயரைப் பயன்படுத்தும் போது என் மனது இயல்பானதாகவே இருக்கும். அவருக்கு அண்மையில் நடுவண் அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கிச் சிறப்பித்த செய்தியும் செவிசார் மிகைச் செய்தியாக எனக்குப் படவில்லை. ஏனெனில் எங்களது ஆசிரியர் வட்டத்தில் இவ்விருது சார்ந்த மதிப்பெண்ணங்கள் குறைவாக இருந்தது கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். ஒரு தனியார் பள்ளித் தாளாளர் என்ற முகம் எங்களை அவர்பால் இடைவெளிகளை ஏற்படுத்தி இருந்ததாகக் கூட இருக்கலாம்.
அவரின் பொழிவினில் இலயித்த நிகழ்வு சுபபாரதிக் கல்லூரியில்
எனக்குக் கிட்டியது. அவரின் பொழிவில் சுகமும் மகிழ்வும் மிகுந்திருந்தது. ஆழத்தின் சாயல் ஆங்காங்கே கிளைத்துச் சென்றது. இருப்பினும் அவர்பால் எனக்கு இலயிப்பு ஏற்பட மனம் முரண்பட்டது. காரணம் எதுவென்று என்னால் கண்டறிய இயலவில்லை. கந்தர்வன் நூலக விழாவிலும் அவரின் பொழிவுச் சூழலின் அருகாமை…

தந்திரம் !!! Trick

Image
வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு, இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவருக்கு அது மிகத் தொந்தரவாக இருந்தது. ஒரு நாள் இளைஞர்கள் சப்தம் போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது பெரியவர் அவர்களிடம் போய்,”நான் ஓய்வு ஊதியம் வாங்குபவன். எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை நீங்கள் எல்லோரும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் தினசரி விளையாடினால் நான்உங்களுக்கு வாரம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன்,” என்றார்.

இளைஞர்களுக்கு மிகவும் ஆச்சரியம்!தாங்கள் விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பணமா! அவர்கள் தினசரி விளையாடினார்கள்.

ஒரு வாரம் முடிந்தவுடன் பெரியவர் அவர்களிடம் ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார்.

இரண்டாவது வாரம் அவர்கள் பணம் கேட்ட பொது, திடீரென செலவு வந்து விட்டதாகக் கூறி இருபது ரூபாய் தான் கொடுத்தார்.

மூன்றாவது வாரம் ஓய்வு ஊதியம் இன்னும் வரவில்லை எனக் கூறி பத்து ரூபாய் கொடுத்தார்.

நான்காவது வாரம், தன்னால் இனி வாரம் ஐந்து ரூபாய் தான் கொடுக்க இயலும் என்றார்.

இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.”வாரம் முழுவதும் விளையாடுவதற்கு வெறும் ஐந்…

புதிய குடிமைப் பணி தேர்வு மையம்...

சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு மையமாக, கோவை விரைவில் அறிவிக்கப்படும்,'' என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) மண்டல இயக்குனர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், கோவையில் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய பணியாளர் நலன் சீர்திருத்தத்துறை அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: மத்திய அரசின் பல துறையிலுள்ள "பி',"சி',"டி', பிரிவு பணியாளர்களை, எழுத்துத் தேர்வு மூலம் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு செய்கிறது. 2009 ம் ஆண்டு வரை 10 லட்சம் விண்ணப்பங்கள் தேர்வாணையத்துக்கு வந்தன. 2012-2013 ம் ஆண்டில் ஒரு கோடியே 60 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதிலிருந்து பிரசார்பாரதி, மத்திய உணவுக்கழகம் உள்ளிட்ட துறைகளுக்கு 85,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகமாகியுள்ளது. 85 சதவீத விண்ணப்பங்கள் இம்முறையிலேயே வந்து சேருகிறது. 15 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே தபாலில் வந்து சேருகிறது. 2013-2014, 2014-2015 ம் ஆண்டுகளில் 2 கோடி விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலிருந…

கடலும் கிழவனும்- - நோபல் பரிசு பெற்ற கதை old man and the sea

Image
அந்த கிழவன் ஒரு மீனவன். பெயர் சாந்தியாகோ. பெரிய மீன்களைப் பிடித்து விற்பதுதான் அவன் தொழில். ஆனால் பெரிய மீன்கள் அவ்வளவு எளிதாக  சிக்குவதில்லை. இப்போதும்கூட, பெரிய மீன் ஒன்றைப் பிடிப்பதற்காக அதே கிழவன்
முயற்சி செய்து கொண்டிருக்கிறான். தினந்தோறும், நடுக்கடல் வரைக்கும் சென்று திரும்பினாலும், ஒரு பெரிய மீன்கூட அகப்படவில்லை. இன்றோடு, எண்பத்தி நான்கு நாட்கள் ஆகிவிட்டன. முயற்சிகள் எல்லாமே வீண். இருந்தாலும் மனம் தளராமல் அவன்
உற்சாகமாகவே இருந்தான். ஏனென்றால் இது போன்ற அனுபவங்கள் அவனுக்கு நிறைய உண்டு. எதிர்பார்ப்புகள் பெரிதாக இருக்கும்போது, அதனை அடைவதற்கான கால அளவும் அதிகமாகத்தானே இருக்கும்!
 கரைக்குத் திரும்பிய கிழவனை சிறுவன் ஒருவன் வரவேற்கிறான். அந்தச் சிறுவன் இதற்கு முன்னால் கிழவனோடு மீன்பிடிக்க வந்து கொண்டிருந்தான். கிழவனுக்கு மீன்கள் கிடைப்பதில்லை என்று சிறுவனின் அப்பா புரிந்துகொண்டார். உடனே அவனை வேறொரு மீனவனிடம் வேலைக்கு அனுப்பிவிட்டார். குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது என சட்டம் எதுவும் போடவில்லை. சட்டம் போட்டபிறகும்
குழந்தைகளை வேலைக்கு அனுப்புவத சிறுவன்மீது கிழவனுக்கும், கிழவனின்மீது …

செல் சொல் நந்தன் ஸ்ரீதரன் ...

Image
நண்பனொருவனுக்கு பெரிய மனத்தாங்கல்.. இந்தப் பெண்கள் எவ்வளவு வெட்கமற்று இருந்தால் நடக்கும்போது செல்ஃபோனில் பேசியபடி போவார்கள் என்று.. அவன் சொன்ன பின்புதான் கவனித்தேன்.. பல பெண்கள், அவர்கள் அலுவலகம் முடிந்து வீடு செல்பவர்களாய் இருக்கட்டும், அல்லது படிப்பு முடிந்து வீடு செல்பவர்களாய் இருக்கட்டும்.. அவர்கள் இயர் ஃபோனிலோ அல்லது காதணைந்த செல்ஃபோனிலோ பேசியபடியேதான் நடந்து கொண்டு இருந்தார்கள்..

அப்போதுதான் எனது தோழி ஒருத்தியின் நினைவு வந்தது..

அவள் எப்போதும் ஒரே நேரத்துக்குதான் செல் பேசுவாள். அவள் பேசும் பொழுதுகள் அனைத்திலும் போக்குவரத்து வண்டிகளின் சத்தம் கேட்டபடியே இருக்கும்.. உண்மையில் அது பேச்சுக்கான பெரிய இடையூறு.. என் நண்பனின் புண்மொழியைக் கேட்டதும் அந்த தோழியிடம் கேட்டேன்.. எதற்காக இப்படி மாலை 5.30 க்கு கால் பண்ணுகிறாய்..?

அதற்கு அவள் சொன்ன பதில் முக்கியமானது: நான் வீட்டில் இருந்து பேசும்போது நான் உன்னிடம்தான் பேசுகிறேன் என்று தெரிந்தாலும் என் கணவர் மாமியார் உட்பட என் குடும்பத்தினர் அனைவரும் அமைதியாகி அந்தப் பேச்சைக் கேட்கத் துவங்கிவிடுகிறார்கள்.. நிச்சயம் அவர…

ஒரு குறள் கதை... இளையராஜாவின் முகநூல் பக்கத்திலிருந்து...

Image
ஒரு கோவில் மண்டபத்தில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த துறவியின் பேச்சுப் பிடிக்காமல், ஒருவன் ஒரு கல்லை அவர்மீது வீசினான், அக்கல் துறவியின் தலையில் பட்டுக் காயத்தை ஏற்படுத்தியது. துறவியின் துன்பத்தைக் கண்ட மற்ற பக்தர்கள், எழுந்து ஓடி, அந்த இளைஞனைப் பிடித்துத் தாக்கத் துவங்கினர்.

அதைக் கண்ட துறவி, அவனை அடிக்க வேண்டாம், அவனைத் தன்னிடம் அழைத்து வருமாறும் சைகை செய்தார்.

அவரது சொற்களுக்கு இணங்கிய பக்தர்கள், இளைஞனை மேடைக்கு இழுத்துச் சென்றார்கள். பயத்தோடு நின்ற அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே துறவி, அருகில் வைக்கப் பட்டிருந்த தட்டிலிருந்த மாம்பழம் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார், அவன் பயத்துடன் தயங்கினான். "அவனைத் தண்டிக்காமல் அவனுக்குப் பழம் தருகிறீர்களே சுவாமி...." என்று பக்தர்கள் கூச்சலிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திய துறவி, கூட்டத்தினரைப் பார்த்துக் கூறினார்:

"ஓரறிவு உடைய மரமானது தன்மீது கல் எறிபவனுக்கு பழத்தைத் தருகிறது. ஆறறிவு உடைய நான், எனக்குத் துன்பம் செய்தவனுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டாமா?"

துறவி கூறியதைக் கேட்டவுடன் அவர் பாதங்களில்…

13ம் நூற்றாண்டில் சிதம்பரத்தை தாக்கிய சுனாமி! - அகழ்வாய்வில் கிடைத்த ஆதாரங்கள்.

Image
சிதம்பரம் தாலுகாவில் உள்ள விளாகம் பகுதியில், 13 நூற்றாண்டைச் சேர்ந்த கேணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேணியை சுற்றி அமைந்துள்ள, கடல் மண்ணை ஆய்வு செய்த போது, 1,300 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் சுனாமி தாக்கியது, தெரிய வந்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகாவில் அமைந்துள்ளது, விளாகம் கிராமம். இவ்வூரில், இரண்டு வாரங்களுக்கு முன், மஞ்சாங்குட்டை என்ற இடத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை செய்த போது, பழங்கால கிணறு வடிவிலான பொருள் இருப்பதை, தொழிலாளர்கள் கண்டனர்.

உடனடியாக, அப்பகுதி ஊராட்சி தலைவர், பிரபாகரன், சிதம்பரம் அண்ணாமலை பேராசிரியர், சிவராமகிருஷ்ணன், கலைச் செல்வன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.பேராசிரியர்கள், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, பல்வேறு தகவல்கள் வெளியாகின.இதுகுறித்து, பேராசிரியர்கள் கூறியதாவது:
கேணியின், செங்கற்களின் நீளம், 24 செ.மீ., அகலம், 16 செ.மீ., உயரம், 4 செ.மீ., கொண்டதாக அமைந்துள்ளது. 12ம் நூற்றாண்டு வரை, சுடுமண்ணால் செய்யப்பட்ட கற்களால் அமைக்கப்பட்ட உறை கேணி மூலம், தண்ணீர் பெறும் மரபே, நம்மிடம் இருந்து வந்தது.பின், 13ம் நூற்றாண்டி…

பெரியாருக்காக கப்பலையே நிறுத்திய காமராஜர்!

Image
1956ம் ஆண்டு காமராசர் முதலமைச்சராக இருந்த காலகட்டம். தந்தை பெரியாருக்கு மலேசியா-சிங்கப்பூர் நாடுகளில் இருந்து அழைப்பு வந்தது. சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளிதழின் ஆசிரியர் கோ.சாரங்கபாணி அவர்கள் ஐயாவை அழைக்க ஏற்பாடு செய்து இருந்தார்கள். முதலில் பர்மாவுக்கு போய் பின்னர் அங்கிருந்து மலேசியாவின் பினாங்கு பிறகு சிங்கப்பூர் என பயணம் செய்வதாக திட்டம்.

ஐயாவுடன் அவரின் உறவினர்கள் ஆனைமலை நரசிம்மன், அவரது சகோதரி ராமகிருஷ்ணம்மாள், தவமணியம்மை, நான் ஆகிய ஐந்து பேரும் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இடையில் சில நாட்களே எஞ்சி இருந்தது. வேலைகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றாக வேண்டும். நானே அங்குமிங்கும் ஓடி காரியங்களை கவனித்தேன். ஐந்து பேருக்கும் பாஸ்போர்ட் எடுத்துவிட்டோம். பர்மா தூதரக அலுவலகத்தில் விசா எடுப்பதற்கு போலீஸ் கமிஷனர் திரு.குப்புசாமி பெரிதும் உதவினார். பர்மியத் தூதரக அதிகாரிகளை படாதபாடு படுத்தி ஒரு வழியாக விசாவை வாங்கினோம். இதற்கிடையில் ஆறேழுநாட்கள் ஓடிவிட்டன. ஒரே ஒருநாள் மட்டுமே எஞ்சி இருந்தது.

விசாவைப் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனிக்குப் போய் ஐந்து பேருக்கும் டிக்கெட் எடுத்த…

ஒரு கூலான கதை... story

Image
ஒரு கிராமத்திற்கு சென்று சாதியை ஒழிப்போம்  என்ற தலைப்பில் பேட்டி எடுத்தார் ..
இவர் முதல் ஒரு டீ கடையின் முன் தனது பேட்டியை ஆரம்பித்தார் .அங்க சாதி என்பது உங்கள் ஊரில் உண்டா என்று நிருபர் கேட்டார் ..? ஏன் இல்லை இதோ கீழே உட்கார்ந்து டீ
குடிப்பவர்கள் கீழ் ஜாதி மக்கள் என்றார் பெரியவர் .. நிருபர் எதுவும் பேசாமல் ஊரின்
உள்ளே சென்றார் ..அங்கே தம்பதிகள் நடந்து வந்தனர் அவகளிடம் நிருபர் சாதி என்பதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிரீர்கள் என்று கேட்டார் ..அந்த தம்பதிகள் ஜாதி என்பதை நாங்கள் ஏற்கவில்லை. என் மனைவி கீழ் ஜாதி நான் மேல் ஜாதி என்றார்.. பிறகு நிருபர்
ஒரு கேள்வி கேட்டார் ஜாதி என்பது இல்லை என்று சொல்லி கீழ் ஜாதி ,மேல் ஜாதி என்று வாய்க்கூசாமல் சொல்கிறீர்கள்..

அவர்கள் கோபம் அடைந்து சென்றனர் ..... பிறகு நிருபர்அதே கிராமத்தில் உள்ள குழந்தைகள்  காப்பகத்திற்கு சென்றார். அங்கே குழந்தைகள் விளையாடி கொண்டு இருந்தனர் .. அதில் 3 வயது குழந்தையை பார்த்து நிருபர் கேட்டார் நீ என்ன ஜாதி ...?
,
குழந்தைகள் ஜாதி ...
,
இன்னும் 10வருடம் கழித்து ..?
,
சிறுவர்கள் ஜாதி ...?
,
இன்னு ம் 20வருடம் கழித்து ..?
,
இளைஞர்கள்…

இது கட்டுக் கதையல்ல. kaamaraaj

Image
கண்ணீரால் நிறைந்த நிஜம்.

அந்தக் காலம் இப்படியும் இருந்திருக்கிறது என்பதினை படிக்க படிக்க உறக்கமின்றி தவித்தேன்...

“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் .., முன்பகுதியிலேயே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன்.
குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துக்கிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்டல்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப…

கடவுள் ஏன் கல்லானான்...

Image
இரண்டு நாட்களுக்கு முன்னர் விழி இழந்த மாற்று திறனாளிகள் சென்னையில் அரசாங்க வேலை கேட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 120 பேரும் மாலையில் விடுவிக்கப் பட்ட போதிலும் உண்ணாவிரதம் இருந்த 19 பார்வையற்ற போராளிகளை தனியே வாகனத்தில் ஏற்றி இரவு பத்து மணிக்கு மேல் கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறக்கி விட்டு 'மெரீனா கண்ணகி சிலை அருகே உங்களை நாங்கள் இறக்கி விட்டு உள்ளோம் இனி நீங்கள் போகலாம்' என்று கூறி காவல்துறை கிளம்பி விட்டது.

பார்வையற்றோரும் தாங்கள் மெரீனா கடற்கரையில் தான் இறங்கி உள்ளோம் என்று நினைத்து தட்டுத் தடுமாறி நடந்த போது அது ஒரு சுடுகாடு என அறிந்து அதிர்ந்து போயினர் . பின்பு அங்குள்ள மக்களிடம் விசாரித்த போது தான் அவர்களுக்கு தெரிந்தது அது சென்னை மெரீனா கடற்கரை அல்ல உத்தண்டி சுடுகாடு என்று.

இப்படி மனிதநேயமே இல்லாமல் ஒரு சில காவலர்கள் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.

10 கோடி ரூபாயை சினிமா துறைக்கு வாரி வழங்கிய தமிழக அரசு,இவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்து மாதம் 10,000 ரூபாய் சம்பளம் கொடுத்திருந்தாலும் 30…

சிறு மற்றும் குறுந்தொழில்கள் மானியம்...

Image
யாருக்கு? எவ்வளவு? //மாணவர்கள் அவசியம் படிக்கவும்//

படித்துவிட்டு ஏதாவது ஒரு வேலைக்குச் சென்றுவிடவேண்டும் என்று இன்றைய இளைஞர்கள் துடிக்கிறார்கள். ஆனால், இளைஞர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசாங்கங்கள் பலவகையிலும் மானியம் தருகிறது. ஆனால், அதுகுறித்த தகவல்கள் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவே இல்லை. சொந்தமாகத் தொழில் தொடங்க நினைக்கிறவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் என்னென்ன மானியங்களை அளிக்கிறது, இந்த மானியங்கள் யாருக்கு கிடைக்கும், இதைப் பெற என்ன தகுதி வேண்டும் என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்லவே இந்தக் கட்டுரை.

முதலில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (ஜிமிமிசி) தரும் மானியங்களைப் பற்றி பார்ப்போம்.

முதலீட்டுக்கான மானியம்!

தகுதியுள்ள தொழில்கள்: லாபகரமாக செயல்படுத்தத்தக்க அனைத்து உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் மற்றும் அனைத்து வகையான குறுந்தொழில்களுக்கும் கிடைக்கும்.
வழங்கப்படும் மானியம்: கட்டடம் மற்றும் இயந்திரங்கள் வாங்க திட்ட மதிப்பில் 15%-30%.
கூடுதல் முதலீட்டு மானியம்!
தகுதியான நபர்கள்: தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிக…

ஒரு கர்நாடக சாதனை ....

Image
ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் பத்து லிட்டர் குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள் .
***************************************************
ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் பத்து லிட்டர் குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள் பெங்களூரு அருகே அமைக்கப்பட்டுள்ளன

ஒரு ரூபாய்க்கு பத்து லிட்டர் குடிநீர் இந்த ஏ.டி.எம்மில் வழங்கப்படுகின்றது.

பெங்களூரு அருகே உள்ள கனகபுரா பகுதியில்தான் இந்த வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் இப்பகுதியில் உள்ள பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதாரணமாக சந்தையில் 20 லிட்டர் குடிநீர் 40 ரூபாய் முதல் 50 ருபாய் விற்கப்படுகின்றது. ஆனால் இங்குள்ள மெஷினில் ஒரு ரூபாய் நாணயத்தைச் செலுத்தினால் அடுத்த ஒரு நிமிஷத்தில் 10 லிட்டர் குடிநீர் கேனில் நிரம்பியிருக்கும்.

இங்கு ஒருவருக்கு தண்ணீர் கிடைத்தது, இன்னொருவருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்னும் பிரச்சினைக்கே இடம் இல்லை. குடிநீருக்காக வரும் அனைத்து மக்களுக்கும் நிச்சயம் இங்கு தண்ணீர் உண்டு.

பாதுகாக்கப்பட்ட பத்து லிட்டர் குடிநீர் ஒரு ரூபாய்க்கும், இருபது லிட்டர் குடிநீர் இரண்டு ரூபாய்க்கும் வாட்ட…

பழந்தமிழரின் கப்பல் கட்டும் தொழில்நுட்பங்கள்: Tamil_ships

Image
இன்று மிகச் சமீபமான வரலாற்றை உடைய நாடுகள் தங்களின் பாரம்பரிய பாய்மர கலம் கட்டும் தொழில்நுட்பத்தையும் அதனை பயன்படுத்திய விதத்தையும் மீட்டுருவாக்கம் செய்கிறார்கள். ஆனால் உலகின் மிகப்பழமையான தொன்தமிழ் கடலோடிகள் என்று பெயரெடுத்த தமிழர்கள் அந்த பாரம்பரிய அறிவினை இழந்து அதனை உணராமல் இருப்பது வேதனை. இங்கு தோண்ட தோண்ட புதையல்களாக கிடைக்கும் அளவுக்கு புதையல்கள் அதிகம். ஆனால் அதனை முன்னெடுத்து செல்லவோ மீட்டுருவாக்கம் செய்யவோ நல்மனங்கள் இல்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எகிப்திலும் இஸ்ரேலிலும் எங்கு எங்கு என்று தேடித்தேடி அலைகிறார்கள். தொழில்நுட்பத்தை கையில் வைத்துக்கொண்டு துரும்பு கிடைத்தால் கூட அதனை ஆவணப்படுத்துகிறார்கள். அரசாங்கம் அதற்கான முழு உதவிகளையும் செய்கிறது. ஒரு தம்பதி ஜோடிகள் கனடாவின் Prince தீவுக்கடற்கரையில் உலாவப் போக அங்கு போர்க்காலங்களில் பயன்படுத்தப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த உடைந்த ஒரு கப்பல் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டு பின்பு ஆராயப்பட்டு ஆவணப்படுத்தப்படுகிறது.

இன்று அறிவியலும் தொழில்நுட்பமும் மிக வளர்ந்துள்ள இவ்வேளையில் நாம் நம்முடைய மறக்கட…