லவ் லேஸ் அடா

அடா

உயிரில்லாக்
கணினி
உன் விழிபட்டதும்
உயிர் பெற்றதே
அடா!



வன்பொருளை
இயக்க
மென்பொருளை
வடிக்கலாமென
வையத்திற்கு
பகன்றவள் நீ!

லார்ட் பைரனின்
பெரும் பெயர்த்தியே
நீ இலக்கியம் தந்த
இயந்திரங்களின்
ஈவா..

நினைத்துப் பார்க்கிறேன்
நீ மட்டும் இல்லை என்றால்
இன்று இருக்குமா
எம். எஸ்
ஆரகிள்
கூகிள்
இத்யாதி இத்யாதி

வாய்த்திருக்குமா
இந்த இணயம்

இந்தியர்கள் பலருக்கு 

இன்று
எளிதாக 
அமெரிக்க
கிரீன் கார்ட்

நன்றி
எங்கள்
தேவதையே

மது

கணிப்பொறிகளின் ஆதியில் அவற்றை நிரல்கள் (ப்ரோக்ராம்) மூலம் இயக்கலாம் என முதன்  முதலாக வையத்திற்கு பகன்ற பெண்மணி லேடி லவ் லேஸ் அடாவின் நினைவாக ...

கணிபொறி நிரல்களின் தாய் என மதிக்கப்படுகிறவர்.

இவர் லார்ட் பைரன் என்கிற ஆங்கிலக் கவிஞரின் கிரேட் கிராண்ட் டாட்டர்... பெரும் பெயர்த்தி..

Comments

  1. அடடா...!

    அருமை... வாழ்த்துகளுடன் DD

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா...
      புயல்வேக பின்னூட்டம்...

      Delete
  2. வன்பொருளை
    இயக்க
    மென்பொருளை
    வடிக்கலாமென
    வையத்திற்கு
    பகன்றவள் நீ!

    உண்மை தான் சகோதரர் நம் நட்பும் நிகழ்ந்திருக்காதே.

    வாழ்க வளமுடன்....!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞரே...

      Delete
  3. லேடி லவ்வேஸ் க்கு புகழ் சேர்க்கும் விதமாக எழுந்த அற்புதமான கவிதைக்கு எழுந்து நின்று கைத்தட்டலாம் சகோ. அழகான வரிகளைத் தந்தமைக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஹை... ஹை கவிதை என்று கவிஞர் சொல்லிவிட்டார்...
      நன்றி சகோ...

      Delete
  4. ஒரு சின்னக் கட்டுரைக்கான பொருளை அழகாகக் கவிதையாக்கித் தந்ததற்கு வாழ்த்தும் நன்றியும். தமிழாக்க முயற்சி அருமை! தொடர்க !

    ReplyDelete
    Replies
    1. கட்டுரைதான் எழுத இருந்தேன்..
      ஆனா தமிழகத்தின் பெரும் கவிஞர்..
      அறிவியல் கட்டுரைக்கு கமன்ட் போட யோசிப்பார்... எனவே.. ஹி ... ஹி

      Delete
  5. லேடி லவ்வேஸ்க்கான கவிதை அருமை. உண்மை தான் அவர் இல்லையென்றால், இன்றைய கணினி உலகம் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்து பார்க்க கூட முடியலை.

    வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தலைவா ... ஹா ஹா நல்ல திரை அனுபவம் உங்களது..

      Delete
  6. நினைத்துப் பார்க்கிறேன்
    நீ மட்டும் இல்லை என்றால்
    இன்று இருக்குமா
    எம். எஸ்
    ஆரகிள்
    கூகிள்
    இத்யாதி இத்யாதி

    வாய்த்திருக்குமா
    இந்த இணயம்


    மிக மிக அருமை! உண்மையே அவர் இல்லை என்றால் இதோ நாம் பதிவர்கள் இணைந்திருப்போமா? பதிவுட்டு இதோ பின்னூட்டம் இட்டு........பேசியிருப்போமா!

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  7. பெருமையாய் உள்ளது நான் தேடும் கவிதைகள் இவைதாம் அடையாளம் காட்டியமைக்கு நன்றி.பெண்ணின் அறிவைப் போற்றும் கவிதை படைத்தமைக்கு

    ReplyDelete

Post a Comment

வருக வருக