Posts

Showing posts from November, 2014

மதிப்பெண்களா சாதனைகளா? தோழர் ரபீக் அவர்களின் உரை ஒன்று

Image
அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவை, உலகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் ஆர்வமுடன் அவதானிக்கிறார்களோ இல்லையோ, ஆடை வடிவமைப்பாளர்கள் நேரிலோ அல்லது தொலைக்காட்சியின் வழியாகவோ பார்ப்பதற்கு குவிந்திருப்பார்கள். பார்வையைக் குவித்திருப்பார்கள்.

ஷாஜகானின் ஸ்போக்கன் இங்கிலீஷ்

Image
திரு. ஷாஜகான் அவர்களின் நெகிழ்வூட்டும் அனுபவம் ஒன்று. ஸ்போக்கன் இங்கிலீஷ்
திங்கள்கிழமை. வானொலி நிலையத்துக்குச் செல்வதற்காக வழக்கம்போல பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். வழக்கம்போல கையில் ஸ்கிரிப்டும் ஒரு புத்தகமும். அப்பத்தாளும் ஒரு கல்யாணமும், மா. நடராசன் சிறுகதைகள். பிப்ரவரியில் கோவை சென்றபோது விஜயாவில் வாங்கியது. வழக்கம்போல பஸ் வரும்வரை நின்றுகொண்டே ஸ்கிரிப்டை மீண்டும் ஒருமுறை மேலோட்டமாகப் பார்த்து திருத்தும் வேலையில் மூழ்கியிருந்தேன்.

உங்கள் குழந்தையின் நண்பர்கள் யார்?

Image
இது ஒரு எளிமையான கேள்வி. உங்கள் குழந்தையின் நண்பர்கள் யார்?
தெரிந்தோ தெரியாமலோ உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அவர்களின் நண்பர்களின் பங்கு அளப்பரியது.

மெமரி கார்ட் 2 memory card 2

Image
ஒரு காணொளி
இப்படி ஒரு குழந்தை உண்மையிலேயே பேசினால் எப்படி இருக்கும். ஆஃப்ரா நன்றாக கருத்தை உள்வாங்கி பேசியிருக்கிறாள். ரபீக் அவர்களின் தயாரிப்பு அல்லவா?
ஒரு தபா பாருங்க

ஒரு அடிமையின் கதை

Image
12 Years a Slave
யப்பா இருபது மில்லியன் செலவிட்டு வந்த படம் நூற்றி என்பத்தி எட்டு மில்லியன் டாலர் வசூல் செஞ்சிருக்கு. அதுவும் ஒரு அடிமையின் அனுபவங்களை சொல்லும் படம் இப்படி குவித்திருப்பது அதிசயமே.  மொத்தம் இருநூற்றி இருபது விருதுகளை வென்றபடம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படி ஒரு படம் வரமுடியுமா என்பதே எனக்கு பெரிய ஹாஆஆ.

சாலமோன் நார்தாப், ஒரு ஆப்ரோ அமெரிக்கன். கறுப்புக் கவிதையாக மனைவி குறும்கவிதைகளாக குழந்தைகள் இரண்டு. பெரும் அறைகளைக் கொண்ட நேர்த்தியான வீட்டில் ஐரோப்பிய கலாச்சாரத்தின் அத்துணை சாராம்சங்களையும் சமரசமின்றி அனுபவித்து வாழும் வாழ்வுதான் அவனது.

ஒரு விடைபெறல்

Image
நந்தன் ஸ்ரீதரன் அவர்களின் முகநூல் பகிர்வு  சமீபத்தில் சில இளைஞர்களின் திரைப்படம் தயாரித்தது எப்படி என்பதைப் பற்றி கேள்விப்பட்டேன். என்னை விட மிக மிக இளைஞர்கள். அனைவருமே ஏதேனுமொரு திரைப்படத்தில் வேலையில் இருப்பவர்கள். கேமராத் துறை, இயக்கம், எடிட்டிங், ஆர்ட் டைரக்‌ஷன் என்று பல்வேறு துறைகளில் பணி புரிந்தாலும் எப்போதும் ஒன்றாக சுற்றும் குழாம். மத்திய நடுத்தர வர்க்கத்துக்கும் கொஞ்சம் மேலான குடும்பம் என்பதால் பணம் பற்றிய பிரச்சினைகள் இல்லை. ஆனாலும் சினிமா என்பது எப்போதும் துயரைத் தந்து, துயரை உறிஞ்சி சிந்நேரம் புன்னகையைக் கொடுக்கும் விநோதபிராணி அல்லவா.. முகவரி பெறும்வரையான பதற்றமும் துயரும் அவர்களுக்கும் உண்டு. அவர்களில் ஒரு நண்பன் ஒரு 5D கேமராவை சொந்தமாக வாங்கினான். நண்பர்களுக்குள் ஒரு ஐடியா. கைவசம் கேமரா இருக்கிறது. டெக்னிஷியன்களும் இருக்கிறோம். இவை தாண்டி சிறுசிறு செலவுகள்தானே. ஒரு கதை தயார் செய்து நாமே இயக்கிவிட்டால் என்ன..

விடைபெறல்கள்

சமீபத்தில் என்னை வாட்டிய இரண்டு இழப்புகள். 1. நண்பர் ப்ருனோவின் பேரிழப்பு  ஜாக்கி சேகரின் நிலைதகவல் இது ..
ஆழ்ந்த இரங்கல்.

நேற்று இரவு நண்பர் புருனோவின் மனைவி மரித்த செய்தி அறிந்து துடித்து போய்விட்டேன்...

இளம் வயதில் மரணம் ரொம்பவும் கொடுமை...
புருனோ எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்து இருக்கின்றார்.... பெரிய பெரிய பிரச்சனைகளில் பதிவுலகத்தினர் சந்தித்த போது ஒரு நண்பனாக தோழனாக தோள் கொடுத்து இருக்கின்றார்.

மெமரி கார்ட் 1

Image
ஒரு கவிதை

வழங்கப்படாத 
ரொட்டித்துண்டுகளுக்கு அருகில் 
தன் வாலை 
உதிர்த்துவிட்டே போயிருக்கிறது 
நன்றி.

- ஃப்ராங்க்ளின் குமார்காணமல் போன பதிவர் ...

தமிழ்மனத்தில் ஏழாவது ராங்கில் இருந்தவர் இவர். சமீபமாய்க் காணாமல் போய் மீண்டிருக்கிறார்.

இசை எனும் இளையராஜா விஜி கனைக்ட் அவர்களின் ரசனை

Image
நண்பர் விஜி கனைக்ட் அவர்களின் முகநூல் பகிர்வொன்று .. #மறக்க_இயலா_கானங்கள் 103 : ராஜாவிடம் ரஹ்மான் தன்னை தந்த .. " ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் ... " November 13, 2014 at 8:26pm #மறக்க_இயலா_கானங்கள் 103 : " ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் ... "

             நேற்று இரவு ஒரு பத்து மணி இருக்கும், தான் ஸ்வர்ணலதாவின் தீவிர ரசிகன் என்று எனக்கு அறிமுகமான  பாலாஜி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான், அண்ணா .. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாட்டு கேட்டுருகீங்களா??  என்று கேட்டான் , எனக்கு மிக மிக ஆச்சரியம், ஏனென்றால் என் வாட்சப்பில் ஒரு குரூப் உண்டு, அதில் பல்வேறு நாடுகளில் இருந்து இருபது பேர் கொண்ட ஒரு குழு இருக்கிறது, ஸ்வர்ணலதவை பற்றி பேசுவதும், அவர் பாடல்களை பாடுவதும், அவர் மறைவை எண்ணி அழுவதும், எந்நேரமும் அவரை குறித்தே உரையாடுவதும்  அவரின் பாடல்களில் இருக்கும் விசேடங்களை பேசுவதுமாக இருப்பார்கள், என் வட்டத்தில் என்னை "வாப்பா .. ஸ்வர்ணலதா தம்பி " என்று கிண்டல் அடிக்கும் அளவுக்கு நான் ஸ்வர்ணலதா பைத்தியம், ஆனால் நானே தலை கிறு  கிறுத்து போகும் அளவுக்கு இவர்களின் உரையாடல்களும், பரிமாறல்களும்…

நமது நாளைகள் ....

Image
நண்பர் பு.கோ. சரவணன் அவர்களின்  ஒரு முகநூல் நிலைத் தகவல். ஜெயப் பிரபு பகிர்ந்திருந்தார். பல கேள்விகளை என்னுள் எழுப்பியது.
எனது பாடத் திட்ட தயாரிப்பு குறித்து நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்று யோசிக்க வைத்த ஒரு பதிவு. 

"அங்க பாருப்பா.... பச்ச பசேல்ன்னு வளர்ந்திருக்கில்ல.. அதெல்லாம் என்னா தெரியுதா?"
-ரயிலில் எனக்கெதிரே அமர்ந்திருந்த ஒரு அன்னை தன் குட்டி மகளை சன்னலுக்கு வெளியே கைகாட்டி கேட்கிறாள்.
"புல்லும்மா... நெறயா வளர்ந்திருக்கு... கட் பண்ணி வைக்க மாட்டாங்களாம்மா?.." -மகள்.

பிரியங்கா! - யார் இவர்?

Image
முகநூல் நண்பர் திரு.ரபீக் அவர்களின் பதிவொன்றைப் பகிர்கிறேன். 
பிரியங்கா - தூயமகள். பிரியங்கா! - யார் இவர்?
முகநூலில் மட்டுமல்ல என்னால் முடிந்தவரையிலும் முகத்திற்கு நேராகவும் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டேன்.இந்தப் பெயரில் உள்ள எல்லாப் பிரபலங்களையும் தெரிந்திருப்பவர்களுக்கு, பிரபலப் படுத்தவேண்டிய இவரைத் தெரிந்திருக்கவில்லை.

டி.எம்.என்.டி Teenage Mutant Ninja Turtles (2014)

Image
ஹாலிவுட்காரர்களுக்கு இன்னாப்பா ஆச்சு என்று கேட்க வைக்கும் இன்னொரு காமிக்ஸ் அடாப்சன் டீனேஜ் மியுடன்ட் நிஞ்சா டர்டில்ஸ். படம்தான் பாப்பாக் கதை. வசூல் அதிரடி சரவெடி. 125 மிலியன் யு எஸ் டாலர்களில் தயாராகி 434.5 மிலியன் யு.எஸ் டாலர்களை வாரிச்சுருட்டியிருக்கிறது.
ஒரு சோதனைச் சாலையில் உயிர்வேதியல் பரிசோதனைகளுக்கு உட்படும் நான்கு  ஆமைகள் மேம்படுத்தப்பட்ட ஆற்றலை அடைகின்றன. மனிதர்கள் மாதிரிப் பேசுவதோடு இல்லாமால் ஒரு கண்டைனர் ட்ரக்கையே தூக்கி வீசும் வலிமையைப் பெறுகின்றன. இவர்களை ஸ்பிலின்டர் என்கிற ஒரு மனித வடிவத்தை அடைந்த எலி நிஞ்சா வீரர்களாக மாற்றுகிறது. 
இதுமாதிரிப் படங்கள் வில்லிங் சஸ்பென்சன் ஆப் டிஸ்பிலீப் வகை. எனவே லாஜிக்கேல்லாம் பார்க்காம ரசிக்கலாம். 
ஒரு காட்சியில் உடலில் புகுந்த துப்பாக்கி ரவைகளை உடலை முறுக்கி வெளிய தள்ளும் ஆமைகள் நமது ஹீரோக்களை விட அதிகம் விசிலைப் பெறக்கூடும். 
தொடரும் கண்டைனர் சேசிங் காட்சி நம்ம ஆட்கள் பார்த்தால் அரண்டுபோவார்கள். ஒரு பெரும் பனிமலைச் சரிவில் உருளும் கண்டைனர் லாரி அதன் கீழே ஆக்சன் சடுகுடு விளயாடும் ஆமைகள், ஐ ஆல்வேஸ் வான்டட் டு டூ திஸ் என்று ஒரு ஹம்வீக்க…

கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி

Image
கைகளில் அடங்கிவிடும் சிறிய பந்து தான் அது. ஆனால் அது இந்தப் பேரண்டம் முழுவதையும் இருளால் நிரப்பும். தீய சக்திகளுக்கு உலகை அடிமையாக்கும். ஸ்டார் லார்ட் என்கிற திருடன் விளயாட்டாய் இந்தப் பந்தை திருட துவங்குகிறது ஒரு அதிரடி துரத்தல். கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி படத்தின் சுருக்கம் இது தான். 
வேறென்ன வழக்கம் போல் திருடன் திருந்துகிறான். அவனது குழுவுடன் சேர்ந்து இந்தப் பேரண்டத்தைக் காக்கிறான். 
ஸ்டார் லார்டின் உண்மையான பெயர் பீட்டர் க்வில், சிறுவயதில் தனது தாயை இழந்து மருத்துவ மனையில் இருந்து வெளியே ஓடும் பீட்டரை சூழ்கிறது விண்ணில் இருந்து பொழியும் போரொளி. அவன் ஒரு பேரண்டத் திருடர் கூட்டத்தால் கடத்தப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு பேரண்டப் புகழ் பெற்ற திருடனானவன்.  
இவனது குழுவில் க்ரூட் என்கிற வேராலான மனிதன், தனது கைகளில் இருந்து ஆற்றலை அலைகளை வெளியிடும் ட்ராக்ஸ்  , கோமார என்கிற பெண், ராக்கேட் ராக்கூன் என்கிற புத்திசாலி ராக்கூன் என இந்த குழு ஆடும் ஆட்டம்தான் கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி.
அவதாருக்கு பிறகு விண்வெளிக்கதைகள் வண்ணமயமாக மாறிப்போய்விட்டன. ஒவ்வொரு விண்கலமும் அற்புதமான வண்ணங்களில் மின்னு…

என்னொரு படைப்பாற்றல் கத்தி திரைப்பட பார்வைகள் ...

Image
நண்பர் நந்தன் ஸ்ரீதரன் பகிர்ந்த ஒரு நிலைத் தகவலை உங்களோடு பகிர்கிறேன்..
கத்தி கதை திருட்டு பிரச்சினையில் நண்பர் Armstrong Vijay யின் இந்த பதிவு மிக மிக முக்கியமானதாகும். கிட்டத்தட்ட இது ஒரு மௌன சாட்சியமாகவே இருக்கிறது.. கதையை பதிவு ◌செய்து வைக்கும் விஷயத்தில் ஆர்ம்ஸ்ட்ராங் சொல்வதை விட இன்னும் பலமடங்கு சிக்கல்கள் உள்ளன.. படியுங்கள் நண்பர்களே..
இது நந்தன் ஸ்ரீதரன்

மாக்கின்லே கான்டோரின் சிறுகதை ஒன்று

Image
கதை மாந்தர்கள் 
திரு.பார்சன், காப்பீடு விற்பனையாளர்  திரு. மார்க்வார்ட், பார்வையற்ற பிச்சைக்காரன் 
இடம் : சாலை, ஒரு தங்கும் விடுதிக்கு முன்னே

காணாமல் போனவர்கள் ...

Image
நண்பர் ஜெயப் பிரபு அவர்களின் மீள் பதிவு ஒன்று ... சிந்தைக்கு உணவாக 

கார்ப்பரேட் கம்பெனிகளுடைய குரூர புத்தி: புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமசுக்கெல்லாம் செல்போன் கம்பெனிக்காரர்கள் நம் நாட்டுக்குள் டவரடி எடுத்து வைக்கும் வரை வாழ்த்து அட்டைகள் அனுப்பிக் கொண்டு தான் இருந்தோம்.