Posts

Showing posts from March, 2015

இசை அனுபவம் ஒன்று - ராமனை மறக்காத லக்ஸ்மன்..

Image
இந்தியாவை திரும்பி பார்க்கவைத்த பிரமாண்ட வெற்றியைப் பெற்ற மைனே பியார் கியா திரைபடத்தை இன்னும் சிலர் நினைவில் வைத்திருக்கலாம்.  அதன் பாடல்களுக்காவே இந்தியாவை வசீகரித்தப் படம் அது. அத்துணைப் பாடல்களும் அருமை என்றாலும் எனக்கு ரொம்பப் பிடித்தப் பாடல் ஆத்தே ஜாதே என்கிற தலைப்பு பாடல்தான். (பின்னர் அகத்தியனின் காதல் கோட்டையிலும் இந்தப் பாடலின் பாதிப்பில் காலமெலாம் காதல் வாழ்க என்று வந்ததும் நினைவில் இருக்கலாம்). 
இந்தியாவிற்கு ஒரு மகத்தான சூப்பர் ஸ்டாரைத் தந்த படம் இது. பாக்யஸ்ரீ சல்மான் ஜோடி ஒரே இரவில் இந்தியாவின் இளமையின் அடையாளமாக மாறிப்போனது இந்தப் படத்திற்குப் பின்னர்தான். 
எனது அருமை நண்பர் லியோவின் நீலக் கலர் சோனி வாக்மேனில் இந்தப் பாடலைதான் அடிக்கடி கேட்பேன் நான். வாய்ப்பு கிடைக்கும் அத்துணை தருணங்களிலும் எனது சூழலில் ஒலித்த ஒலிக்கவிட்ட பாடல் இது! ஒவ்வொருமுறையும் படத்தின் இசையமைப்பாளர் மீது எனக்கிருந்த அபிமானம் பன்மடங்கு கூடும். என்னஓர் மேலோடி ...வாவ் என்று மானசீகமாக அவர்களின் திறமையை வியந்து ரசிக்கவைத்த பாடல் இது. இசை அமைப்பாளர் ராம்லக்ஸ்மன் இரட்டையர்களாக தங்கள் பணியைத் துவக்கியவர்…

ஈரோடு தமிழன்பனுடன் நேர்காணல் an interview with thamilanban?

Image
இது ஒரு பகிர்வு  திருமிகு. ஷாஜகான் அவர்களின் பக்கத்தில் இருந்து.
ஈரோடு தமிழன்பனுடன் நேர்காணல்

ஏன் என்னைக் கொல்கிறீர்கள்? - க.இராமசாமி

Image
ஷானின்  வாசிப்புலகம். ஷான் கனவுதேசம் என்கிற வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருவது நீங்கள் அறிந்ததே. அவரது பதிவு ஒன்று என்னைக் கவர்ந்ததால் பகிர்கிறேன்.
இந்த ஆளை என் புத்தக வேலை தொடர்பாக சென்றபோது அகநாழிகையில்தான் முதலில் சந்தித்தேன். தான் ஒரு வலைப்பதிவர் எனவும் என் பதிவுகளை அவர் படித்து வருவதாகவும் சொன்னார். இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகே இவரும் கவிதை எழுதுவார் என்பதும் இவரது புத்தகமும் அகநாழிகையில் என்னுடைய புத்தகத்துடன் வெளியாகிறது என்றும் தெரியும். வெளியீட்டு விழாவும் ஒன்றாகவே நடந்தது. அதன் பிறகு என் அலுவலகமும் இடம் மாறி அவர் அலுவலகம் இருந்த கட்டிடத்துக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் கரா என்று அழைக்கப்படும் இராமசாமி கண்ணன் ஏதோ ஒரு வகையில் என் எழுத்துப் பயணத்தில் பிணைந்திருக்கும் நண்பர். அவரது புத்தகத்தைப் படித்து என் கருத்தைப் பகிரவேண்டும் என்ற மனக்குறிப்பு நீண்ட நாட்களாக இருந்தாலும் அது இன்றுதான் சாத்தியமானது.

அட நா இன்னாத்துக்கு பெண்களை மதிக்கணும்?

Image
ஏங்க இன்னாங்க இது கேள்வி.

நா எதுக்குங்க பெண்களை மதிக்கணும்?

செம பேஜாரான கேள்வியாச்சேப்பு இது. ஆமா  நான் பெண்களை மதிக்கிறேன்னு சொல்லீட்டு சத்தமில்லாம மிதிச்சா அப்பால யாரு கண்டுக்கபோறா?

இத்த மாதிரி ஒரு அம்மணி எழுத சொன்னதுகொசரம் நானும் ரோசிச்சு ரோசிச்சு பார்த்தேன்.

டெஸ்லா சாலையில் ஒரு அற்புதம்

Image
டெஸ்லா இலான் மஸ்கின் ஒரு கனவுத் திட்டம். டெஸ்லா ஒரு புதிர் நிறைந்த இயற்பியலாளர் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான். அவரது பெயரில் ஒரு மகிழ்வுந்து!

எனது பதின்ம வயதில் தமிழ் திரைப்படங்களைப் பார்த்து கதாநாயகனுக்கு கொடுக்கும் காசில் ஒரு பங்கை ஒளிப்பதிவாளருக்கு கொடுத்தால் படங்களின் நேர்த்தி அதிகரிக்குமே என்று நினைத்திருந்த கணத்தில் வந்து குதித்தார் பி.சி. ஸ்ரீராம். 
இதே போல் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள்  பொதுவெளியில் ஹைட்ரோ கார்பன் எரிபொருட்களை பயன்படுத்தும் மகிழ்வுந்துகளை கைவிடச் சொல்லி வந்தபோதும் பெருநிறுவனங்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை. 
இலான் மஸ்க்கின் டெஸ்லா ஒரு புயலை உருவாக்கியிருக்கிறது. இதை இந்தியாவில் மையம் கொள்ளச் செய்ய நமக்குத் தேவை தொழில்நுட்ப அறிவல்ல,  பணமல்ல 
ஒரு நல்ல அரசியல் தலைமை.
வருவார்களா? 
நம்புவோம்.. உங்கள் பார்வைக்கு டெஸ்லா ..