வள ஆசிரியர்கள் புதுகையின் கல்வி முகங்கள்

இளம் புயல்கள் 

ஹரிராம்
ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் வட்டார வள மைய வள ஆசிரியராக வந்தவர். இணையத்தை மேய்ந்து கொடுக்கப்பட்ட தலைப்பைத் தாண்டியும்  தகவல்களை மழையாகக் கொட்டுபவர்.

தனித்துவம் வாய்ந்த வழங்கல் இவரது அடையாளம். பேச்சின் தொனியே ஆள் தலைப்பை கரைத்து குடித்துவிட்டு வந்திருக்கிறார் என்று சொல்லிவிடும். வட்டார வளமையத்தில் இருந்ததால் பயிற்சி பயணம் பயிற்சி என்கிற சுழலுக்கு பழக்கப்பட்டவர்.


புகாரி

புதுமைகளை வகுப்பில் செய்ய தயங்காத ஆசிரியர். கிஷோர் ஒருமுறை அவர் வள ஆசிரியராக கலந்துகொண்ட பயிற்சியில் வள ஆசிரியராக வாருங்கள் என்று அழைக்க,  தெறித்து ஓடாமல் வியப்பூட்டும் வண்ணம் வருகிறேன் என்று சொன்னவர். தனது வகுப்பறையில் ஆங்கில மொழி உரையாடலை அனுதினமும் வளர்த்துக் கொண்டிருப்பவர். அனேகமாக மாவட்டத்தின் முதல் தன்னார்வ வள ஆசிரியர் இவராகத்தான் இருக்கும்!

வள ஆசிரியர் பயிற்சிக்கு பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்த அனுபவம் உள்ளவர். முதல் பயணமே ஏற்காட்டில் ஒரு பயிற்சி!

ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காத வள ஆசிரியர். வெகு துல்லியமாய் வழங்கப்பட்ட கால அட்டவனையைப் பின்பற்றுபவர். மிக நல்ல மனிதர்.

ஸ்மார்ட் சங்கர்

ஜே.ஜே கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். இருப்பினும் 2006, 07 ஆண்டுகளில் பேசவே மறுத்தவர். எல்லாத் தகுதியும் இருந்தும் வள ஆசிரியராக வர மறுத்தவர்.

இவர் கணிபொறி பயன்பாட்டில் வித்தகர். இவரது பாடம் சார் வளங்கள் பல்வேறு இணையத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. இவரது தூண்டல் மென்பொருள் பயன்பாடு மற்றும் எல்.சி.டி கொண்டு பயிற்சி நடத்துதல்.

கடந்த ஆண்டு கோவையில் நடந்த மென்பொருள் தயாரிப்புக்கு மாவட்டத்தில் இருந்து அனுப்பப்பட்டவர். மென்பொருள் வித்தகம் கொஞ்சம் கொஞ்சமாக இவரை வள ஆசிரியராக இழுத்துவந்து நிறுத்தியது.

தன்னுடைய கணினி ஈர்ப்பால்  இவர் தனது மனத் தடைகளை உடைத்து  வள ஆசிரியராக மாறியிருப்பது எனக்கு எப்போதும் வியப்பு.

இவர் பயிற்சி ஒன்றில் அறிமுகம் செய்த இலக்கண விளையாட்டு வெகு அற்புதமாய் இருந்தது.

தோழமையோடு பயிற்சியை எடுத்துச் செல்பவர்.

ஸ்ரீ மலையப்பன்

அணியின் இளம் பங்களிப்பாளர். சுடர் ஐ.ஏ.எஸ் அகடமியின் நிறுவனர்களில் ஒருவர். போட்டித் தேர்வுகளுக்கான ஆங்கில பாடத்தில் நுட்பமான அனுபவம் உள்ளவர். பணி அனுபவத்தில் வேண்டுமானால் குறைந்தவராக இருக்கலாம். நிச்சயம் பாட அனுபவத்தில் அல்ல.

பொதுவாக வள ஆசிரியராக வாருங்கள் என்றால் பின்னங்கால் பிடரியில் பட ஒடுபவர்களே அதிகம். தானாக முன்வருவோர் மிகவும் குறைவு. இவர் நல்ல எனர்ஜி லெவலில் இருந்ததால் தானாகவே முன்வந்தவர்.
விதைக்கலாம் இயக்கத்தை துவங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதிவுலகில் இவர் எதிலும் புதுமை(விழாக் குழுவின் தூண்களில் ஒருவராக இருப்பவர்!)

சாந்தக்குமார்


மாவட்டத்தின் மூத்த ஆசிரியர்,மற்றும் சமூக அறிவியல்  வள ஆசிரியர் பாசத்துக்குரிய அண்ணன் திருமிகு. இளங்கோ அவர்களின் புதல்வர். சமீபத்தில் நடந்த மாவட்ட கல்வி அலுவலர் தேர்வில் கலந்துகொண்டு இரண்டு சுற்றுகளில் முன்னணியில் இருக்கிறார்.

திடீரென ஆர்.எம்.எஸ்.ஏ பத்து மையங்கள் என்று சொன்னவுடன் பயிற்சியைத் தொய்வின்றி நடத்த தோள்கொடுத்தவர். (திடீரென நாற்பது வள ஆசிரியர்கள் வந்தாக வேண்டிய கட்டாயம்). காம்பவுண்ட் வேர்ட்ஸ் கொண்டு இவர் சொன்ன கதை ரொம்பவே ரசிக்கவைத்தது.

இளைஞர்களிடம் கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது என்பதற்கு சாந்து ஒரு உதா.

காசிப்பாண்டி


எனது கடும் கண்டனத்துக்கு உரிய வள ஆசிரியர். இலுப்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுபவர். பள்ளி வேலை நேரம் முடிந்தும் வெகு நேரம் மாணவர்களின் சிறப்பு வகுப்பில் கவனம் செலுத்துபவர். செவ்வாய் மட்டுமே ஆங்கிலம் சிறப்பு வகுப்பில் நடத்தப்பட வேண்டும். ஆனால் எப்போது தேவையோ அப்போதெல்லாம் சிறப்பு வகுப்பு எடுக்கும் ஆசிரியர். இதனாலேயே அடிக்கடி நான் இவரை கடிந்து கொள்வது உண்டு.

டைம் மானேஜ்மெண்டின் முதல் விதியே வேலைகளை அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் செய்ய வேண்டும் என்பதே. இது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொருந்தாது. அரிச்சுவடியே தெரியாமல் இருக்கும் மாணவர்களை தேற்றக் கூடுதல் நேரம் செலவிட்டே ஆகவேண்டும். இருப்பினும் அளவு மிகுதல் நல்லது அல்ல என்பதே எனது சொந்த அனுபவம்.

எல்.சி.டி பயன்பாட்டுடன் பயிற்சியைக் கையாளும் இளம் ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.

திடிரென வள ஆசிரியராக வந்த திருமிகு.ரம்யா,(இவர் மாவட்ட கல்வி அலுவலர் தேர்வில் கலந்துகொண்டவர்), அறந்தை திருமிகு. முத்துச்செல்வி ஆகியோரும் இந்த  அணியில் உண்டு.

திரளான ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பது என்பது சாதாரண விசயம் அல்ல. திறமையாளர்கள் வரத்தயங்குவதும் இதனால்தான். அதிதத் திறமையாளர்கள் கள்ள மௌனத்தோடு இறுகிய உதடுகளோடும், ஒரு எள்ளல் புன்னகையோடும் பயிற்சிகளைக் கடந்துவிடும் தருணத்தில் என்னால்  முடியும் என்று முன்வருபவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் மட்டுமல்ல முக்கியமானவர்களும் கூட.

நியாயமான காரணங்களால் முன்வரத் தயங்கும் ஆசிரியர்களைத் தவிர்த்து திரளில் முகம் தெரியாது இருக்கும் சில பிழைக்கத் தெரிந்த ஆசிரியர்கள் மத்தியில் 
என்னால் முடியும் 
என முன்வரும் 
இவர்கள்தாம் 
கல்வியின் முகங்கள்.

அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.  வாழ்த்துகள்

தொடரட்டும் உங்கள் பயணம் தொய்வின்றி.

அன்பன்
மது

ரெடியா அஜீத் விஜய், ரெடியா ரத்னக் குமார்?

பிகு.
வள ஆசிரியர்களைத் தொடர்ந்து நாட்டின் நல ஆசிரியர்களையும் அறிமுகம் செய்ய ஆசை. திருவிழா முடியட்டும் தொடர்வோம். 

Comments

  1. arumai. ningal silarai velichathil kondu vanthu aarampithu vaiththirkal. ithu pola intha thodar pirar elutha aarampithalum innum pala nalla aasiriyarkal patri nam therinthu kola mudiyum.

    arumaiyaana idea.
    vazthukal sir.


    ReplyDelete
  2. வள ஆசிரியர்களை அறிமுகப்படுத்தி ஊக்கப்படுத்தும் தங்களின் பணி பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் அவர்களுக்கு, நன்றி உங்களுக்கு.

    ReplyDelete
  3. அன்புள்ள அய்யா,

    வள ஆசிரியர்கள் புதுகையின் கல்வி முகங்களை... கல்வியில்... கற்றலில்...கற்பித்தலில்... சிறந்த ஆசிரியர்களை அறிமுகப்படுத்தி தங்கள் வலைத்தளம் பெருமை கொண்டதற்கு மிக்க நன்றி.

    த.ம.4

    ReplyDelete
  4. சிறப்பு மிக்க ஆசிரியர்களை பதிவு செய்த விதம் அருமை. ஆனாலும் வள ஆசிரியர் என்பதற்கான சரியான பொருள் தெரியவில்லை. தயவுசெய்து விளக்குங்களேன்.
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. பள்ளிக் கல்வித்துறை
      அவப்போது புத்தாக்க பயிற்சிகளை வழங்கும்.
      புதிய கற்றல் நுட்பங்களை ஆசிரியர்களுக்கு சொல்ல முன்னெடுப்பு உள்ள ஆசிரியர்கள் தேவை.
      புதிய கருத்துக்களை பகிரும் ஆசிரியரும் அவரது பயிற்சியில் பங்குபெறும் ஆசிரியர்களுக்கும் பதவி வேறுபாடுகள் கிடையாது. ஒரே பதவி ஆனால் பயிற்சிநாளில் மட்டும் சக ஆசிரியர்களுக்கு பாடம் எடுக்க பயிற்சிகொடுக்க வேண்டும்.
      கம்பிமேல் நடக்கும் வித்தை.
      இவர்கள்தான் வள ஆசிரியர்கள் எனப்படுகிறார்கள் (Resource Persons)

      Delete
  5. அனைவருக்கும் வாழ்த்துகள்... விழாவில் சந்திக்க முடியும் அல்லவா...?

    ReplyDelete
  6. முகம் தெரியாத வள ஆசிரியர்களை அடையாளம் காட்டியமைக்கு நன்றி..வாழ்த்துகள் அனைவருக்கும்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
    இவர்கள் பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. மிக மிகச் சிறப்பு! நல்ல அறிமுகங்கள்!
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. அனைத்து வள ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்! நீங்கள் இப்படி அறிமுகப்படுத்துவதற்கும் சேர்த்து...பாராட்டுகளும்!

    ReplyDelete
  11. நாங்கள் சக்கரமாக சுழல்வதற்கான அச்சாணி நீர் தாம் சகோதரரே!

    ReplyDelete

Post a Comment

வருக வருக