வாழ்வியல் திறன் பயிற்சி 2014

நிகில் நிறுவன பயிற்சியின் துவக்க விழா

நிகில் நிறுவனம் ஒரு பார்வை 


திரு.சோம நாகலிங்கம் ஒரு பயிற்சித் துறை பிதாமகர். ஜெ.சி. இயக்கதில் நிறைய பயிற்சிக் கையேடுகளை வெளியிட்டவர். பலரும் பயிற்சியாளராக வழிவகுத்தவர். அவரது இரண்டாவது மகன் நிகிலேஷ்வரன். ஒருமுறை விளையாட்டாய் கேட்டிருக்கிறான் அப்பா நான் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வெளிநாடு போய்விடுவேன். அண்ணனும் அப்படியே. 

நீ என்னப்பா செய்யப் போற ?என்னப்பா செய்யட்டும்?

இந்த பயிற்சிகளை ஏன் நீ அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகத் தரக்கூடாது? உனக்கு ஞான வாரிசுகள் நிறைய வருவார்களே என்று கேட்டிருக்கிறான்.

விபரீதம் என்னவென்றால் இப்படிக் கேட்ட மூன்றாவது நாள் ஒரு சாலை விபத்தில் நிகிலின் வாழ்க்கை முடிந்துபோய்விட்டது.

சொல்லில் அடங்காத இழப்பு, சோகம் 

ஆனால் மகனை வழியனுப்பிய பதினைந்தாவது நாள் திரு.சோம நாகலிங்கம் நிகில் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவினார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இலவசமாக யுனஸ்கோ பரிந்துரைத்த நான்கு வாழ்வியல் திறன் பயிற்சிகளைத் தர ஆரம்பித்தார். இன்று அறுபதுக்கும் மேல் பயிற்சியாளர்கள் இந்தப் பணியில் இருக்கிறார்கள். ஒரு லெட்சம் மாணவர்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறது பயிற்சி. 

முதன்மைப் பயிற்சிகள் 


சுய ஆய்வு (உன்னையே நீ அறிவாய்)
திறன்மிகு தொடர்பாற்றல் 
இலக்கமைத்தல் 
நினைவாற்றல் 
நேர நிர்வாகம் (மேல் நிலை மாணவர்கட்கு)
மனித உறவுகளைப் பேணுதல் (மேல் நிலை மாணவர்கட்கு)

ஒன்பது பத்து மற்றும் மேல்நிலை மாணவர்கட்கு மட்டும் தரப்பட்ட இந்தப் பயிற்சிகளில்  புதிதாக இப்போது அகம் ஐந்து புறம் ஐந்து என ஆறுமுதல் எட்டு வகுப்புகளுக்கும் தரப்பட்டு வருகிறது. 

நானும் ஒரு நிகில் பயிற்சியாளனே.

இன்று எங்கள் பள்ளியில். 


இந்த சனிக்கிழமை உங்கள் பள்ளியில் செய்ய முடியுமா? என்று தலைமைப் பயிற்சியாளர் திரு.ஆர்.ஆர்.ஜி கேட்க எனது தலைமை ஆசிரியரை வினவினேன். 

மறுக்கவேயில்லை! 

இன்று எமது பள்ளியில் நிகில் நிறுவனத்தின் வாழ்வியல் பயிற்சிகள் எமது மதிற்பிற்குரிய தலைமை ஆசிரியை திருமதி எம்.ஞானம் அவர்களின் தலைமையில் நடைபெற்றன. 

பயிற்சியாளர்கள் திரு. தேவராஜன், திரு. ஐ.எம். முத்துக்குமார் தலைமைப் பயிற்சியாளர் திரு ஆர்.ஆர்.கணேசன் அவர்களுடன் பாங்காக இந்தப் பயிற்சியைத் தந்தனர். 

முதல் முறையாக நிறுவனர் திரு. சோம நாகலிங்கம் அவர்கள் சேர்மன் திருமதி மலர்க்கொடி நாகலிங்கம் அவர்களுடன் கலந்துகொண்டு பயிற்சிகளைத் துவக்கிவைத்தனர். 

நூற்று அறுபது மாணவர்கள் பங்குபெற்ற இந்தப் பயிற்சி மாணவர்களால் வெகுவாக விரும்பப்பட்டது.  

பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும் பயிற்சிக் கையேடும் வழங்கப்பட்டன. ஒரு கையேட்டின் விலை ரூபாய் அறுபது எனும்பொழுது நிகில் நிறுவனத்தின் நோக்கத்தின் தெளிவு புரிகிறது. 

வெகு விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் நிறைவான நிகழ்வாக மனம் நிறைத்தது. 

பயிற்சியின் முக்கியத்துவம் தெரிந்ததால் நான் இரண்டாம் ஆண்டு எஞ்சினீரிங் படித்துக்கொண்டிருக்கும் முன்னாள் மாணவர் நடராஜையும், முன்னாள் மாணவிகள் சிலரையும் அழைத்திருந்தேன். ஐ.ஏ.எஸ் ஆஸ்பிரன்ட் முத்துலெட்சுமி வந்திருந்தா(ர்)~! அவர்களுக்கும் பயனுடையதாகத்தான் இருந்திருக்கும்.  

நன்றி நிறுவனருக்கும் 

தங்கள் விடுமுறையை முதலீடாக்கிய எனது இனிய மாணவர்களுக்கும்.

நன்றி உங்களுக்கும்! 

டிஸ்கி: எனது பள்ளி என்பதால் நான் பயிற்சி கொடுக்கவில்லை. நிறுவனரிடம் சிறிது நேரம் பேசிகொண்டிருந்தேன். எங்கள் பள்ளியில் புகைப்படம் எடுத்த மாணவர்களை குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார். நன்றி அவருக்கு. 

Comments

 1. மகன் நிகிலேஷ்வரனின் கனவை நனவாக்கி அவரின் ஆன்மாவை சாந்தியடைய வைத்துவிட்ட திரு.சோமநாகலிங்கம் அவர்கள் மனிதருள் மாணிக்கமே....

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 2. மிகச் சிறந்த ஆக்கப்பூர்வமான மாணவர்களுக்கு மிகவும் அவசியாமான வாழ்வியல் பயிற்சி......படிப்பு மட்டும் போதாது அதை வாழ்வில் எப்படிப் ப்யனுறச் செய்ய வேண்டும் என்பதற்கு இது போன்ற பயிற்சிகள் மிகவும் ஆக்க பூர்வமானவை!

  வாழ்த்துக்கள் மது சார்! தாங்களும் ஒரு பயிற்சியாளர் என்பதால்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 3. வணக்கம்
  நல்ல முயற்சி மேலும்தொடருங்கள்.... நல்ல சமுதாயத்தை உருவாக்குங்கள்....
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 4. திரு.சோமநாகலிங்கம் பாராட்டிற்கு உரியவர்

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 5. Replies
  1. நன்றி தோழர்

   Delete
 6. நல்ல தந்தையாய் அவரும் நல்லதொரு மகனுமாய் நிகிலேஷ்ஷும் தம் கடமையை நிறைவேற்றுவது சிறப்பே. மகனுக்கும் நிச்சயம் ஆத்ம சாந்தியும் கிடைத்திருக்கும். நல்ல முயற்சிகள் தொடரட்டும். இப் பதிவை தந்த தங்களுக்கும் என் பாராட்டுக்கள் சகோ ...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி

   Delete
 7. மிகவும் நல்ல முயற்சி தொடருங்கள். தங்களைப் பார்த்து மற்ற ஆசிரியர்களும் இதனை பின்பற்றுவார்கள்.

  ReplyDelete
 8. சில மரணங்கள் விதைக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். அதுதான் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 9. நல்லதொரு பணி! தொடரட்டும்!

  ReplyDelete
 10. நிகிலை ,சிறிய வயதில் இருந்தே அறிந்தவன் என்பதால் மிகவும் வேதனைப் பட்டேன் !
  நிகில் பவுண்டேசன் மூலமாய் நல்லதோர் சேவையைத் தொடர்ந்து வரும் நண்பர் .சோம .நாகலிங்கம் ,திருமதி .மலர்க்கொடி நாகலிங்கம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 11. இளம்வயதில் உலகத்தை விட்டுப்போகும் முன் சீரிய விதை விதைத்துச் சென்றிக்கிறார் நிகில்..அவரின் கனவை வார்த்தையை மீளாத்துயரிலும் நிறைவேற்றும் திரு.சோம நாகலிங்கம் அவர்களுக்கு வணக்கங்கள். பயிற்சி பெரும் எண்ணற்ற மாணவர்களின் ரூபத்தில் வாழ்கிறார் நிகில்.

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...