இன் டு த ஸ்டார்ம்

ஸ்டீவன் குவாலியின் இந்தப் படத்தின் போஸ்டரில் சில டோர்னாடோக்கள் தரை இறங்குவதை படம் பிடிப்பதை பார்த்திருப்பீர்கள். இன்னொரு இயற்கை பேரழிவுப்படம் என்று நினைத்தேன். மூவாயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி இதுவரை பனிரெண்டு  மில்லியன்களை வசூல் செய்திருக்கிறது படம்! 



டொர்னாடோ அமெரிக்காவின் துன்பங்களில் ஒன்று. இதை டுவிஸ்ட்டர் என்பார்கள் அவர்கள். ஒரு புயலின்பொழுது மேகக் கூட்டங்களில் இருந்து ஒரு புனல் வடிவ சூறாவளியாய் பூமியில் இறங்கும் இது.  பார்த்தால் மேகத்தூண் மாதிரி இருக்கும். போட்டோவில் பார்த்தல் அழகாய் இருக்குமிதை நேரில் பார்த்தால்தான் தெரியும் இதன் கோரத் தாண்டவம்.

புவிப்பரப்பில் சுழலும் இடமெல்லாம் துவம்சம். அவ்வளவையும் உறிஞ்சி மேலே இழுத்து வேறு இடத்தில் கொட்டும்! வல்லரசையே ஆட்டிப் படைக்கும் இயற்கை சக்தி இது!

இதைவைத்து என்ன கதை செய்யப் போறாங்க என்று ஒரு நெகடிவ் மனநிலையோடுதான் தியேட்டருக்குப் போனேன். மிரட்டிபுட்டாங்க மிரட்டி!

சில்வர்டன் என்கிற நகரின் ஒரு பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் துவங்குகிறது கதை.  விடலைப் பசங்களின் உரையாடல் சலிப்பைத் தரத்துவங்கும் பொழுது மெல்ல ஹீரோயின்  எண்ட்ரீ. அவள் பேப்பர் மில்லுக்கு தனது தோழனை வீடியோ சூட்டுக்கு அழைக்கிறாள்.

இதனிடையே ஒரு பெரும் புயலின் முன்னறிவிப்புவர புயலைத் துரத்தி படமெடுக்கும் பீட்டர் தனது குழுவுடன் சில்வர்டன் வருகிறான். அவன் கார் சகல பாகங்களிலும் காமிரா பொருத்தப்பட்ட ஒரு கவசவண்டி. ஒரு மேகத்தூணின் மையத்தில் இருந்து அதன் கண்ணைப் படமெடுக்க விரும்புகிறான் அவன். இதற்கேற்றவாறு தனது வாகனம் "டைடஸ்சை" வடிவமைதிருக்கிறான். இந்த வாகனம் படத்தின் ஒரு காரக்டர்மாதிரியே பயன்பட்டிருக்கிறது.

புயலின் வேகத்தில் தரையிறங்கும் மேகத்தூண்களைத் துரத்துகிறான் பீட்டர். முதல் சுற்றில் ஊரை சேதப்படுத்தி, பள்ளியை சேதப்படுத்துகிறது புயல். பேப்பர் மில்லில் மாட்டிய மகனை மீட்க தந்தையும், புயலின் கண்ணை படமெடுக்க பீட்டரும் விழைகிறார்கள். என்ன ஆகிறது என்பதே கதை.

படத்தின் வெகு ரகளையான காட்சிகளில் சில:

டைட்டஸ் 

இது ஒரு கஸ்டம்மேட் வாகனம். புயலை துரத்த தாங்கிக்கொண்டு படம்பிடிக்க. படத்தின் ஹீரோ என்ட்ரிக்கு தரும் பிரமாண்டத்தை இந்த வாகனத்திற்கு இந்தப் படத்தில் தந்திருக்கிறார்கள்!

ஆனால் எப்படிப்பா இது தாக்குப் பிடிக்கும் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது! கொஞ்சம் லாஜிக் மீறல்தான் இருந்தாலும் வடிவமைப்பிற்காக மன்னிக்கலாம்.

நெருப்புத்தூண்.


ஒரு பெட்ரோல் டாங்கர் கவிழ்ந்து தீப்பிடிக்க அந்த இடத்தை தொடும் மேகத்தூண் நெருப்புத்தூணாக மாறுகிறது. ஒரு கேமராமேனைத்  உறிஞ்சி சுழற்றி "மேலேற்றுகிறது". ரகளைப்பா.

பள்ளியை நோக்கிய டைட்டஸ் பயணம் 


இது ஒரு சி.ஜி.ஐ கொண்டாட்டம்! விசுவல் எபெக்ட்ஸ் ரொம்பவே அருமை. இந்தக் சீக்குவென்ஸ் நம்பமுடியா ரகளை எனவே இதை நீங்கள் திரையிலோ அல்லது ஏதாவது ஒரு மூவி சானலிலோ பார்த்தால்தான் புரியும்.

கிளைமாக்ஸ்


புயலின் கண் தரிசனம் பீட்டுக்கு கிடைக்கிறது. ஒரு ஏர்போர்ட்டின் அத்துணை விமானங்களையும் புயல் ஒட்டுகிறது! இது ஒரு ரெம் அனுபவம்!

ஏற்கனவே வந்த டுவிஸ்டர், பர்பக்ட் ஸ்டார்ம், வல்கனோ போன்ற இயற்கை இடர்பாடுகளை வைத்து வெளிவந்த படங்களில் லேட்டஸ்ட் அவதாரம் இந்தப் படம்.

ஒரு முறை பார்க்கலாம்.



Comments

  1. வணக்கம் சகோ வீட்டில் அப்பாவும் பிள்ளைகளும் ஆங்கிலப் படம் பார்க்கப் போவார்கள் என்னைவரும்படி வற்புறுத்துவார்கள் ஆனால் நான் சாக்கு சொல்லிவிட்டு நின்று விடுவேன். பார்ப்பேன் ஆனால் விரல் விட்டு எண்ணும்படி தான் இருக்கும்.வலைதளம் ஆரம்பித்த பிறகு அதுவும் இல்லை. இப்போ இந்த விமர்சனம் பார்க்க தூண்டுகிறது. மிக்க நன்றி நல்ல பதிவு. தொடர வாழ்த்துக்கள் ..சகோ..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோதரி...

      Delete
  2. வணக்கம்
    படம் பற்றிய கருத்தை பார்க்கும் போது படத்தை பார்க்க தோன்றுகிறது.. பகிர்வுக்கு நன்றி.த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர் .. வருகைக்கு நன்றி

      Delete
  3. இந்தப் படத்தப் பார்க்கத் தூண்டிவிட்டீர்கள்..பகிர்விற்கு நன்றி. tornado என்றவுடன் எனக்கு இரு நினைவுகள் கண்டிப்பாக வரும். என் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கானப் பரீட்சைக்குக் குறித்திருந்தநாளில் 'tornado watch' என்று சொல்லிவிட்டார்கள். நான் சிறிது பயத்துடனேயே வேனை ஓட்டி ஓட்டுனர் உரிமமும் பெற்றேன். இன்னொரு நாள் 'tornado warning', அன்று எங்கள் நண்பர் குடும்பம் மேல் வீடு என்பதால் எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர்..செய்திகளைப் பார்த்துக்கொண்டே கழித்த அந்த மணித்துளிகள் ....முதல் அனுபவம் என்பதால் ரொம்பவே பயந்திருந்தேன் அப்பொழுது..
    'tornado watch' என்றால் tornado வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று அர்த்தம். 'tornado warning' என்றால் tornado எங்கோ பார்க்கப்பட்டது என்று அர்த்தம்..அந்த சூழ்நிலையில் சைரன் அடித்தால் பாதுகாப்பான இடத்தில் (basement அல்லது கண்ணாடிகளில் இருந்து தள்ளி வீட்டின் உள் அறை) ஒளிந்து கொள்ள வேண்டும்..

    ReplyDelete
  4. நண்பரே! நல்ல விமர்சனம்...கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்....ஜஸ்ட் இப்பதான் கேபிள் சங்கர் அவர்களின் பதிவில் இந்தப்படத்தைப் பற்றியும் 1996ல் வந்த டிவிஸ்டர் படத்தையும் ஒப்பிட்டுச் சொல்லியிருந்தார்.....அதைப் படித்துவிட்டு பார்த்தால் உங்கள் பதிவும் அதே......எனிவே படம் பார்க்க வேண்டும்....

    ReplyDelete
  5. படத்தைப் பற்றிய அலசல் அருமை...
    படம் பார்க்கும் எண்ணம் வந்துவிட்டது...

    ReplyDelete
  6. இன்றைக்குச் சரியாக 12 வருடங்கள் முன்பு தியேட்டரில் திரிலர், மற்றும் ட்ராகுலாப் படங்கள் கணவருடன் பார்த்திருந்தேன்.
    பின்னர் இந்த இடைவெளியில் மகன் வற்புறுத்தி 2012 End of the World மட்டும் பார்த்தேன்.
    இங்கு உங்கள் விமர்சனம் மீண்டும் என்னைத் திரையரங்கிற்குச் செல்ல வைத்திடுமோ?...:)

    அருமை! காத்திருந்து நல்ல வீடியோ கிடைத்தால் வீட்டில் பார்ப்போம்.
    நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோதரரே!

    ReplyDelete

Post a Comment

வருக வருக