Tuesday, 10 March 2015

அட நா இன்னாத்துக்கு பெண்களை மதிக்கணும்?



ஏங்க இன்னாங்க இது கேள்வி.

நா எதுக்குங்க பெண்களை மதிக்கணும்?

செம பேஜாரான கேள்வியாச்சேப்பு இது. ஆமா  நான் பெண்களை மதிக்கிறேன்னு சொல்லீட்டு சத்தமில்லாம மிதிச்சா அப்பால யாரு கண்டுக்கபோறா?

இத்த மாதிரி ஒரு அம்மணி எழுத சொன்னதுகொசரம் நானும் ரோசிச்சு ரோசிச்சு பார்த்தேன்.



இத எழுத தகுதி கீதா(தில்லையகத்து கீதா மேடம் இல்ல நைனா) இல்லையான்னு.

பெரிய பேஜாராப் போச்சுப்போ. இப்படியே ரோசிசுக்கிட்டு போய்கிட்டே இருந்தனா எதிதாப்புல பார்த்தா ஒரு பாப்பா வருது.

பின்னால பின்னால பார்த்துக்குட்டு போகுது. எங்கேயோ பார்த்த மாதிரிகீதா யாராக்கும்னு பார்த்தா, அட ஜோஷ்னா.

நம்மளாண்ட பத்தாம் கிளாஸ் படிச்ச பொண்ணு நைனா. சரின்னு கொஞ்சம் தூரம் போனா வரிசையா ஏழு எட்டு சுடிதார்.

பார்த்தோன்ன அவ்வளோ குஷி! (லேய் நீங்க நெனைக்கிற மாறி இல்ல மக்கா) அம்மாம் பேரும் ஏம் புள்ளைங்க!  அல்லாரும் காலேஜ் சேர்ந்துட்டாங்க. அம்மாம் திருப்தி எனக்கு.

அப்போத்தான் எனக்கு  இந்த பதிவ எழுத கொஞ்சம் தெகிரியம் வந்தது. அப்புறம் நியாயமான கேள்வி ஒன்னும் வந்தது.

இப்படி அல்லாரும் பெண்களை மதிக்கிறேன்னு பதிவு மட்டும் போட்டாப் போதுமா?

என்னப் பொறுத்த வரை ஆண் பெண் என்று பிரித்து பார்ப்பதே தப்பு. அல்லாரும் மன்சங்கதானே. அப்புறம் இன்னாத்துக்கு இந்தப் பதிவு. ஆமா நான் மதிக்கிறேன்னு நான் சொன்னா என்னமோ நான் உயரத்திலேயும் அவுக பொசுக்குன்னு கீழேயும் இருக்கமாரி தோணுதே இது எனக்கு மட்டுமா இல்ல உங்கள்ள சிலபேருக்குமா?

மன்சங்கள நல்வங்களும் இருக்காங்க. அவுக எவ்வளவு நல்லவுகன்னு  நாம தெரிஞ்சுக்கிறதுக்கோசரம் கெட்டவுகளும் இருக்காக.

நல்லவுக சிலர் லேடீசாகவும் இருக்காக.

பொதுவா சொல்றதுல்ல பல சிக்கல் எனக்கு இருக்கு.

முதல்ல இத்தாலியில்  இருந்து வந்த அம்மணி ஒன்னு நினைவுக்கு வருது.

ரெண்டு லெட்சம் உசுரு போயிருச்சே. நான் எப்படி சொல்வேன் பெண்களை மதிக்கிறேன்னு.

தேவதாசி முறைய ஒழிச்ச முத்துலெட்சுமி அம்மா, ஒரே கவிதையில அல்லா பள்ளிகூடத்திற்கும் மாற்றம் கொடுத்த கவிஞர் வெண்ணிலா என  அல்லாரும் நினைவுல இருக்காகதான். அவுக மேல எனக்கு அம்மாம் மரியாத. அதுக்குன்னு இத்தாலி ஆத்தா வந்து நின்னுச்சுன்னா?

சுளுவா சொல்றேன் நா அல்லாரையும் மதிக்கிறேன். இதுல போய் பெண்களை மதிக்கிரீயா இல்லையான்னு சொக்காய புடிச்சி கேட்டா நியாயமா பாஸ்?

இப்படியெல்லாம் பதிவு போடற நெலமயில நாம இருக்கோன்றதுதான் பேஜாரே.

யப்பா நான் கொஞ்சம் முன்னாலகீறேன் கொஞ்சம் வெரசா வாங்க.

நொந்தவனத்தில்
மது 

31 comments:

  1. என்னப் பொறுத்த வரை ஆண் பெண் என்று பிரித்து பார்ப்பதே தப்பு. அல்லாரும் மன்சங்கதானே. ஸூப்பர் தோழரே,,,,
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்

      Delete
  2. அதானே... வருசத்துல ஒருநா மதிக்கிறேன்னு மாஞ்சு மாஞ்சு பதிவெழுதுனாப் போதுமா... மத்த நாளெல்லாம்...
    எல்லா நாளும் ஆணும் பெண்ணும் சமமென நினைப்போம்.... அருமை சார்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பரிவை ஜி

      Delete
  3. அட கடவுளே நெஞ்சில கல்லைத் தூக்கி போட்டது போல இருந்தது தலைப்பு. ம்..ம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ .. நலம்தானே

      Delete
  4. என்ன நைனா பதிவு ஜோராகீது பெண்களை மதிக்கிறேன்னு சொல்லிவிட்டு மிதிக்கிறதா அதெல்லாம் அந்த காலம் நைனா பெண்களை நாம மதிக்கலைன்னா அவங்க நமமளை தூக்கி போட்டு மிதிச்சுடுவாங்க நைனா

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தோழர்.

      Delete
  5. அதானே? எதுக்கு மதிக்கணும்? பெரியார் சொன்னமாதிரி, “நம்மகிட்ட மத்தவுங்க எப்படி நடந்துக்கணும்னு நாம நெனைக்கிறமோ, அதுமாதிரி நாம அடுத்தவங்க கிட்ட நடந்துகிட்டா அதுபோதும்“ல? இர்ந்தாலும் மாமே..டபால்னு உன் பாட்ல லாங்வேஜ மாத்திக்கினியா? ஆர்ரா இத்து நம்ம பேட்டையில புத்ச்சா கீதேனு பாத்துக்கினே வந்து... அட நம்ப மதுவா இது..ன்னு..படா பேஜாரா பூட்ச்சிபா..அக்கா..ங்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா கலக்குறீங்க

      Delete
  6. ரொம்ப நாளிக்கி அப்பறமாங்காட்டியும் வந்துனுகீறியா.. மறந்துட்டேம்பா.. இந்தா புட்சுக்கோ த.ம.2 (எங்க தங்காச்சி சொன்னதும்படி ஜோரா எளுதிகினே சாரே! ரொம்ப டாங்ஸ்பா)

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா

      Delete
  7. //என்னப் பொறுத்த வரை ஆண் பெண் என்று பிரித்து பார்ப்பதே தப்பு. அல்லாரும் மன்சங்கதானே.//
    //சுளுவா சொல்றேன் நா அல்லாரையும் மதிக்கிறேன்.//
    ஆகா அண்ணா!! எங்கேயோப் போய்ட்டீங்க! :)

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் இல்லாமல் உலகு இல்லை .. தாயாக தோழியாக சகோதரியாக இன்னும் எல்லாமாக இருப்பவள் அவளே.
      இருப்பினும் என்னை மிகுத்த சுய பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பின்னர் எழுதிய பதிவு இது. மதிக்கிறேன் மாண்புற நடக்கும் பெண்களை.
      அவ்வளவே ..
      இது மேலும் பால் வேறுபாட்டை ஏற்படுத்தும் ஒரு தலைப்பாக வேறு தெரிகிறது.
      எனக்கென்னவோ ஆண்களின் மரியாதை ஏற்பு இதெல்லாம் பெண்களுக்கு தேவையில்லை அதுகுறித்து அவர்கள் கவலைப்படவும் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
      வலிந்து சென்று என்னை மதிங்க மதிங்க என்று சொல்வதால் என்ன பயன். அது அணிச்சயாகவே வருமே.

      Delete
    2. உண்மைதான், எனக்கும் இந்த எண்ணம் வரும் அண்ணா, சுவாசிப்பதுபோல் அனைவரையும் சமமாய் மதித்தலும் இயல்பானதாய் இருக்கவேண்டும் என்று. ஆனாலும் நீங்கள் சொல்வது போல் பெரியோர் ஒரு சிறு வட்டத்தில் அடங்கிவிடுவர் அண்ணா. உங்களைப் போன்றோர் எத்தனை பேர் இருக்கிறார்கள்? பெண்களை சரிசமமாக மதித்து வாழ வேண்டும் என்று தெரியாத, உணராத, மதிக்காவிட்டாலும் பரவாயில்லை மிதிக்கும் சிறியோர் இருக்கும்வரை சொல்லவேண்டியிருக்கிறதே அண்ணா..
      பல இடங்களில் கணவர் சரிசமமாக நடத்தினாலும் மருமகளாய் நசுக்கப்படும் பெண்மையும், சில இடங்களில் கணவரும் மிதிக்கும் பெண்மையும், உயர் அதிகாரியால் மிதிக்கப்படும் பெண்மையும் இருக்கும்வரை அம்மியை அடிக்கத்தான் வேண்டும் :)
      அனைவரையும் மதிக்கும் குணம் அனிச்சையாக வராத அ-மனிதரை அடித்து உணர வைக்க வேண்டும்தானே?

      Delete
  8. எல்லோரையும் மதிக்கின்றேன் என்று கூறும்போது அதில் அனைத்தும் அடங்கிவிடுகிறது. ஆதலால் அதிகம் யோசிக்கவேண்டியதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்

      Delete
  9. மது நண்பரே! எங்களையும் உங்க லிஸ்டுல சேர்த்துக்கங்க...... அடடா நம்ம பேரு சவுண்டா இருக்கே ஏதோ வெவகாரமான்னு பாத்தா (னீங்க என்னடானா தில்லை அகத்து கீதா இல்லைனு சொல்லிட்டீங்களே) நல்லா சொன்னீங்க நீங்க....அதான் கடைசீல சொன்னீங்க பாருங்க...அதாங்க சுளுவா சொல்றேன் நா அல்லாரையும் மதிக்கிறேன். இதுல போய் பெண்களை மதிக்கிரீயா இல்லையான்னு சொக்காய புடிச்சி கேட்டா நியாயமா பாஸ்?

    இப்படியெல்லாம் பதிவு போடற நெலமயில நாம இருக்கோன்றதுதான் பேஜாரே.// இதுதாங்க... நாங்களும் அப்பால ஒரு பதிவு போடணும் போடணும்னு 3 நாளா தவிச்சுக்கிட்டுருக்கோம்.....இதா இத்த மாதிரிதான்....நாங்களும் சேந்துக்கறோம் இன்னிக்கு அப்பால ஒரு பதிவ போட்டு......கை கொடுங்க....அட சும்மா இல்லைங்க....கீழ விழுந்துப்புட்டோம்...நல்லாகீதுங்க...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர் ..

      Delete
  10. ரெண்டு பேரும் ஒண்ணுதாங்க அதாங்க ஆணும், பெண்ணும்...சொன்னீங்க பாருங்க .அதுக்குத்தான் ஷொட்டு....

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்

      Delete
  11. நல்ல பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.

      Delete
  12. சென்னைக்கு எப்போது சென்று வந்தீர்கள்...?

    ReplyDelete
    Replies
    1. நன்றி பதிவு

      Delete
  13. ரூட்டு தல .. சோக்காகீது பதிவு ...

    ReplyDelete
    Replies
    1. இன்னது ரூட்டுத் தலையா அவ்வவ்வ்வ்வ் .
      நன்றி தோழர்

      Delete
  14. எனக்கு ஒருசிலநேரங்களில் எப்போதாவது மூளை ஒருவிதமாக யோசிக்கும் . பூமி என்ற கிரகத்தில் , உயிரினங்களின் மணிமுடியாக விளங்குகிறான் . ஆனால் அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வகையாக உலகில் வாழும் மற்ற உயிர்களை தன் தேவைக்காக நாசம் செய்துகொண்டே இருக்கிறான் . இதுபோதாதென்று சக மனிதனையும் நாட்டின் பெயராலும் , மதத்தின் பெயராலும் , இனத்தின் பெயராலும் பிரிவினையை உண்டாக்கி அடித்துக்கொள்கிறான் . இதுவும் போதாதென தன் சக பிறவியான பெண்ணானவளையும் தனக்குக்கீழே அடக்கி ஆள நினைக்கிறான் . அவர்களின் விடுதலைக்கென ஒரேஒரு தினத்தை வைத்து மற்ற அனைத்து நாட்களும் அவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துகிறான் . சோ சேட் .... நா என்ன எழுதறன்னு எனக்கே புரியல ,....

    தம+

    ReplyDelete
    Replies
    1. நன்றி மெக்

      Delete
  15. மதிக்கவும் வேணாம் ,மிதிக்கவும் வேணாம் ..தோழமையாய் பழகினாலே போதும் .
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்

      Delete

தங்கள் வருகை எனது உவகை...

Labels

12 Years a Slave (2013) 2001: எ ஸ்பேஸ் ஆடிசி A Walk Among the Tombstones Amr Waked Avengers Age of Ultron avms kaarthik bairava blogging tips buds to blossoms c.c.e Fast and Furious 8 honour killings innovations in Marketing into the storm Iyothee Thass jci jci pudukkottai central kalvi kannaki kovil keezhadi khan's academy kochadaiyaan review Lucy(2014) spoiler madurai Min-sik Choi Morgan Freeman oblivion Rafeeq Friend robin williams rouge one 2016 sasikala for cm Scarlett Johansson shajakaan spoiler ssa T.V.18 yaathum oore episode 12 Tamil Short Story tesla motors thamizh thirai vimarsanm udayakkumar viswaroopam movie want to write ? www.ted.com X Standard Tamil Memory Songs Tamil Nadu X-Men: Days of Future Past அ பெ கா பண்பாட்டு இயக்கம் அ.பெ.கா அசத்தல் அரசுப் பள்ளி அச்சம் என்பது மடமையடா அப்பா அமெரிக்கா அம்மா அயோத்தி தாசர் அரசு ஊழியர்களின் குரல் அரசுப் பள்ளிகள் அரிமளம் பள்ளி அரைவல் அலைகள் அலையும் குரல்கள் அவென்ஜெர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான் அறிவிப்புகள் அனுபவம் அன்னவாசல் கே. ரெங்கசாமி ஆஃபரா ஆங்கில கேட்டல் பயிற்சி ஆங்கிலப் படம் ஆங்கிலப் பயிற்சி ஆங்கிலம் ஆசிரியர் ஆசிரியர் தினம் ஆசை தொடர் பதிவு ஆண்டனி ஆதிச்சநல்லூர் இசை இடைநிறுத்தம் இடைநிற்றல் இந்திய தேசிய ராணுவம் இந்தியா வரங்களும் சாபங்களும் இமான் இளையராஜா இறுதிச் சுற்று இனப்படுகொலை இன் டு தி ஸ்டார்ம் இன்னுமொரு சிறுகதை. புன்னகை இஸ்ரேல் ஈர்ப்பலைகள் ஈழம் ஈழம் சமுகம் உயிர்மை உலகின் பொருளாதாரக் கொள்கை உலோக உருக்கு ஆலை எக்ஸ்.மென் அபோகிளிப்ஸ் எட்ஜ் ஆப் டுமாரா எல்காம் எஸ்.எம்.எஸ். கொள்ளை ஏற்பாடுகள் ஐஸ் ஸ்டுபா ஒரு கோப்பை மனிதம் ஒரு முகநூல் பகிர்வு ஒலிம்பிக் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் ஓவியர்கள் கடிதம் கட்செவி பகிர்வு ஒன்று கட்டிடப் பொறியியல் கட்டுரைப் போட்டி கண்ணகி கோவில் கதிர்வேல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் கத்தி கயல் கருத்தாளிகள் கலாச்சராம் கலிலியோ அறிவியல் மையம். கல்வி கல்வித்துறை விழா கல்வியாண்டு கவண் கவிஞர் தங்கம் மூர்த்தி கவிஞர் நீலா கவிதை கவிதை அறிமுகம் கவிதை பகிர்வு கவிதைகள் கவிதைத் தொகுப்பு கவுரவக் கொலைகள் கற்க கசடற கற்பித்தல் யுக்திகள் கனவில் வந்த காந்தி கனிமொழி காக்கா முட்டை காணொளிகள் சில காதர் காந்தி திரைப்படம் காப்டன் அப்பாஸ் அலி காப்புரிமை கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி கார்த்திக் கார்த்திக் கார்த்திக் காவியத் தலைவன் காற்றுவெளியிடை கிரமத்து குழந்தைகள் கிரேஸ் பிரதிபா கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கிஷோர் டேவிட் ராஜ ராஜன் கீழடி குருநாதசுந்தரம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் தினம் குறும்படம் கேவல் நதி கொசுவத்தி கொசுவர்த்தி கொஞ்சம் புதிய அறிவியல் கொஞ்சம் வெப் கொடி காத்த குமரன் கொம்பன் திரை விமர்சனம் கோச்சடையான் கோடை நகர்ந்த கதை கோபிநாத் கோவை ஆவி க்விஸ் சக்கரக்காலன் சக்தி சவுந்தர் ராஜன் சந்தானம் சந்திப்பு சந்திரமோகன் வெற்றிவேல் சந்தைப்படுத்துதல் சமுகம் சமுத்திரக்கனி சமூகம் சர்தார் வல்லபாய் பட்டேல் சித்தன்னவாசல் ஓவியங்கள் சித்தன்னாவாசல் இலக்கிய சந்திப்பு சிவகார்த்திகேயன் சிறுகதை சினிமா சீனு சுகு சுயபுராணம் சுரபி சுரேந்தர் சூப்பர்மென் வெர்சஸ் பாட்மேன் செந்தூரன் பாலிடெக்னிக் செந்தூரன் பாலியின் தொடர் சாதனை செல்பி செவன்த் சென்ஸ் செவென்த் சென்ஸ் சொன்னாங்க சோ ஸ்வீட் வலைப்பூ ஞானாலயா ஆவணப் படம் டாக்டர் ஸ்ட்ரேஞ் டான் ஆப் ஜஸ்டிஸ் டி.எம்.என்.டி Teenage Mutant Ninja Turtles (2014) டினா அரீனா டெல்லி சம்பவம் ட்ரான்ஸ்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்ஸ்டின்ஷன் தங்கமகன் தஞ்சை தபால்காரர் தமிழ் தமிழ் ஹிந்து தமிழ்ச் செம்மல் விருது தயான் சந்த் தர்மதுரை தலைமைப் பண்பு தலைவாரி பூச்சூடி தாயம்மாள் தாய்மொழி தாரை தப்பட்டை தி இத்தாலியன் ஜாப் தி பிரஸ்டீஜ் தி.ஆலை பள்ளி தியாக வரலாறு திருச்சி புகைப்பட பொருட்கள் கண்காட்சி. நிகழ்வுகள் திரை இசை திரை வி மர்சனம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் தீபிகா படுகோன் தீரன் சின்னமலை துவரங்குறிச்சி தேவதைகளால் தேடப்படுபவன் தேறி தொடர்பதிவு தொலைகாட்சி 18 தொழில் நுட்பம் தொழில் முனைவு தோழர் ரபீக் பதிவு நகை நடாஷா ரைட் நடிகர் சங்கத் தேர்தல் நத்தார் தின வாழ்த்துக்கள் நந்தன் ஸ்ரீதரன் நமக்கு நாமே திட்டம் நம்பிக்கை மனிதர்கள். நலம் நன்றிகள் நாடகக் கலைஞர்கள் நாயகர்கள் நாளைய மனிதர்களின் நேற்று நான் ஒரு குழந்தை நிகழ்வு நிகழ்வுகள் நிகில் நிறுவனம் நிகில் பயிற்சி நிலைப்பாடுகள் நிழல் பதியம் நீட் பார் ஸ்பீட் நீயா நானா நுட்பம் நூர் டீச்சர் நூல் அறிமுகம் நூல் விமர்சனம் நேர நிர்வாக தளம் நேர நிர்வாகம் நேர மேலாண்மை பக்தி படிக்க வேண்டாத பதிவுகள் பட்லர் பணமதிப்பு நீக்கம் பணிநிறைவு பதிவர் சந்திப்பு 2014 பதிவர் சந்திப்பு 2015 பதிவர் சந்திப்பு 2015 ஆல்பம் பதிவர் திருவிழா 2015 பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் பயிற்சிகள் பயிற்சித்துறை பலூஸ்சிஸ்தான் பள்ளி பாகுபலி பாட்டன் காட்டைத் தேடி பாபநாசம் பாரத் ஸ்டேஜ் 4 பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 Fast and Furious 7 பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 8 பாஸ்ட் எய்ட் பிட் டோரறேன்ட் பிரபு சாலோமோன் பிராங்கின் படங்கள் பிரார்த்தனை பிரித்தாளுதல் பிரியங்கா பிரேமா தக்ஷிணாமூர்த்தி பிரேம்சந்த் பு.கோ.சரவணன் புகைப்படத் தொகுப்பு புதியவன் புதுகை குளம் மீட்பு புதுகை செல்வா புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகம். புதுகையின் கல்வி முகங்கள் புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட பாறை ஓவியங்கள் புள்ளிகள் புறம்போக்கு பெரியார் பெற்றோர் பேப்பர் ஒன்று பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி பைரவா பொது பொற்பனைக்கோட்டை போட்டிகள் ப்ளாகர் டிப்ஸ் மணிகண்டன் ஆறுமுகம் மதுரை மதுரை வரலாறு மரபு வழி நடை மராத்திய மொழிப் படங்கள் மலர்தரு மனிதர்கள் மாட் மாக்ஸ் ஃபியூரி ரோட் Mad_Max:_Fury_Road மாணவர் போராட்டம் மாண்பு மிகு மகளிர் - அறிவியல் சுடர்கள் மாண்புமிகு மகளிர் மாதொரு பாகன் மாத்யு ப்ளோரிஸ் மாமழை நினைவுகள் மார்க் அண்டோனி மாறாப்புன்னகை மாற்றத்தின் முகங்கள் மியான்மர் மிருதன் மிஷன் இம்பாசிபிள் 5 Mission Imposible Rogue Nation முகநூல் முகநூல் நிலைத்தகவல்கள் முகநூல் பகிர்வு முத்துக்கிருஷ்ணன் முத்துநிலவன் முனைவர் மு பிரபு முனைவர். அருள்முருகன் மூன்று புத்தகங்கள் வெளியீடும் குடும்ப விழாவும் மெட்ராஸ் மெமரி கார்ட் மேன்மை இதழ் அறிமுகம் மொழி மொழித்திறன் மோசன் காப்ச்சர் யாதும் ஊரே யாழியின் இரண்டு தொகுப்புகள் ரபீக் ரபீக் பகிர்வு ரம்ஜான் ரவீந்திரன் ரஜனி ரஷ் ரஹ்மான் ராஜ கோபால தொண்டைமான் ராஜ சுந்தர்ராஜன் ராஜசுந்தர்ராஜன் ராஜா சுந்தர்ராஜன் ராஜேஷ் வைத்யா ரிச்சர்ட் அட்டன்பரோ ரியோ ஒலிம்பிக் ருத்ரையா ரோக் ஒன் movie review ரோஹித் வேமுலா லாரீனா லூசி லோகன் 2017 வகுப்பறை அனுபவங்கள் வகை ஒன்று வண்ணதாசன் வலைச்சரம் வலைப்பதிவர் மாநாடு வலைப்பூ நுட்பம் வள ஆசிரியர்கள் வாசிப்பு வாசிப்பு அனுபவப்பகிர்வு வாழ்த்துக்கள் வாழ்வியல் திறன்கள் பயிற்சி. வாழ்வியல் திறன்கள் பயிற்சி. தன்னை அறிதல் பயிற்சி வானவில் விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் விடைபெறல் விதைக்கலாம் வித்டிராயல் சிம்ப்டம் விப்லாஷ் விருது விவசாயம் விஜய் டீ.வி விஜூ கனைக்ட் விஷாலின் விஸ்வரூபம் வீணை இசை வீதி கூட்டம் வீதிக் கூட்டம் வீதிக்கூட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரமுரசு சுப்பிரமணிய சிவா வெயிலில் நனைந்த மழை வெர்சடைல் ப்ளாகர் விருது வெள்ளைப் புலி வெற்றி இலக்கியம் வைகறை வைகறையின் ஜெய் நல நிதி ஜல்லிக்கட்டு ஜாக்கி சேகர் ஜாதவ் ஜூராசிக் வோர்ல்ட் ஜெயப் பிரபு ஜெர்மனி ஜே.சி. பயிற்சி ஜேசி இயக்கம் ஜோக்கர் ஷபானா பாஸிஜ் ஷாமிலா தலுவத் ஷாருக்கான் ஷான் கருப்புசாமி ஷாஜகான் ஸ்டான்லி குப்ரிக் ஸ்பாய்லர் ஸ்பிலிட் ஸ்ரீதர் சுப்பிரமணியன் ஹாக்ஸா ரிட்ஜ் ஹாண்ட்ஸ் ஆப் ஸ்டீல் ஹாலிவுட் ஹெர்குலிஸ்