மாக்கின்லே கான்டோரின் சிறுகதை ஒன்றுகதை மாந்தர்கள் 

திரு.பார்சன், காப்பீடு விற்பனையாளர் 
திரு. மார்க்வார்ட், பார்வையற்ற பிச்சைக்காரன் 

இடம் : சாலை, ஒரு தங்கும் விடுதிக்கு முன்னே 

பார்சன் அவரது அறையில் இருந்து வெளியே வருவதற்கும் ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் தெருவில் தட்டுத் தடுமாறி தனது கழியை ஊன்றி உணர்ந்து வந்துகொண்டிருப்பதற்கும் சரியாக இருந்தது. 

பலநாட்களின்  அழுக்கு அவன் மேனியெங்கும் அப்பிக்கிடந்தது. (shaggy). கழுத்து தடித்துக் கிடந்தது. அவன் கோட்டு கிரீஸ் அப்பியது போல அழுக்காக இருந்தது. கோட்டின் மடிப்புகளும், பைகளும் இருந்த பகுதி மேலும் அழுக்காக இருந்தது. அவனது கைகள்  கழியின் மேல் வளைவை இறுகப்பற்றவும் விடுவிக்கவுமாக இருந்தன. அவனது தோலில் கரும் பையொன்று தொங்கிக்கொண்டிருந்தது.  நிச்சயமாக எதையோ விற்பனை செய்கிறான். என்ன அது?

வசந்தகால காற்று அற்புதமாக வீசியது. சூரியனோ கதகதப்பாக சாலையின் ஆஸ்பால்டில் மஞ்சள் வண்ணத்தை ஊற்றிவைத்திருந்தான். பார்சன் அவரது விடுதியின் முன்னர் நின்றுகொன்று கிளாக் கிளாக் என்று கழியைத் தட்டியபடி வரும் அவனை கவனித்தார். அவருக்குள் பார்வையற்றவர்கள் குறித்து கருணை மாதிரி ஏதோ ஒன்று முட்டாள்த்தனமான எண்ணமாக சடாரென தோன்றி மறைந்தது. ஆனால் தான்  பிழைத்துக் கிடப்பதே பேரரதிஷ்டம் என்று எண்ணத் துவங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர்  திறன்மிக்க தொழிலாளிகளுக்கு மேலே ஆற்றல்பெற்றவர் என கருதப்பட்டார். இப்போது வெற்றிகரமான,  மிக மரியாதைக்குரிய ஏன் ஆராதிக்கப்பட்ட ஒரு காப்பீட்டு விற்பனையாளர்! இந்நிலைக்கு அவர் தனது முயற்சியாலேயே உயர்ந்திருந்தார். யாரும் அவருக்கு உதவவில்லை. இதற்குத் தான் எத்துனைப் போராட்டங்கள்! எத்தகு குறைபாடுகளோடு போரிட்டு வென்றவர் அவர்! இன்னும் இளமையாகத்தான் இருக்கிறார் அவர்.

 காற்று நடமிடும் நீர்நிலைகளில் இருந்தும் இளமை செழிக்கும் புதர்களில் இருந்தும் பிறந்து வந்ததை மறக்காது வீசிக் கொண்டிருந்த  வசந்தத்தின் நீலக் காற்று அவரது ஆர்வத்தை கிளறியது.

மிகச் சரியாக டாப் டாப் என்று தட்டியபடியே தன்னைக் கடந்த குருட்டு மனிதனைக் நோக்கி ஒரு அடி முன்வைத்தார் பார்சன். அந்த அழுக்கு மனிதன் சடாரென திரும்பினான். தொரை கொஞ்சம் கவனிங்க தொரை. ஒரே ஒரு நிமிடம் உங்கள் நேரத்தை எனக்கு தாங்க என்றான்.

நானே தாமதமாகப் போய்க்கொண்டிருக்கேன். ஒருவர் என்னைச் சந்திக்க நேரத்தை ஒதுக்கியிருக்கிறார். உனக்கு ஏதும் நான் தரணும்னா சொல்லு என்றார் பார்சன். நான் பிச்சைக்காரன் இல்லை தொரை, சத்தியமா இல்லை. ஒரு கைக்கு அடக்கமான பொருள் ஒன்றை வைத்திருக்கிறேன். இந்தாங்க என்று ஒரு பொருளை பார்சனின் கரங்களுக்குள் திணித்தான் அவன். இதை நான் விற்கிறேன் ஒரு டாலர்தான். அற்புதமான சிகிரெட் லைட்டர் இது. பார்சனுக்கு கொஞ்சம் தர்மசங்கடமாகவும் எரிச்சலாகவும்  இருந்தது. பார்சன்  தனது ஒப்பீடற்ற உயர்தர சாம்பல் நிறக் கோட்டுடன்  சாம்பல் நிற தொப்பியுடன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார். இது அந்த கண்தெரியாத அழுக்குமூட்டைக்கு தெரிய நியாயம் இல்லைதான். கடுப்பில் சொன்னார் நான் புகைப்பிடிப்பது இல்லை!

இருக்கலாம் ஆனா உங்களுக்குத் தெரிந்தவர்களில் நிறையப்பேர் புகைபிடிப்பார்கள் இல்லையா? அவர்களுக்கு ஒரு சிறு மகிழ்வுப் பரிசாகத் தரலாமே? விடாது கேட்டான் சிகிரட் லைட்டர்.

புகழ்ந்து காரியம் செய்துகொள்ளப் பார்கிறானே பயல் என் அவசரம் புரியாம மனசுக்குள் முனகினார் பார்சன்.

ஒரு பரிதாபத்திற்குரியவனுக்கு  உதவி செய்யக் கூடாதா? பார்சனின் கோட்டின் கைப்பட்டியை பிடித்துக்கொண்டு மன்றாடினான்.

ஒரு நீண்ட பெருமூச்சோடு பார்சன் தனது கோட்டின் பையைத் தடவி ஒரு நைந்து போன அரை டாலர் நோட்டை எடுத்து நீட்டினார். நிச்சயம் நான் உனக்கு உதவுவேன். யாருக்காவது இதை நான் கொடுப்பேன். மின்தூக்கி (லிப்ட்) பணியாளருக்கு கொடுப்பேன்னு நினைக்கிறேன். இருந்த பொழுதும் இதையெல்லாம் ஒரு பார்வையற்ற வியாபாரியிடம் ஏன் சொல்லவேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது. நீ உன் பார்வையை முழுவதுமே  இழந்துவிட்டாயா? என்றார் பார்சன்.

அந்த அழுக்குமூட்டை வாங்கிய அரை டாலரை தனது பாக்கெட்டில் பத்திரப்படுதியது. பதினாலு வருஷம் தொரை. வினோதமான கர்வம் தொனிக்கும் பாணியில் அவன் சொன்னான் வெஸ்ட்பரி தொரை நானும் ஒருத்தன்.

வெஸ்ட்பரி? ஒ அந்த வேதியல் வெடிப்பு? அதைபற்றி ஒரு  பேப்பரும்  பல ஆண்டுகளுக்கு  எழுதவே இல்லையே. அது நிகழ்ந்த பொழுது நடந்த மாபெரும் பேரழிவுகளில் ஒன்று. எல்லோரும் அதை மறந்துட்டாங்க என்றார் பார்சன்.

களைப்படைந்த தனது கால்களை மாற்றி வைத்துக்கொண்டு நான் ஒனக்கு சொல்லறேன் தொரை அந்த விபத்தை சந்தித்த ஒருவன் அதை மறக்கவே மாட்டான். கடைசியா நான் பார்த்தது வேதிக்கூடம் வெடித்து சிதறியதைத்தான். அந்த சனியன் பிடித்த வாயு ஜன்னல்களை உடைத்துக் கொண்டு பரவியது.

பார்சன் இருமினார். ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் நிலையியல் இல்லை அந்த விழியிழந்த வியாபாரி. அவன்  தனது நினைவுகளில் மூழ்கிப் போனான். மேலும் அவன் பார்சனின் பாக்கெட்டில் மேலும் சில அரை டாலர்கள் இருக்கலாம் என்று கருதியிருக்கக் கூடும்.

நினைச்சுப் பாருங்க தொரை. நூற்றி எட்டுப் பேர் செத்துப் போனாங்க. இருநூறு பேர்கிட்ட காயம். அதில் ஐம்பது பேருக்கு கண்ணு போச்சு. வவ்வால்கள் போல! காற்றில் துழவி பார்சனின் கோட்டைப் பிடித்து விட்டான். தொரை நான் சொல்றேன் தொரை ஒரு யுத்தத்தை விட கோரமானது அது. நான் எனது விழிகளை யுத்தத்தில் இழந்திருந்தால் எனக்கு கவனிப்பு இருந்திருக்கும். நான் நல்லபடி இருந்திருப்பேன். ஆனா நான் ஒரு தொழிற்சாலைப் பணியாளன். கூலிக்கு வேலைபார்ப்பவன். எனக்குள்ள கூலி கிடைத்துவிட்டது. மொதலாளிகளுக்கு மட்டும் லாபம்!  அவர்களெல்லாம் காப்பீடு பெற்றிருந்தார்கள். அதைப்பற்றி இப்போ என்ன கவலை?

அவர்கள் "காப்பீடு பெற்றவர்கள்" அழுத்தமாகச் சொன்னார் பார்சன். அதைத் தான் நான் விற்கிறேன்.

அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை அவன். எனக்கு எப்படி கண்ணு போச்சுன்னு தெரியுமா தொரை? சொல்றேன் தொரை. பணத்திற்காக அடிக்கடி பலரிடம் பலமுறை  சொல்லப்பட்டு  நேர்த்தியை அடைந்திருந்த அந்தக் கதையை அவன் வார்த்தை வார்த்தையாக சொல்ல ஆரம்பித்தான்.

நான் அன்று வேதிகூடத்தில் இருந்தேன். கடைசியாக அதைவிட்டு ஓடிவந்தவன் நான்தான். இடமும் வலமும் இருந்த கட்டிடங்கள் எல்லாம் வெடித்து தகர்ந்தபடி இருந்தன. இருந்தும் வெளியில் தப்ப ஒரு வழி இருந்தது. நிறயப் பேர் அதன் வழியே தப்பி ஓடி உயிர்பிழைத்தனர். இரண்டு பெரும் வேதிச் சேமிப்புக்  கலன்களுக்கிடையே ஊர்ந்து வெளியேற முயன்ற பொழுது பின்னால் இருந்த ஒருவன் என்கால்களைப் பிடித்து இழுத்தான். என்னை முதலில் போக விடு என்று கெஞ்சினான். மெண்டலாகத்தான் இருக்கவேண்டும். எனக்குத் தெரியல. அவனை மன்னிக்க முயல்கிறேன் நான். அவன் என்னைவிட மோட்டா. என்னை இழுத்துப் போட்டுவிட்டு என்மீது ஏறிப் போய்விட்டான். சேற்றில் என்னைப் போட்டு மிதித்துவிட்டு வெளியேறித் தப்பிவிட்டான் அவன். கீழே கிடந்த என்னை சூழ்ந்துவிட்டது விஷவாயு. விஷப்புழுதியில் கிடந்த எனது பார்வையை நான் இழந்துவிட்டேன். என்னைச் சுற்றி நெருப்ப்பும் புகையும் என்று சொன்னபோது சரியாக தேர்ந்த ஒரு நாடகக்காரன் போல ஒரு தேம்பலை வெளியிட்டு எதையோ எதிர்பார்த்தான் அவன். 

அவன் அடுத்த வார்த்தைகள் இப்படிதான் இருக்கும் என்று எதிர்பார்த்தான். "உன் துரதிர்ஷ்டம். சனியன் பிடித்த துரதிர்ஷ்டம். இப்போ உனக்கு நான் ---. " 

இதுதான் எனது கதை தொரை. 

வசந்தத்தின் ஈரக்காற்று அவர்களை நடுங்கியபடியே கடந்தது. 

முழுசா இல்லையே என்றார் பார்சன். 

முழுசா இல்லையா? எதைச் சொல்றீங்க கேட்கும் பொழுதே கேனத்தனமாய் நடுங்கத் தொடங்கினான் அந்த லைட்டர் வியாபாரி. 

உன்னுடைய கதை உண்மைதான். ஆனால் முடிவுதான் கொஞ்சம் வேறமாதிரி. 

வேறமாதிரியா? தவளைபோல் கத்தினான் அவன். அதுவரை இருந்த பணிவும் நட்புணர்வும் அவன் குரலில் இருந்து காணமல் போயிருந்தது.  சொல்லுங்க தொரை.

நானும் அன்னைக்கு வேதிக்கூடத்தில் இருந்தேன். நீதான் என்னை இழுத்துப் போட்டு என்மீதேறி வெளியே போன மார்க்வார்ட்! 

அந்த விழியற்ற வியாபாரி வெகுநேரம் வார்த்தைகளை விழுங்கியபடி நின்றிருந்தான். ஓ கடவுளே நான் நினைச்சேன் நீ___ தடுமாறினான். 

திடீரென பிசாசுமாதிரி கத்த ஆரம்பித்தான். இருக்கலாம் அப்படியும் இருக்கலாம். ஆனால் எனக்குத் தானே கண்ணுபோச்சு?  என் எதிக்க நின்னு நான் சொல்ல்றதையெல்லாம் கேலி செய்திருக்காய் இவ்வளவு நேரம். ஒவ்வொரு நிமிசமும் ஒவ்வொரு நொடியும் என்னை கேலி செய்திருக்காய் நீ. 

தெருவில் போவர்கள் ஒருநிமிடம் நின்று அவனை திரும்பி பார்த்தபடி நகர்ந்தார்கள். 

நீ வெளியே போய்ட்ட நான் குருடனாயிட்டேன். கேக்குதா உனக்கு நான்....

அமைதியாக பார்சன் சொன்னார்.

நல்லது இதைப் போய் பெரிய விசயமா பேசாதே மர்க்வார்ட். எனக்கும்தான் கண்ணில்லை. நானும் விழியிழந்தவன்தான். 

இவருதான் மாகின்லே கான்டோர், பத்திரிக்கையாளர், திரைக்கதை எழுத்தாளர்.Comments

 1. செம கதை, அந்த கடைசி லைன் எதிர்பாராத ஒன்னு, நீங்களே மொழிபெயர்ப்பு செய்தீர்களா சார், நன்று :-)

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் விழி பெயர்த்த மொழிபெயர்ப்பு ...
   நான் நடத்தும் பாடம் என்பதால் எளிதாக இருந்தது..
   நன்றி

   Delete
 2. எதிர்பாரா முடிவு ! பகிர்வுக்கு நன்றி ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி

   Delete
 3. கடைசியில் டிவிஸ்ட் சூப்பர்! சிறப்பான கதை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தளிர்

   Delete
 4. நெஞ்சைப்பிழிந்து விட்டது தோழரே....

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 5. வணக்கம்
  படிக்க படிக்க திகட்டாத கதை நன்றாக உள்ளது கதைக்கரு.. பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ ரூப்ஸ்

   Delete
 6. அருமையான கதை பகிர்வுக்கு நன்றி சார்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி பரிவை.

   Delete
 7. அருமையான கதையை மிக அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கின்றீர்கள் தோழரே! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர்

   Delete
 8. சூப்பர் கதை. கடைசி வரி எதிர்ப்பார்க்காத ஒன்று. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி உண்மையானவரே.. இது ஒரு பாடம் வகுப்பில் நடத்துவது ...
   அருமையாக இருந்ததால் மொழிபெயர்த்து பதிவிட்டேன்...

   Delete
 9. அன்புள்ள அய்யா,

  மாக்கின்லே கான்டோரின் சிறுகதையை நன்றாக எங்களுக்குக் கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு கதையைப் படிக்கும் பொழுது கூடங்குளத்தில் போராடும் மக்கள்தான் நினைவுக்கு வந்தார்கள். நமக்கு மின்சாரம் கிடைக்க வேண்டும் என்ற சுயநலம் மட்டும் நமக்கு... அங்கு விபத்து ஏற்பட்டால் அந்த மக்களும்...பார்வையற்று...ஊனமுற்று அலைந்தால்...யார் அவர்களுக்கு உதுவுவது? அந்த மக்களுக்காக யார் காப்பீடு செய்திருக்கிறார்கள்...?

  கதையின் முடிவு எதிர்பாராதது.
  ’காற்றுக்காக ஜன்னலைத் திறந்தேன்...
  காற்றே ஜன்னலைச் சாத்தியது’
  -என்ற கவிஞர் மேத்தாவின் வரிகள் நினைவுக்கு வந்தன.

  ’ஊனமா(க்)கிப் போனவன்’ சிறுகதை படித்து கருத்திடுக.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. விரிவான பின்னூட்டத்திற்கு நன்றிகள் அய்யா

   Delete
 10. விழி இழந்த கதை -எதிர்பாராத முடிவு..

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி

   Delete
 11. அழகாக மொழி பெயர்த்துள்ளீர்கள் நல்ல கதையும் நல்லமுடிவும் தான் கடைசி வரிகள் எதிர்பார்க்காததுவே ரசித்தேன் சகோ வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி

   Delete
 12. மிக்க நன்றி சகோ பதில் தந்தமைக்கு. விபரம் புரிந்து கொண்டதும் மகிழ்ச்சியே. சரி அம்மு கொஞ்சம் ரெஸ்ட்டும் எடுக்கட்டுமே அதனால் என்ன.ஆனாலும் மிஸ் பண்ணுகிறேன்.ஹா ஹா ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி

   Delete
 13. நல்ல கதை. உங்கள் மொழிபெயர்ப்பில் சிறப்பாக இருந்தது.

  முடிவு எதிர்பார்க்காத ஒன்று. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா ...

   Delete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...