பதிவர் சந்திப்பு திருவிழா தொடர் சந்திப்பு இரண்டு

வணக்கம் 


இன்றய பதிவர் திருவிழா அமைப்புக் குழு சந்திப்பு நண்பா அறிவை விரிவு செய் அரங்கில் நடைபெற்றது. 


நிகழ்வுக்கு பெருநாழி குருநாத சுந்தரம், கவிஞர் செல்வக்குமார், கவிஞர் சோலச்சி, கவிஞர் வைகறை, கவிஞர் ஜெயலக்ஷ்மி, கவிஞர் மாலதி, கவிஞர் ரேவதி, கவிஞர் கீதா, ஸ்ரீ மலை, நாகபாலாஜி போன்றோர் கவிஞர் முத்துநிலவன் மற்றும் பொன் கருப்பையா அவர்களின் தலைமையில் கூடி, அழைப்பிதழ் வடிமைப்பு, ஊடகத் தொடர்பு போன்ற விசயங்களை விவாதித்தனர். 

அழைப்பிதழ் வடிமைப்பு இறுதிசெய்யப்பட்டு அச்சுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. விரும்பும் பதிவர்கள் மின்னஞ்சலில் தெரிவித்தால் அழைப்பிதழ் இல்லத்திற்கு அனுப்பலாமா என்றும் விவாதிக்கப் பட்டது. அஞ்சல் செலவு ஐந்து ரூபாய்களாக இருந்தால் அனுப்பலாம் என்றும் பேசப்பட்டது.

பதிவர் கையேட்டில் க்யூஆர் கோட் ஒரு புதுமையாக முயற்சிக்கப்பட இருக்கிறது. பதிவு செய்த அத்துணை பேருக்கும் கோட் தயாராகிவிட்டது! இதற்கென நீண்ட நேரம் உழைக்கும் ஸ்ரீ மலை யுகே டெக் கார்த்திகேயன் அணி பாராட்டுக்குரியது. இந்த ஆலோசனையை முன்மொழிந்த கோபிநாத் அவர்களுக்கும் ஒரு நன்றி.

உணவுக் குழுவின் பொறுப்பாளர் திருமிகு ஜெயலக்ஷ்மி அவர்கள் பட்டியலை தனித்த ரசனையோடு விவரித்தார். (இந்த அம்மா கொடுத்த பட்டியலைப் பார்த்தால் இதுவரை திரண்ட நிதியை விட  அதிகம் செலவிட வேண்டுமோ என்கிற எண்ணம் எழுந்ததும் நிஜம்!)

வரும் பக்ரீத் அன்று புதுகை புரவலர்களை சந்திக்கலாம்  என்றும் முடிவானது. 

ஊடக நிருபர் ஒருவரும் வந்திருந்தது மகிழ்வு. 

சில பணிகளை எனக்கு பணிதிருப்பதால் இப்போதைக்கு இவ்ளோதான்

Comments

  1. உடனடியாக தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர் விழா சிறக்கட்டும்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. அதுக்குள்ள போட்டாச்சா..இப்பதான் எழுத அமர்ந்தேன்...வாழ்த்துகள்..அயராப்பணிக்கு.

    ReplyDelete
  3. பதிவர் சந்திப்பின் ஒவ்வொரு நாள் நிகழ்வையும் பதிவிடுவது சந்திப்புக்கான ஆவலை மேலும் தூண்டுகிறது.
    த ம 3

    ReplyDelete
  4. நன்றி மீண்டும் வருக! நானும் வருவேன்!

    ReplyDelete
  5. அருமையோ அருமை!
    நிகழ்வுகளை நேரில் பார்க்கும் உணர்வு எனக்குக் கிட்டியது.
    நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete
  6. ஆகா
    அந்நாள் என்று வரும் என்று காத்திருக்கிறோம் நண்பரே
    தம +1

    ReplyDelete
  7. க்யூ ஆர் கோட் என்பது என்ன மது.? அதனால் என்ன பிரயோஜனம்.? நாக்கு தள்ளுதே... ச்சே, நாக்குத் தெல்லேதே... விம் ப்ளீஸ்...

    ReplyDelete
  8. ஆஹா! எள்ளுனா எண்ணையா நிற்கும் கஸ்தூரிக்கு ஒரு ஓ இல்லை இல்லை நாங்கள் எல்லோரும் சேர்ந்து பல ஓ" க்கள் போட்டாச்சுப்பா.....

    ReplyDelete
  9. அட சுடச் சுட பரிமாறு கிறீர்களே நன்றி நன்றி சகோ வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  10. விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. பதிவர் திருவிழாவை அசத்தலாக நடத்திட ஆற்றல்மிகு விழாக்குழு அயராது செயலாற்றுகிறது.

    ReplyDelete
  12. அன்புள்ள அய்யா,

    பதிவர் சந்திப்பு திருவிழா தொடர் சந்திப்பு இரண்டு கண்டு மிரண்டு போக வைத்துள்ளீர்கள். இன்று புதுகை புரவலர்கள் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

    நன்றி.
    த.ம.10

    ReplyDelete

Post a Comment

வருக வருக