ஒரு பதிவு நுட்பம்...

பதிவுகளைத் தாமாகவே வெளியிட. 



ப்ளாக்ஸ்பாட் என்பது கூகிள் இணைய சாம்ராஜ்யத்தின் ஒரு நிறுவனம் இது கூகிள் வழங்கும் இலவச இணைய சேவை.  இந்த மென்பொருள் காண்டன்ட் மனேஜர் என்கிற பிரிவில் வரும். நமது பதிவுகளை எழுதி வெளியிட, பின்னூட்டங்களைப் பெற, ஆங்கிலத்தில் தட்டினால் தமிழில் வர இத்யாதி இத்யாதி விசயங்களை சாத்தியப்படுத்துவது ப்ளாகர் மென்பொருள்தான். 

வோர்ட்ப்ரஸ், ட்ருபால், ஜூம்லா, ரூபி ஆன் ரெயில்ஸ் என்று ஜல்லியடிக்காமல் விசயத்திற்கு வருகிறேன். 

யோசித்தால் பல லெட்சம் வரிகளை கணினி நிரல்களாய் நீங்கள் உள்ளிட வேண்டியிருக்கும்!  அத்துணைப் பணிகளை அனாயாசமாக செய்யும் ஒரு மென்பொருள். (இத்தனைக்கும் இது காண்டன்ட் மானேஜ்மென்ட் மென்பொருளின் நீர்த்துப்போன வடிவம்தான், அப்போ சி.எம்.எஸ் எப்படி இருக்கும் ? அடியாத்தி!?) 

ப்ளாகரின் ஒரு சிறப்பு வசதியைத்தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
நமது பதிவு தானாகவே ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடப்பட்டால் எப்படி இருக்கும். நல்லா இருக்கும்ல!

ஒரு பதிவை தட்டுகிற பொழுது வலப்புறம் (ரைட் சைட்) பதிவு அமைப்புகள் (Post settings) பிரிவு இருக்கும். முதலில் இருப்பது லேபில்கள். அடுத்து இருப்பது ஸ்கட்யூல். 

ஸ்கட்யூலைச் சுட்டியினால் அழுத்தினால் அது ஒரு நாட்காட்டியாக விரியும். இதில் உங்கள் பதிவு என்று வெளிவரவேண்டும், எந்த நேரத்தில் வெளிவர வேண்டும் என தேர்வு செய்தால் போதும். தேதியையும் நேரத்தையும் சரியாக தேர்வு செய்து "செஞ்சுட்டேன்" (done) பொத்தானை அழுத்தவும். 

வழக்கம்போல் வெளியிடு (Publish) பொத்தானை அழுத்தலாம். சும்மா தைரியமாக அழுத்துங்க. அது உடன் வெளிவராது! ஸ்கட்யூல்ட் என்று மட்டுமே வரும்.

மிகச் சரியாக நீங்கள் தேர்வு செய்த நாளில் நேரத்தில் பதிவு வெளிவரும்!


இந்தக் காணொளியையும் பார்க்கலாமே 


அன்புடன் 
மது

Comments

  1. வணக்கம்
    யாவருக்கும் பயன் தரும் பதிவு பகிர்வுக்கு நன்றி செய்து பார்க்கிறேன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.
      நலம்தானே
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

      Delete
  2. ஓ சூப்பர்...இன்னும் எவ்ளோ வசதிகள் இருக்குனு தெரியலயே கண்டுபிடிங்க..சகோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி...

      Delete
  3. நல்ல பயனுள்ள ஒரு பதிவு.
    நான் இதுக்குள்ள ரொம்ப போனதில்லை. எல்லோரும் இந்த தானியங்கியைப் பற்றி பேசும்போது, சரி எப்பவாவது நேரம் கிடைக்கும்போது, இதுக்குள்ள போய் ஆராய்ச்சி பண்ணலாம் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் செய்ததில்லை.

    இப்போது, என்னை மாதிரி ஆட்களுக்காக தாங்களே இதனை தெளிவுப்படுத்திருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களைமாதிரிதான் தோழர்...
      இது ஒரு எளிய நுட்பம்தான்..

      Delete
  4. நீங்கள் முன்பு தொடராக வெளியிட்ட விடுதலைப் போரில் வீரத் தமிழர்கள் பதிவு குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்ததையும், அதுவும் குறிப்பிட்ட நாள் வரை வரும் என்று நீங்கள் சொன்னதையும் யோசித்துப் பார்த்து அந்த ஆப்ஸன் எங்கு இருக்கும் என்று தேடி, கடைசியில் தான் அது ப்ளாக் போஸ்ட் வலப்புறமாகவே இருப்பதைப் பார்த்தேன்.. இப்போது நானும் அதை உபயோகிக்கிறேன், நல்ல பதிவு சார், தெரியாதவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.. இது போல இன்னும் பகிருங்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெய்
      வாழ்த்துக்கள்

      Delete
  5. நான் தினசரி நீங்கள் சொன்ன வழியில்தான் பதிவை போடுகிறேன் என்றாலும் அனைவரும் அறியும்படி பதிவு போட்டதற்கு பாராட்டுக்கள் !
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் இது ஒரு நல்ல பழக்கமாகத் தெரிகிறது... ஆனால் கொஞ்சம் கவனமும் தேவை... நாம் பதிவு வெளியிடும் நாளில் வருகின்ற முக்கியத்துவம் தெரிந்து செய்ய வேண்டும் பொங்கல் திருநாளில் ஒரு பக்கா சயன்ஸ் பதிவு ஒன்றைப் போட்டால் ... ?

      Delete
  6. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு ஒரு பாடம் நடத்துவதுபோல்தான் இந்த பதிவிடல் தொழில்நுட்பப் பாடமும். ஒரு சில மாணவர்களுக்கு நடத்துகிற பாடம் ஓரளவுக்கு பரிச்சயம் ஆகி இருக்கலாம். ஆனால் அதே வகுப்பிலிருக்கும் பல மாணவர்களுக்கு அந்தப் பாடம் புதியதாகவும் கற்றுக்கொள்ள வேண்டியதாகவும் இருக்கும். ஒரு ஆசிரியர் என்றுமே கீழ்மட்டத்தில் உள்ள மாணவனை தன் மனதில் வைத்துத்தான் அந்தப் பாடத்தை நடத்தணும்! அப்படி பாடம் நடத்தும் ஒரு நல்லாசிரியர்தான் மது என்பது என் கணிப்பு. :)

    பதிவுலகிலும் தொழில்நுட்பம் சரியாகத் தெரியாத மாணவர்களை மனதில் வைத்து, மது இப்பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். இதில் "மெத்தப் படித்தவர்கள்" பலருக்கு இந்நுட்பம் தெரிந்து இருந்ந்தாலும், இவ்விடயத்தை அறியாத பல மாணவர்களுக்கு இது மிகவும் தேவையான, உபயோகமாகும் விடயம்!

    நன்றி ஆசிரியரே! :)

    ReplyDelete
    Replies
    1. பதிவு நுட்பங்களை அறியாது ஆனால் செறிவான சிந்தனைகளோடு இருக்கும் நிறையபேரைப்பார்த்திருக்கிறேன்.

      இந்த நுட்பம் சிலருக்கு பயன்படும் என்பதால் பகிர்ந்தேன்..
      நீங்கள் சொன்னது போல் ரொம்பவும் எளிய நுட்பம்தானே வருண்..
      நன்றி

      Delete
  7. இது செஞ்சுருக்கோம் பாஸ். அதுல நாம இந்திய நேரம் கொடுக்க வேண்டும் இல்லையா? இல்லைனா அது அமெரிக்க நேரப்படி வெளியிடும்.....சரிதானே? ஏன் என்றால், எங்களுக்கு அப்படித்தான் ஆயிற்று. என்னடா இன்னும் வெளியிடவில்லை என்று பார்த்த போதுதான் தெரிந்தது, இந்திய நேரம் என்று கொடுக்க வில்லை என்று..நாங்கள் புரிந்து கொண்டது அப்படித்தான்....இப்பொது லொக்கேஷன் மாற்றியதால் பிரச்சினை இல்லை

    தோழரே மிகவும் நல்ல ஒரு பதிவு! உபயோகமான ஒரு பதிவு!

    ReplyDelete
    Replies
    1. பதிவர்கள் இதையும் படித்தால் நலம்..
      டைம் செட்டிங் (நேர அமைப்பு) முக்கியம்...
      நன்றி தலைவரே..

      Delete
  8. மிகவும் நல்ல பயனுள்ள பதிவு சகோ தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி! நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அரசியல் சூழ்நிலையில், அரசியல் விமர்சனக் கட்டுரைகளுக்கு இது ஒத்து வராது என்று நினைக்கிறேன்.
    த.ம.3

    ReplyDelete
  10. ஆம் இதை நானும் செய்து பார்த்திருக்கிறேன்...
    மிகச் சிறந்த வசதி...
    எல்லாருக்கும் தெரியும் விதமாக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே
    நன்றி

    ReplyDelete

Post a Comment

வருக வருக