உங்கள் குழந்தையின் நண்பர்கள் யார்?


இது ஒரு எளிமையான கேள்வி.
உங்கள் குழந்தையின் நண்பர்கள் யார்?

தெரிந்தோ தெரியாமலோ உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் அவர்களின் நண்பர்களின் பங்கு அளப்பரியது. 

ஒரு சில வினாடிகள் குழந்தையிடம் பேசுபவர்கள் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதில் துவங்கினால் இது புரியும். 

எனது நண்பர் ஒருவர் ஒரு தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். ஒரு வினோதமான பிரச்சனையையை சொன்னார். 

ஒரு பய இருக்கான் சக பெண் குழந்தைகளின் கன்னத்தை கடிக்கிறான். என்றார். நாமதான் டியூப் லைட் ஆச்சுதே. மெல்ல யோசித்து என்ன பிரச்சனையாக இருக்கும் என்று ஓரளவு யூகித்தேன். 

சொன்னேன். சரியாகத்தான் இருந்தது. 

பள்ளிக்கு வெளியே இருக்கும் குட்டியானை (டாட்டா ஏஸ்) ஸ்டாண்டில் சில ஓட்டுநர்களுடன் பேசிய பின்னரே பயல் பள்ளிக்கு வருவது உறுதியானது. 

அண்ணாத்தே கோடுபோட்டா ரோடு போட்டுருவார். மெல்ல அந்தப் பையனிடம் சில சாக்லெட்டுக்களை செலவிட்டு விசயத்தை அறிந்தார். 

தங்களுடைய வார்த்தைகள் ஒரு பிஞ்சை சமூக விரோத சக்தியாக்குவதின் பிள்ளையார் சுழி என்பதை அறியாது சில எருமை மாடுகள் சொன்ன விஷ(ய)த்தை அப்படியே பின்பற்றியதால் அவன் பிரச்சனைக்குரிய மாணவனாகிப் போனான்.

ஒரு சில வினாடிகளில் சில மனிதர்கள் எல்.கே.ஜி குழந்தையை இப்படி மாற்ற முடியும் என்றால் ... வாழ்நாள் முழுதும் கூட இருக்கும் நண்பர்கள் எத்துனை பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியும்?

சமீபத்தில் ஒரு மாணவர் பள்ளியை விட்டு விலகி விட்டார். அதீதமான கபடி வேட்கை கொண்ட மாணவர். சுத்து வட்டராத்தில் எங்கு கபடி நடந்தாலும் அங்கே இருப்பார். பிரச்னை என்னவென்றால் கபடி குழுவில் இவருடன் இருந்தவர்கள் எல்லாம் அய்யா அப்துல் கலாமிற்கு ஆலோசனை சொல்பவர்கள். எட்டாம் வகுப்புடன் கட்டிட வேலைக்கு சென்ற வித்தகக் கல்வியாளர்கள் அவர்கள். அவர்களுடனே நீண்ட  நேரம் செலவிட்டு அய்யா ஒரு பெரிய உண்மையை கண்டுணர்ந்துவிட்டார். பள்ளி படிப்பு தேவை இல்லை என்பதே அது.

திடீரென பள்ளியை விட்டு நின்றுவிட்டார். சில முறை வீட்டிற்கு சென்று விசாரித்து மீண்டும் பள்ளிக்கு வரும்படி பணித்தும் வரவில்லை. மனநல ஆலோசகரிடம் வினவியதில் இது வித்ட்ராயல் சிம்ப்டம். உங்களால் ஏதும் செய்ய இயலாது. உங்களிடம் வரும் மாணவர்களுக்கு முழுக் கவனத்தையும் செலுத்தி பாடம் எடுங்கள். இல்லாவிட்டால் பின்னால் வேறுமாதிரி நீங்கள் வருந்த நேரிடலாம் என்றார். 

அது தான் நடந்தது. அவனது தந்தை வெளிநாட்டில் பணியில் இருந்தார். விசயம் கேள்விப்பட்டு விடுப்பு எடுத்து விமானத்தில் வந்து பயலை சாம, பேத , தான, தண்ட முறைகளில் கெஞ்சிப் பார்த்தார். அசரவில்லை பயல். 

ஊரில் உள்ள வருத்தப் படாத வாலிபர் சங்க தலைவர்களின் பங்கினை உணர்ந்த அவர் இனி இந்த ஊர்ல நீ இருக்கக் கூடாது என்று திருப்பூர் அனுப்பி வைத்துவிட்டார். 

அவன் விட்டுட்டுப் போன பை இன்னும் அவனுக்காக காத்திருக்கிறது. இத்தனைக்கும் மிக நல்ல பையன் அவன். கபடி நண்பர்களின் குழு அவனை இப்படி ஆக்கிவிட்டது. 

சிறுவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து இதுமாதிரி விளையாட்டில் ஈடுபடுவது ஆரோக்கியமானதே என்றாலும் அந்தக் குழுவில் தொடர்ந்து படிக்கும் மாணவர்கள் இருகிறார்களா என்பதைப் பார்ப்பது பெற்றோரின் கடமை. சிலர் வ.வா சங்க உறுப்பினர்களாக இருந்தால் அந்தக் குழுவில் உள்ள அனைவருமே கல்வியில் இருந்து கவனத்தை திருப்பிக் கொள்வது தவிர்க்க முடியாது. நிகழ்ந்தே தீரும். 

இவர்களாவது நண்பர்கள் மிக நீண்ட நேரம் ஒன்றாக இருந்தவர்கள். ஆனால் சிலர் ஒரு சில விநாடிகளிலே விசத்தை விதைத்து விடுவார்கள். 

ஒரு முறை நண்பர் ஒருவர் சங்கடப்பட்டு சொன்னார் என் பையன் இன்னொரு ஒரு பெண்ணைக் காதலிப்பதாக சொல்லியிருக்கிறான். பய படிக்கிறது எட்டாவது என்ன செய்வது என்றார் அவர். 

பையனை விசாரித்தால் அப்பாவ பார்க்க சங்கர் மாமா வந்தாங்க. அவங்கதான் கேட்டாங்க நீ எத்துனை பேர்கிட்ட ஐ. லவ் யு சொல்லீர்க்க என்று.

யாரை நோவது? 

எனவே 
கொஞ்சம் பாருங்க ...

உங்கள் குழந்தைகளின் நண்பர்கள் யார்?
(அதற்கென்று சந்தோஷ் சுப்ரமணியன் பிரகாஷ்ராஜ் மாதிரிப் படுத்தி எடுத்துவிடவும் வேண்டாமே)


அன்பன் 
மது 

Comments

 1. "//அந்தக் குழுவில் தொடர்ந்து படிக்கும் மாணவர்கள் இருகிறார்களா என்பதைப் பார்ப்பது பெற்றோரின் கடமை.//"

  பெற்றோர்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அது மட்டும் இல்லை,அவர்களின் மற்ற நண்பர்களையும் கவனிக்க வேண்டும்.
  நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு,

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு உண்மையானவரே...

   Delete
 2. ஆசிரியர் அல்லவா !!அருமையாக சொல்லியிருக்கீங்க ..பிள்ளைகள் முன்பு அதிகவனமாக இருக்கணும் .பெரும்பாலும் நண்பரோ உறவினரோ யாராக இருந்தாலும் நம் பிள்ளைங்களை அவர்களுடன் தனிமையில் விட வேண்டாம் அவசியம் ஏற்பட்டாலொழிய ..
  எல்லா நேரமும் கண்காணித்தல் கடினமே ..lkg மாணவனின் மனதை அழுக்காகிய பெரிய ஜந்துக்களை என்ன சொல்வது :( ..ஒவ்வொருவரும் குழந்தைகளின் நட்புக்களை கொஞ்சம் பூதகண்ணாடி கொண்டுத்தான் பார்க்க வேண்டியிருக்கு ..

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி...

   Delete
 3. பெற்றோர்களுக்கு நல்ல எச்சரிக்கை !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. விழிப்புணர்வு ... அவ்வளவே.. எச்சரிக்கை எல்லாம் தர நான் என்ன ரமணனா?
   நன்றி பகவானே.

   Delete
 4. ஒரு சமூக அவலத்தை, விழிப்புணர்வை முன் வைத்ததற்குப் பாராட்டுக்கள். அதுவும் நகைச்சுவை உணர்வுடன்...சொன்னாலும் பெற்றோர்களுக்கு இது கிலிதான். மிகவும் தேவையான ஒரு பதிவு. இந்தக் காலகட்டத்திற்கு. நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்குக் கூட ஒரு பயிற்சி முகாம், பெர்சனாலிட்டி டெவெலப்மெண்டில் சேர்த்தால் நல்லதோ என்று சொல்லும் அளவு இன்று நிலைமை மோசமாகி உள்ளது. பல குழந்தைகளின் எதிர்காலத் திட்டங்கள் கூட 10 ஆம் வகுப்பு வரும் போது நண்பர்களின் உந்துதலால் மாறிவிடுகின்றது. வேதனையான விசயம்.

  நீ உன் நண்பனைக் காட்டு நீ யார் என்று கூறுவேன் என்ற ஒரு வாசகம், யாரோ ஒரு பெரியவர் (பெயர் மறந்துவிட்டது) சொன்னதுண்டு உண்டு.

  உங்களது முந்தைய பதிவுப் பகிர்வுகளில் கல்வி பற்றி, ஒன்றில் சொல்லி இருந்தீர்கள் அதை ஒட்டி ஒரு பதிவு நாங்கள் எழுதிக் கொண்டிருந்ததில் இந்த நண்பர் விசயமும் எழுதி உள்ளோம். பூர்த்தியாகவில்லை...

  பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்களா?

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 5. ஆசை மட்டுமல்ல... ஆர்வம் அதிகமானாலும் அவஸ்தை தான்...

  ReplyDelete
  Replies
  1. நிஜம்தான்
   நன்றி நச்சென்று சொன்னதற்கு

   Delete
 6. வணக்கம்

  யாவரும் படிக்க வேண்டிய பதிவு நல்ல வழிப்புணர்... பகிர்வுக்கு நன்றி த.ம 4
  எனது பக்கம்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:   

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நகையூட்டும் பின்னூட்டம்
   நன்றி

   Delete
 7. அன்புள்ள அய்யா,

  ‘ உன் நண்பனைப் பறிறிச் சொல்...உன்னைப் பற்றிச் சொல்கிறேன் ’ -என்பார்கள்.

  குழந்தைகளின் நண்பர்கள் யார் என்பதில் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்ற நல்லதொரு சிந்தனையை விதைத்த ஆசிரியருக்கு பாராட்டுகள்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அய்யா
   நன்றி ..

   Delete
 8. உன் நண்பன் யார் என்று சொல்
  நீ யார் என்று சொல்கிறேன்
  என்று கூறுவார்கள், பெற்றோர்கள் கவனத்திற்கு உரிய
  அருமையான பதிவு நண்பரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா..

   Delete
 9. Replies
  1. நன்றி அய்யா.

   Delete
 10. உண்மை..சகோ...சூழல் தான் குழந்தைகளைக்கெடுக்கின்றது...குழந்தைகளைப்பற்றி அறியாமலே ஓடுக்கிறோம் குழந்தைகளுக்காக..

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி...

   Delete
 11. 'Show your friend, I will Show You' -என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டே? (அண்ணா.. திருநெல்வேலிக்கே அல்வாவா? என்னும் மைதிலியிடம் ஒரு சிநு மன்னிப்புக்கேட்டுக்கொண்டு...) ஒரு குழந்தையின் ஆளுமை வளர்ச்சியில், தாத்தா-பாட்டிப் பரம்பரை கால்பங்கு, அம்மா-அப்பா கால்பங்கு, ஆசிரியர்-ஊடகம், சூழல் கால்பங்கு, எனில் நண்பர்கள் கால்பங்கு என்பதும் இதில் அந்தக் குழந்தை எதில் அதிக நேரம் செலவிடுகிறான் என்பதில் இந்தப் பாதிப்பின் பங்கு மாறுவதும் தவிர்க்க இயலாதில்லையா மது? குழந்தை உளவியல் சார்ந்த அருமையான பதிவு. நீங்கள் நல்ல அப்பா மட்டுமல்ல நல்ல ஆசிரியரும் கூட என்பதை அழுத்தமாகச் சொல்லும் பதிவு. என் இனிய பாராட்டுகளுடன் த.ம.(6)

  ReplyDelete
  Replies
  1. என்னைவிட ஆழமாக உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பது எனக்குத் தெரியும் ...
   பாராட்டுக்கும் வாக்கிற்கும் எனது நன்றிகள்.

   Delete
  2. அய்... அப்படியா? சொல்லவே இல்ல..! என் தங்கச்சிதான் நகைச்சுவையா எழுதுவாங்க, மது ரொம்ப சீரியஸ்னு நெனச்சிக்கிட்டிருந்தா.. பரவால்லய்யா நீங்களும் நகைச்சுவையாத்தான் எழுதுறீங்க மதூ..

   Delete
 12. பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்று சிறப்பாக சொன்னது பதிவு! நட்புக்களை நல்லதாக அமைத்துக் கொண்டால் சிறக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்வாமிகள்

   Delete
 13. உண்மையில் இப்பருவத்தில் சேரிடம் அறிதல் பற்றி எவ்வளவு சொன்னாலும் எடுபடுவதில்லை.
  நல்ல பகிர்வு ஆசானே!
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. நன்றி இணையப் புயல் அய்யா..

   Delete
  2. இப்போது ஏற்றப்பட்டுள்ளது எத்தனாம் எண் எச்சரிக்கைக் கூண்டு தோழரே?

   Delete
 14. சமூக சிந்தனைக்குறிய நந்ந பதிவுதான் நண்பரே,,, குழந்தைகளோடு அவர்களுடைய நண்பர்களும் கவனிக்கப்பட வேண்டியவர்களே...

  த.ம. 8

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா.

   Delete
 15. வார்த்தைச் சிக்கனத்தில் தேர்ந்த வள்ளுவன்,தெரியாமலா 'நட்புக்காக' 50 திருக்குறளை எழுதினார்..! (நட்பு, நட்பாராய்தல், தீநட்பு, கூடாநட்பு, பழமை ...)
  இன்றைய இளைஞர்கள் கெடுவதற்குக் காரணமே 'கூடாநட்பு' தானே..!
  நல்ல பதிவு.!

  ReplyDelete
 16. நல்லதொரு விழிப்புணர்வு சகோதரி

  ReplyDelete
 17. வணக்கம் சகோதரரே!

  வலைச்சர அறிமுகத்தில் இன்று தங்களையும் அறிமுகப் பதிவராகக் கண்டேன்!
  வாழ்த்துக்கள்!

  எனக்கு அறிவிப்புத் தந்தமைக்கும் நன்றி சகோ!

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...