ஒரு நீண்ட பயணம், ஒரு நிகில் பயிற்சி

கடந்த வாரம் நிகில் நிறுவனர் திரு சோம.நாகலிங்கம் அய்யா அழைத்து அவல் பூந்துறை மேல்நிலைப் பள்ளியில் ஒரு வாழ்வியல் திறன் பயிற்சி நீங்கள் கலந்து கொள்ள முடியுமா? என்று கேட்க நான் கொஞ்சம் தயங்கி சரி என்றேன். தயக்கத்திற்கு காரணம், ஒரு சி.எல்லை காலி செய்ய வேண்டும். தேர்வுகள் வேறு நெருங்கிக்கொண்டிருக்கின்றன.
நிறைய நேரத்தை என்னுடைய மாணவர்களிடமே செலவிட வேண்டும். 
சரி என்று சொன்னால் இந்த முறையாவது   தப்பாமல் செல்லவேண்டும். யோசித்துவிட்டு சரி என்று சொன்னேன்.


நீண்ட பயணங்கள் எனக்கு உவப்பில்லாமல் போய்விட்டன. கிட்டத்தட்ட ஒரு நத்தை மாதிரி சுருங்கி போய்கொண்டிருக்கிறேனோ என்ற சந்தேகம் வேறு வந்துவிட்டது.

மேலிட உத்திரவுவேறு வேண்டுமே. வீட்டுக்காரம்மாவிடம் சொன்னவுடன் இரண்டு குழந்தைகளுக்கும் விடுப்பு, நானும் சி.எல் தந்துவிட்டு வீட்டில் இருக்கிறேன், நீ போயிட்டு வா ராஜா என்று பெரிய மனதோடு ஒத்துழைத்தார்கள். பெரிய நன்றியம்மா ஒன்றை பாடிவிட்டு  சனி காலை நான்கு மணிக்கு பேருந்தில் ஏறினேன்.

கரூர் சென்று அங்கிருந்து அம்மா திருமதி. மலர்க்கொடி நாகலிங்கம் மற்றும்  பயிற்சியாளர்கள் வந்த வேனில் இடம்பிடித்து அவல்பூந்துறை நோக்கி பயணத்தை தொடர்ந்தேன்.

பயிற்சியை ஏற்பாடு செய்திருந்த அவல்பூந்துறை ஐ.ஒ.பி வங்கியின் மேலாளர் திரு.ஜெக்தீஸ், மிக சிறப்பான விருந்தோம்பல் ஒன்றைத்தந்தார்.

பள்ளியில் நிகழ்வின் பொழுது மாணவர்களின் கட்டுப்பாடும், கற்றல் ஆர்வமும் ரொம்ப ஆரோக்கியமாக இருந்ததை உணர முடிந்தது. இது ஒரு நன்கு செயல்படும் ஒரு ஆசிரியர் குழுவும், ஒரு நல்ல தலைமையும் இருப்பதின் அடையாளம். மாணவர்களையும்  அவர்களைத் தரப்படுத்திய ஆசிரியர்களையும் மனதிற்குள் நிறையவே பாராட்டினேன்.

எனக்கு கிடைத்த தலைப்பு நினைவாற்றல். சும்மா ஆத்து ஆத்துன்னு ஆத்தினேன். ஒரு வகுப்பில் இலக்கு அமைத்தலை குறித்து பயிற்சியளிக்கும் வாய்ப்பை நண்பர் முருகராஜின் கருணையால் பெற்றேன்.

வரலாறு முக்கியம் அமைச்சரே.
நான் தான் ஆறுமணிநேரம் பயணப்பட்டேன் என்றால் வினோ எட்டு மணி நேரம். அதுவும் காய்ச்சலுடன். ஏன்டா என்றால் அண்ணே இந்தப் பயிற்சியில் கிடைக்கும் திருப்தி முக்கியம்னே. சும்மா  ஒருவாரம் இந்த மகிழ்வு இருக்கும் என்றான். நல்ல மனப்பக்குவம். வாழ்த்துக்கள் வினோ. நண்பர் சபாவும், விருதுநகர் ஜீத் பாண்டியனும் சில சாகசங்களுக்கு பிறகே பயிற்சிக்கு வந்ததை அறிந்தேன்.  திருமதி. ராதா, அவரது கணவர் திரு. அஸ்வத்துடன் வந்திருந்தார். இருவருமே நல்ல பயிற்சியாளர்கள். மெமரி எக்ஸ்பர்ட் திரு. சுரேஷ்,  நிகழ்வில் பயிற்சியளிக்க  விமானப்  பயணத்தின் மூலம் வந்து  என்னை ஆச்சர்யப்படுத்தினார். கமிட்மென்ட் மக்கா.

வழக்கமான பயிற்சியாளர்களுடன்  ஈரொடு ஜே.சி.க்கள் திரு மோகன், உட்பட  மூன்று தோழர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கும் ஒரு நன்றி.

பெரியாரின் பிறந்த மண்ணில் கால்வைக்க ஒரு வாய்ப்பை அளித்தது இந்தப் பயிற்சி. ஒரு ஃரெப்ரஷிங்கான நிகழ்வு!

எனக்குள் இருந்த நத்தையை நகர்த்திய நிகில் உனக்கு இன்னும் ஒரு நன்றி.

அன்பன்
மது

மேலும்சிலபடங்கள் 

திரு. ஜெகதீஸ்,  மற்றும் திரு. சௌந்தர், இயக்குனர், நிகில் நிறுவனம்

ஜீத், தீனா, எம்.ஜி.ஆர்

வினோ
தொடர்புடைய பதிவுகள்
நிகில் நிறுவனம் 
இரண்டு இரண்டு இரண்டு
கரூரில், ராமசாமி பள்ளியில்

Comments

 1. சும்மா ஆத்து ஆத்து ஆத்தினதை ஒரு பகிர்வா போடுங்க...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக பதிவிடுவேன்.

   Delete
 2. முதலில் உங்களின் துணைவியாருக்கு நன்றி. இந்த மாதிரி வேளைகளில் அவர்களின் ஒத்துழைப்பு மிக மிக முக்கியம்.

  ReplyDelete
  Replies
  1. அதேன் பதிவிலேயே பாடிட்டேனே... நன்றி

   Delete
 3. வாழ்த்துக்கள். சீக்கிரம் அந்த "நினைவாற்றல்" பற்றி ஒரு பதிவை எழுதுங்கள். ஏனென்றால், எனக்கு நியாபக மறதி கொஞ்சம் அதிகம்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் ஆனால் அது நிகில் நிறுவனத்தின் படைப்பு நிறுவனரிடம் சொல்லிவிட்டு போடலாம் என்று இருக்கிறேன்..

   Delete
 4. சகோவிற்கு வணக்கம்
  தங்கள் பயணத்தைச் சிறப்பாக பகிர்ந்த விதமும் நடையும் ரசிக்க வைத்தன. தங்கள் மூலம் நிறைய கற்றுக் கொள்ள இருக்கிறது சகோ மறுக்காமல் கற்றுத் தாருங்கள். பயணங்கள் இனிமையாய் அமைவதில் எனக்கும் மகிழ்ச்சியே. நடந்தவற்றைக் கண்முன்னே நிறுத்திய நல்ல பதிவுக்கு நன்றிகள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோ...
   கருத்துக்கும்..

   Delete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...