ஒரு கர்நாடக சாதனை ....

 
ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் பத்து லிட்டர் குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள் .
***************************************************
ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் பத்து லிட்டர் குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள் பெங்களூரு அருகே அமைக்கப்பட்டுள்ளன

ஒரு ரூபாய்க்கு பத்து லிட்டர் குடிநீர் இந்த ஏ.டி.எம்மில் வழங்கப்படுகின்றது.

பெங்களூரு அருகே உள்ள கனகபுரா பகுதியில்தான் இந்த வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் இப்பகுதியில் உள்ள பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதாரணமாக சந்தையில் 20 லிட்டர் குடிநீர் 40 ரூபாய் முதல் 50 ருபாய் விற்கப்படுகின்றது. ஆனால் இங்குள்ள மெஷினில் ஒரு ரூபாய் நாணயத்தைச் செலுத்தினால் அடுத்த ஒரு நிமிஷத்தில் 10 லிட்டர் குடிநீர் கேனில் நிரம்பியிருக்கும்.

இங்கு ஒருவருக்கு தண்ணீர் கிடைத்தது, இன்னொருவருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்னும் பிரச்சினைக்கே இடம் இல்லை. குடிநீருக்காக வரும் அனைத்து மக்களுக்கும் நிச்சயம் இங்கு தண்ணீர் உண்டு.

பாதுகாக்கப்பட்ட பத்து லிட்டர் குடிநீர் ஒரு ரூபாய்க்கும், இருபது லிட்டர் குடிநீர் இரண்டு ரூபாய்க்கும் வாட்டர் ஏ.டி.எம்களில் வழங்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் தற்போது 33 வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மூலம் : http://www.ndtv.com/article/south/at-karnataka-s-water-atms-10-litres-of-water-for-rs-1-414071

Comments