பொதுத் தேர்வுகள்


நகர்ப்புறங்களில் பொறுப்பான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முன் எழுந்து, பூஸ்ட், போர்ன்விடா என்று ரகவாரியாக டம்ளர்களில் அடுக்கி தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது ஒன்றும் புதிய செய்தியோ காட்சியோ அல்ல.
நகரின் வெகு அண்மையில் உள்ள அரசுப் பள்ளிகளில் என்ன நிலை?

எனது நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் செய்த சேட்டையை கேட்டால் கண்ணீர் வர சிரிப்பீர்கள்.

ஆங்கிலத் தேர்வுக்கு முன் நான்கு நாட்கள் விடுப்பு. நம்ம ஹீரோ தமிழ்த் தேர்வை முடித்த பின்னர் அவர்பாட்டுக்கு கிளம்பி தபசு மலைக்கு போய்ட்டார். தலைவரின் தேர்ச்சியே இந்த நாலு நாட்களில் உழைப்பதில் இருக்க சார் ஜோரா விடுப்பை என்ஜாய் செய்ய மலைஏறிவிட்டார்.

சரி கூப்பிட்டு பார்க்கலாம் என்று ஹீரோவின் அப்பாவை போனில் அழைத்து சொல்ல உடன் அனுப்புகிறேன் என்று அனுப்பி வைத்தார்.

நீ என்னை வரச்சொன்னால் வந்திருவேனா என்று சூளுரைத்திருக்க வேண்டும்! ஊருக்கு வந்தாலும் பள்ளிக்கு வரமறுத்து ரோட்டிலேயே சுத்தி என்னை வேறுப்பேற்றினான்!


படிக்கும் அனைவரும் இப்படி இல்லை என்பதே சற்று ஆறுதலாக இருக்கிறது.
குறிப்பாக பெண்குழந்தைகள் சிறப்பு வகுப்பை தவறவிடுவதே இல்லை. ஆனால் மிஞ்சிப் போனால் இரண்டு ஆண்டுகளில் ஏதோ ஒரு வீட்டுக்கு விளகேற்ற அனுப்பப்பட்டு விடுகிறார்கள்.

வாழ்க்கை ஒரு வேதனையான வேடிக்கையாக தோன்றுகிறது. எல்லா வாய்ப்பும் இருக்கும் பசங்கள் படிப்பில் சிரத்தையின்றி இருப்பதும், எப்போது வேண்டுமாலும் பள்ளிக்கு முற்றும் போடும் நிலையில் இருக்கும் பெண்கள் ஆர்வமாய்ப் படிப்பதும் விந்தைதானே?

இத்துனை ஆண்டுகளுக்குப் பிறகும் கல்வி குறித்து கவர்சிகரமான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த தவறியது எனது குற்றம்தானே?

அவுல் பக்கீர் ஜெயனுலாப்தின் அப்துல் கலாம் எழுதுகிறார்.


"பிரம்மபுத்திரா ஆர்பரித்து கடலில் கலக்கும் இடத்தில் நிற்கிறேன். எவ்வளவு நன்னீரை நாம் வீணடிக்கிறோம்."

வெறும் தண்ணீர் வீணாவதற்கே வருத்தம் என்றால் நமது மனித வளம் வீணாவது எவ்வளவு சோகமானது.

அடுத்த தலைமுறைக்கு கல்வியை நேசத்திற்குரியதாக மாற்ற உங்கள் இறைவனோ இயற்கையோ எனக்கு அருளட்டும்.

கொஞ்சம் வலியுடனும்
நிறைய நம்பிக்கைகளுடனும்

அன்பன்
மது

ஒருவழியாக தேர்வுக்கால அவசரநிலை தளர்வுக்கு வந்துவிட்டது. மீண்டும் சந்திப்போம்.

Comments

 1. அன்பு சகோவிற்கு வணக்கம்
  தங்களின் மாணவர்களின் மீதான அக்கறையும், அவர்களுக்கான தங்கள் உழைப்பையும் நான் அறிவேன். ஒரு வழியாக தேர்வுக்கால அவசரநிலை தளர்வு ரொம்ப மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய மாணவர்களின் கல்வி பற்றிய மனப்போக்கு எனக்கும் கவலையளிக்கிறது. கல்வி பற்றிய அக்கறையையும், அது ஊட்டப்படுவதில்லை உண்பது, நாம் தான் உண்ண வேண்டும் எனும் பக்குவமும் மாணவர்களுக்கும் ஏற்படும் நிலையே நமக்கெல்லாம் திருநாளாக இருக்குமென்று நினைக்கிறேன். விதைகளை விதைத்து முடிந்த வரை காத்து தண்ணீர் விட்டு வளர்த்தாச்சு. அறுவடை எனும் தேர்வு முடிவு நல்ல மகசூலை தருமா! என்று காத்திருந்து பார்ப்போம். அமோகமாக இருக்கும் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. பகிர்வுக்கு நன்றீங்க சகோ..

  ReplyDelete
  Replies
  1. நாம் ரெடினேஸ் ப்ரோக்ராம் என்று ஒன்றை தயார் செய்து மனரீதியாக, கல்விரீதியாக மாணவர்களை ஆர்வத்துடன் கற்க தயார்செய்ய வேண்டும்.
   நன்றி பாண்டியன்..

   Delete
 2. ஒரு ஆசிரியராய் நீங்கள் விரும்புவது நடக்கட்டும்..வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சங்கப் புலவரே...

   Delete
 3. ஒவ்வொரு வருடமும், பத்தாவதிலும்,பன்னிரெண்டாவதிலும் மாணவர்களை காட்டிலும் மாணவிகள் தான் அதிகமாக தேர்ச்சி பெறுகிறார்கள், நானும் ஒரு வருடமாவது மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தில் முதல் இடத்தில் இருப்பார்களா என்று எண்ணுவேன், பார்ப்போம் இந்த வருடம் எப்படி என்று.

  ஆங்கிலம் தான் நம் மாணவர்களுக்கு விஷப் பரீட்சை என்பது தெரிந்தது தானே சகோ!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ
   உண்மையில் ஆங்கிலத்தில் தேர்ச்சியுருவது எளிது..

   Delete
 4. ஆசிரியருக்கே உரிய ஆதங்கம் மகிழ்வளிக்கிறது. தங்கள் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது
  தங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துக்கள் சகோ....!

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவிஞரே..

   Delete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை