மூன்று திரைப்படங்களும் இரண்டு விழாக்களும் - நிகழ்வுகளின் ஞாயிறுகடந்த ஞாயிறு ஒரு கலவையான அனுபவம் எனக்கு! 

விழா அழைப்புகள் இரண்டு வெகு முக்கியமானவை. ஒன்று நண்பர் மணிகண்டனின் புதுமனை புகுவிழா. மற்றொன்று எனது மதிப்பிற்குரிய மாணவர் ஒருவரின் திருமணம். இரண்டு விழாக்களுக்கும் தவறாது சென்றுவிட திட்டமிட்டு  வைத்திருந்தேன். 

திடீரென நிலவன் அண்ணாத்தே அழைத்து வரும் ஞாயிறு  வீதி அமைப்பின் கூட்டம் நடைபெறும் என்று அழைத்தார். எப்போ நடக்கும் என்று காத்திருந்த தினங்கள் எல்லாம் சென்றபின்னர் ஒரு மூகூர்த்த நாளில் அழைப்பு!


வீதியைப் பொறுத்த வரை இது ஒரு முக்கியமான கூட்டம். அதன் தொடக்கத்தில் இருந்தே  அமைப்பாளர்களுடன் இருந்ததால் ஒரு பிணைப்பு இருந்தது. 

போலித்தனமான புகழ்சிகள் இல்லாமல் தனிநபர் துதிகள் இல்லாமல் இலக்கிய வடிவங்களை அறிந்துகொள்ளவும், நுட்பங்களை அறியவும், ஏற்கனவே உள்ள படைப்பாளர்கள் தங்களை கூர்தீட்டிக்கொள்ளவும், ஆக மொத்தத்தில் எதுமாதிரியும் இல்லாத ஒரு புதுமாதிரியாக வந்த அமைப்பு. 

புதுகையின் மு.க.அ, முனைவர்.அருள் முருகனின் சிந்தனையில் பிறந்தது. அவருக்கு இந்த எண்ணம் தந்தது கூடு (பெருமாள் முருகன் அவர்களின் அமைப்பு). 

நிலவன் போன்ற நிகழ்வுகளை கட்டமைக்கிற நேர்த்தியாக நடத்துகிற கொஞ்சமும் செருக்கில்லா ஆளுமைகள் ஒத்துழைக்க பிறந்தது வீதி அமைப்பு. இரண்டு முறை இந்தக் கூட்டத்தை சுரேஷ் மான்யாவுடன் சேர்ந்து நடத்திய அனுபவமும் எனக்கு உண்டு. 

இந்த சூழலில் முனைவர்.அருள்முருகன் பணிமாற்றத்தில் கோவைக்குச் சென்றுவிட அமைப்பு தொடர்ந்து செயல்பட இந்தமாதக் கூட்டத்தை நடத்துவது எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்ந்தேன். 

அப்போ விழாக்களுக்கு எப்படி செல்வது என்ற குழப்பம் வேறு. விழாக்களை புறந்தள்ளி வீதிக்கு சென்றாக  வேண்டிய கட்டாயம். 

வீதியில் நடந்த நிகழ்வுகளை சகோ கீதா அவர்கள் இங்கே தொகுத்திருக்கிறார்கள்.

என்னை திரை அறிமுகம் செய்யச் சொல்ல 42, பட்லர் மற்றும் கோஸ்ட்ஸ் ஆப் மிசிசிபி படங்களைப் பற்றி பேசி ஹாலிவுட்டில் எப்படி ஒடுக்கப்பட்ட ஆப்ரோ அமெரிக்கர்களின் வாழ்வியலை  படங்களாக எடுக்கும், வெளியாகும் வெற்றிபெறும் சூழல் இருக்கிறது என்பதையும் இங்கே நம்மால் தலித் வாழ்வியலை திரையில் கொண்டுவர முடியாத சூழல் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டேன்.  

நிகழ்வின் இறுதியில் விடைபெற்று அந்த முக்கியமான திருமண விழாவிற்கு சென்றேன். 

எனது மாணவர் மரு.செந்தில்ராஜ் அவர்களின் திருமணம்தான் அது! தற்போது ஹோசூர் துணைஆட்சியராக இருக்கும் அவரைக் காஞ்சிபுரம் துணை ஆட்சியர் கரம்பிடிக்கிறார்!

புதுகையின் பெரும் ஆளுமைகள், பல்வேறு உயர் அதிகாரிகள் நிரம்பிய மண்டபம். முறையாக நிர்வகிக்கப்பட்ட வரிசை என செந்தில் முத்திரை பதித்த திருமணம். 

ஏன் தாமதம் என்று கடிந்து கொள்ளவும் தயங்கவில்லை மருத்துவர் ஒ சாரி இப்போது அவர் துணை ஆட்சியர்.  

விழாவில் இன்னொரு மாணவர் மரு. கார்த்தியை நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்தித்து பேசவும் முடிந்தது மகிழ்வு. 

ஒரு விழாவில் வருகையைப் பதிவு செய்துவிட்டாயிற்று. இன்னொரு விழா விற்கு செல்ல முப்பத்தைந்து கிமி பயணம் செய்யவேண்டும். 

எந்தப் பயணத்திலும் என்னோடு அழைத்து செல்லாத மூத்தவள் நிறையை அழைத்தேன். இரண்டுபேரும் நிறைய பேசிக்கொண்டே பயணித்தோம். மணியின் வீட்டில் ஆஜர். 

அருமையாக உருவாகியிருந்தது வீடு! நிறை நன்கு சுற்றிப் பார்த்து விட்டு சில கிளிக்குகளை செய்தபின்னர் கிளம்பினோம். 

வழியில் பெரும் பாலங்கள் கிடக்க அப்பா அதற்குள் ஒரு படம் எடுத்துகொள்கிறேன் என நிறை கேட்க அங்கே ஒரு கிளிக். 

சரி இன்றைய பொழுதிற்கு இது போதும் என்றால் ஜே.சி தலைவர் அக்பர் அழைத்து இன்றய குடும்ப சந்திப்பிற்கு வாங்க என்றார். போகவிட்டால் நன்றாக இருக்காது என அங்கும் ஆஜர். 

நிறையுடன் பிற்பகலை வீட்டிற்கு வெளியில் கழித்த இந்த ஞாயிறு உண்மையில் நல்ல ஞாயிறு.

பி.கு சிலர் முகூர்த்த நாளில் முப்பது பத்திரிக்கைகள் வைத்துக்கொண்டு விழிப்பதை பார்த்திருக்கிறேன். எனது உறவினர் ஒருவர் இந்தமாதிரி அதிரடி முகூர்த்த நாட்களில் மகிழுந்தை வாடகைக்காவது அமர்திக்கொள்வார்!

நான் அரிதான தருணங்களில்தான் இப்படி நிகழ்வுகளுக்கு செல்வேன்.
ஆனால் விழாக்களை மிஸ் செய்வது ஒரு பெரும்தவறு எனபதையும் உணர்திருக்கிறேன்.

இனிமே இப்படித்தான்னு சொல்ல ஆசைதான், பார்ப்போம் எவ்வளவு தூரம் போகுதுன்னு.  

Comments

 1. திட்டமிட்டு நிறைவான பயணம்... திருப்தி... வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. அருமையான sunday அண்ணா..நன்கு சென்ற நாளின் திருப்தியே தனி :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி

   Delete
 3. நல்ல அனுபவம் தோழரே...
  தமிழ் மணம் 3

  ReplyDelete
 4. மகிழ்ச்சி தரும் பயணம்
  இதுபோன்ற பயணங்கள் தொடரட்டும்
  நன்றி நண்பரே
  தம +1

  ReplyDelete
 5. இவ்வாறான பயணங்கள் தெர்டர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவரே

   Delete
 6. ஒருநாள் நிகழ்ச்சி! என்றாலும் படித்ததில் பெற்றேன் மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. மொழி விளையாட்டு அருமை
   நன்றி அய்யா

   Delete
 7. அண்ணா!
  நேர ஆளுமையை என்னைப் போன்றவர்கள் தங்களிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும். அவஸ்தையைக் கூட அழகியலாக காட்டும் பதிவு

  ReplyDelete
  Replies
  1. நன்றி பாண்டியன்

   Delete
 8. திட்டமிட்டு எல்லா விழாவிலும் கலந்து கொண்ட பாங்கு போற்றத்தக்கது! என்னால் இப்படி கலந்துகொள்ள முடிவது இல்லை!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்வாமிகள்

   Delete
 9. அன்புள்ள அய்யா,

  நிகழ்வுகளின் ஞாயிறு விழா அழைப்புகள் இரண்டில் கலந்து கொண்டதை விரிவாக விளக்கி இருந்தீர்கள். அதிலும் குறிப்பாக மாணவர் ஒருவரின் திருமணத்தில் தாங்கள் கலந்து கொண்டது தங்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சியைத் தந்திருக்கும் என்பதில் அய்யமில்லை. தற்போது அவர் ஹோசூர் துணைஆட்சியராக இருக்கிறார் என்பது தங்களுக்குப் பெருமையல்லவா!

  இந்தப் பயணத்திற்கு முன் சனிக்கிழமை எனது இல்லத்திற்கு-சாதரணமான என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி எனது நலனில் அக்கறை கொண்டு தாங்கள் வந்தது... என்னால் நம்ம முடியவில்லை...மிகுந்த ஆச்சரியத்திற்குள்ளானேன். ஒரு சில மணி நேரம் பாத்துப் பேசிப் பழகியிருக்கிறோம்... அவ்வளவுதான். என்னைப் பார்க்க முயற்சி எடுத்து வருகை புரிந்ததற்கும் தங்களின் அன்பிற்கும் என் நெஞ்சார நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 10. ப்ளான் யுவர் டே...அதிலும் ப்ரியாரிட்டியின் அடிப்படையில்....திட்டமிடல் என்று செய்யும் போது சில நிகழ்வுகளும் அதன் நேரமும் சில சமயம் முரண்டு பிடிக்கும்....

  தாங்கள் அழகாகத் திட்டமிட்டு நல்லதொரு அனுபவத்தை அனுபவதிருக்கின்றீர்கள்...அதில் மிக மிக முக்கியம்.... நிகழ்வுகளை முந்துகின்றது " நிறையுடன்" மனதிற்கு நிறைவான உங்கள் நேரம்.....சரிதானே தோழரே!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர் ...

   Delete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...