மதியிறுக்கம் (Autism)


அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு

என்பது ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன், சமுதாய அரங்கில் செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும்

மதியிறுக்கமுள்ள குழந்தைகளை அடையாளம் காணுதல்

மதியிறுக்கமுள்ள குழந்தைகளுக்கு உடலில் வெளிப்படையாக எந்த பாதிப்பும் இருக்காது.
இவர்களின் நடத்தையை உற்று நோக்குதலின் மூலம் குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடியும்.

எடுத்துக்காட்டாக பிறரோடு கண்ணோக்கிப் பேசுவதில் சிக்கல் இருக்கும். கால் கட்டை விரல் நுனியில் நடப்பவர்களாக இக்குழந்தைகளில் சிலர் இருப்பர்.

இவர்களது நடத்தைகளில் அதிகமான வேறுபாடு இருப்பினும் ஒரு சில நடத்தைகள் மூலம் மட்டுமே குறைபாடுடைய குழந்தை என வகைப்படுத்த இயலாது.

எனினும் சில குறிப்பிட்ட நடத்தைகள் மதியிறுக்கமுடைய குழந்தைகளைக் குறித்துக் காட்டும்.

தன் வயதொத்தவர்களுடன் நட்புணர்வு கொள்வதிலும் சமூகத் திறன்களை வெளிக்காட்டுவதிலும் ஈடுபாடற்று இருத்தல்.
சிலவகைச் செயல்பாடுகள் செய்வதில் சிக்கல்.

அவர்களது நடத்தை மற்றும் பிறரை எதிர்கொள்ளும் விதத்தில் கேலிக்கு ஆளாதல்.

பிறருடன் பொருந்திச் செல்லாமல் தனித்து இருத்தல் ( உணவு, விளையாட்டு போன்றன).

தங்களது நடத்தையானது மற்றவர்களை எவ்விதம் பாதிக்கிறது என அறியாதிருத்தல்

(மற்றவர்கள் கருத்தை மறுத்துப் பேசுதல்,
அதிக சத்தத்துடன் பேசுதல்,
மற்றவர்களோடு இணைந்து செல்ல மறுத்தல்,
தேவையற்ற விமரிசனம் செய்தல்,
சிறு இழப்பிற்காகக் கூட அதிகமாக அழுது
ஆர்ப்பாட்டம் செய்தல் போன்றவை).

அன்றாட வேலைகளில் ஏற்படும் சிறு மாற்றத்தைக் கூட எதிர்கொண்டு சமாளிப்பதில் சிக்கல்.

இவர்கள் தன்போக்கிலேயே செயல்படவேண்டும் என நினைப்பர்.

அதனால் சமூகத்திறன்களில் குறைபாடுடையவர்களாக இருப்பர்.

பரபரப்பான சத்தம் நிறைந்த சூழல்களில், (எ.கா. விளையாடுமிடம்) மிகவும் படபடப்புடன் காணப்படுவார்கள்
.
சிலருக்கு சிலவகைத் துணிகள் அணிவதிலோ அல்லது தங்கள் உடல் மேல் உடை உராயும்போதோ சிரமம் ஏற்படும்

ஜெயம் செல்வகுமார் பாளையம்


நன்றி : https://www.facebook.com/profile.php?id=100002832026447

Comments