செவன்த் சென்ஸ் பயிற்சிகளும் செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரியும்

நமனசமுத்திரம் பள்ளியில் தலைமை ஆசிரியர் அய்யா சிவகுருனாதனுடன் 

ஒரு நாள் எனது பயிற்சித்துறை குருஜி திரு.ஆர்.ஆர். கணேசன் அவர்கள் பள்ளி  மாணவர்களுக்கு நினைவாற்றல்  பயிற்சி தரவேண்டும் வருகிறீர்களா என்று அழைக்க  குருநாதர்களில் ஒருவர் அழைக்கும் பொழுது அவரது நம்பிக்கையை காப்பாற்றவேண்டுமே என்று இசைந்தேன்.


செவன்த் சென்ஸ் பயிற்சி நிறுவனம் மூலம் பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்வியல் திறன்களைத்தர திட்டமிட்டிருப்பதாகவும்  இணைந்து செய்யலாமா என்றார்.

நீண்ட நாட்கள்  பயிற்சியில் இருந்து விலகி இருந்த என்னை மீண்டும் பயிற்சி துறைக்கு அழைத்த வாய்ப்பு. வாய்ப்புகளை பயன்படுத்த மறுக்கிறவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்துவிட்டு நானே ஒரு வாய்ப்பை மறுப்பது எப்படி முறையாகும்.

முதல் பயிற்சியை கிளாங்காடு பள்ளியில் துவங்கி அடுத்து புத்தாம்பூர் அரசினர் மேல்நிலையிலும், அரிமளம் பள்ளியிலும் தொடர்ந்து இன்று இரண்டு பள்ளிகளில் ஒரே நாளில் பயிற்சியை தர முடிந்தது.

காலை முதல் நிகழ்வாக நமனசமுத்திரம் பள்ளியிலும், தொடர்ந்து நான் பயின்ற இராஜகோபாலபுரம் பள்ளியும் ஒரே நாளில் பயிற்சியைத் தர முடிந்தது மகிழ்வு.

நான் பயின்ற பள்ளியில் மாணவர்களிடம் சொன்னேன் எண்பதுகளில் இங்கே பயின்ற நான் ஆசிரியர் ஆகியிருக்கிறேன். 

இராஜகோபாலபுரம்  பள்ளியில் நண்பர் ராஜேஷுடன் 
நீங்கள் என்ன ஆகவேண்டும் என்றபோது நம்பிக்கையோடு எழுந்த பதில்கள் இன்ற நாளை அர்த்தமுள்ளதாக்கின.

நன்றி

குருஜி,
செந்தூரன் பாலி
மற்றும்
இராஜகோபலபுரம் பள்ளி ஆசிரியரும்  எனது வகுப்புத் தோழருமான திரு.ராஜேஷுக்கும்
முசிதமு பள்ளி தலைமையாசிரியர் தமிழ்தென்றல் திரு. சிவகுருனாதன் அய்யா அவர்களுக்கும்.

குழந்தைகளுக்கு ஒரு கூடுதல் நன்றி.

அன்பன்
மது 

Comments

  1. நல்ல முயற்சிகள் தொடரட்டும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சிறப்பானா முயற்சி வாழ்த்துகள் தோழர்!

    ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை