இடரில் எழுந்த நம்மிக்கை சுடர்கள் 5


நூற்றாண்டில் மாமழையை சென்னை சந்தித்து தத்தளித்த பொழுது மனிதம் மட்டுமே மக்கள் மனதில் இருந்தது.

ஒரு புறம் மனிதர்கள் செத்தைகள் போல  அடித்துச்  செல்லப்பட்ட பொழுது மறுபுறம் மடையுடைத்து பிரவகித்தது மனித நேயம்.

நெகிழ்வூட்டும் எத்தனையோ சம்பவங்கள் நடந்தன.

தன்னைக் காத்த இஸ்லாமிய  இளைஞனின் பெயரை தனது குழந்தைக்கு சூடிய நிகழ்வை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா என்ன?

ஒரு பெண் குழந்தைக்கு யூனுஸ் என்னும் பெயர் எத்துனை நெகிழ்வைத் தருகிறது.

இன்னொருபுறம் மழை வெள்ளத்தில் உயிர் பிழைக்க படகில் மிகுந்த சிரமத்திற்கிடையே ஏறிய ராஜ் கிரண். திரையில் ஒரே உதையில் நூறு பேரைப் பறக்கவிடும் அதிரடி நட்சத்திரம் அவர். வெள்ளம்  யார் பெரிய  வில்லன் என்று காட்டிவிட்டது.

நினைவுகள் தொடரும் 

Comments

 1. மழை வெள்ளம் மனிதத்தைக் கொணர்ந்துவிட்டது.

  ReplyDelete
 2. அன்புள்ள அய்யா,

  புகைப்படத்தைப் பார்க்கின்ற பொழுது நெஞ்சம் கனக்கிறது. அந்த பிஞ்சுவின் உள்ளம் எப்படி இருந்திருக்கும்...?

  த.ம.2

  ReplyDelete
 3. இயற்கைக்கும் முன் எல்லோரும் ஜுஜுபிதான்..அந்த இயற்கை மனிதத்தை உலகிற்குப் பறைசாற்றியது என்பதை யாராலும் மறுக்க முடியாது!

  ReplyDelete
 4. //மழை வெள்ளத்தில் உயிர் பிழைக்க படகில் மிகுந்த சிரமத்திற்கிடையே ஏறிய ராஜ் கிரண். திரையில் ஒரே உதையில் நூறு பேரைப் பறக்க விடும் அதிரடி நட்சத்திரம் அவர் வெள்ளம் யார் பெரிய வில்லன் என்று காட்டிவிட்டது//

  சரியானதொரு சவுக்கடி தோழரே.. இதை ரசிகன் என்ற பாமரன் இனியெனும் உணர வேண்டும்.
  தமிழ் மணம் 3

  ReplyDelete
 5. வெள்ளம் அனைவரையும் புரட்டிப் போட்டு சமப்படுத்தி பார்த்துவிட்டது!

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை