Monday, 14 September 2015

வேகம் பெற்றது பதிவர் திருவிழா

கடந்த ஆண்டு மதுரை பதிவர் சந்திப்பில் அடுத்த ஆண்டு நீங்கள் சந்திப்பை நடத்துங்களேன் என்று தொடரோட்டக் குச்சியை புதுகை நோக்கி தள்ளியது இயல்பானதே. 



யாருக்கும் தெரியாத ஒரு விசயமும் இருந்தது. அது கவிஞர் முத்துநிலவனின் பல்லாண்டுகால கால அனுபவம். பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதிலும் அவற்றைத் திறம்பட நடத்துவதிலும் தனிமுத்திரை பதித்தவர் அவர். 

குழுவை ஒன்றிணைப்பதிலும் செயல் நோக்கி செலுத்துவதிலும் அனுபவம் மிளிரும் ஒரு தலைவர் அமையப்பெற்றது புதுகைக்கு கிடைத்த போனஸ். 

உலகின் பல பகுதிகளில் இருந்தும் பதிவர்கள் தொடர்ந்து பதிவிட பதிவிட  என் மனதில் ஒரு திக் திக் திக். 

சரியாக செய்யவேண்டுமே என்பதுதான் அது. 

இதுவரை வரவு நிகழ்வின் பட்ஜெட்டில் கால்வாசியைத்தான் அடைந்திருக்கிறது நிதிக் குழு. உள்ளூர் புரவலர்களை இன்னும் அணுகவில்லை. 

இது ஒரு பக்கம் இருக்க அன்புச் சகோதரி இளமதி ஒரு பெரும் தொகை (இதுவரை வந்த வரவுகளிலேயே பெரிய வரவு!) ஒன்றை அனுப்பி குழுவினரை மூச்சடைக்க செய்துவிட்டார். 

இன்று கூடிய செயற்குழுவில் ஹாட் டாபிக்கே இவர்தான். மகிழ்வு இருந்தாலும் அவரிடம் இருந்து இவ்வளவு பெரிய ஆதரவை எதிர்பார்க்கவே இல்லை. அதை பெறுவது முறையா என்ற என் கேள்வியும் சுற்றிவந்தது அவையை. 

சகோதரி இளமதி கடந்து  நடந்துகொண்டிருக்கும் பாதை ஒன்றும் ராஜபாட்டை அல்ல. வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் அவர் எதிர்கொண்ட ஈவு இரக்கமற்ற பிரச்சனைகளைத் தாண்டி இப்படி ஒரு ஆதரவை அவரால் எப்படி செய்ய முடிந்தது என்று தெரியவில்லை. 

அவர் இருக்கும் திசை நோக்கி மானசீகமாக வணங்குவது ஒன்றே நான் செய்யும் சிறிய மரியாதையாக இருக்கும். 

வணக்கங்கள் சகோதரி. 
பிரார்த்தனைகளும்

இன்னொரு பதிவர் ஒன்று இரண்டு விளையாட்டை துவங்கியிருக்கிறார். அவர் யார் என்று சுவாரஸ்யமாக வினாக்கள் எழுப்பப்பட்டன. இன்னும் தெரியவில்லை!

அவர் அனுப்பிய தொகை 1234!

சக பதிவர்களின் மகிழ்வு கலந்த பரப்புரைகள் விழாக்குழுவினருக்கு ஒரு ஆனந்தத்தையும் கவனம் கலந்த ஒரு மனநிலையையும் ஏற்படுத்தியிருகிறது. 

கால்வாசி பட்ஜெட் ரெடி. 
மீதி !
உழைக்க வேண்டும் 
உள்ளூர் உலாவைத் துவக்க வேண்டும் ...

சந்திப்போம் 

அன்பன்
மது 

நிதியளிக்க

First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645

நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக  இருக்கும்.
bloggersmeet2015@gmail.com 

23 comments:

  1. களமிறங்கிய சகோவிற்கு வாழ்த்துகள்..இளமதி செய்துள்ளது மிகப்பெரிய உதவி...என்ன சொல்வதுன்னே தெரியல....சகோ..

    ReplyDelete
  2. //அது கவிஞர் முத்துநிலவனின் பல்லாண்டுகால கால அனுபவம். பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதிலும் அவற்றைத் திறம்பட நடத்துவதிலும் தனிமுத்திரை பதித்தவர் அவர்.// முத்துநிலவன் அண்ணாவின் செயலில் தெரியும் உண்மை! அவர்களின் முழு மனதும் இதில்தானே இருக்கிறது..புதுகைக்கு மட்டும் அல்ல, எனக்கும் அண்ணா பெரிய போனஸ் :-)
    அவருடைய ஆர்வமே நமக்கு ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறது.
    புதுகை நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
    தோழி இளமதிக்கு அன்பு கலந்த நன்றிகளும் வணக்கங்களும்.

    ReplyDelete
  3. சகோதரி இளமதி அவர்களின் அன்பில் விழாக்குழுவே நெகிழ்ந்து போனது உண்மை. அவரது கவித்திறமை உலகறிந்ததே. அவரது யாப்புக் குருநாதர் அய்யா பாரதிதாசன் அவர்களின் பெயரும் இந்த நன்கொடையாளர் பெயரில் இளமதி அவர்களி்ன் தொகைக்கு நிகராகக் கொடையளித்து உள்ளதைத் தெரிவித்தது! “ஆசிரியர் - மாணவர்“ பண்பின்தொகையோ? இந்தத் தொகையைப் பெற்றுத்தந்த வலைச்சித்தர் அய்யா திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. இருப்போர் நிதியளித்தால் புதுக்கோட்டைவிழா இன்னும் வரலாறு படைக்கும் சகோதரி.

    ReplyDelete
  5. எதிர்பாராத அந்த அன்பிற்கு முன்னால்... நன்கொடையும் தாண்டி... என்னவென்று சொல்வது...?

    அந்த 1234 இன்று update செய்து விடும் போது தெரிந்து கொள்ளலாம்...

    ReplyDelete
  6. அன்புள்ள அய்யா,

    வேகம் பெற்றது பதிவர் திருவிழா விவரங்கள் பற்றி விரிவாக எழுதி இருந்ததைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. சகோதரி இளமதியாரின் உள்ளத்தை உவகை பொங்க சொல்லி பெருமிதம் கொண்டது ... நெகிழ்ந்தது... நெஞ்சைத் தொட்டது.

    “சகோதரி இளமதி கடந்து நடந்துகொண்டிருக்கும் பாதை ஒன்றும் ராஜபாட்டை அல்ல. வாழ்வின் ஒவ்வொரு திருப்பத்திலும் அவர் எதிர்கொண்ட ஈவு இரக்கமற்ற பிரச்சனைகளைத் தாண்டி இப்படி ஒரு ஆதரவை அவரால் எப்படி செய்ய முடிந்தது என்று தெரியவில்லை.

    அவர் இருக்கும் திசை நோக்கி மானசீகமாக வணங்குவது ஒன்றே நான் செய்யும் சிறிய மரியாதையாக இருக்கும்.”

    உண்மைதான். அவரின் துணைவரைத் தூக்கி நிறுத்த பெரும் போரை நடத்திக் கொண்டிருக்கின்ற நீண்ட நெடிய போராட்டத்தில்... எதிர்பாராமல் திடீரென இவரையே நோய்ச் சூறாவளி புயலின் வேகத்தில் தாக்க,,, அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு வந்த அவரின் நலம் வாழ என்னோட வாழ்த்துகள்.

    நன்றி.
    த.ம.2.

    ReplyDelete
  7. ஆமா நிலவன் அண்ணாவின் மிக பெரிய ப்ளஸ்சே பரபரப்பாக வேலை பார்ப்பார்,அந்த உற்சாகம் நம்மக்கும் தொற்றிக்கொள்ளும்.... ஆனால் பதட்டபடாமல் வேலையை செய்வார். அண்ணனது உற்சாகத்திற்கும் செயல் வேகத்திற்கும் இந்த விழா ஒரு எடுத்துக்காட்டாக இருக்கபோகிறது. அதேபோல இளமதியார் திகைப்பில் ஆழ்த்திவிட்டார்!! தோழி !! உங்கள் நட்புக்கும் அன்புக்கும் உரைபோட வார்த்தைகளே இல்லை!!! மிக்க நன்றி!!

    ReplyDelete
  8. களமிறங்கி கைகோர்க்கும் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துக்கள். புதுக்கோட்டையில் சங்கமிப்போம்.

    ReplyDelete
  9. மனம் மகிழ்கின்றது நண்பரே
    போற்றுதலுக்கு உரிய பதிவர்களைப் போற்றுவோம்
    நன்றி
    தம +1

    ReplyDelete
  10. புதுக்கோட்டையில் வலைப்பதிவர்களின் முக்கிய மய்யப் புள்ளியே ஆசிரியர் நா. முத்துநிலவன் அவர்கள்தான். வலைப்பதிவு என்பதன் பெருமையை புதுக்கோட்டையில் பரவச் செய்தவரே அவர்தான். அன்னாரது வழிகாட்டுதலில் புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டிற்கு உற்சாகத்தோடு செயல்பட்டு வரும் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  11. மிக்க மகிழ்ச்சி நண்பரே....

    சந்திப்பு சிறக்க எனது வாழ்த்துகளும்.

    ReplyDelete
  12. விழாவை திறம்பட நடத்தி செல்லவிருக்கும் முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும், வாரிக் கொடுத்த வள்ளல் சகோதரி இளமதி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    த ம 10

    ReplyDelete
  13. பதிவர் இளமதி மேடம் அவருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. விழா சிறக்க, விழா குழுவிற்கு வாழ்த்துக்கள்,
    நன்றி.

    ReplyDelete
  15. வணக்கம் அன்புச் சகோதரரே!

    வலைப்பதிவர் சந்திப்பு மிக மிகச் சிறப்பாக நடைபெற
    உளமார வேண்டி வாழ்த்துகிறேன்!
    முத்து நிலவன் ஐயாவின் வழிகாட்டலும் அவரயது அயராத முயற்சியும் கூடவே நிருவாகக் குழுவினரின் தன்னலம் கருதாப் பணியும் கட்டாயம் இந்த விழாவைச் சிறப்பின் சிகரத்தை
    எட்ட வைத்திடும்! அதில் எனக்குக் கொஞ்சமேனும் ஐயம் இல்லை!

    தங்களின் இப்பதிவில் இந்த இளமதியையும் முதன்மைப்படுத்தி
    என்னை திக்குமுக்காடச் செய்துவிட்டீர்களே சகோ!..
    எனது கடமையாக இதை எண்ணிச் செய்தேன். அவ்வளவே!

    இப்படியான நிகழ்வுகளுக்கு வேண்டியதாயும் பற்றாமல் போவதும்
    இந்தப் பணம் மட்டுமே!
    அயலில் நின்று சரீர உதவி செய்யாத எம் போன்றோர்
    இயன்றவரை நிதியுதவி செய்வதுதான் பொருத்தமானது.
    தனிப்பட்ட சிக்கல்கள் இல்லாதார் யார்?..
    எறும்பும் அதன் கையால் எண் சாண் என்பார்கள்!
    அவரவர்க்கு ஆயிரம் கஷ்டம் பிரச்சனை இருக்கும்.. ஆனால்
    இப்படித் தமிழரெல்லாம் ஒன்று கூடலாய் விழாவாய்ச்
    செய்யும்போது எந்தவகையிலென்றாலும் முடிந்தவரை
    தோள் கொடுத்து உதவ வேண்டும். அதனையே நானும் செய்தேன்.
    தமிழர் விழா என்றால் என்னவென்று தரணியே பேச வேண்டும்!
    தடம் பதிக்க வேண்டும்! முடிந்ததைச் செய்தேன் உறவுகளே!

    நானும் என் கணவரும் 12 வருடங்கள் இங்கே வாழும் நாட்டில்
    புலம்பெயர்ந்த எம் மாணவச் செல்வங்களுக்கு தமிழறிவை ஊட்டுவதற்காக வார இறுதி நாட்களில் பாடசாலையாகவே நடத்திக் கற்பித்தலுடன் விளையாட்டு, பண்பாட்டுக் கலைவிழாக்கள், போட்டிகள் போன்ற பலவகையால் அவர்களை ஊக்குவித்துக் கற்பித்தோம்.
    அப்போது நாம் எதிர்கொண்ட நடை முறைச் சிக்கலான நிதியுதவியை நன்கு பட்டுணர்ந்தவள். அவ்வகையில் அங்கும் எங்கள் விழா சிறக்க இத்தனைப் பாடுபடும் உங்களுக்கு ஏதோ என்னால் இயன்றதை உதவினேன் என்று மனம் நிறைகின்றேன்.

    எங்கள் நலம் வேண்டிப் பிரார்த்தித்து வாழ்த்தும் அன்புங்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி!
    உலகமே வியந்து நோக்கும் விழாவாக எங்கள்
    ”வலைப்பதிவர் சந்திப்பு 2015” பெரிய விழாவாகச்
    சிறப்புடன் நடைபெற வேண்டி, வாழ்த்துகிறேன்!!

    வாழ்க தமிழ்! சிறக்கட்டும் உங்கள் தொண்டு!

    (பின்னூட்டம் பதிவுபோல நீண்டு விட்டது!
    பொறுத்திட வேண்டுகிறேன்!)

    ReplyDelete
    Replies
    1. “இப்படித் தமிழரெல்லாம் ஒன்று கூடலாய் விழாவாய்ச்
      செய்யும்போது எந்தவகையிலென்றாலும் முடிந்தவரை
      தோள் கொடுத்து உதவ வேண்டும். அதனையே நானும் செய்தேன். எங்கள் விழா சிறக்க இத்தனைப் பாடுபடும் உங்களுக்கு ஏதோ என்னால் இயன்றதை உதவினேன்“ - இது வெறும் வார்த்தைகள் அல்ல சகோதரி. உங்கள் வாழ்க்கையின் அனுபவ அடக்கத்தின் வெளிப்பாடு. விழா முழுவதும் உங்கள் அன்பின் அடர்த்தியால் மணக்கப்போவது உறுதி. எனவே உங்களுக்கு நன்றியெல்லாம் கிடையாது, இது “எங்கள் விழா“ என்று நீங்கள் சொன்னதை அப்படியே நூறுவிழுக்காடு வழிமொழிகிறோம். இந்த உணர்வு மற்ற பலருக்கும் வந்து விட்டால் பதிவர் உலகம் மிகப் பயன்பெறும். அதற்கு நீங்கள் ஒரு முன்னத்தி ஏர் என்று உரக்கச் சொல்வோம். வணக்கம்.

      Delete
    2. வணக்கம் ஐயா!

      தங்கள் அன்பில் நெகிழ்ந்தது என் மனம்!
      என்னப் பற்றிய தங்களின் உயர்ந்த மதிப்பீட்டிற்குச்
      சிரம் தாழ்ந்த வணக்கம் ஐயா!

      Delete
  16. 1234 கேட்கும்போதே (மன்னிக்க)
    பார்க்கும்போதே கி..ர். என்கிறதே மனம்.

    ReplyDelete
  17. உண்மைதான் ,உங்கள் வேகத்தைக் கண்டு அசந்து நிற்கிறேன் !

    ReplyDelete
  18. சகோ. இளமதியின் தமிழ்ப்பற்றுக்கும், பங்களிப்பிற்கும் புதுக்கோட்டை வலைப்பதிவர்2015 குழு என்றைக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

    ReplyDelete
  19. வணக்கம் சகோ தங்கள்அனைவரதும் வேகத்தைக் கண்டு ஆச்சரியத்தில் அசந்து தான் போகிறேன். நிலவன் அண்ணாவின் ஆற்றலும் வழிகாட்டலும் அளப்பரிய சேவையே. தங்கள் அனைவரின் ஆர்வத்தையும் பங்களிப்பையும் கண்டு மலைத்தே நிற்கிறேன். அதிலும் என் அன்புத் தோழியின் பங்களிப்பைக் கண்டு மனம் பூரித்துப் போனேன். அவர் பெருந்தன்மையும் நல்ல உள்ளமும் மெய்சிலிர்க்க வைத்தது மட்டுமல்ல கண்நீரையும் உகுத்தது. அவரை தலைதாழ்த்தி வணங்குகிறேன். வேறு வார்த்தையே வரவில்லை. இத்திருவிழா பெருவிழாவாக வேண்டும். அனைத்தும் சிறப்பாக நடந்தேற என் வாழ்த்துக்கள் ...! தாமதத்திற்கு மன்னிக்கவும் ....நன்றி !

    ReplyDelete
  20. நல்லவர் கூடி நல்லது செய்ய நினைக்கின்றீர்கள் . உங்கள் மனம் போல் எல்லாம் நல்லபடியாக நடக்க வாழ்த்துகள் !

    ReplyDelete
  21. என்னப்பா இங்க போட்ட கமென்ட காணும்...எந்தக் காக்கா தூக்கிட்டுப் போச்சோ...சரி சரி புதுக்கோட்டைல கொண்டு போட்டுருச்சோ..தளத்துல போடாம...?

    ஜரூரா நடக்கிறது வேலைகள்....இல்லையா?! இளமதி அவர்களின் கொடை போற்றற்குரியது. அவர்களுக்கு எங்கள்மனமார்ந்த பிரார்த்தனைகள்...எங்கள் வணக்கங்களும்...

    ReplyDelete

தங்கள் வருகை எனது உவகை...

Labels

12 Years a Slave (2013) 2001: எ ஸ்பேஸ் ஆடிசி A Walk Among the Tombstones Amr Waked Avengers Age of Ultron avms kaarthik bairava blogging tips buds to blossoms c.c.e Fast and Furious 8 Guardians of the Galaxy honour killings innovations in Marketing into the storm Iyothee Thass jci jci pudukkottai central kalvi kannaki kovil keezhadi khan's academy kochadaiyaan review Lucy(2014) spoiler madurai Min-sik Choi Morgan Freeman oblivion personal change positive attitude வெற்றி இலக்கியம் Rafeeq Friend robin williams rouge one 2016 sasikala for cm Scarlett Johansson shajakaan society spoiler ssa T.V.18 yaathum oore episode 12 Tamil Short Story tasmac tesla motors thamizh thirai vimarsanm udayakkumar viswaroopam movie want to write ? War for the Planet of the Apes www.ted.com X Standard Tamil Memory Songs Tamil Nadu X-Men: Days of Future Past அ பெ கா பண்பாட்டு இயக்கம் அ.பெ.கா அசத்தல் அரசுப் பள்ளி அச்சம் என்பது மடமையடா அப்பா அமெரிக்கா அம்மா அயோத்தி தாசர் அரசு ஊழியர் ஓய்வூதிய போராட்டம் அரசு ஊழியர்களின் குரல் அரசுப் பள்ளிகள் அரிமளம் பள்ளி அரைவல் அலைகள் அலையும் குரல்கள் அவென்ஜெர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான் அறிவிப்புகள் அனுபவம் அன்னவாசல் கே. ரெங்கசாமி ஆஃபரா ஆங்கில கேட்டல் பயிற்சி ஆங்கிலத்தொடர்பாற்றல் ஆங்கிலப் படம் ஆங்கிலப் பயிற்சி ஆங்கிலம் ஆசிரியர் ஆசிரியர் தினம் ஆசிவகம் ஆசை தொடர் பதிவு ஆண்டனி ஆதிச்சநல்லூர் இசை இடஒதுக்கீடு இடைநிறுத்தம் இடைநிற்றல் இந்திய தேசிய ராணுவம் இந்தியா வரங்களும் சாபங்களும் இமான் இளையராஜா இறுதிச் சுற்று இனப்படுகொலை இன் டு தி ஸ்டார்ம் இன்னுமொரு சிறுகதை. புன்னகை இஸ்ரேல் ஈர்ப்பலைகள் ஈழம் ஈழம் சமுகம் உயிர்மை உலகின் பொருளாதாரக் கொள்கை உலோக உருக்கு ஆலை எக்ஸ்.மென் அபோகிளிப்ஸ் எட்ஜ் ஆப் டுமாரா எல்காம் எஸ்.எம்.எஸ். கொள்ளை ஏற்பாடுகள் ஐஸ் ஸ்டுபா ஒரு கோப்பை மனிதம் ஒரு முகநூல் பகிர்வு ஒலிம்பிக் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் ஓவியர்கள் கடிதம் கட்செவி பகிர்வு ஒன்று கட்டிடப் பொறியியல் கட்டுரைப் போட்டி கண்ணகி கோவில் கண்ணேநலமா - கண்ணாடி பவர் குறைபாடுகள் கதிர்வேல் கதை திரைக்கதை வசனம் இயக்கம் கத்தி கயல் கருத்தாளிகள் கலாச்சராம் கலிலியோ அறிவியல் மையம். கல்வி கல்வித்துறை விழா கல்வியாண்டு கவண் கவிஞர் தங்கம் மூர்த்தி கவிஞர் நீலா கவிதை கவிதை அறிமுகம் கவிதை பகிர்வு கவிதைகள் கவிதைத் தொகுப்பு கவுரவக் கொலைகள் கற்க கசடற கற்பித்தல் யுக்திகள் கனகசபை ராமசாமி கனவில் வந்த காந்தி கனிமொழி காக்கா முட்டை காசு பணம் துட்டு மணி மணி காணொளிகள் சில காதர் காந்தி திரைப்படம் காப்டன் அப்பாஸ் அலி காப்புரிமை கார்டியன்ஸ் ஆப் தி காலக்ஸி கார்த்திக் கார்த்திக் கார்த்திக் காவியத் தலைவன் காற்றுவெளியிடை கிரமத்து குழந்தைகள் கிரேஸ் பிரதிபா கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கிஷோர் டேவிட் ராஜ ராஜன் கீழடி குருநாதசுந்தரம் குழந்தை வளர்ப்பு குழந்தைகள் தினம் குறும்படம் கேவல் நதி கொசுவத்தி கொசுவர்த்தி கொஞ்சம் புதிய அறிவியல் கொஞ்சம் வெப் கொடி காத்த குமரன் கொம்பன் திரை விமர்சனம் கோச்சடையான் கோடை நகர்ந்த கதை கோபிநாத் கோவை ஆவி க்விஸ் சக்கரக்காலன் சக்தி சவுந்தர் ராஜன் சச்சின் சதுர ஆவுடைகள் சந்தானம் சந்திப்பு சந்திரமோகன் வெற்றிவேல் சந்தைப்படுத்துதல் சமுகம் சமுத்திரக்கனி சமூகம் சர்தார் வல்லபாய் பட்டேல் சாதனைப் பெண்மணிகள் சித்தன்னவாசல் ஓவியங்கள் சித்தன்னாவாசல் இலக்கிய சந்திப்பு சிவகார்த்திகேயன் சிறுகதை சினிமா சின்னவள் கவிதைத் தொகுப்பு சீனு சுகு சுய முன்னேற்றம் சுயபுராணம் சுரபி சுரேந்தர் சூப்பர்மென் வெர்சஸ் பாட்மேன் செந்தூரன் பாலிடெக்னிக் செந்தூரன் பாலியின் தொடர் சாதனை செல்பி செவன்த் சென்ஸ் செவென்த் சென்ஸ் சொன்னாங்க சோ ஸ்வீட் வலைப்பூ ஞானாலயா ஆவணப் படம் டாக்டர் ஸ்ட்ரேஞ் டான் ஆப் ஜஸ்டிஸ் டி.எம்.என்.டி Teenage Mutant Ninja Turtles (2014) டினா அரீனா டெல்லி சம்பவம் ட்ரான்ஸ்பார்மர்ஸ் ஏஜ் ஆப் எக்ஸ்டின்ஷன் தங்கமகன் தஞ்சை தபால்காரர் தமிழ் தமிழ் ஹிந்து தமிழ்ச் செம்மல் விருது தயான் சந்த் தர்மதுரை தலைமைப் பண்பு தலைவாரி பூச்சூடி தாயம்மாள் தாய்மொழி தாரை தப்பட்டை தி இத்தாலியன் ஜாப் தி பிரஸ்டீஜ் தி.ஆலை பள்ளி தியாக வரலாறு திருச்சி புகைப்பட பொருட்கள் கண்காட்சி. நிகழ்வுகள் திரை இசை திரை வி மர்சனம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் தீபிகா படுகோன் தீரன் சின்னமலை துவரங்குறிச்சி தேவதைகளால் தேடப்படுபவன் தேறி தொடர்பதிவு தொலைகாட்சி 18 தொல்காப்பியர் விருது தொல்லியல் ஆய்வுக் கழகம் தொல்லியல் சான்றுகள் தொழில் நுட்பம் தொழில் முனைவு தொழில்முனைவு தோழர் ரபீக் பதிவு நகை நடாஷா ரைட் நடிகர் சங்கத் தேர்தல் நத்தார் தின வாழ்த்துக்கள் நந்தன் ஸ்ரீதரன் நமக்கு நாமே திட்டம் நம்பிக்கை மனிதர்கள். நம்மாழ்வார் நலம் நன்றிகள் நாகூர் ரூமி நாடகக் கலைஞர்கள் நாயகர்கள் நாளைய மனிதர்களின் நேற்று நான் ஒரு குழந்தை நிகழ்வு நிகழ்வுகள் நிகில் நிறுவனம் நிகில் பயிற்சி நிலைப்பாடுகள் நிழல் பதியம் நீட் பார் ஸ்பீட் நீயா நானா நுட்பம் நூர் டீச்சர் நூல் அறிமுகம் நூல் பட்டியல் நூல் விமர்சனம் நேர நிர்வாக தளம் நேர நிர்வாகம் நேர மேலாண்மை நேர்மறைச் சிந்தனை பக்தி படிக்க வேண்டாத பதிவுகள் பட்லர் பணமதிப்பு நீக்கம் பணிநிறைவு பதிவர் சந்திப்பு 2014 பதிவர் சந்திப்பு 2015 பதிவர் சந்திப்பு 2015 ஆல்பம் பதிவர் திருவிழா 2015 பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் பயிற்சிகள் பயிற்சித்துறை பலூஸ்சிஸ்தான் பள்ளி பள்ளிக்கல்வி பாகுபலி பாட்டன் காட்டைத் தேடி பாபநாசம் பாரதி புத்தகாலயம் பாரத் ஸ்டேஜ் 4 பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7 Fast and Furious 7 பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 8 பாஸ்ட் எய்ட் பிட் டோரறேன்ட் பிரபு சாலோமோன் பிராங்கின் படங்கள் பிரார்த்தனை பிரித்தாளுதல் பிரியங்கா பிரேமா தக்ஷிணாமூர்த்தி பிரேம்சந்த் பு.கோ.சரவணன் புகைப்படத் தொகுப்பு புதியவன் புதுகை குளம் மீட்பு புதுகை செல்வா புதுகை தொல்லியல் ஆய்வுக் கழகம். புதுகையின் கல்வி முகங்கள் புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட பாறை ஓவியங்கள் புள்ளிகள் புறம்போக்கு பெரியார் பெற்றோர் பேப்பர் ஒன்று பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி பைரவா பொது பொதுப் போக்குவரத்து மேம்பாடு பொற்பனைக்கோட்டை போட்டிகள் ப்ரோசன் ப்ளாகர் டிப்ஸ் மணிகண்டன் ஆறுமுகம் மதத்தீவிரவாதம் மதுரை மதுரை வரலாறு மரபு வழி நடை மராத்திய மொழிப் படங்கள் மலர்தரு மழைமனிதர்கள் மனிதர்கள் மாட் மாக்ஸ் ஃபியூரி ரோட் Mad_Max:_Fury_Road மாணவர் போராட்டம் மாண்பு மிகு மகளிர் - அறிவியல் சுடர்கள் மாண்புமிகு மகளிர் மாதொரு பாகன் மாத்யு ப்ளோரிஸ் மாமழை நினைவுகள் மார்க் அண்டோனி மாறாப்புன்னகை மாற்றத்தின் முகங்கள் மியான்மர் மிருதன் மிஷன் இம்பாசிபிள் 5 Mission Imposible Rogue Nation முகநூல் முகநூல் நிலைத்தகவல்கள் முகநூல் பகிர்வு முத்தலாக் முத்துக்கிருஷ்ணன் முத்துநிலவன் முனைவர் மு பிரபு முனைவர் ஜம்புலிங்கம் முனைவர். அருள்முருகன் மூன்று புத்தகங்கள் வெளியீடும் குடும்ப விழாவும் மெட்ராஸ் மெமரி கார்ட் மேன்மை இதழ் அறிமுகம் மொழி மொழித்திறன் மோசன் காப்ச்சர் யாதும் ஊரே யாழியின் இரண்டு தொகுப்புகள் ரபீக் ரபீக் பகிர்வு ரம்ஜான் ரவீந்திரன் ரஜனி ரஷ் ரஹ்மான் ராஜ கோபால தொண்டைமான் ராஜ சுந்தர்ராஜன் ராஜசுந்தர்ராஜன் ராஜா சுந்தர்ராஜன் ராஜேஷ் வைத்யா ரிச்சர்ட் அட்டன்பரோ ரியோ ஒலிம்பிக் ருத்ரையா ரோக் ஒன் movie review ரோஹித் வேமுலா லாரீனா லூசி லோகன் 2017 வகுப்பறை அனுபவங்கள் வகை ஒன்று வணக்கம் வண்ணதாசன் வலைச்சரம் வலைப்பதிவர் மாநாடு வலைப்பூ நுட்பம் வள ஆசிரியர்கள் வனமகன் வாசிப்பு வாசிப்பு அனுபவப்பகிர்வு வாழ்த்துக்கள் வாழ்வியல் திறன்கள் பயிற்சி. வாழ்வியல் திறன்கள் பயிற்சி. தன்னை அறிதல் பயிற்சி வானவில் விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் விடைபெறல் விதைக்கலாம் வித்டிராயல் சிம்ப்டம் விப்லாஷ் விருது விவசாயம் விஜய் டீ.வி விஜூ கனைக்ட் விஷாலின் விஸ்வரூபம் வீணை இசை வீதி கூட்டம் வீதிக் கூட்டம் வீதிக்கூட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் வீரமுரசு சுப்பிரமணிய சிவா வெயிலில் நனைந்த மழை வெர்சடைல் ப்ளாகர் விருது வெள்ளைப் புலி வெற்றி இலக்கியம் வைகறை வைகறையின் ஜெய் நல நிதி ஜல்லிக்கட்டு ஜாக்கி சேகர் ஜாதவ் ஜூராசிக் வோர்ல்ட் ஜெயப் பிரபு ஜெர்மனி ஜே.சி. பயிற்சி ஜேசி இயக்கம் ஜோக்கர் ஜோசப் விஜூ ஷபானா பாஸிஜ் ஷாமிலா தலுவத் ஷாருக்கான் ஷான் கருப்புசாமி ஷாஜகான் ஸ்டான்லி குப்ரிக் ஸ்பாய்லர் ஸ்பிலிட் ஸ்ரீதர் சுப்பிரமணியன் ஹாக்ஸா ரிட்ஜ் ஹாண்ட்ஸ் ஆப் ஸ்டீல் ஹாலிவுட் ஹெர்குலிஸ்