காதல் இசைப்பாடல் ஒன்று


மாஸ்க் ஆப் ஸாரோ என்கிற  திரைப்படம்  வந்து திரையரங்குளை தெறிக்க விட்ட 1998. நாயகன் அன்டோனியோ பண்டாரஸ் எனது விருப்பதிற்குரிய  கதாநாயகன் என்பதாலும் படத்தில் அவருக்கு குருவாக வரும் ஆண்டனி ஹாப்கின்சின் அதகள நடிப்பும் எனக்கு பிடித்தமான ஒன்று என்பதாலும் பார்த்த படம். மச்சான் மதுரைத் தமிழன் சும்மா உண்மையச் சொல்லுப்பா கேதரின் ஜெட்டா ஜோன்ஸ்க்காகத்தானே படம் பார்த்தாய் என்றால் ஆமாப்பா ஆமா. அதுவும் உண்மைதான்.

படத்தைவிட எப்போதும் என் நினைவில் இருப்பது படத்தின் ஒ.எஸ்.டிதான்!
அந்த காலகட்டத்தில் மார்க் ஆண்டனி இன்னொரு பாடலில் கலக்கியிருப்பார். அது இன்று நினைவில் வரவில்லை. டினாவின் குரல் எனது நீண்ட நாள்  நட்பு.



இருவரும்  இணைந்து இந்தப் படத்தற்கு ஒரு பாடலைத்தர அது என் மனசின் ஆழங்களில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டது.

கவிதையை அப்படியே ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன்.

தமிழில் முயற்சித்திருக்கிறேன்..
பிரம்மாக்கள், தமிழ் இளங்கோ, காரிகன்  ஜி போன்றோர் வருந்த வேண்டாம் ஆனால் திருத்த முழு உரிமை உண்டு.

ஆங்கில மூலம்
தமிழ் முயற்சி
"I Want To Spend My Lifetime Loving You"
(with Marc Anthony)

Moon so bright night so fine
Keep your heart here with mine
Life's a dream we are dreaming
Race the moon catch the wind
Ride the night to the end
Seize the day stand up for the light

I want to spend my lifetime loving you
If that is all in life I ever do

Heroes rise heroes fall
Rise again, win it all
In your heart, can't you feel the glory
Through our joy, through our pain
We can move worlds again
Take my hand, dance with me

I want to spend my lifetime loving you
If that is all in life I ever do

I will want nothing else to see me through
If I can spend my lifetime loving you
Though we know we will never come again
Where there is love, life begins
Over and over again
Save the night, save the day
Save the love, come what may
Love is worth everything we pay

I want to spend my lifetime loving you
If that is all in life I ever do
I want to spend my lifetime loving you
If that is all in life I ever do                   
I will want nothing else to see me through
If I can spend my lifetime loving you
நிலவு  மிகப்  பிரகாசமாக, இரவு  அருமையாக
உனது  இதயத்தை எனது  இதயத்தில் வை
வாழ்வு   கனவு, நாம்  கனவில்  இருக்கிறோம்
நிலவை விரட்டு  காற்றைப் பிடி
இரவின் மீது இறுதி வரை பயணிப்போம்
விடியும் நாளைப் பிடிப்போம் வெளிச்சத்திற்கு எழுவோம்

ஆயுள் முழுதும் உன்னை நேசித்தே கழிக்க விரும்புகிறேன்
இதை மட்டுமே, இது மட்டுமே நான் செய்ய விரும்புவது

நாயகர்கள்  எழுகிறார்கள் நாயகர்கள் விழுகிறார்கள்
மீண்டும் எழுகிறார்கள் வெல்கிறார்கள்
உன் இதயம் அந்தப்  புகழை உணரவில்லையா
எங்கள் மகிழ்விலும், எங்கள் துக்கத்திலும்
எங்களால் உலகை மீண்டும் நகர்த்த முடியும்
என் கரம் பற்று, என்னுடன் நடமிடு.

ஆயுள் முழுதும் உன்னை நேசித்தே கழிக்க விரும்புகிறேன்
இதை மட்டுமே இது மட்டுமே நான் செய்ய விரும்புவது

வேறொன்றும்  வேண்டாம்
உன்னை நேசித்து வாழும் வாழ்வே  போதும்

நன்றாகத் தெரியும் நாம் மீண்டும் இங்கே வரப்போவதில்லை
ஆனால் எங்கே காதல் இருக்கிறதோ, வாழ்வு  துவங்குகிறது
மீண்டும் மீண்டும்

பொதித்துவை இரவை, பொதித்துவை பகலை
பொதித்துவை அன்பை, எதுவந்தாலும் என்ன
நம் நேசம் நாம் தரும் விலைகளுக்குகந்ததுதான்

ஆயுள் முழுதும் உன்னை நேசித்தே கழிக்க விரும்புகிறேன்
இதை மட்டுமே இது மட்டுமே நான் செய்ய விரும்புவது
ஆயுள் முழுதும் உன்னை நேசித்தே கழிக்க விரும்புகிறேன்
இதை மட்டுமே இது மட்டுமே நான் செய்ய விரும்புவது

வேறொன்றும்  வேண்டாம்
உன்னை நேசித்து வாழும் வாழ்வே  போதும்

இப்போ அந்தப் பாடல்..



டெடிகேட்டு
தனது காதலியை நேசிக்கும் அனைவருக்கும்
பூரிக்கட்டை கையில் இருந்தாலும் மனைவியையும் நேசிக்கும் கணவர்களுக்கும் ..
மகிழ்ச்சி எங்கும் நிறைந்தால் சரி ...

நன்றி
வன்கோம்


Comments

  1. தகவல் நன்று தோழரே
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. ஏன்? காதலிகளுக்கும் மனைவிகளுக்கும் இல்லையா அண்ணா?
    :)))

    மொழிபெயர்ப்பு கலக்குங்க :)

    ReplyDelete
    Replies
    1. உடல் மொழி குறித்துப் படித்துக் கொண்டிருந்த பொழுது பர்சனல் ஸ்பேஸ் குறித்து அறிய முடிந்தது ...

      இரண்டடிக்கும் குறைவான தூரத்தில் நிற்க பெண்கள் அனுமதிப்பது காதலர்களை மட்டுமே.. என்றது நூல்
      விழுந்து விழுந்து சிரித்தேன்..

      காதல் மட்டுமே ஓரு பெண்ணின் அருகே செல்ல அனுமதிக்கும் அதும் எக்ஸ்ட்ரீம் பர்சனல் ஸ்பேசில் ...
      ...
      உங்கள் கேள்வி எனக்கு இதை நினைவூட்டியது ...

      எப்போது நினைத்தாலும் நகைப்பை தரும் வாசிப்பு அனுபவம் அது ..

      அப்புறம் சகோ நீங்கள் டெடிகேட் கடைசி வரியை பாக்லையா ...

      நன்றிகள்

      மொழிபெயர்ப்பு
      ஒரே சிட்டிங்கில் செய்தது அரைமணிநேரத்தில் எனவே எனக்குத் நிறைவு இல்லை!

      எனவேதான் காரிகன் ஜி யை கோர்த்திருக்கிறேன்

      Delete
    2. https://en.wikipedia.org/wiki/Proxemics

      பர்சனல் ஸ்பேஸ் குறித்து மேலும் அறிய

      Delete
  3. அழகு தோழர். இதைத் தொடர்வதும் தொகுப்பதும் அவசியம்

    ReplyDelete
    Replies
    1. நான் விரும்பி கேட்ட பல ஒ.எஸ்.டிக்களில் சில காட்சிகளுக்காக யோசித்தேன்..
      இப்படி பாடல் வரிகள் மட்டும் வரும் காணோளிகளாக தேர்ந்த்தெடுக்க வேண்டும்

      முயல்கிறேன் தோழர்
      வருகைக்கு நன்றி

      Delete
  4. மொழிபெயர்ப்பு அருமை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி
      பெரும்தலைகள் இங்கே இருக்கிறார்கள்.
      அவர்கள் பாடலை வேறு உயரத்திற்கு கொண்டு செல்வார்கள்..
      ஆனால் நான் ஜஸ்ட் லைக் தட் முயன்றேன்..
      அவ்வளவே

      நல்லா இருக்கு என்பது உங்களின் பெருந்தன்மை..
      இன்னுமே முயல்கிறேன் அடுத்தப் பாடல்களுக்கு

      Delete
  5. நமக்கு ஆங்கிலம் வீக்.. ஆனால் மொழிப்பெயர்த்து போட்டுள்ளதால் புரிந்து கொண்டேன், ரசனை சார்.....

    ReplyDelete
  6. நண்பர் மது,

    ost என்றாலே நம்மில் பலருக்கு டைட்டானிக்கின் சலீன் டியான் பாடலான my heart will go on தான். எனக்கோ அது கொஞ்சமும் பிடிக்காது. படு போர். நீங்கள் சோரோ விலிருந்து ஒரு பாடலை பிடித்திருக்கிறீர்கள். பலே. கம்பியூட்டர் வரும் முன் தியேட்டரில் படம் பார்த்தபோது பார்த்து கேட்டது. பிறகு டி வி யில் இந்தப் படத்தைப் பார்க்கும் சமயங்களில் சில முறை கேட்டிருக்கிறேன். உங்கள் பதிவின் மூலம் இப்போது மீண்டும் கேட்கிறேன். நல்ல மெலடி.

    Lost in translation என்று சொல்வார்கள். என்னதான் அப்படியே மற்ற மொழியின் ஆன்மாவை பெயர்த்து எடுத்துக்கொண்டு வந்தாலும் சில உணர்வு இழைகள் இந்த மொழி மாற்றத்தில் சிதைந்து போவது இயல்பானதே.

    இருந்தும் உங்கள் தமிழாக்கம் சிறப்பாகவே இருக்கிறது. நீங்கள் பாடலின் வரிகளுக்கு தகுந்த மரியாதை செய்திருப்பதாக நினைக்கிறேன். நானாக இருந்தால் கண்டபடி வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும்.

    முடிந்தால் Gary Moore என்ற இசைஞனின் empty rooms என்ற பாடலைக் கேட்டுப்பாருங்கள். காதலின் பிரிவை வலிக்க வலிக்கச் சொல்லும் ரணகளம். கேரி மூர் வாசிக்கும் கிடார் இசை மிகப் புகழ் பெற்றது. இதைப் படித்ததும் அது எனக்குத் தோன்றியது.

    ReplyDelete
  7. என்னமோ சொல்லவருகிறீர்கள்...கோபித்துக்கொள்ளாதீர்கள்...எனக்கு இன்னும் அந்த அளவிற்கு வளரவில்லை அறிவு...உங்கள் மொழிபெயர்ப்பு அபாரம்.. அந்த கவிதையை ரசித்தேன்..அழகு.

    ஆயுள் முழுதும் உன்னை நேசித்தே கழிக்க விரும்புகிறேன்
    இதை மட்டுமே, இது மட்டுமே நான் செய்ய விரும்புவது//

    நல்ல வரிகள்..

    ReplyDelete
  8. அழகான வரிகள்...//ஆயுள் முழுதும் உன்னை நேசித்தே கழிக்க விரும்புகிறேன்
    இதை மட்டுமே இது மட்டுமே நான் செய்ய விரும்புவது
    வேறொன்றும் வேண்டாம்
    உன்னை நேசித்து வாழும் வாழ்வே போதும்// ஆஹா!!! பொதுவாக மொழிபெயர்ப்பில் கருத்து கலையும்...என்றாலும் உங்கள் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது. ரசித்தோம்..

    ReplyDelete

Post a Comment

வருக வருக