நல்லாசிரியர் டாக்டர் ஆர்.கே.எஸ் பணிநிறைவு பாராட்டு

Dr. R.Kanagasabapathi

ஸ்டாம்ப் ஒட்டின சம்பளப் பட்டியலில் கையெழுத்தைப் போட்டோமா சம்பளத்தை எடுத்து பையில்  போட்டோமா என்று இருப்பதுதான் அரசு ஆசிரியரின் வேலை என்று சிலர் பெருமையாக சொல்லலாம். 


அவர்கள் செய்கிற அதிகபட்ச வேலையே இதுவாகத்தான் இருக்கும். இப்படி சிலர் இருந்தாலும் பலர் தனது பணியை நேசித்து செய்வது உங்களுக்குத் தெரியும். 

இப்படி  தனது பணிக்காலம் முழுவதுமே புத்துணர்வோடு பணியாற்றி புதிதாக துறையில் சேர்ந்தவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் இருந்தவர் முனைவர்.ஆர்.கனக சபாபதி. 

ஆசிரியர் பதவி இன்று பலருக்கும் அடைய முடியாக்கனவாக இருக்கிற இந்த நாட்களில் அவர் அன்று (எண்பதுகளில்) எனக்கு சென்னையில்தான் பணி வேண்டும் என்று நிபந்தனை விதித்து பணியில் சேர்ந்தவர்! 

நான் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயில்கையில் டாக்டர்.ஆர்.கே.எஸ் எனது ஆசிரியராக இருந்தார். மாணவர்களுடன் அவரது திருமணத்திற்கு சென்றுவந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. 

திருமண நிகழ்வை சி.சி.டி.வி மூலம் அன்றே மண்டபம் முழுதும் ஒளிபரப்பினார். அன்றைய நாட்களில் அது ஒரு புதுமை. எதைச் செய்தாலும் அதை தனது பாணியில் செய்து முத்திரை பதிப்பது இவரது பாணி. 


இவர் தான் பணியாற்றிய பள்ளியில் தமிழகத்தில் முதன் முதலாக கணிப்பொறி படிப்பினை மேல்நிலை வகுப்பில் அறிமுகம் செய்த பொழுது செங்கொடித் தோழர்கள் பெரும்திரளாக பேரணி நடத்தி கணிபொறி கல்விக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். 

எதிர்ப்பினைக் கடந்து கணிப்பொறிக் கல்வியை மாணவர்களுக்கு அளித்ததில் ஆர்.கே.எஸ்.ஸின் பங்கு மகத்தானது.

இந்தியாவில் நானோ டெக் என்கிற பதம் அறியப்படாமல் இருந்த காலகட்டத்தில் நானோ டெக்கில் முனைவர் பட்டம் பெற்றவர்! 

கால ஓட்டத்தில் எனது மூன்றாவது அரசுப் பணியில் மீண்டும் ஆர்.கே.எஸ் அவர்களை நான் சந்தித்தேன்! அப்போது அவர் ஆர்.எம்.எஸ்.ஏ திட்டத்தின் மாவட்டத்தின் கூடுதல் திட்டப் பொறுப்பாளராக இருந்தார். 

ஆண்டுதோறும் நிதித்திட்டமிடல் குழுவில்  எனக்கு பணியளித்தார். இது சராசரிகளின் பார்வையில் பைசாவிற்கு பிரோயோசனம் இல்லாத பணி. ஆனால் மிகவும் பொறுப்பான பீடுமிகு பணி என்பதை இக்குழுவில் இருந்த அனைவரும் அறிவார்கள். 

குறிப்பாக திருச்சி ஆக்ஸ்போர்ட் கல்லூரியில் நிதித் திட்டமிடல் பணிமனையின் பொழுது சுமார் நூறு ஆசிரியர்கள் நடுநிசி கடந்தும் நிதித் திட்டமிடல் பணியில் இருந்ததை வியந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தேன். 

அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இதுபோன்ற அற்பணிப்புகள் வெளியில் பேசப்படுவதே இல்லை. 

அந்த பணிமனையில் புதுகை மாவட்டம் மட்டும்தான் ரிலாக்ஸ்ட்டாக இருந்தது. காரணம் பணிமனைக்கு ஒருவாரம் முன்னதாகவே முழு நிதிஅறிக்கையும் தயார் செய்து வைத்திருந்தோம். இந்த முன்னேற்பாடு முனைவர் ஆர்.கே.எஸ்ஸின் தனித்துவம்! 

இன்னொரு முறை ஆசிரியர்களுக்குப் பயிற்சி தர ஒரு கல்லூரியை அணுகி ஏற்பாடுகள் செய்து முடித்துவிட்டார். முக்கியப் பயிற்சியாளர்கள் அனைவரும் வருவதை உறுதி செய்தாகிவிட்டது. 

கல்லூரியில் இருந்து புறப்பட்டு ஒரு அரைக் கிமி வந்திருப்போம். சென்னையில் இருந்து போன். பயிற்சியைச் தள்ளிவையுங்கள் என்று. நான் பயிற்சி பணால் என்றுதான் நினைத்தேன். 

முனைவர் காரை ஓரம் கட்டி நிறுத்தினார். மெல்ல இயக்குனரிடம் பேசி அறிவித்த தேதியிலேயே பயிற்சியை நடத்த அனுமதியை வாங்கிவிட்டார்! ஆர்.கே.எஸ். குறித்து உயர் அதிகாரிகளிடம் ஒரு நன்மதிப்பு இருந்ததை நான் உணர்ந்தேன். 

பயிற்சியில் பேராசிரியர்களை (முனைவர்.பாலகிருஷ்ணன், பேரா.ஜம்புநாதன்) போன்ற முதுகண்களை பயன்படுத்தியதால் மாலை ஐந்தரை மணிக்குக் கூட ஆசிரியர்கள் புத்துணர்வோடு இருந்ததைப் பார்க்க முடிந்தது. இது ஆர்.கே.எஸ் அவர்களின் தலைமைப் பொறுப்பிற்கு கிடைத்த வெற்றி.

அந்த ஆண்டு கடைசியாக நடந்த தமிழ்ப் பயிற்சி முகாமில் பல தமிழாசிரியர்கள் வலைப்பூ ஆரம்பிக்க தளமமைத்துத் தந்தவர் ஆர்கேஎஸ்.(என்ன பாண்டியன், கோபிஜி சரியா). அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் முத்துநிலவன். நிலவன் அண்ணாவிற்கு  உறுதுணையாக இருந்த திருப்பதி அய்யா, மகாசுந்தர், பெருநாழி குருநாத சுந்தரம், முனைவர். துரைக்குமரன்  மற்றும் கோபி என்கிற பெரும் குழுவை நான் அறிந்ததும் இதனால்தான். 

மொத்தம் பணிரெண்டு மாவட்ட முதல் மதிப்பெண் மாணவர்களை உருவாக்கியவர். இன்று அகிலத்தின் ஒவ்வொரு நாட்டிலும் இவர் பெயர் சொல்ல இவரது மாணவர்கள் உண்டு! வேறென்ன வேண்டும் ஒரு ஆசிரியருக்கு. 

டிப்ளமசி என்பதை இவரிடம்தான்  பயிலவேண்டும், அதிகாரம்  வந்ததும் சிலர் ஆளே மாறிப்போவார்கள். இவர் அதில் விதிவிலக்கு. தன்னிடம் பணிபுரியும் கடைநிலை ஊழியரைக் கூட மரியாதையாக நடத்துவதைப் பார்த்திருக்கிறேன்.

தன்னுடைய விருப்பு வெறுப்புகளை ஒருபோதும் வெளியில் காட்டிக்கொண்டதே இல்லை என்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.

பயிற்சி ஒன்றில் ஒரு ஆசிரியை நான் சைவம் எனக்குத் தனி உணவுத் தட்டு வேண்டும் என்று கோர ஒரு சில்வர் பாயில் பேப்பரை வருவித்துத் தந்தார்!

இன்று காலை அவரது பணிநிறைவுப் பாராட்டுவிழா. சில்வர் ஹால் நிரம்பிவழிய, புதுகையின் கல்வி அதிகாரிகள், கல்வியாளர்கள், பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் அவரது முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் என ஒரு பெரும் திரளை காண முடிந்தது.

நெஞ்சில் தங்கிவிட்ட நெகிழ்வான நிகழ்வு.

பதாகையில் கடைசியில் எழுதியிருந்தவரிகள்தான்  எனக்கு ஆறுதலாக இருந்தன.

The best is yet to come! 

நாங்கள் காத்திருக்கிறோம் முனைவரே.

Comments

 1. மனநிறைவான பதிவு. அய்யாவை வணங்கி வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க ...
   வருகைக்கு நன்றி

   Delete
 2. எமது வாழ்த்துகளும்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 3. அவர் யாரென்று நான் அறியாவிடினும், நல்லாசிரியர் டாக்டர் ஆர்.கே.எஸ் அவர்கள் பற்றிய பல நல்ல தகவல்களை உங்கள் பதிவின் வழியே அறிந்து கொண்டேன். இன்றுடன் அவரது அரசுப்பணி நிறைவு அடைந்திட்டாலும், இன்னும் அவர் ஆற்ற வேண்டிய சமூகப் பணிகளுக்கு ஓய்வில்லை என்று சொல்லி எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா

   Delete
 4. தளராத மனஉறுதியுடன் துணிச்சல்... படித்த மாணவர்களுக்கும் இதை விட சந்தோசம் ஏது...?

  வணக்கங்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா

   Delete
 5. ஓ இவ்ளோ செய்துள்ளாரா ....நல்ல ஆசிரியர்க்கு கண்டனம் தான் கிடைக்கும் போல....இதுவரை நான் கேட்டதை வைத்து சொல்கின்றேன்....உங்களைப்போன்ற விழுதுகளை உருவாக்கிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. அவரது செய்நேர்த்தி எனக்கு வரவே வராது என்பதே உண்மை..
   இன்னும் நிறய சாதனைகளை செய்திருக்கிறார்
   நம்ம ஆட்கள் அப்படித்தான்.

   Delete
 6. அவர் எங்களுக்கு அறிமுகம் இல்லை. இருப்பினும் தங்களது பதிவு மூலமாக அவர் எங்களுக்கு மிகவும் அணுக்கமாகிவிட்டார். தங்களது எழுத்தாளது உணர்வுபூர்வமாக அவருக்குரிய மரியாதையைச் செலுத்தியதை அறியமுடிந்தது. பாராட்டுகள்.
  நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
  http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி முனைவரே

   Delete
 7. தங்கள் பதிவின் மூலம் ஆசிரியரப் பற்றி அறிய முடிந்தது. மிக சிறப்பாக பணியாற்றி நிறைவு செய்யும் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. நன்றி அய்யா

   Delete
 8. நல்லாசிரியர்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் அவர் சாதனைகள் சமன் செய்ய முடியாதது ..
   நன்றி சகோ

   Delete
 9. ஆசிரியப்பணியின் சிறப்புக்குக்காரணமே இவர் போன்றார்தான்.வாழ்த்துகிறேன்

  ReplyDelete
  Replies
  1. வருக அய்யா
   தங்கள் வருகை மிக்க மகிழ்வு

   Delete
 10. ஒரு நல்லாசிரியரின் அறிமுகம் தங்களின் மூலமாக! அருமை! இவரைப் போன்றவர்களால் தான் ஆசிரியப் பணியே மிகவும் புனிதமாகக் கருதப்படுகின்றது. நம்மைப் போன்ற ஆசிரியக் குடும்பத்திற்குப் பெருமை சேர்த்ததற்காகவே தலை வணங்குவோம்!

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...