கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி


கைகளில் அடங்கிவிடும் சிறிய பந்து தான் அது. ஆனால் அது இந்தப் பேரண்டம் முழுவதையும் இருளால் நிரப்பும். தீய சக்திகளுக்கு உலகை அடிமையாக்கும். ஸ்டார் லார்ட் என்கிற திருடன் விளயாட்டாய் இந்தப் பந்தை திருட துவங்குகிறது ஒரு அதிரடி துரத்தல். கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி படத்தின் சுருக்கம் இது தான். 

வேறென்ன வழக்கம் போல் திருடன் திருந்துகிறான். அவனது குழுவுடன் சேர்ந்து இந்தப் பேரண்டத்தைக் காக்கிறான். 

ஸ்டார் லார்டின் உண்மையான பெயர் பீட்டர் க்வில், சிறுவயதில் தனது தாயை இழந்து மருத்துவ மனையில் இருந்து வெளியே ஓடும் பீட்டரை சூழ்கிறது விண்ணில் இருந்து பொழியும் போரொளி. அவன் ஒரு பேரண்டத் திருடர் கூட்டத்தால் கடத்தப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு பேரண்டப் புகழ் பெற்ற திருடனானவன்.  

இவனது குழுவில் க்ரூட் என்கிற வேராலான மனிதன், தனது கைகளில் இருந்து ஆற்றலை அலைகளை வெளியிடும் ட்ராக்ஸ்  , கோமார என்கிற பெண், ராக்கேட் ராக்கூன் என்கிற புத்திசாலி ராக்கூன் என இந்த குழு ஆடும் ஆட்டம்தான் கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி.

அவதாருக்கு பிறகு விண்வெளிக்கதைகள் வண்ணமயமாக மாறிப்போய்விட்டன. ஒவ்வொரு விண்கலமும் அற்புதமான வண்ணங்களில் மின்னுகின்றன. ரொம்ப கூலான படம் இது. 

ஆமா ஒரு பாப்பா கதைக்கு எவ்வளவு பில்டப்பு. எப்படி இந்தப் படங்கள் வசூலில் சக்கைபோடு போடுகின்றன என்று யோசித்தால் மார்வலின் மூங்கில் விவசாயம் புரியும். பல ஆண்டுகளாக இந்த கதாபாத்திரங்கள் அமெரிக்க குழந்தைகளின் அபிமானத்திற்குரிய நண்பர்களாக இருக்கின்றன. அன்றைய குழந்தைகள் இன்றைய குடும்பத் தலைவர்கள். 

இன்று மெகா பட்ஜெட்டில் அன்றைய காமிக்ஸ்கள் படமாக வருகிறபொழுது டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வதின் ரகசியம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கேன். (அறிவைக்கண்டு வியக்கேன் என்று யாரும் சொல்லவேண்டாமே)

இந்த படம் தற்போதைய தந்தைமார்களின் குழந்தைப் பருவ நினைவலைகளை தந்திருக்கவேண்டும். இல்லையெனில் இந்த வெற்றி சாத்தியப் பட்டிருக்காது. 

தயாரிப்பு செலவு 170 மிலியன் அமெரிக்க டாலர்கள்.
வரவு
மூச்சைப் பிடிச்சுகோங்க 
752.8 மிலியன் அமெரிக்க டாலர்கள்

க்ரூட் வேடத்தில் குரல் நடிப்பு செய்தவர் ஒரு சூப்பர் ஸ்டார்! அவர் வின் டீசல்!
2009இல் இருந்து தயாரிப்பு நடந்திருக்கிறது என்பது தான் ஆச்சர்யம். 

Comments

 1. நன்றி..! ஆனா ரொம்பப் பொறாமையா இருக்கு.!உங்களுக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்குது..?
  விமர்சனமே படம் பார்க்குற மாதிரி இருக்கு..!

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு மேடைக்கும் தேர்வுக்கு தயாரிப்பது மாதிரி தயாரிப்பது ...
   மேடையில் பேசியே பூக்கூடை அபிசேகம் வாங்குவது போன்ற பணிகள் எனக்கு இல்லை ...
   எனவே நேரம் இருக்கிறது..

   Delete
 2. நல்ல விமர்சகராக இருக்கிறீர்களே,,, தோழா.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 3. மிகச்சிறப்பாக எளிமையாக ஓர் விமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 4. பட விமர்சனம் படித்தேன். படத்திற்குச் சென்றுவிட்டு வந்த உணர்வு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா

   Delete
 5. அன்புள்ள அய்யா,

  கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி விமர்சனம் படித்தேன். நீங்கள் சொல்வதெல்லாம் படிக்கும் போதே வியப்பாக இருக்கிறது. பார்த்தால்...!
  தற்போதைய தந்தைமார்களின் குழந்தைப் பருவ நினைவலைகளால் படம் வெற்றிநடை போடுகிறது என்ற தங்களின் கணிப்பு...எப்படி எல்லாம் படத்தை எடை போட்டுப் பார்க்கிறீர்கள். பாராட்டுகள்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா

   Delete
 6. சத்தியமாக உங்கள் வலைத்தளம் எங்களுக்கு அறிமுகமாகியதே இது போன்ற ஹாலிவுட்டின் படையல்களைப் புட்டு புட்டு வைத்ததால்தான்....நாங்களும் பார்க்கின்றோம்...ஆனால் எழுத வரவில்லை! அழகாக விமர்சிக்கின்றீர்கள். நண்பரே!

  வசூல் மயக்கம் அடைய வைக்கின்றது! அவர்களது படங்களின் வெற்றி நிஜமாகவே ஆச்சரியமடைய வைக்கின்றது. அதற்கு நீங்கள் சொல்லி இருக்கும் காரணமும் சரிதான் ....அவர்களது படங்கள் எல்லாமே பிரமிக்கத்தான் வைக்கின்றன.

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...