காக்கா முட்டை


திரை மணத்தில் எந்த இடத்தில் என்னுடைய ஜுராசிக் பார்க் விமர்சனம் இருக்கிறது என்று பார்பதற்காக சென்றபோது பக்கம் முழுதும் மீண்டும் மீண்டும் ஒரே பதிவு நிரம்பியிருந்தது. அத்துணை   திரை விமர்சனப் பதிவர்கள் அனைவரும் ஆஜராகி எழுதியிருந்தனர்.

அனைவரும் ஒரு படத்தை மட்டுமே எழுதியிருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. 

ஒரே படம் ஒரு நூறு பதிவுகள். காக்கா முட்டை. 


மிகச்சரியாக கடந்த ஆண்டு செப்டம்பர் ஐந்தே வெளியாகிவிட்ட படம் இது. ஆம் முப்பத்தி ஒன்பதாவது டொரோண்டோ சர்வதேச திரைவிழாவில் திரையிடப்பட்ட படம். 

தேசிய குழந்தைகள் பட விருதையும், குழந்தை நட்சத்திர விருதையும் வென்றபடம். 

இவற்றைவிட இது வசூலில் சாதனைபடைத்து வருவது ஒரு ஆரோக்கியமான குறியீடு. 


கடந்த வீதி இலக்கிய கள கூட்டத்தின் பொழுது கவிஞர் சச்சின் மணிகண்டன் யாருன்னு தெரியுமா என்று முத்துநிலவன் அண்ணாத்தேவிடம் கேட்டார். 
யாரு என வினவிய அவரிடம் நீங்க அவரோடு பேசியிருக்கீங்க.
பாண்டியில் வின்ட் குறும்படத்திற்கு த.மு.எ.க.ச விருது பெற்ற அதே மணிகண்டன்தான் என்று சொன்னார் கவிஞர் சச்சின். 

ஆக ஒரு சமூக அக்கறையுள்ள படைப்பு வெளியில் வருவதில் சிவப்பு கூடாரத்திற்கு முக்கியமான பங்கு இருக்கிறது என்பதை அந்த நொடியில் நான் உணர்ந்தேன். 

குப்பத்தில் கல்வி மறுக்கப்பட்ட இரண்டு சிறுவர்களோடு வாழ்ந்துவிட்டு வந்தால் எப்படி இருக்கும்? 

எனக்கு ரொம்பப் பிடித்த காட்சிகள்.

ஆஸ்பெஸ்டாஸ் மீது நிற்கும் குழந்தைகள் விளையாடும் சக்கரமற்ற ஒரு ஸ்கூட்டர். மிகச் சரியாக கோல்டன் ரூலின்படி அமைந்த பிரேம் அது. வாவ் ஷாட்.

அதே கோல்டன் ரூலின்படி நீல நிற பின்னணியில் எரியும் ஒரு மஞ்சள் காமாட்சி விளக்கு. 

மணிகண்டன் ஒளிப்பதிவும். சூப்பர் மணி. 

சிறையில் தன் தாய் இறந்ததை கேட்கும் மகனின் முகபாவங்கள் ஒரு உலகத்தர முத்திரை. 

பதைக்கவைத்த காட்சிகள்

வாகனங்கள் விரையும் சென்னையின் சாலைகளை நீங்கள் எப்போதாவது கடந்தது உண்டா?

சித்திரகுப்தன் ஓலைச்சுவடியை எடுத்து வாசிக்க ஆரம்பித்துவிடுவான். கடந்தோம் என்றால் அது ஒரு ஒலிம்பிக் சாதனை. 

அந்தச் சாலையை இரண்டு காக்கா முட்டைகளும் எப்படி அனாயசமாக கடக்கின்றனர்!

அவர்கள் சாலையைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு பதைப்பு வந்து உட்கார்ந்து கொள்கிறது.

வசனங்கள்
எனக்கு அப்பா வேண்டாம் பீட்சாதான் வேண்டும், திகீர் வசனம் என்றால், அவன் துன்னுட்டு உனக்கு எச்சிலைக் கொடுப்பான் அதை நீ துன்வியா என்ற தன்மான வசனம் என பளீரிடுகின்றன வசனங்கள்.

வசனங்களுக்காகவே இடைவிடாது வெறிகொண்டு கைதட்டல் கேட்டது இந்தப்படத்திற்காக மட்டுமே.

குபீர் சிரிப்புக்கும் காரண்டி!

குப்பத்தின் ஒரு சிறுவன் வெகு சரியாக குறிவைத்து ரயிலில் வரும் பயணியின் செல்லைக் களவாடும் காட்சி, சும்மா உருண்டு பொரண்டு சிரித்தேன்.

நுட்பம்

உண்மை உடனுக்குடன் என்று சொல்லிவிட்டு சிறுவர்களின் செய்தியை ஒளிபரப்பும் ஊடகம் ஒன்று அதே சிறுவர்கள் காமிரா அருகே வரும்பொழுது அவர்களை சுற்றிப் போக சொல்வது. என்ன நுட்பமான காட்சியமைப்பு. (அவர்களுக்கும் பீட்சா கடை மேலாளருக்கும் எந்த வித்யாசமும் இல்லை!)

எனக்கு மிகவும் பிடித்த வெஸ்ட் திரையரங்கில் இந்தப் படத்தை பார்த்தது ஒரு தனி அனுபவம். 

சில படங்களை பற்றி எழுத முடியாது. அவற்றை அனுபவித்தால் மட்டுமே புரியும். இதுவம் அப்படி ஓர் படம். 

எப்படி நிகழ்திருக்கும் இந்தப் படைப்பு? 

யாரும் எழுதத் துணியாத திரைக்கதை. மசாலா சினிமாவில் ஊறிய எந்த ஒரு படைப்பாளியிடமிருந்தும் இப்படி வர சாத்தியமே இல்லை. 

குறும்பட உலகின் அனுபவங்கள், சிவப்பு சிந்தனைக் களம் மணிகண்டனை செதுக்கியிருக்கிறது. 

சத்தியமா சொல்றேன் இந்தத் திரைக்கதை யாருமே எழுத துணியாத ஒன்று. இரண்டு நாட்களில் இருபதுகோடி வசூல் என்று செய்திகள் வருவது ரசிகர்களும் பண்பட்டிருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. 

வசந்தபாலன், ஜனநாதன் வரிசையில் இனி மணிகண்டனும் எனது தமிழ் சினிமா ஆதர்சங்களில் ஒருவர். 

வாழ்த்துகள் மணி.

க்ளோபளைசேசன் குறித்து விவாதிக்கும் விமர்சிக்கும் இந்தப் படைப்பு ஆரம்பிக்கும் பொழுது ஒளிர்ந்த பாக்ஸ் ஸ்டார் ஒரு முரண்நகை!

வெற்றிமாறனுக்கும் தனுசுக்கும் ஒரு அழுத்தமான நன்றியையும் தரவேண்டும் நாம். 

புதுகை செய்தி ஒன்று.

வெஸ்ட் (VEST) தியேட்டர் புதுகையின் அடையாளங்களில் ஒன்று. அது திடீரெனக் காணமல் போனது. பின்னர் ஒரு ஷாப்பிங் மாலாக உருவெடுத்து இன்று மூன்றாவது தளத்தில் ஒரு மினி தியேட்டராக அல்ட்ரா மாடர்ன் அவதாரம் எடுத்திருக்கிறது. தியேட்டர் ஜோராக இருக்கிறது. சரவுண்ட் சவுண்ட் சுற்றி சுற்றி வருவதை நன்கு அனுபவிக்க முடிகிறது. 

பழைய வெஸ்ட் திரையரங்கில் பல ஆண்டுகளாக இடப்புறம் பெஞ்சும் வலப்புறம் திண்ணையும்தான் இருந்தது என்று முனைவர்.ஆர்.கே.எஸ். குறிப்பிட்டார். ஆண்களுக்கு பெஞ்ச். பெண்களுக்கு கீழே திண்ணை. நான் மேட் மாக்ஸ் படத்தைப் பார்க்கும் பொழுது இருபுறமும் சேர்கள் வந்துவிட்டன. இப்போது தியேட்டர் மாடிக்கு மேலேறியுள்ளது.


முகேஷ் அம்பானியோ, யஷ் சோப்ராவோ உங்களை சிறப்பு விருந்தினராக அழைத்து அவர்களின் பிரத்யோக திரையரங்கில் அமரவைத்தால் எப்படி இருக்கும்?

அப்படி ஒரு அனுபவத்தைத் தரும் தியேட்டர்.
நச்சென  ஒரு தியேட்டர் புதுகைக்கு.

காக்கா முட்டை ஒரு வேர்ல்ட் சினிமா மொதல்ல அதை பாருங்க அப்புறம் உங்கள் ஆங்கிலப் படங்களைப் பற்றி பேசுங்கள் என்று சொன்ன முத்துநிலவன் அண்ணாத்தேவிற்கு நன்றிகள்.

Comments

  1. பார்க்கலாம்
    த.ம -2

    ReplyDelete
    Replies
    1. மஸ்ட் வாட்ச் மூவி பாஸ் பாருங்க

      Delete
  2. பார்க்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. பரவலாக அனைவரின் பாராட்டையும் பெற்ற காக்காமுட்டை படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்

    //குப்பத்தில் கல்வி மறுக்கப்பட்ட இரண்டு சிறுவர்களோடு //
    யாரால்? எதனால்?
    உண்மையில் சென்னையில் இப்படி யாரும் இருப்பதாகத் தரியவில்லை . பள்ளியில் சேர்க்க குப்பம் குப்ப்மாக அலைந்தும் பள்ளியில் சேர்வதற்கு மாணவர்கள் இல்லை. சென்னையில் பல மாநகராட்சி பள்ளிகள் தேர்தல் வாக்கு சாவடிகளுக்காக கட்டி வைத்தது போல் மற்ற காலங்களில் காலியாகவே கிடக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அவர்களின் சூழல் அருமையாக விளக்கப் பட்டிருக்கிறதே படத்தில் ...
      எனக்குரிய இடம் எங்கேவில் பேரா. மாடசாமி ஏழ்மை காரணமாக கல்லூரியை விட்டு விலகிய மாணவரை விலக அனுமதித்ததை படிக்கவில்லையா அய்யா...
      வறுமை கொடிது.

      Delete
    2. ஏட்டுக் கல்வி (வாழ்வியல் கல்விக்கு பள்ளிக்கூடம் அவ்வளவாகத் தேவை இல்லை அனுபவம் போதும்,...)கூட பெற முடியாத அளவிற்கு வறுமை ஆட்டிப் படைக்கும் அந்தக் குழந்தைகளுக்கு கல்விபெற உரிமை இல்லையா? நமது அரசு என்ன செய்து கொண்டிருக்கின்றது?

      உங்களைப் போன்று கேரளாவிலும் மலைப்புரம், கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டியும், பள்ளியைத் தொடர முடியாமல் பாதியில் நின்ற குழந்தைகளையும் அவர்கள் வீட்டிற்குச் சென்று பிள்ளை பிடிக்கும் ப்ணியை ஆசிரியர்கள் செய்கின்றார்கள். 100% கல்வி அறிவு(?) என்று சொல்லப்படும் கேரளத்திலும் கூட....பாருங்கள்....

      Delete
  4. அண்ணாத்தே எப்போதும் சரியாகத் தான் சொல்வார்..!

    படத்தை விட உங்கள் விமர்சனம் பிரமாதம்...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்
      இன்னொருமுறை பாருங்கள் தோழர் உங்களுக்கும் பிடிக்கும்
      இந்தப் படமெல்லாம் பார்த்தவுடன் பிடிக்காது ஆனால் பார்க்க பார்க்க பிடிக்கும் !
      நீங்க மொதல்ல இன்னொரு தபா போய் பாருங்க அப்புறம் நான் சொல்வது புரியும்

      Delete
  5. சிறப்பான விமர்சனம்! அவ்வப்போது இப்படி தமிழ்படங்கள் குறித்தும் எழுதலாமே! பார்க்க வேண்டும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தோழர் எனது நண்பர் ஜகன் அடிக்கடி சொல்வார் தரையில் நட தமிழ்ப்படம் பாரு என
      எனக்கென்னவோ செட்டாகவில்லை
      கிரிகெட்டும் சரி தமிழ்படமும் சரி நண்பர்கள் இருந்தால்தான் பார்ப்பேன்.
      ஒரு காலத்தில் கமல் படங்களை கொண்டாடினேன் ஒரே கட்டுரையில் ஒரு உதவி இயக்குனர் எனக்கு வேப்பிலை அடித்து தெளிய வைத்தார்..
      நிறய பேசலாம் தோழர் இது குறித்து ...
      வேறு ஒரு பதிவில் ..

      Delete
    2. சரி வேப்பிலை அடித்தது பற்றித்தான் கொஞ்சம் எங்களுக்கும் சொல்லுங்களேன் தோழரே....

      Delete
  6. விமர்சனம் அருமை
    அவசியம் பார்க்கிறேன் நண்பரே
    நன்றி
    தம+1

    ReplyDelete
    Replies
    1. பார்த்துட்டு எழுதுங்க தோழர்

      Delete
  7. பலரும் பாராட்டும் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை என்ற வருத்தம் எனக்கும் உண்டு. கூடிய விரைவில் படம் பார்த்தப் பின் வருகிறேன்.
    த ம 7

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என்ன சொல்லப் போறீங்கன்னு ஆவலோடு இருக்கிறேன்.
      வருகைக்கு நன்றி

      Delete
  8. அருமையான படம்.....பார்த்தாயிற்று....கேமரா, இயக்கம் இரண்டும் ஒருவரே எனும் போது நாம் மனதில் என்ன விஷுவலைஸ் செய்கின்றோமோ அதை அப்படியே ஃப்ரேமிற்குள் கொண்டு வர முடியும்...அந்தக் கலை நயம் இருந்தால்....

    மணிகண்டன் அவர்களுக்கு அது நிறையவே இருக்கிறது...அருமையான படைப்பு. ஒவ்வொரு காட்சி அமைப்பும் அருமை என்றால் வசனம் நச்....உலகமே பேசும் அளவு தமிழ் திரை உலத்தைக் கொண்டு சென்ற திரு மணிகண்டன் அவர்களைப் பாராட்டி வாழ்த்த வேண்டும்...வலை உலகம் நாம் வாழ்த்துவோம்...

    ReplyDelete

Post a Comment

வருக வருக