வீதி சந்திப்பு

வீதி இலக்கிய சந்திப்பில் கவிஞர் நாகூர் பேசிய பொழுது

கடந்த இருமாதங்களாக புதுகையில் இலக்கிய ஆர்வலர் சந்திப்பு ஒன்று நிகழ்ந்து வருவது நீங்கள் அறிந்ததே.இம்முறை ஒரு சிறப்பு. இரு மாதங்களாக பெயரிடப்படாது  மகிழம், ஆயம் என்ற பெயர்களுக்கு இடையே சஞ்சரித்துக்கொண்திருந்த ஆர்வலர்கள்குழு  இந்த மூன்றாவது கூட்டத்தில் வீதி என்று பெயர் சூட்டிகொண்டது.

வழமையாக புதுகையின் பெரும் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வந்திருந்தனர். புதுகையின் முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் அருள் முருகன் தனது பணிகளுக்கு இடையே வந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்தார்.

திரு. குருநாத சுந்தரம் கரிசல் தவம் என்கிற தனது சிறு கதையை வாசிக்க, குழுவினர் அதை விமர்சித்தனர். மிக நுட்பமாக கருத்துகளை பரிமாறி படைப்பாளியை செழுமையூட்டினர்.

முனைவர்.அருள்முருகன் அந்தக் கதையை ஆழ்ந்து படித்து வெகு இயல்பாக குருவிற்கு கைவந்திருக்கும்  மோனை எப்படி கதையின் ஓட்டத்தை பாதிக்கிறது என்று நுட்பமாக சொன்னார்.

திரு. முத்து நிலவன் அவர்கள் தனது கருத்துக்களை தெரிவித்த பின்னர் ஏற்பதும் தவிர்ப்பதும் படைப்பாளியின் உரிமை என்றது அருமை.


தொடர்ந்து திரு.துரைக்குமரன் சில இதழ்களை அறிமுகம் செய்தார். யோசி, ஆனந்த ஜோதி, காக்கை சிறகினிலே, ஏழைதாசன் என பல இதழ்களை அவர் அறிமுகம் செய்தார்.

தூப்புக்காரி நாவலையும் கருக்கு என்ற நாவலையும் கவிஞர் கீதா ஒப்பாய்வு செய்தார்.

திருமதி. வள்ளியம்மை நான்சி என்கிற எதிர்பாராத நகைச்சுவை முடிவினைக் கொண்ட தனது கதையை மிக இயல்பாக வாசித்து அமர்ந்தார்.

புதிய வரவாக வந்தோரில் கவிஞர்  திரு. சூர்யா சுரேஷ் மிக இயல்பாக கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்.


அன்பன்
மது

Comments

 1. வீதி அருமையான பெயரினைத் தேர்வுசெய்துள்ளீர்கள்
  இலக்கிய ஆர்வலர்கள் சந்திப்புத் தொடரட்டும்

  ReplyDelete
 2. வாழ்த்துக்களும்,நன்றிகளும் சகோ, இதுமாதிரி நடக்கும் இலக்கிய சந்திப்புகளை பகிர்ந்துக்கொண்டதற்கு.

  ReplyDelete
 3. அருமை! பகிர்வுக்கு நன்றி! சந்திப்புக்கள் தொடரட்டும்!

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரர்
  தவிர்க்க முடியாத சூழலில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆன்றோர்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். வீதி நல்லதொரு பெயர். கண்டிப்பாக பலரின் மனங்களில் குடி கொள்ளும். நடந்தவற்றை அழகாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு நன்றிகள். தொடர்வோம் தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி..

  ReplyDelete
 5. சந்திப்புகள் தொடர வாழ்த்துக்கள் ...! விபாரமாக அறிய தந்தமைக்கு நன்றி சகோ !

  ReplyDelete
 6. நல்ல பகிர்வு நன்றி

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...