காஸாபிளாங்கா ஒரு படம் மூன்று ஆஸ்கார்கள்.


காஸாபிளாங்கா மொராக்கோவின் மேற்கே அட்லாண்டிகில் அமைதியாக அமர்திருக்கும் ஒரு சிறிய நகரம். இரண்டாம் உலகப் போரின் பொழுது இது ஜெர்மனிய கொடுமைகளில் இருந்து தப்ப விரும்புவோரின் ஒரே நம்பிக்கையாக இருந்தஇடம். ஒரு புறம் தப்ப நினைபோரும் அவர்களை கழுகுகள் போல கண்காணித்து பிடிக்க திரியும் நாஜி படை மறுபுறமும் என எப்போதும் ஒரு உயிர்விளையாட்டு நடந்துகொண்டே இருக்கும்.
இங்கே ஹீரோ ரிக் ப்ளைன்(ஹம்ப்ரி போகர்ட்),  ரிக்ஸ் என்கிற ஒரு சூதாட்ட விடுதியை நடத்தி வருகிறார். இந்த பின்னணியில் நடக்கும் வெகு சுவாரஸ்யமான சம்பவங்களினால் ஆன  நாவல் எவெரி படி கம்ஸ் டு ரிக். இதுதான் காஸாப்ளாங்கா என்ற பெயரில் திரைப்படமானது.



படத்தில் அக்கால ஹிட் பாடலான ஆஸ் டைம் கோஸ் பை என்கிற பாடல் ஒன்று பியானோவில் இசைக்கப்படும். இதை எக்காரணம் கொண்டும் வாசிக்கக் கூடாது என்று ரிக் தனது பியானிஸ்ட்டுக்கு உத்தரவிட்டிருக்க அதை மீறி வாசிக்கும் சாமை வாசிக்க கோரும் அந்த வேண்டுகோள் உலகப் பிரசித்தமானது. அது உலகப் புகழ் பெற்ற சாகா வரம் பெற்ற வசனங்களில் ஒன்று “ப்ளே இட் சாம்”. நமது தலைமுறையில் “ஐ ஆம் கிங் ஆப் தி வோர்ல்ட்” என்ற டைடானிக் வசனத்தின் கடந்த தலைமுறை வசனம் இது.


இரண்டாம் உலகப் போரை பின்னணியாகக் கொண்ட திரைப்படம். உலகின் ஆகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று. ஹம்ப்ரி போகார்ட் என்ற நடிகரை அகில உலக சூப்பர் ஸ்டாராக்கிய படம். இந்தப் படத்தின் அதிரி புதிரி வெற்றிதான் ஹாலிவுட் இன்றளவும் போர்க்கால படங்களை எடுத்து தள்ளுவதற்கு காரணம்.

காதலிலும் போரிலும் எதுவுமே நியாயம்தான் என்பது ஒருவகையில் படத்திற்கும் பொருந்தும். போர்க்காலம் எப்படி இயல்பு வாழ்க்கையை பாதித்து மனிதர்களை அசாதாரண சூழல்களில் அதிர்வூட்டும் முடிவுகளை நோக்கி தள்ளுகிறது என்பதை செல்லுலாய்டில் பதிவிட்ட படங்கள் காலத்தின் அசுர பலத்தையும் தாண்டி இறவாவரம் பெரும் என்பதை மிகச் சரியாக உணர்த்தும் படம்.



காஸாபிளாங்கா  தீவில் ஹம்ப்ரி ஒரு சூதாட்ட விடுதியை நடத்தி வருகிறார். அவரிடம் உதவி கேட்டு ஒரு அன்னியர் வருகிறார். அவரை எப்படியும் பிடிக்க விரும்பும் ஜெரிமானியப் படை. ஹம்ப்ரி உதவலாம் என்று முடிவெடுத்து வரச்சொன்னால் அவர் மனைவியைப் பார்த்ததும் அதிர்கிறார். அவள் இவரது காதலி!

வழக்கம் போல் ஒரு தங்க முக்கோணம்! வழக்கத்துக்கு மாறாக ஒரு முடிவு! படத்தை பற்றி ஏற்கனேவே பல மொழிகளில் பல பேர் பலமுறை எழுதித் தீர்த்து விட்டார்கள். நான் என்னத்தை புதிதாக சொல்வது?

ஒரு அழுத்தமான காட்சியில் காதலி தன்னவனுக்காக பதட்டமாய் காத்திருக்க அவளது பதட்டத்தைப் பார்த்த இரயில் வண்டியின் கார்ட் ஒரு பரிவான புன்னகையோடு அவன் வந்துருவான் என்று சொல்வதும் அதேபோல் பதட்டம் உச்சத்தை அடைந்த ஒரு கணத்தில் அவன் வந்து அவளை ஆரத்தழுவும் அந்த நிறைவான கணத்தில் மீண்டும் அந்த கார்ட் சொல்வார், நான் சொன்னேன்லே வந்துருவான்னு.

ஒரு திரைப்படத்தில் எப்படி ஒரு சிறிய காட்சி அமைப்பு பார்வையாளனை கவர்ந்து, படத்துடன் ஒரு உணர்வு பிணைப்பினை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த காட்சி இன்றளவும் ஒரு வண்ணம்போகாத உதாரணம்.

இறுதிக் காட்சியில் தனது காதலியை அவளது கணவனிடம் போகச் சொல்லி ரிக் (போகார்ட்) பேசும் வசனம் கிளாஸ்... " போகலைனா இன்னைக்கு வருத்தபடமாட்ட, நாளைக்கும் வருதப்படமாட்ட ஆனா சீக்கிரம் வருத்தப்படுவே, மிச்சம் இருக்கும் உன் வாழ்நாள் முழுதும் வருத்தப்படுவே... போ"

இந்தப் படம் இயக்கம், திரைக்கதை, இயக்குனர் என்று மூன்று பெரும் பிரிவுகளில் ஆஸ்கார் விருதினை வென்றது. படம் வந்த ஆண்டு விருது பெறுவது இயல்பு, கடந்த 2007ஆம் ஆண்டிலும் அமெரிக்க திரையின் சிறந்த நூறு படங்களில் ஒன்றாக தேர்வாகி இருக்கும் படம் என்றால் படம் பற்றி கொஞ்சம் யோசிங்க... 

இது கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று.
இந்தப் படம் தந்த பாதிப்பில்தான் நான் ஹம்ப்ரி போகார்டை பற்றி விக்கியில் இருந்த கட்டுரையை மாங்கு மாங்கு என்று விரிவாக்கினேன்.


சந்திப்போம்,
அன்பன்
மது

Comments

  1. அருமையான விமர்சனம்
    நன்றி

    ReplyDelete
  2. படம் பார்த்திருக்கிறேன். நல்ல படம் என்பது வெகு சாதாரண வாக்கியம் என்று தோன்றுகிறது. ஒன்று கவனித்தீர்களா? இதே சாயலில்தான் பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள் வந்தது.

    ReplyDelete
  3. //வண்ணம்போகாத உதாரணம்// இதை மிக ரசித்தேன்..சாயம்போகாத என்று பொதுவாகச் சொல்வது இல்லையா?
    இந்தப் படம் பார்த்ததில்லை..பகிர்ந்ததற்கு நன்றி..நேரம் கிடைக்கும்பொழுது பார்க்கிறேன் மது.

    ReplyDelete
  4. வசனம் கூட நல்லாயிருக்கே...!

    ReplyDelete

Post a Comment

வருக வருக