ஜேசி குடும்ப உறுப்பினர் சந்திப்பு.


ஜே.சி.ஐ புதுக்கோட்டை சென்ட்ரலின் உறுப்பினர்களுக்கு குடும்ப சந்திப்பு ஒன்றை சிறப்புற ஏற்பாடு செய்திருந்தார் தலைவர் ஜே.சி கார்த்திக் அவர்கள்.
விழா ஒரு நல்ல இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சிறப்பு.குத்தூஸ் பள்ளி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்வு இயக்கத்தின் உறுப்பினர்களிடம் ஒரு பெருத்த வரவேற்பை பெற்றது.
விழாவிற்கு வரும் தம்பதிகளையும், அவரது குழந்தைகளையும் மற்றும் திருமணமாகாத உறுப்பினர்களையும்ஒருங்கிணைப்பதுசாதாரண விசயமா என்ன?

விழாவின் முதல் நிகழ்வாக குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது, ஸ்பூன் வாக், மற்றும் தக்காளியில் குச்சிகளை குத்துவது என சிறார்கள் சிறப்புற பங்கேற்றனர். பின்னர் வளயம் எறிதல் போட்டி தொடர்ந்தது.

இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு அகன்ற திரையில் கிங் காங் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்னர் தம்பதியர்களுக்கான போட்டி. ஜே.சி. ராதாகிருஷ்ணன், ஜே.சி. சக்திவேல் மற்றும் ஜே.சி முத்துக்குமார் தம்பதியர் போட்டிகளை வென்றனர்.

 மூத்த உறுப்பினர்கள் 1993ஆம் ஆண்டிற்கு பிறகு இப்படி ஒரு நிகழ்வு இந்த ஆண்டுதான் நிகழ்ந்திருக்கிறது என்றனர்.

நிகழ்வினை சிறப்புற திட்டமிட்ட தலைவர். கார்த்திக் அவர்களுக்கும், நிகழ்வு சிறக்க தனது பள்ளி வளாகத்தை தந்து உதவிய முன்னாள் தலைவர் திரு. ரியாலுதீன் அவர்களும் சிறப்புற ஒரு நிறைவான திட்டத்தை தந்திருக்கின்றனர்.

உறுப்பினர்களுக்கும் நிகழ்வை சிறப்புற நடத்தி தந்த திரு.முத்துக்குமார் அவர்களுக்கும் நன்றிகள்.

அன்பன்
மது.Comments

 1. நல்லதொரு சந்திப்பு நிகழ்வு...
  அடிக்கடி தொடரட்டும் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு. குமார்.
   முழுக்க முழுக்க தலைமை சார்ந்த அமைப்பு ஜே.சி.ஐ.
   தொடர்வது தலைவரின் முடிவில்தான் இருக்க முடியும்.
   இதற்க்கு முன்பு ஆச்போர்ட் சுரேஷ் அவர்கள் தலைவராக இருந்த பொழுது நிகழ்ந்தது இம்மாதிரி ஒரு நிகழ்வு..
   நிகழ்த்தும் தலைவர்கள் கிளை இயக்க வரலாற்றில் நிச்சயம் நினைவுகூரப்படுவார்கள்.
   தலைவர்களை உருவாக்கும் அமைப்பு ஜே.சி.ஐ

   Delete
 2. இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு ஈடு இணையில்லை...

  தொடரட்டும் சந்திப்புக்கள்.

  ReplyDelete
 3. அருமையான திட்டமிடல்.
  சுவாரசியமான நிகழ்வு!உறுப்பினர்களுக்கும் நிகழ்வை சிறப்புற நடத்தி தந்த திரு.முத்துக்குமார் அவர்களுக்கும் என் சார்பாகவும் நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அனுமதிக்கும் பங்கேற்புக்கும் நன்றி

   Delete
 4. தொடரட்டும்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா

   Delete
 5. அருமையான நிகழ்வு
  இதுபோன்ற நிகழ்வுகள்தான் உள்ளத்திற்கு புத்துணர்ச்சியினையும், மகிழ்ச்சியினையும் தர வல்லமை வாய்ந்தமை.
  வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. நன்றி கரந்தயாரே...
   உங்கள் அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்..
   நன்றி..

   Delete
 6. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 7. நல்ல சந்திப்புகள் நல்ல சந்தோஷத்தையும் புதுனர்சியையும் தரும் ஆரோகியமான நிகழ்வு . வாழ்த்துக்கள் சகோ ...

  ReplyDelete
 8. அருமையான நிகழ்வு. பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.
  தம்பதியர்களுக்கான போட்டி என்னவென்று சொல்லவில்லையே?.

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை