உங்கள் கடவுச் சொல்லை பகிர்ந்தால்...


என்னது கடவுச் சொல்லை பகிர்வதா? லூசாப்பா நீ என எகிற வேண்டாம். நான் பகிர்ந்திருக்கிறேன். ஆர்வக் கோளாரில் நண்பர் ஒருவரின் திருமணத்தை முகநூலில் ஒரு நிகழ்வாக பதிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன்.

சரியாக ஒரு பத்து மணிக்கு ஒரு அழைப்பு, என்ன என்றேன். உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா? உங்களை யாருங்க முகநூல் நிகழ்ச்சியை உருவாக்க சொன்னது, ஏன்? ஏதும் தவறாக நடந்துவிட்டதா என்றேன். பெருசா
ஒன்னும் இல்லை ஆறாம் தேதி திருமணத்தை ஐந்தாம் தேதி என்று போட்டிருக்கிறிர்கள். ஆகா சரி செய்ய அலுவலகத்தில் கணினி இல்லையே. வேறு வழி கடவுச் சொல் பகிரப்பட்டு தவறு சரி செய்யப்பட்டது. அன்றே கடவுச் சொல்லை மாற்ற நான் மறக்கவில்லை.

சரி ஈமெயில் மூலம் கடவுச் சொல்லை பகிரலாமா? ஒரு விசயம் ஈமெயில் எப்படி செயல்படுகிறது? ஒரு தகவல் பல ஆயிரம் துண்டுகளாக பகிரப்பட்டு பல்வேறு வழிகளில் பயணப்பட்டு கடைசியில் பெருநரை அடைகிறது. இது ஒரு சர்வரில் சேமித்து வைக்கப்படும். இந்த சர்வரில் உள்ள விசயங்களை சமயத்தில் விரும்பியவர்கள் எடுக்க முடியும். இதற்கப்புறம் உங்கள் விருப்பம்.

இணையத்தில் மந்தணம்(ரகசியம்) என்பதே கிடயாது. எதையும் யாரும் எடுக்க முடியும் என்பதே நிதர்சனம்.

அன்பன்
மது 

Comments

  1. /// அன்றே கடவுச் சொல்லை மாற்ற நான் மறக்கவில்லை. ///

    மிகவும் முக்கியம்...

    ReplyDelete
    Replies
    1. எப்படி இப்படி விரைவாக ..? உங்களை அடித்துக்கொள்ள முடியாது...

      Delete
  2. தேவை எச்சரிக்கை என்பதை எச்சரிக்கிறது தங்கள் பதிவு. நன்றீங்க நண்பரே.

    ReplyDelete

Post a Comment

வருக வருக