கயல்

கயல் 


பிரபு சாலமோன் கொக்கி படத்தில் வித்யாசமான கதையோடு  எனது கவனம் கவர்ந்தவர். 

இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் திரை ரசிகர்கள் பலரின் எதிபார்ப்புகளை எகிற வைப்பவர், நம்ம ஆட்களும் நல்ல படம் தருவாங்க என்ற நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சில இயக்குனர்களில் ஒருவர். 

படம் ஏதாவது போலாம் என்று வீட்டில் சொன்னதால் குட்டீசுடன் சென்றோம். என்னங்க கயல்ங்க என்று ஆத்துக்காரி. பிசாசு அதுக்குள்ள போயிடுச்சா என்று குழம்பி சரி வாம்மா என்று சாந்தி தியேட்டரில் ஆஜர். 

சீக்ரெட் லைப் ஆப் வால்டர் மிட்டி பார்த்துவிட்டு அதுமாதிரியெல்லாம் நம்ம ஆட்கள் எப்போ எடுப்பாங்க என்று ஆதங்கத்தில் இருந்தால் முன்பாதியின் முதல்பாதி வேர்ல்ட் சினிமா லெவலுக்கு போய்ட்டார்ப்பா சாலோமோன்! லோகேசன், காமிரா, இசை துள்ளலுடன் இந்தியாவை சுற்றும் இரண்டு இளைஞர்கள் செமை. 

சொல்லி வாய்மூடல தமிழ்நாட்டில் அவர்கள் சந்திக்கும் சாதீயம், காதல், தற்கொலை என்று வழக்கமான கிளிஷே காட்சிகள். கொஞ்சம் காதல் கோட்டை சஸ்பென்ஸ், இம்பாசிபிள் படத்தில் இருந்து சுனாமிக் காட்சிகள் என நிறைய தழுவல்கள். 

ஆண்டின் இறுதியைக் கொண்டாடும்  சாண்டாக்கள் குத்துப்பாட்டுக்கு ஆட காதலியைத் தேடும் காதலன். அரைமணி நேரத்திற்குள் மூன்று பாடல்கள் வந்து இன்னாடா இது பி.யு. சின்னப்பாவிற்கும் தியாக ராஜ பாகவதர்க்கும் டப் பைட் தருகிறாரே இயக்குனர் என்று யோசிக்க வைத்தது. 

குறிப்பாக லொ இம்ப்பாசிபில், சுனாமியை மையமாக  கொண்டு உருவான படம். படம் முழுக்க சுனாமி நம்மை துரத்திகொண்டே இருக்கும். அப்படியே ஒரு இயற்கை பேரிடரை படமாக்க அவர்கள் எடுத்துக்கொண்ட யத்தனமும், நெகிழவைக்கும் திரைக்கதை அமைப்பும், ரொம்ப ரொம்ப உண்மையான காட்சிகளும் யப்பா நீங்க அந்தப் படத்தை ஒருமுறை பார்க்கவேண்டும். 

ஆமாங்க பிரபு கட்டாயம் அந்தப் படத்தை பார்த்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறன். அங்கே சிதறிப் போன குடும்பம் ஒன்றிணைவது நெகிழ்வாக உங்கள் கண்களில் வழியும். 

அந்தக் காட்சியின் அழுத்தம் கயல் படத்தின் இறுதியில் வரவில்லை. வந்திருந்தால் கொண்டாட்டத்திற்குரிய பெரு வெற்றியாக இருந்திருக்கும். 

லேய் படத்துல ஒண்ணுமே நல்லா இல்லையா என்று அலுத்துக்கொள்ள வேண்டாம். 

நிறய விசயங்கள் புதிது. ஆரம்பக் கதைக்களம் அருமை அது சாதியத்திலும், சுனாமியிலும் சிக்கி பிச்சு தின்ன பண்ணு மாதிரி கரையொதுங்கி இருக்கிறது. 

லோகேசன் லோகேசன் லொகேஷன் 

எங்கே போறார் பிரபு. நாமல்லாம் எதற்கு இந்தயாவில் இருக்கிறோம், இந்த இடத்தை எல்லாம் பார்க்காமல்?  இதற்காவே கட்டாயம் நீங்கள் பார்க்க வேண்டிய படம். லோகேசன்கள் குறித்து இன்னொரு குறும்படமே வெளிவிடலாம்  பிரபு சாலோமோன்! படம் வெற்றிபெற இந்த ஒற்றைக் காரணமே போதும். 

இசை 
இமானின் இசை ... படத்தின் பலங்களில் ஒன்று. 

புதுமுகம் சந்திரன் முதல் படம் என்று சொல்ல முடியாது! ஹாட்ஸ் ஆப். 
வின்சென்ட் வாயுள்ள பிள்ள பொழச்சுக்கும்!
நம்ம பசங்க பலபேர் தூக்கத்தைக் கெடுக்கப்போகும் ஆனந்தி  கயலாக வந்து அப்ளாஸ் அள்ளுகிறார். 

மூவருமே புதிவர்கள் என்பது நிச்சயமாக நம்ப முடியவில்லை. சீசன்ட் ஆர்ட்டிஸ்ட் போலவே நடித்திருக்கிரார்கள்.

சுனாமி காட்சிகள் லொ இம்பாசிபிள் படத்தை நினவூட்டினாலுமே தமிழுக்கு ரொம்பவே புதிது இந்த சி ஜி முயற்சி. 

வசனங்கள் பலவற்றிற்கு திரையரங்கம் அதிர்ந்தது. 

இவன்க 50, 60 ல பொறந்த பாட்சில கடைசி பாட்ச். இவங்க போய்ட்டா சாதியும் கூடவே கிளம்பிப் போயிரும். 

போலேன்னு வச்சுக்கோ நான் செருப்பாலே அடிச்சு போக வைச்சுருவேன்! 
(செமை காமடி சீனின் வசனம் இது என்றால் நீங்கள் நம்புவீர்களா?) 

நல்ல மெமரி கலக்சன்தான் 

இந்தக் கயல் 
(சார் படத்த மொத்தமா சொன்னேன் ஆனந்திய சொன்னேன்னு நீங்களா நினைச்சுக்கிட்டு அங்கே போய் பத்த வச்சுறாதீங்க) 

பிரபுவிற்கு பெயர் வாங்கித்தரும் இன்னொரு படம்.

இம்புட்டுதான்  
இப்போதைக்கு ..

அன்பன் 
மது 

Comments

 1. வழக்கமா படம்பார்த்துதான் குழம்புவேன் . இப்போ விமர்சனம் படிச்சே குழம்பிட்டேண்ணா ! நீங்க நல்லவரா ? கெட்டவரா ?

  தம +

  ReplyDelete
  Replies
  1. ஆகா.. அவ்வளவு குழப்பமா
   ஆரல்வாய் மொழி கரும்புத் தோட்டம் வரை படம் ஜோராத் தான் போனது...
   அப்புறம் ... ஒரு வழக்கமான திரைப்படமாக மாறிவிட்டது..

   ---
   ஒரு சின்னக் கோடு அதுக்கு அப்பாலையும் இப்பாலையும் ஒரே பதிவில் வந்துட்டேனோ?

   Delete
 2. வணக்கம்
  கதைக்கருவை படித்த போது பார்க்க வேண்டும் என்றுதுடிக்கிறது மனம்... அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 3
  இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. ஹாட்ஸ் ஆப்.
  நன்றியுடன்,
  புதுவை வேலு
  குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

  வாழ்க வளமுடன்!
  திகழ்க நலமுடன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி
   வாழ்த்துக்கும் வருகைக்கும்

   Delete
 4. நல்ல விமர்சனம். இன்னும் பார்க்கவில்லை. பார்க்கிறேன். அதேமாதிரி இம்பாசிபில்னு என்னமோ ஒரு ஆங்கில படத்தை சொல்றீங்களே, முடிந்தால் அந்த படத்தையும் பார்க்கிறேன்.

  "//இந்தக் கயல்
  (சார் படத்த மொத்தமா சொன்னேன் ஆனந்திய சொன்னேன்னு நீங்களா நினைச்சுக்கிட்டு அங்கே போய் பத்த வச்சுறாதீங்க) //"

  நாங்க ஒண்ணும் நினைக்கலைன்னாலும், நீங்க நினைக்க வச்சுட்டீங்களே, இதைத்தான் சொந்தப்பணத்துல சூன்யம் வச்சுக்கிறதுன்னு சொல்லுவாங்களோ!!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க நல்லா வாங்கினேன்.... அவ்வ்வ்

   Delete
 5. கயல்.. ரசிக்க வைத்த படம்தான். கதாநாயகி நிச்சயம் மனதை கொள்ளைகொண்டாள். சார் என்ன லட்சியத்திற்க்காக பொறந்தீங்க? உங்க பின்னாடி யாரெல்லாம் இருக்காங்க? போன்ற நிறைய வசனங்கள் ரசிக்க வைத்தது. அந்த லாரி டிரைவர் கேரக்டரும் மனதில் நிற்கும்படி செய்தது அழகு.நல்ல படத்தைப்பற்றி நல்ல விமர்சனம் தந்துள்ளீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இதெல்லாம் ரொம்பவே பிடித்தது...
   தோற்றத்தை வைத்து எடுக்கும் முன்முடிவுகள் எவ்வளவு தவறானது என்பதை உணர்த்தியிருப்பார்.
   ஆட்கள் சிவப்பா அழகா இருக்கவும் வீட்டிற்குள் அனுமதித்த கரூர் பாட்டியை மகள் பேத்தியுடன் போட்டுத் தள்ளிய கும்பல் நினைவில் வந்தது..

   Delete
 6. Replies
  1. நன்றி நண்பரே

   Delete
 7. Replies
  1. வாக்கிற்கு நன்றி

   Delete
 8. நிறைய படங்கள் பார்க்குறீங்க சார், நீங்க குறிப்பிட்டு இருக்கும் படங்களை பார்த்ததே இல்லை.. கயல் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்று கேள்விபட்டேன்... தற்போதைக்கு பார்க்கும் எண்ணம் இல்லை. பார்க்கலாம்...

  ReplyDelete
 9. பார்க்க வேண்டும்...

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 10. ஓ குட்டீசுடன் பார்க்கலாமா அண்ணா..பார்த்துவிட வேண்டியதுதான்..குட்டீசுடன் பார்க்கவேண்டும் என்று தேடுவதிலேயே எங்க நேரம் கழிந்து விடும்..படம் பார்க்க மாட்டோம் ஹாஹா
  பி.யூ. சின்னப்பாவிற்கு டப் காம்பெடிசனா :))

  ReplyDelete
 11. கயல் ம்ம்ம்ம் பார்க்க சந்தர்ப்பம் நேரிட்டால் பார்க்கலாம்....

  விமர்சனம் அருமை வழக்கம் போல்,,,

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...