எவன் பெரிய சாதி...?

ஒரு தனியார் பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டின் வகுப்பாசிரியராக இருந்த பொழுது நடந்த நிகழ்வுகள் சில என் நினைவடுக்குகளில் நிறமோடு பதிந்துவிட்டன. அவற்றில் ஒன்று..பிரசாந்த் என்ற மாணவன் சார் கருப்ஸ்   எங்க ஆத்துக்குள்ளே வரமாட்டேன் என்கிறான் சார் நீங்க கொஞ்சம் சொல்லுங்க என்றான். ஏண்டா கருப்ஸ்  என்றால் கருவாயன் ஒரு புன்னகையோடு மழுப்பினான். அதற்குள் பிரசாந்த் எங்க அப்பா வந்து கூப்ட்டாலும் வெளியேவே நிக்கிறான்  சார்.

அவன் தான் அழைக்கிறான் இல்லையா ஏண்டா நீ இப்படி அடம் பிடிக்கிறே என்றால் பதில் மீண்டும் ஒரு புன்னகை ஒரு மழுப்பல்  சிரிப்பு. கொஞ்சம் தனிமையில் அழுத்தி கேட்டபின் சொன்னான் அவங்க அப்பா மாறிட்டார் சரி சார் உள்ளே அவன் பாட்டி ஒருத்தங்க இருக்காங்க இல்லையா அவங்க எப்டி மாறியிருக்க முடியும். நான் உள்ளே போனால் அவங்க மனம் புண்படுமே என்றான்.

தன்னை ஒரு மனிதப் பிறவியாக கூட மதிக்காத மனுதர்மத்தை போற்றும் (பெண் மனுஷி அல்ல என்பது மனு தர்மம் பெண் ஒரு பொருள் அவ்வளவே) அந்த வயோதிகியின் மனதுகூட புண்படக் கூடாது என்று வாசலில்  நின்ற அவனது பக்குவம் கண்டு நான் சிலிர்த்தேன்.

 சொல்லுங்க பாஸ் யாரு பெரிய சாதி?
எத்துனை நூற்றாண்டுகள் ஆகும் இந்தப் பிரிவினைகள் ஒழிய?

இப்போது

கருப்ஸ் ஒரு பொறியாளர் சில ஆண்டுகள் புனே நகரின் சிடாக் நிறுவனத்தில் வேலை.. அருமையான மனைவி (அவர் வங்கி ஊழியர்). தற்போது சென்னையில் என்று கேள்வி. எனது மாண்புமிகு மாணவர்களில் ஒருவர்.

ஊறிப் போய்விட்ட இந்த பிரிவினைகள் மறையாத வரை நாம் வளர முடியாது என்பதே நிதர்சனம். கொஞ்சம் மாற்றுவோம் வாங்க. நம்பிக்கை தானே வாழ்க்கை.

அன்பன்
மது

Comments

 1. ஆழ்ந்த கல்வியால் மாறும் காலம் வெகு அருகில் தான் உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. தன்னையும் சக மனிதனையும் நேசிக்க கற்றுக்கொடுக்கும் கல்வி ... என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கருத்துக்கு மிக்க நன்றி...

   Delete
 2. இன்றைய தலைமுறை சாதிமுறையைப் பார்ப்பதில்லை. ஆனால் நாம பெரிசுங்க தான் விடாப்பிடியா மாறவே மாட்டேனு ஒத்த காலுல நிக்குது. உன் மதத்தை மனதில் வை. சாதியை வீட்டில் வை (அவ்வளவு சீக்கரம் மாத்த முடியாதுல). அன்பு என்பதை மட்டும் அனைவருக்கும் காட்டு என்பதை இன்றைய மாணவர்களிடம் நாம் புகட்டுவோம். நிச்சயம் விடியல் வெகு தொலைவில் இல்லை. சிந்தனையான பகிர்வுக்கு நன்றி அய்யா.

  ReplyDelete
  Replies
  1. தோழர் பாண்டியன் என்ன செய்யலாம் வகுப்பறையில் ....

   Delete
  2. ஒரு ஆசிரியராக நல்ல மனம் படைத்த மாணவர்களை உருவாக்குவோம் சகோதரே. சாதியில் ஊறிப்போன சமுதாயத்தில் வேறென்ன நாம் செய்து விட முடியும்!

   Delete
  3. http://www.velunatchiyar.blogspot.in/ இது நீங்கள் கேட்ட வலைப்பூ சகோ ..

   Delete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை