நுட்பம் நாம் எட்ட வேண்டிய தொலைவு

எனது நண்பர் ஒருவர் கட்செவியில் ஒரு காணொளியை அனுப்பி வைக்க அதை மாணவர்களிடம் பகிர்ந்தேன் நான். கட்டிடப் பொறியியல் நுட்பத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் எவ்வளவு இருக்கிறது என்று ஏங்க வைத்த காணொளி.சீனாக்காரர்கள் தரமற்ற பொருட்களை சந்தைப்படுத்துகிறார்கள் என்கிற குற்றச் சாட்டு உண்டு.  ஆனால் அவர்களின் நாட்டில் அவர்கள் பயன்படுத்தும் கட்டிடப் பொறியியல்  நுட்பங்கள் இரண்டாம் தரம் அல்ல.சீனாக்காரர்கள் இப்படி என்றால் தங்களின் எண்ணைவளத்தைக் கொண்டு வானைச் சுரண்டும் கட்டிடங்களை எழுப்பும் துபாய் இன்னொருபக்கம் நமக்கு பழிப்புக் காட்டுகிறது.

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபா கோபுரத்தின் மீது அமைக்கப்  பட்ட ஒரு கிரேனின் உச்சியில் இருக்கும் அதன் இயக்கும் பொறியாளருடன் ஒரு படம் வந்தது.

கீழே இந்தச்   செய்தியுடன்.

உலகின் உயர்ந்த கட்டிடத்தின் மீது இருக்கும் கிரேனை இயக்குபவர் நம்ம சென்னையிலிருந்து வந்த பாபு! என்றது அந்த செய்தி. நம் மனித ஆற்றல்கள் இப்படி உலகின் பெரும்பாலான கட்டிடங்களோடு நம்மவர்கள் தொடர்போடு இருப்பது மகிழ்வே என்றாலும், இவர்களின் அத்துணை ஆற்றலையும் உள்நாட்டில் செயல்படுத்த ஒரு தலைவன் வரவேண்டும் என்பது பேராசை அல்லவே.


நமக்கு என்ன குறை,

சொத்து குவிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் அரசியல் தலைமைகள்தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. நமது மௌனம் அவர்களின் கொள்ளை அடிக்கும் உரிமம் என்பதை நாம் எப்போது உணர்கிறோமோ அதுவரை இந்த வியாதி நீடிக்கும்.

நல்ல கூர்நோக்குள்ள அரசியல் தலைமைகள் வரட்டும். 

Comments

 1. ///நமது மௌனம் அவர்களின் கொள்ளை அடிக்கும் உரிமம் என்பதை நாம் எப்போது உணர்கிறோமோ அதுவரை இந்த வியாதி நீடிக்கும்./////

  மிக மிக சரி

  ReplyDelete
 2. மாற்றம் வீட்டிலிருந்து வரவேண்டும் என்பது சரி! துடிப்புள்ள இளைஞர்கள் துணிந்தால் நிச்சயம் இந்தியா ஒளிரும்!

  ReplyDelete
 3. நம் மனித ஆற்றல்கள் இப்படி உலகின் பெரும்பாலான கட்டிடங்களோடு நம்மவர்கள் தொடர்போடு இருப்பது மகிழ்வே என்றாலும், இவர்களின் அத்துணை ஆற்றலையும் உள்நாட்டில் செயல்படுத்த ஒரு தலைவன் வரவேண்டும் என்பது பேராசை அல்லவே.// நிச்சயமாக பேராசை அல்ல. இது எல்லா துறைகளிலும் இருப்பதால் தான் நம்மவர்கள் வெளியில் செல்வது. நோபல் பரிசு பெறுவது உட்பட. அங்கு சென்று ஆராய்ச்சி மேற்கொள்ளும் விதத்தில் நம்மூர்...
  நமது மௌனம் அவர்களின் கொள்ளை அடிக்கும் உரிமம் என்பதை நாம் எப்போது உணர்கிறோமோ அதுவரை இந்த வியாதி நீடிக்கும்.

  நல்ல கூர்நோக்குள்ள அரசியல் தலைமைகள் வரட்டும். // உண்மைதான்...மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று அரசியல் தலைக்ள் புரிந்துகொண்டுவிட்டனர்..அதான்..

  ReplyDelete
 4. குமாரசாமிகளும் ஒரு காரணம் :)

  ReplyDelete
 5. சீகீரமே ஒரு மாற்றம் வரும் அய்யா...

  ReplyDelete
 6. என்ன வளம் இல்லை நம் நாட்டில்
  ஆயினும்
  வேதனைதான் நண்பரே
  நன்றி
  தம +1

  ReplyDelete
 7. இங்கு அரசியல் தான் முதலில். மற்ற அனைத்தும் பின்னரே.

  ReplyDelete
 8. கடைசியில் சொன்னீங்க பாருங்க...நமது மௌனம் அவர்களின் கொள்ளை அடிக்கும் உரிமம் என்று அதுதான்... அதேதான்... நாம் எருமை மாட்டு மேல மழை பேய்ஞ்சது மாதிரி இருப்பதே காரணம்... இங்கெல்லாம் எல்லாருக்கும் கேள்வி கேட்கும் உரிமை இருக்கு... அது எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் நம் மீது தவறில்லை எனில் தாரளமாக கேள்வி கேட்கலாம்... ஆனால் நம்மூரில்... பஞ்சாயத்து முதல் பாராளுபவர்கள் வரை எல்லாருக்கும் நாம அடிமைதான்... அருமை மது சார்...

  ReplyDelete
 9. அருமை மது, பலநேரம் “மௌனம் சம்மதமில்லை“ என்பதே உண்மை. இதை எப்போது புரிந்கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை. புரிந்து செயல்படத் தொடங்கிவிட்டால் உங்கள மௌன உடைத்தல் செயல்படுகிறது என்று பொருள்

  ReplyDelete
 10. அன்புள்ள அய்யா,

  பிரமிக்க வைக்கும் கட்டுமானத் தொழில் நுட்பம்.

  நன்றி.
  த.ம.4

  ReplyDelete
 11. மாற்றம் வரட்டும்......

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை