ஆஸியில் இருந்து ஒரு நம்பிக்கை நட்சத்திரம்


இவ்வாண்டிற்கான ஆஸியின் புதிய  “ஹார்வி நார்மன் சிறந்த இளம் பெண்” விருது பெற்ற லெக்ஷ்மி லோகதாஸிற்கான ஒரு வாழ்த்து.

அப்படி என்ன செய்து விட்டார் இந்த இளம் பெண் அதும் பதினெட்டு வயதிலேயே? ஆஸ்திரேலியாவே கொண்டாடும் ஒரு விருதினை பெரும் அளவிற்கு?மிகச் சில நாடுகளில்தான் அனைவருக்கும் சம வாய்ப்பும், சம உரிமையும் வழங்கப்படுகிறது. இந்த நாடுகளில் பிறந்தோர் கொடுத்துவைத்தவர்கள். ஏதோ ஒரு நிகழ்தகவில் நீங்கள் கொடூரமான நாடுகளில் பிறந்தால் அதோகதிதான். தொப்புள் கொடி உறவுகள் என்றாலும், அவர்கள் துடித்தாலும் தலைவர்கள் இல்லை என்றால்? என்ன நிகழும் என்பதை கண்கூடாய்ப் பார்த்தோம்.
இந்த வலியை உணர்ந்த அனுபவித்த குடும்பத்தில் பிறந்ததாலோ என்னவோ லெக்ஷ்மி லோகதாஸ் வாய்ப்பும், உரிமையும் மறுக்கப்பட்ட மனிதர்களை குறித்தே சிந்தித்தார்.

மிக சிறிய வயதில் ஒரு சட்டம் படிக்கும் மாணவியினால் என்ன செய்துவிட முடியும்?

கடந்த 2012ம் ஆண்டில் தூய ஜார்ஜ் மகளிர் பள்ளியின் மாணவத் தலைவியாக பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.  அப்போது இவரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் மடிக்கணினித் திட்டம்.

குழம்ப வேண்டாம் ஆஸியில் அரசு நிதியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளை சேகரிப்பதுதான் இத்திட்டம். பள்ளியில் இருந்து பாதியில் விலகும் மாணவர்களை குறிவைத்து அவர்களின் மடிக்கணினிகளைச் சேகரித்து அவற்றை கென்யா மற்றும் ஸ்ரீ லங்காவின் தொலை தூரக்  கிராமங்களின் மாணவர்களுக்கு வழங்குவதே இவர் திட்டம்!

2012இல் தூய ஜார்ஜ் மகளிர் பள்ளியில் ஆரம்பிக்கப் பட்ட திட்டம் இன்று சிட்னி நகரின் பல பள்ளிகள் இணைந்து செயலாற்றும் ஒரு பெருந்திட்டமாக மலர்ந்துள்ளது. இதுவரை சுமார் 250 மடிக்கணினிகள் சேகரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டிருகின்றன!

புலம் பெயரும் மக்களின் துயரை தனது தாய் தந்தையின் உரையாடல்கள் மூலம் அறிந்த லக்ஷ்மி ஆஸியின் ஹோல்ராய்ட் நகர உதவித் திட்டத்திலும் செயல்பட்டுவருகிறார். இத்திட்டத்தின் நிதி புலம் பெயர் மக்கள் தங்களை ஆஸியில் இருத்திக்கொள்ள நிதியளித்து வருகிறது. இந்நிதி தற்போது புலம் பெயர் மக்களின் தகவல் தொழில் நுட்ப பயிற்ச்சிக்கு மடிக்கணிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. 

2012-13ஆம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு இவர் சென்ற இடம், ஸ்ரீ லங்கா! அங்கே தொலைதூரக் கிராமக் குழந்தைகளுக்கு அடிப்படை ஆங்கிலப் பயிற்சியளித்து தனது கோடை விடுமுறையை பொருள் பொதிந்த முறையில் கொண்டாடி இருக்கிறார்! அம்னஸ்டி, லீகசி மற்றும் ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சேவை அமைப்புகளிலும் சேவை செய்து வருகிறார்!

சரியான வாய்ப்பும், சரியான சூழலும் அமையாததால் பல இளம் திறமைகள் காற்றில் கற்பூரமாய்க் கரைவதைக் கண்டு வருந்தும் இவர் தனது சட்ட அறிவையும், சமூகப் பணியையும் ஒன்றிணைத்து இந்நிலையை மாற்ற விரும்புவதாக சொல்கிறார்.

மாற்றங்கள் விளையட்டும் மாநிலம் செழிக்கட்டும்.

இன்னும் பல விருதுகள் இவருக்கு காத்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
தகவலைப் பகிர்ந்த திரு.சொக்கன் சுப்பரமணியன் அவர்களுக்கு நன்றிகளுடன் 

அன்பன்
மது

Comments

 1. அருமையான செய்தி மது.
  அப்படியே அந்த நண்பர் -சொக்கன் சுப்பிரமணியன்- தளத்திற்குப் போய் இந்தச் செய்திப்பகிர்வையும் தெரிவித்து நனறி வாழ்ததுகளையும் பகிர்ந்துவிட்டேன். அதுதானே சரி? நன்றி.

  ReplyDelete
  Replies
  1. செய்தி உங்களுக்கு பிடித்திருப்பதில் என்ன வியப்பு...?
   சொக்கன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததற்கும் நன்றி...
   நாளையின் நம்பிக்கைகள் இன்றைய மாணவர்களிடம் தான் இருகின்றது..

   Delete
 2. லெக்ஷ்மி லோகதாஸ் அவர்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க
   வாழ்த்துக்கு நன்றி..

   Delete
 3. மிகவும் நல்ல விசயம்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் முதல் வருகைக்கும்
   வாழ்த்துக்கும் நன்றிகள்..

   Delete
 4. குடத்துள் விளக்கு குன்றில் இருக்கு . தமிழும் தமிழர்களும் வாழ்க ..! சிறப்பான செய்தி லக்ஷ்மி லோகதாஸ் மேன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்....!
  நன்றி சகோ தொடர வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி..
   வருகைக்கும்
   வாழ்த்துக்கும்

   Delete
 5. “ஹார்வி நார்மன் சிறந்த இளம் பெண்” விருது பெற்ற லெக்ஷ்மி லோகதாஸ் போற்றப்பட வேண்டியவர், பாராட்டப்படி வேண்டியவர். தொடர்ந்து பல சாதனைகள் நிகழ்த்த வாழ்த்துவோம்

  ReplyDelete
 6. //மாற்றங்கள் விளையட்டும் மாநிலம் செழிக்கட்டும்.//

  மாற்றங்களை அடுத்தவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதை விட, நம்மிடம் என்று எண்ணுவது நன்று.

  ReplyDelete
  Replies
  1. சரியான கருத்து, நன்றி..
   தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்

   Delete
 7. ஹார்வி நார்மன் சிறந்த இளம் பெண்” விருது பெற்ற லெக்ஷ்மி லோகதாஸ் போற்றிப் பாராட்டப்பட வேண்டியவர்! இவர் சிறியவராக இருந்தாலும், நம்மைப் போன்றோர்க்கெல்லாம் ஒரு பாடம் கற்பித்து எடுத்துக்காட்டாக விளங்குகிறார்!

  அவருக்குத் தலை தாழ்ந்த வணக்கங்கள்! பாராஅட்டுக்கள், இன்னும் அவரது சேவைச் சிறக்கவும், வாழ்த்துக்கள்!

  உங்களுக்கும், திரு சொக்கன் சுப்பிரம்ணையம் அவர்களுக்கும் வாழ்த்டுக்கள் இதைப்போன்ற ரு நல்ல பகிர்வுக்கு! நன்றி!

  அருமையான் பகிர்வு!

  ReplyDelete
  Replies
  1. இதே போல சிறிய வயதில் சாதனைகள் பல புரிந்தோர்களை நினைவூட்டும் வண்ணம் உள்ளது உங்கள் கருத்து
   நன்றி
   அய்யா

   Delete
 8. லக்ஷ்மிலோகதாஸ் இன்னும்பலவிருதுகள் பெறவாழ்த்துக்கள் இவர் போன்ற இன்னும்பலர் வெளிச்சத்திற்கு வரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தங்கள் முதல்
   வருகைக்கும்
   வாழ்த்துக்கும்

   Delete
 9. அன்பு சகோவிற்கு வணக்கம்
  மகிழ்ச்சியான செய்தி. இளைஞர்களின் சாதனைகள் வருங்கால இந்தியாவின் நம்பிக்கையின் வேர்கள். ஹார்வி நார்மன் சிறந்த இளம் பெண்” விருது பெற்ற லெக்ஷ்மி லோகதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள். இன்னும் பல சாதனைகள் பெறவும் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி சகோதரர்.

  ReplyDelete
 10. மாற்றங்கள் விளையட்டும் மாநிலம் செழிக்கட்டும்.

  இளம்ம் சாதனையாளருக்கு வாழ்த்துகள்...!

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...