நெஞ்சார்ந்த நன்றிகளுடன் விழாக்குழு தொடர் சந்திப்பு நிகழ்வு ஒன்று

வணக்கம் 

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவின் அமைப்புக் குழு இனி தொடர்ந்து சந்திக்கும். இந்நிகழ்வின் முதல் அமர்வு இன்று நண்பா அறக்கட்டளையின் அறிவை விரிவு செய் அரங்கில் நடைபெற்றது. 


நண்பா நாற்பது நண்பர்களால் அவர்களின் நிதியில் மட்டும் நடத்தப்படும் ஒரு சேவை அமைப்பு. பல வருடங்களாக பெரியார் நகரில் இயங்கி வருகிறது. குடியிருப்பின் இலவச நூலகத்தையும், பெறியியல் மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சிகளையும் தந்துவரும் அமைப்பு. காமராஜர் பிறந்தநாள் முதல் பெரியார் பிறந்தநாள் வரை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச கணிப்பொறி பயிற்சிகளை தந்துவருகிறார்கள்.  அவர்கள் மாணவர்களுக்காக எழுப்பிய எளிய அரங்கை நமக்காக தந்திருக்கிறார்கள். நிகழ்வின் தொடர் சந்திப்புகள் அனைத்தும் இனி நண்பாவின் அறிவை விரிவு செய் அரங்கில்தான் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே கவிஞர் வைகறை இங்கே தொடர்ந்து நிகழ்வின்  பணிகளைச் செய்துவந்தார். இன்றய கூட்டத்திற்கு கவிஞர் முத்துநிலவன், தென்றல் கீதா, கவிஞர் மாலதி, கவிஞர் சோலச்சி, பெருநாழி குருநாத சுந்தரம், கவிஞர் மகா சுந்தர், கவிஞர் பாபு ராசேந்திரன், புலவர் பொன் கருப்பையா, எதிலும் புதுமை மலையப்பன் (விதைக்கலாம்), கவிஞர் வைகறை, கவிஞர் செல்வா போன்றோர் கலந்துகொண்டு விவாதித்தார்கள். 

பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டன. உலகெங்கும் எழும் பாரிய ஆதரவு அலை பெரிதும் சிலாகிக்கப்பட்டது. பல பதிவர்கள் அவர்களாகவே முன்வந்து சந்திப்பினை ப்ரொமோட் செய்வதும், நிதியளித்து வருவதும் குழுவினரிடம் குதூகலத்தையும் அதே சமயம் ஒரு சின்ன தவிப்பையும் ஏற்படுத்தியிருப்பதை  உணர முடிந்தது. சிறப்பாக நடக்கவேண்டுமே விழா என்பதே அது.

நிதி நிலை 

கடந்த விழா மண்டப ஆய்வில் நிலவன் அண்ணாத்தே சொன்னது இன்னும் என்  செவிகளில் இருகிறது. நிதி வருமோ வராதோ என்னிடம் பணி ஓய்வு பணம் இருக்கிறது. போகும் பொழுது வாரிக் கட்டிக்கொண்டு போவதில்லை கவலைப்பட வேண்டாம் யாரும் என்று சொல்லவே எனக்கு சுரீர் என்றது. 

அதற்கு முன்னதாகவே (பதிவர்கள் பங்களிப்பைத் தருவதற்கு முன்னே)  கற்க நிற்க பதிவர் நானே உணவு உபசரிப்புக்கு ஆகும் செலவை ஏற்றுகொள்கிறேன் என்று சொன்ன பொழுது அதை அனுமதிக்க முடியாது என்று மறுத்த நிலவன் அண்ணாத்தே துண்டுவிழும் பட்ஜெட்டை சுமக்கிறேன் என்றார்.  அப்படி செய்யத் தேவை இருக்காது என்றே சொன்னோம் எல்லோரும். 

இதன் பொருட்டே நான் கடந்த பதிவில் சில வரிகளை எழுத வேண்டியிருந்தது. 

நிதி நிலை இன்றய சந்திப்பில் ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பட்ஜெட்டின் பாதி வந்துவிட்டது! இனி அமைப்பாளர்களை மிரட்டும் அளவு துண்டு விழாது. கடந்த வாரம் வரை திகில் படம் போல இருந்த நிலை இன்று குடும்பப் படமாக மாறியிருக்கிறது. நிதியளித்த அத்துணை நெஞ்சங்களுக்கும் நன்றி. 

திக்கு முக்காடச் செய்யும் பதிவர் ஒத்துழைப்பு 

சில வலைபூக்களை பார்க்கிற நான் அதன் பின்னூட்டங்களை பார்க்கும் பொழுது மகிழ்ந்தேன். வெகு தொலைவில் அட்லாண்டாவில் இருந்தாலும் தனது நண்பர்களின் தளத்தில் புதுகைப் பதிவர் சந்திப்பு திருவிழாவை குறித்து தொடர்ந்து பதிவிட்டு விழாவின் வெற்றிக்கு உழைக்கும் தங்கை கிரேஸின் பணி ஒரு வாவ். 

எத்துனைப் பதிவர்கள் எத்துனைப் பதிவுகள் விழாக் குறித்து. 
அத்துணை விரல்களுக்கும் நன்றிகள். 

இன்னொரு வேண்டுகோளும் 

முதல் முதலில் ஒரு பதிவர் சந்திப்பில் அரசு நிறுவனம் போட்டிகளை அறிவித்திருக்கிறது. பதிவர்கள் யார் என்று காட்ட வேண்டிய தருணம் இது. சுமார் ஆயிரம் கட்டுரைகளாவது வரும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறது தமிழ் வெர்ச்சுவல் அகடமி! 

ஆயிரம் வேண்டாம் அதில் பாதியாவது கட்டுரைகள் வந்தால்தான் அடுத்த பதிவர் சந்திப்பில் இந்த அறிவிப்புகளை நாம்  எதிர்பார்க்க முடியும் எனவே அருள் கூர்ந்து ஒரு பதிவர் ஒரு கட்டுரையாவது எழுதுங்கள். இது நமது இருப்பை அழுத்தமாக பதிவு செய்யும் விசயம். எனவே எழுதுங்கள். 

போட்டிக்கே வரமாட்டேன் என்று சொன்ன என்னை மண்டையில் அடித்து போட்டிக்குள் தள்ளியிருக்கிறது குழு. அய்யா சாமிகளா என் நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், 

ஸ்ரீ மலை, வைகறை, நிதி மேலாண்மை கீதா போன்ற பதிவர்களின் கடுமையான அளவு எனது உழைப்பு இல்லை என்றாலும் கட்டுரைகளில் நான் கவனம் குவிக்கத்தான் வேண்டுமா?

நியாயமாரே?

கொஞ்சம் போட்டித் தலைப்புகளிலும் எழுதுங்க பதிவர்களே. 

அன்பன்
மது 

Comments

  1. ஆஹா அசத்துங்க.....கொஞ்சம்....ஆங்கிலப்படத்துக்கும் தமிழ் திரைக்கும் உள்ள வித்தியாசத்தை கட்டுரைப்படுத்தலாமே..சகோ..

    ReplyDelete
    Replies
    1. ஹை இன்றய கூட்டத்தில் பொறுப்பாளர் சொன்னதுக்கு பின்னர்தானே முடியும் !

      Delete
  2. ஒரு உணர்ச்சிகரமான பதிவு என்றே சொல்வேன். ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் சொன்ன

    /// நிதி வருமோ வராதோ என்னிடம் பணி ஓய்வு பணம் இருக்கிறது. போகும் பொழுது வாரிக் கட்டிக்கொண்டு போவதில்லை கவலைப்பட வேண்டாம் யாரும் ///

    என்ற வார்த்தைகள் அப்படியே என்னை உலுக்கி விட்டன. திரும்பத் திரும்ப மனதில் எதிரொலிக்கின்றன. அவரது ஓய்வு இல்லாத தன்னலமற்ற சேவை மனப்பான்மை யாருக்கு வரும்? அவரை ரொம்பவும் அலைய விடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மதுரையில் அறிவிக்கப்பட்ட பொழுது நான் எதற்கு இதை ஒத்துக்கொண்டார் என்றுதான் நினைத்தேன்...
      இன்றைய அனுபவங்களும் வேறு புரிதல்களும் வேறு

      Delete
  3. ”எத்துனைப் பதிவர்கள்! எத்துனைப் பதிவுகள்!!
    அத்துணை விரல்களுக்கும் நன்றிகள்” அவ்வளவுதான். சிறப்பாக நடத்துவோம். அப்புறம்.. “கடுமையான அளவு எனது உழைப்பு இல்லை என்றாலும் ...“ என்பதெல்லாம் சும்மா..நண்பர்களின் குறிப்பாக இளைஞர்களின் உழைப்பை ஈர்த்ததில் நண்பா அறக்கட்டளை நண்பர்களின் அரிய ஒத்துழைப்பில் உங்கள் பங்கு அளப்பரியது.. இன்னும் இளைய தொண்டர்களும் வருவதாகச் சொல்்லியிருக்கிறீர்கள் அங்கேயும் உங்கள் பங்கு இருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. ஆகா ஒருங்கிணைப்பு யாரு..

      Delete
  4. வணக்கம்
    நிகழ்வுக்கு சிறப்பான திட்டமிடல் எப்போதும் முக்கியம்... அதை சிறப்பாக செய்துள்ளீர்கள் என்பதை பதிவின் வழி அறியமுடிகிறது.. நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.
    நான் வரா விட்டாலும் எனது சார்பாக வருவார்கள்... j.ம +1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ரூப்ஸ்

      Delete
  5. சொந்த பணத்தைப் போட்டு
    விழாவினை நடத்தமுன் வந்திருக்கிறார்
    கவிஞர் ஐயா
    படிக்கும்போதே மனம் நெகிழ்கிறது
    தம=1

    ReplyDelete
    Replies
    1. இந்தமாதிரி தில் இருப்பவர்கள் மட்டுமே முன்னெடுப்புகளைச் செய்கிறார்கள்

      Delete
  6. தங்களது எழுத்தைப் பார்த்ததும் வியந்தேன். நம்மவர்களின் ஈடுபாடும், ஒத்துழைப்பும் பிரமிக்கவைக்கின்றன. அந்த உழைப்பிற்கு ஈடாக எதனையும் கூறமுடியாது. புதுக்கோட்டையில் சங்கமிப்போம்.

    ReplyDelete
  7. மனதை தொட்ட பதிவு. வலைப்பதிவர்களின் ஒத்துழைப்பும். ஆர்வமும் பிரமிக்க வைக்கின்றன. வாழ்க! வலைப்பதிவர் ஒற்றுமை!
    த ம 7

    ReplyDelete
  8. அருமை சகோதரரே!
    தன்னல மற்ற சேவை மனப்பான்மை கண்டு
    உள்ளம் பூரிக்கின்றது!
    மேலும் மேலும் சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. விழா ஒரு மகத்தான வெற்றி பெறும் என்பது உறுதி;இந்த உழைப்புக்கு அதுவே பரிசு!

    ReplyDelete
  10. விழாக்கள் நடத்தி அனுபவம் பெற்றவன் என்ற முறையில் விழாக்குழுவினரின் கஷ்டம் புரிகிறது! இன்று என்னால் முடிந்த ஓர் தொகை அனுப்பி உள்ளேன். பார்ப்போம்! விழா சிறக்கட்டும்!

    ReplyDelete
  11. அன்புள்ள அய்யா,

    விழாவிற்காக வேண்டி கடின உழைப்புடன் புதுக்கோட்டை வலை அன்பர்கள் மிகவும் சிரத்தை எடுத்துச் செயல்படுவது கண்டு வியந்து போகிறோம்.

    நெஞ்சார்ந்த நன்றி.
    த.ம.10

    ReplyDelete
  12. நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது கஸ்தூரி இந்தப் பதிவை வாசித்ததும். புக்கோட்டைக்காரர்களின் உழைப்பு, திட்டமிடல், செயல்படுத்தல் எல்லாமே நன்றாக பளிச். அதை நடத்திச் செல்லும் தலைமை திரு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு முதலில் பாராட்டுகள். வாழ்த்துகள்! தலைமை "பாஸ்" ஆக இல்லாமல் "லீடர்"ஆக அதுவும் தலைசிறந்த லீடராக இருக்க அந்தத் தலைமையின் கீழ் தேனிக்களாக, எறும்புகளாக ஒற்றுமையுடன் சுறு சுறுப்பாகப் பணியாற்றும் இளைஞர் இளைஞிகள் உங்கள் அனைவருக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்

    தன்னலமற்ற நண்பா அறக்கட்டளை செழித்து வளரவும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. அருமை.....

    விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.

    ReplyDelete
  14. புதுக்கோட்டைப் பதிவர் சந்திப்பு
    இனிவரும் காலங்களில் இடம்பெறும்
    பதிவர் சந்திப்பு நிகழ்வுகளிற்கு
    ஒரு வழிகாட்டலாக அமையுமே!

    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    ReplyDelete

Post a Comment

வருக வருக