சில முகநூல் நிலைத் தகவல்கள்

1
வலைத்தளம், இணையம் என்று முகம் காட்டாது உலவும் வெளியில் பெரும்பாலும் குரூரர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பது இணையவெளியில் எழுதப்படாத சட்டங்களில் ஒன்று..

முகநூல் தமிழ் அதனைப் பொய்யாக்கிவிட்டது..

முகமே தெரியாது நந்தன் என்ற பேருக்காகவே அவர் எழுதிய கவிதைகளின் வீச்சிற்காகவே நண்பனாக்கி கொண்டவர்களில் கவிஞர் நந்தன் ஸ்ரீதரன் ஒருவர்.

பிரியங்கள் என்றும் கனன்று தான் சுழலும் என்கிற அவரது ஒரு கவிதை வரி எனது மனமெங்கும் சுழல்கிறது இன்றும்.

மொழியை உணர ஆராதிக்க மொழியாளுமைமிக்க கவிங்ஞர்கள் தேவை. அவர்களில் நந்தன் தவிர்க்க முடியாதவர்.

முன்பு மருது எனக்கு கவி நுட்பத்தையும் புது கவிதைக்காரகளையும் அறிமுகம் செய்வான். இப்போது நந்தன்.
இவர் மூலம் அறிமுகம் ஆனா வெங்கி(கடவுளாகுதல்), ராசு, ப.செல்வக்குமார் என்ற பெரிய கவிப்பட்டாளாம் எனது முகநூல் அன்பவங்களை இலக்கியத் தரம்வாய்ந்த அனுபவங்களாக மாற்றிவிட்டது.

அலைபேசி உரையாடல்களில் நெருங்கிய நட்பு போன சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சந்திப்பில் முடிந்திருக்க வேண்டும். ஏனோ தள்ளிப் போய்விட்டது..

வெங்கியைச் சந்தித்து விட்டேன், அவர்மூலம் என் தொடர்பெல்லைக்கு அப்பால் சென்றுவிட்ட நண்பர் மருதவை மீளக் கண்டுபிடித்தேன்.

எல்லா இனிய அனுபவங்களுக்கும் காரணமான நண்பர் நந்தன் ஸ்ரீதரனுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
— with நந்தன் ஸ்ரீதரன் and 3 others.

2

கவிதைகளைப் இவர் மேடையில் இவர் படிப்பது போல் வேறு யாரும் படித்து நான் கேட்டதில்லை.

கவிதையின் ஆன்மாவை ஒலிபெருக்கியில் உலவ விடும் வித்தையில் தமிழகத்தில் முதன்மையானவர் ...

வலிந்து வலிந்து உதவுபவர் ...
பதிலுக்கு வலிகளையே தந்திருக்கிறேன் நான்...
இருந்தும் இன்னும் தொடரும் நட்பு..
அண்ணன் தங்கமூர்த்தி
— with Thangam Moorthy.
3
மனிதர்கள் குறைகள் உடையவர்கள்.
ஆனால் அவற்றை மறுப்பவர்கள்.

அன்று என்னிடம் நிறைய குறைகள் இருந்தன.
நண்பர்களுக்கு நான் ஒரு கேலிப்பொருள். அவ்வளவே. அனைவரிடமும் நெருங்கிப் பழகுவதாக நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

அவர்கள் உண்மையில் எனக்கு நெருக்கமாக இருந்தார்களா என்று கவனமற்று.

என் குறைகளை உதாசீனப்படுத்தி என்னுடன் ஆத்மார்த்தமாய் பழகியவர்கள் சிலரே என்பதை காலம் எனக்கு உணர்த்தியது.

குறைகளை பொருட்படுத்தாது என்னை நண்பனாக்கிக் கொண்டு என்னை செதுக்கியவர்களில் ஹபீப் முதன்மையானன்.

இலக்கியம் படித்து மென்பொருள் துறையில் வாழ்வை துவக்கி இன்று ஒரு விளம்பர நிறுவனத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் ஹபீப் எனது வாழ்வின் வரங்களில் ஒருவன்..

நன்றி நண்பனே..
— with Habeeb Nather MG.

4
அது ஐயனார்புரத்தின் முதல் வீதி நண்பன் சந்துருவின் வீடு என்று நினவு ...
வீட்டின் நடுவே தெருவில் இறங்கும் ஒரு மாடிப்படி உண்டு.

கல்லூரிக் காலத்தில் எங்கள் வேடந்தாங்கல் அது.
நண்பன் மருதுசங்கர் ஒரு அறையை எடுத்து தங்கியிருக்க அந்தக் குட்டி மான்சனில் தங்கியிருந்த ஒவ்வொருவரும் நண்பர்களாகிப் போனார்கள்.

அய்யாமணி அப்படி வந்தவன்தான்.

மருது நாங்கள் தமிழைத் தட்டுத் தடுமாறி வாசித்துக் கொண்டிருந்தபொழுது பூலாங்குறிச்சி கல்லூரியில் பௌதீகம் இரண்டாம் ஆண்டு படித்துகொண்டிருந்தான். அப்போதே செல்லுலாயிட் சிறகுகள் என்ற கவிதைப் தொகுப்பை வெளியிட்டு கதாநாயக அந்தஸ்துடன் திரிந்தவன்.

அவன்மூலம்தான் எனக்கு மேத்தாவின் கவிதைகள் அறிமுகமாயின.
சிலநாட்கள் கழித்து அப்துல் ரகுமான் என்கிற கவியரக்கனை அறிமுகம் செய்தான்.

ஒரு திரைப்பாடலை கவிதை நோக்கில் ரசிக்க கற்றுக்கொடுத்தான்.
"பாறைகள் இல்லையென்றால் ஓடைக்கேது சங்கீதம்" என்று நாள்தோறும் கேட்ட அண்ணாமலைப் படப் பாடலைக்கூட வேறு வெளிச்சத்தில் அறிமுகம் செய்தான்.

திடீரென ஒருநாள் எனக்கு சட்ட புத்தகங்கள் வேண்டும் ஒரு கவிதைப் போட்டி இருக்கிறது என்று சொல்ல நண்பர் முகில்வாணனிடம் பெற்றுத் தந்தேன்.

சரியாக அந்த வார இறுதியில் சென்னையில் அன்றைய ஆளுநர் கைகளால் மாநில அளவில் வென்றதற்கான பரிசினைப் பெற்றான்.

ராஜ் தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையை துவங்கி (நான் நைட்டு போய் இறங்கி கலையில் தலையை மட்டும் சரி செய்து கொண்டு வேலை கேட்டேன் கொடுத்துவிட்டார்கள் என்றான்!) மெல்ல ஒரு ரவுண்டு வந்து இன்று விகடன் சின்னத்திரையின் எழுத்தாளர்களில் ஒருவன்.

எளிய ஆரம்பங்களில் இருந்து பெரிய உயரங்களை தொட்ட ஒரு கதாநாயகனாகவே இன்றும் தொடர்கிறான் ...

அறிமுகம் செய்த கவிதைகளுக்கும் அனுபவங்களுக்கும் நன்றிகள் தோழனே.
— with Krishna Kumar S and 2 others.

5
அது எனது கல்லூரிக் காலம் ...

நண்பர் ஜெகன் வீடு ஒரு இளமை சந்திப்பு மையம்
மகிழ்வான தினங்கள் அவை

பெரும்பாலும் எங்கள் மாலைப் பொழுதுகள் ஜெகன் வீட்டில்தான் கழியும் ..

அப்படி ஒரு தினத்தில் தூர் தர்சனில் ஓவியங்கள் குறித்த ஒரு நிகழ்வில் கோட்டோவியங்கள் காட்டப் பட்டுக்கொண்டிருந்தன.
விதம் விதமான ஓவியங்களின் நடுவே சில நிர்வாண ஓவியங்களும் காட்டப் பட நான் கிளர்வுற்றதைப் பார்த்த நண்பர் அய்யாமணி ஒரு புத்தர் போல மென்மையாக புன்னகைதார்.

அவன் ஒரு ஓவியன். நான் புரியாமல் பார்க்க என்னைப் பார்த்துக் கேட்டான் “அண்ணே அதுல என்ன இருக்கு வெறும் வளைவுகளும் கோடுகளும்தானே?”

மீண்டும் ஒரு புத்தர் சிரிப்பு.

அதுவரை சதையாக தெரிந்த எல்லாம் கோடுகளும் வளைவுகளுமாக தெரிய எனது சதைக் கண் மூடி கலைக்கண் திறந்தது

எனக்கு கண்திறந்தது ஒரு நண்பன்..
நன்றி நண்பர்களே..

இன்றைய தினத்தில் எனது நன்றிகள் மேலும் தொடரும்...

#நண்பர்கள்_தின_நினைவுகள்

6

சமீபத்திய அரசியல் வரலாற்றில் துருவங்கள் ஒன்றிணைந்தது கடந்த சில நாட்களில்தான் நிகழ்ந்திருகிறது ...

இப்படியே முல்லைப் பெரியார் நூற்றி ஐம்பத்தி இரண்டு , கிர்ஷ்ணா நதி நீர், காவிரி என்று ஒன்றிணைத்தால் நன்றாக இருக்கும் ... ஹும் பார்ப்போம்...

7
வாழ்க இந்திய சனநாயகம் 
(ஒரு பகிர்வு)

மஹாராஸ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ளது மலின் என்ற பழங்குடிகள் வாழும் கிராமம். இன்று அது உலகெங்கும் பரபரப்பாய் பேசப்படுவதறது. அதற்கான காரணம் மிகவும் சோகமானதும் வலியினைத் தருவதுமாகும்.

சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்த கிராமத்தில் வாழ்ந்த ஏறத்தாழ 250 பழங்குடி இன மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த நிலச்சரிவு இயற்கையாய் ஏற்பட்டது அல்ல என்றும், மாறாக சில மனிதர்களால் உருவாக்கப் பட்ட பேரழிவு என்றும் என்றும் தெரிய வருவதாக மார்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுவின் அறிக்கை கூறுவதாக இன்றைய தீக்கதிர் ( 02.08.2014) சொல்கிறது.

மலினுக்கு அருகில் உள்ள திண்டா அணையிலிருந்து வெள்ளக் காலங்களில் நீர் திறந்து விடப் பட்டபோது நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் சேதம் இந்த அளவிற்கு இல்லை. ஆனால் இப்படி நிகழக் கூடும் என்ற எச்சரிக்கை மாநில மற்றும் மத்திய அரசுக்கு தரப் பட்டிருக்கிறது.

இங்கு பழங்குடிகளுக்கு நல்லது செய்வதாக சொல்லிக் கொண்டு
ஜே பி சி இயந்திரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதுதான் பேரழிவிற்கான பெருங்காரணமாக சொல்லப்படுகிறது.

பழங்குடிகளை எப்படியேனும் அப்புறப் படுத்திவிட வேண்டும் எனும் நோக்கமே என்றும் தெரிகிறது. உள்ளூர் அரசியல் வாதிகள் , இயந்திர உரிமையாளர்கள் மற்ரும் பேராசை பிடித்த அதிகாரிகள் இணைந்து இதை செய்திருக்கக் கூடும் என்றும் தீக்கதிர் சந்தேகப் படுகிறது.

அந்த சந்தேகத்தில் நியாயம் இருப்பதாகவே படுவதால் தீவிர விசாரனையும் நிரூபனமானால் கடுந்தண்டனையும் உரியவர்களுக்கு போய் சேரவேண்டும்.

கடவுள் என்றொருவன் இருந்தால் அவனுக்கே முந்திப் பிறந்தவர்கள் பழங்குடிகள்.

தோழர் இரா.எட்வின் 

8
அவர் மிக முக்கியமானவர்
ஏதோ ஒரு தருணத்தில் எங்களிடயே ஒரு தோழமை
ஒரு சிறிய உதவி கேட்டு ஒருமணிநேரம் ஆச்சு
நடுவில் கடைக்கு கிளம்பத் தயாராய் இல்லாள்
ஒரு அழைப்பிதழ் சரிபார்பிற்கு வேண்டாம் என்று சொல்லியும் வந்த நண்பர்..
சுத்தமாக மறந்து போனது முக்கியஸ்தரின் வேண்டுகோள்..
முகநூலைத் திறந்தாள் முதல் தகவல் அவருடையது பதறி மீண்டும் பேசி சரிசெய்தேன்..
நன்றி முகநூலுக்கு

9
தமிழக முதல்வரின் ஈழ நிலைப்படும்
அவரது கடிதங்களும்
இனவெறியருக்கு எத்தகு துன்பத்தை கொடுத்திருந்தால் இப்படி ஒரு ஈனத்தனமான காரியத்தில் இறங்கியிருப்பார்கள்.
இந்த ஒரு காரணத்தை கொண்டே ஆரம்பிக்கலாம் போரை..

என்ன தைரியத்தில் இப்படி இறங்குவார்கள்...
எத்துனை நாடுகள் துணையிருக்கின்றன...

அடுத்த கட்ட போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும் தளராமல்

10
நேற்று முதல் முறையாக முகநூல் முடக்கத்தை அனுபவித்தேன்..
வெங்கியும் சொல்ல ஜெயாவும் சொல்கிறார் (உங்களுக்கும் இஸ்க் இஸ்க்?)

மார்க் வீட்டு நீச்சல் குளம் கூட பணத்தால் ரொம்பிவழியும் பொழுது சர்வர் ப்ராப்ளம் வர வாய்ப்பேதுமில்லை

இது ஒரு டெக் டேக்ஓவர்?(தொழில்நுட்ப கட்டுப்பாடு பகிரல்)
மொத்தமாக அட்மின் கட்டுப்பாடுகளை ஒரு அரசு உளவு அமைப்பு வாங்கும் பொழுது இதெல்லாம் சகஜம்...

பார்த்து சூதானமாக இருங்க மக்கா..

Comments

  1. முகநூல் அனுபவங்களை சுவையாக தொகுத்திருக்கிறீர்கள்
    பத்தும் சுவாரசியம்

    ReplyDelete
  2. சுவாரஸ்யமான அனுபவங்கள் தொகுத்து தந்தமைக்கு நன்றிகள் !
    தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரரே!
    நலம் தானே?...

    முகநூலிற் கிட்டிய முத்தான வித்து!
    அகநூலில் ஊன்றிற்றே ஆழ்ந்து!

    தேர்ந்தெடுத்தவர் யாரெனச் சாற்றுகின்ற
    அருமையான தேர்வுகள்!.. அனைத்தும் சிறப்பு!

    நன்றியுடன் நல் வாழ்த்துக்களும் சகோ!

    ReplyDelete

Post a Comment

வருக வருக