தங்க ரேகை


அமெரிக்கா வாய்ப்புகளின் நாடு என்பது அனைவரும் ஒத்துக்கொள்ளக் கூடியதே. ஆனால் வாழ்க்கை நம்மை நோக்கி வீசும் வாய்ப்புகளை எத்துனைப் பெயர் சரியாக பயன்படுத்துகிறோம்? ஒரு கோடிரூபாய் கேள்வி.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் அமெரிக்காவை ஆட்டிப் படைத்தது தங்க காய்ச்சல். எங்கெல்லாம் தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் வளர்ச்சியை விரும்பும் அமெரிக்கர்கள் பேய் பிடித்தது போல் நகர்ந்தார்கள். முயற்சித்த சிலருக்கு தங்கம் கிடைத்தது. சிலர் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள்.

இப்படி தங்கம் தேடிப் போனவர்களில்  டெர்பியும்  ஒருவர். கொலராடோவில் பல மாதம் அலைந்து தங்கத்தை தேடினார். கணக்கற்ற முயற்சிகளுக்குப் பின்னர் அவருக்கு ஒரு தங்க ரேகை தென்பட்டது.

தங்க ரேகை என்பது ஒரு புவியியல் சின்னம். தங்கரேகை இருந்தால் அங்கு ஒரு சுரங்கம் தோண்டும் அளவிற்கு தங்கம் இருக்கும். டெர்பி தனது தங்க ரேகையை ரகசியமாக மறைத்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.  ஆமா, சுரங்கம் தோண்டுவதென்றால் சும்மாவா. நிறையப் பணம் வேண்டுமே?

ஊரில் அறிந்தவர் தெரிந்தவர் எல்லோரிடமும் பொறுமையாக விளக்கி பெரும் தொகையை திரட்டினார். சுரங்கம் தோண்டும் எந்திரங்களை பெரும் செலவில் வாங்கிக் கொண்டு ஒரு கப்பலில் ஏற்றி தனது கனவினை நனவாக்கப் புறப்பட்டார்.

தனது தங்க ரேகை இடத்தை அடைந்து பணிகளை ஆரம்பித்தார். ஒரு நாள் , ஒரு வாரம் ... மாதங்கள் என தொடர்ந்தது அகழ்வுப் பணி. ஆனால் தங்கம் மட்டும் கிடைத்த பாடில்லை.

மெல்ல மெல்ல டெர்பிக்கு உண்மை புரிய ஆரம்பித்தது. இனி தங்கம் கிடைக்கப் போவதில்லை. அவர் தயாரானார் தோல்விக்கு. ஒரு காயலான் கடைக்காரனை கூப்பிட்டு பலலெட்சம் மதிப்புள்ள தனது சுரங்க தோண்டும் இயந்திரங்களை விற்றார்.கனத்த மனதுடன் ஊர்திரும்பினார். தனது கடனை மிகுந்த சிரமத்துடன் அடைத்தார்.

சரி அந்தக் காயாலன் கடைக்காரர் என்ன செய்தார் தெரியுமா? இந்த ஆள் ஏன் இங்கே நோண்டினான்? என்று குழம்பி ஒரு புவியியல் நிபுணரை வரவழைத்தார். அவர் சில மணி நேரம் ஆய்வு செய்துவிட்டு சொன்னார். இன்னும் மூன்றடி தோண்டினால் கொலராடோவின் ஒரு அற்புத தங்க சுரங்கம் இருக்கிறது.

காயலான் கடைக்காரர் கோடீஸ்வரர் ஆனார்.

ஊரில் இதைக் கேள்விப்பட்ட டெர்பி ஏமாற்றத்தின் வலியையும் வேதனையும் நேர்மறையாக மாற்றினார். ஒரு இன்சூரன்ஸ் விற்பனையாளராக இருந்த அவர் மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக்கொண்டார் "மூன்றடியில் தங்கத்தை விட்டவன் நான்". இது அவருக்கு ஒரு பெரிய உந்து சக்தியை கொடுத்தது. அமெரிக்காவின் பெரும் இன்சுரன்ஸ் விற்பனையாளர்களுள் ஒருவராக இன்றும் மதிக்கப் படுகிறார். ஆம் தங்கக் சுரங்கம் என்ன தந்திருக்குமோ  அதை இன்சுரன்ஸ் விற்றே அடைந்தவர் அவர்!


உங்களின் தங்க ரேகை எது?

தேடல்களுடன்
மது

இந்தப் பதிவில் ஒரு வலைப்பூ

என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வலைபூக்களில் இதுவும் ஒன்று

கலையரசனின் வலைப்பூ
http://kalaiy.blogspot.in/

நீங்களும் பாருங்களேன்.

 


Comments

  1. தங்க ரேகை - மனம் தான்...

    ReplyDelete
  2. தங்க ரேகை அத்ர்ஷ்டம் உள்ளவர்களுக்கு தான் புலப்படும். அவர்களுக்கு தான் குடுக்கிற கடவுள் கூரையை பிய்த்துக் கொண்டு குடுக்கும்.
    நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி

      Delete
  3. பாடம் சொல்லும் பதிவு . கடைசி வரை முயல்வதே வெற்றி தரும்.

    ReplyDelete
  4. இதைத்தான் நண்பரே கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது,
    சிவபக்தன் ஒருவன் மிகவும் கஷ்டப்பட்டான் இதைக்கண்ட மிஸஸ் பார்வதி மிஸ்டர் சிவாவிடம் கேட்டாராம் ஏங்க உங்க பக்தன் ஒருவன் கஷ்டப்படுறானே அவனை லைட்டா கவனிக்ககூடாதா ? என்று அதற்க்கு சிவா அந்தத் தரித்திணியம் புடிச்சபக்கி எதுலயுமே ஒத்து வராது வேணும்னா ? யூ வில் ட்ரைனு சொன்னாராம் உடனே மிஸஸ் பார்வதி விலை மதிப்புள்ள கல்யாணி கவரிங் நகையை கழட்டி அவன் வரும்போது வழியில் போட்டாராம் பக்தன் என்ன செய்தான் தொரியுமா ? நமக்கு கண் இல்லைனா எப்படி நடப்போம் ? அப்படினு டெஸ்டிங் செய்வோம்ணு கண்ணை மூடிக்கிட்டு வந்தவன் நகையை கடந்து போனதும் நமக்கு சரியா வராதுன்னு ஒழுங்கா நடந்து போனானாம் பின்னால வந்தவன் நகையை எடுத்துக்கிட்டு போயிட்டானாம் மிஸ்டர் சிவா கேட்டாராம் சொன்னாக்கேட்டியா இதுக்குத்தான் சொல்றது லேடீஸ் புத்தி பேக் புத்தினு இருந்த ஒரு கவரிங் நகையவும் தூக்கிப்போட்டுட்டியே நாளைக்கி கில்லர்ஜி வீட்டு விஷேசத்துக்கு எதைப்போட்டுப்போவேனு.....
    எடுத்து வச்சாலும் கொடுத்து வைக்கனும்.

    ReplyDelete
  5. விடா முயற்சி , விஸ்வரூப வெற்றின்னு சொல்றீங்க சார் ... இனி தீயா வேலை செய்யணும் ....

    ReplyDelete
  6. தங்க ரேகை மனதில் தங்கிய ரேகை.

    ReplyDelete
  7. இறுதி வரை போராடுபவர் மிகவும் குறைவுதான் சகோ..

    ReplyDelete

Post a Comment

வருக வருக