Posts

Showing posts from March, 2016

அன்னவாசல் கே. ரெங்கசாமி தியாக வரலாறு நூல் அறிமுகம்

Image
தனிநபர் சரிதங்கள் வருவது இந்தக் காலங்களில் அரிது. அதுவும் பொதுவுடைமை இயக்கங்களில் பணியாற்றியோர் குறித்து நூல்கள் வருவது குதிரைக் கொம்பு. 
இந்தச் சூழலில் அன்னவாசல் கே.ரெங்கசாமி குறித்த வாழ்க்கை வரலாறு வெளியாகியிருப்பது இரண்டு விசயங்களை நமக்குச் சொல்கிறது. ஒன்று அன்னாரின் தியாகம் இன்றும் தோழர்களால் நினைவுகூரப்படுகிறது. இன்னொன்று அவரது சாதுர்யமான செயல்பாடுகள் சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல்  இன்றய தோழர்களுக்கு ஆதர்சமாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

அலையும் குரல்கள் கவிதைத் தொகுப்பு ஒரு அறிமுகம்

Image
தமிழ்க் கவிதைகள் காதல், நிலா, காமம், நட்பு, புறக்காட்சிப் படிமம் என்கிற தளங்களைவிட்டு வெகு அரிதாகவே வெளியில் வருகிறது. 
அகரம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் கவிஞர் நீலாவின் அலையும் குரல்கள் தொகுப்பின் கவிதைகள் தமிழகம் குடியில் தள்ளடுவதை சமரசமின்றி பேசுகின்றன.  குடிநோயின் சமூகத் தாக்கத்தை பெரும் விம்மலாக வெடித்திருக்கின்றன. 

டான் ஆப் ஜஸ்ட்டிஸ்

Image
ஒரு  சூப்பர் ஹீரோவை   வைத்து  படம்  எடுத்த காலமெல்லாம் மலையேறி  இப்போ  பிரேமுக்கு  பிரேம்  சூப்பர் ஹீரோக்கள் நிரம்பிய  படங்கள்  வரத் துவங்கியிருகின்றன. மார்வல், டிடக்ட்டிவ் காமிஸ்  போன்ற  பெரும் காமிக்ஸ்  நிறுவனங்கள்  சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை  உருவாக்கி அவற்றிற்கு ஒரு  மாபெரும்  சந்தையை வைத்திருக்கின்றன.

குவிஸ் குவிஸ் குவிஸ்

சூரியனின் வெப்பத்திற்கு காரணம் ?

ஹைட்ரஜன் எரிந்து ஹீலியமாக மாற்றப் படுகிறது

கிரீன்விச் தீர்க்கக் கோட்டுடன் தொடர்புடையது

கிரீன்விச் இடத்திலுள்ள வானவியல் ஆராய்ச்சிக்கூடம், லண்டனில் அமைந்துள்ளது, o டிகிரி தீர்க்க கோடு.

இரவில் மின்னும் நட்சத்திரங்கள் பகலில் வானில் தென்படாதன் காரணம்
சூரிய வெளிச்சத்தால் மறைக்கப்படுவதால்

புவியின் வட, தென் துருவங்களை இணைக்கும் கற்பனைக் கோடுகள்

தீர்க்கக் கோடுகள்

நட்சத்திர தொகுதி என்பது
அண்டமாகும்.

புவிக் கோளத்தின் நடுவில் வரையப்பட்டுள்ள o டிகிரி அட்சக் கோடானது
பூமத்திய ரேகை

பால்வழி அண்டத்தின் வடிவமானது
சுருள் வடிவம்.

பூமியின் மொத்த பரப்பளவு
510 மி.ச.கி.மீ

தாமாகவே ஒளிரும் தன்மை கொண்டது
நட்சத்திரங்கள்.

சூரியனில் அதிகம்(92 %) உள்ள வாயு
ஹைடிரஜன்

சூரியக் குடும்பத்திற்கு அருகிலுள்ள நட்சத்திரம்
பிராக்சிமா சென்டாரி

அட்சக் கோடுகள் புவிக் கோளத்தின் மீது கற்பனையாக எவ்வாறு வரையப்பட்டுள்ளன
கிழக்கு மேற்காக

புவியில் உயிரினங்கள் தோன்றுவதற்கும் தோன்றிய உயிரினங்கள் பெருகுவதற்கும் அடிப்படையாக விளங்குவது
சூரிய ஒளி

சூரியனில் எங்கிருந்து வெளிப்படும் வெப்பநிலை அதன் பேரொளிக்கு காரணம…

ஈழத்தின் குரலாக ஓர் கவிதை - ஐ. பிரகாசம்

மீண்டும் ஓர் முள்ளி வாய்க்கால்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறான்
நிராயுதபாணிகளோடு நிகழ்த்துவதை
நிஜ யுத்தம் என்பவன்தான்
நிலை தடுமாறிப் பேசுவான்

எல்லாம் முடிந்தது என்றவன்
மீண்டும் ஒரு முள்ளி வாய்க்காலென்றால்
முடியவில்லை என்ற பொய்த்திரையை
முடிந்தவரை கிழித்துவிட்டான்
முழங்கும் ஒருநாள் வெற்றிப் பேரிரைச்சல்


வரலாறு தெரியாது வாளேந்துபவனுக்கு
ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் உரிமைக்குரல்
ஒருபோதும் ஓய்வதில்லை
நெல்சன் மண்டேலாக்களின்
நெடிய போராட வெற்றி புரியாததுதான்


உறங்கப் போடும் குழந்தையா
முள்ளி வாய்க்கால் கதை சொல்ல
வெற்றி ஒருவனுக்கே சொந்தமென்றால்
ஆங்கில ஏகாதிபத்தியத்திடம்
அஹிம்சைப்போர் தொற்றிருக்குமே


கை காலிழந்தார்
கண்ணிழந்தார், கற்பையும் இழந்தார்
ஒன்றை மட்டும் இழக்கவே இல்லை
இறுதிவெற்றி எமக்கென்ற
உயிரினும் மேலான இலட்சியத்தை


மரங்கள் சாய்ந்து போகலாம்
வேர்கள் விதை இடும்
உடல் சாய்ந்து போகலாம்
உரிமைக்குரல் உயிர் மூச்செடுக்கும்
ஆண்ட வரலாறு அப்படியே பதிவாகும்


வாளை எடுத்தவன் வாளால் மடிவான்
வேதங்கள் சொல்கிறது
மனிதமும் மாசும் மோதினால்
வெற்றியின் காலம் தாமதிக்கலாம்
மனிதம் ஒருபோதும் தோற்பதில்லை


இனி ஒன்றென்ன
நூ…

கேவல் நதி யாழியின் கவிதைத் தொகுப்பு

Image
யாழியின் கேவல் நதித் தொகுப்பின்  கவிதை வரிகளில் புவியதிர்ந்து அடங்குகிறது, உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்தத் தொகுப்பினை வெளியீட்டின் மறுநாளே கவிஞர் வைகறை மூலம் பெற முடிந்தது மகிழ்வு.

இன்னுமொரு சிறுகதை. புன்னகை

Image
நல்லூர். அப்படி ஒன்றும் பெரிய நாடல்ல, ஆனால் வணிகமுக்கியத்துவம் கொண்ட ராஜபாட்டையில் தவிர்க்க முடியாத இடத்தில் இருந்தததால் அனைவரும் அறிந்த சிற்றரசு.

நல்லூர் அன்று திருவிழாக்கோலம் கொண்டிருந்தது. வரவேற்பு வளைவுகள், அலங்காரத்தோரணங்கள் தலைநகர் செந்திரையை அலங்கரித்தன.
உலகின்பேராசான் புத்தன் வருகிறான், அரசரின் அரண்மனைக்கு!

வெற்றுப் பொருமல்

Image
நான் சமீபத்தில் நடந்த கவுரவக் கொலை குறித்து ஏதும் சொல்ல விரும்பவில்லை.

நட்பு வட்டத்தில்இருக்கும் பல நண்பர்கள் தொடர்ந்து கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு என்றால் இந்நேரம் வார்த்தைகளை செருப்பு மாலைகளாய் தொடுத்து சாதிவெறி நாய்களை சவட்டி எடுத்திருப்பேன்..

இப்போது எல்லாம் மரத்து போய்விட்டது...

இளவல் ஒருவரின் காதல் திருமணம் அது தொடர்பான மிககசப்பான அனுபவங்கள்தான் காரணம்.

இரண்டு இளம் இதயங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் கசப்பை இங்கே கொட்ட முடியவில்லை.

சரி நான் விசயத்திற்கு வருகிறேன்.

நல்ல மனிதர்கள் ஒருபோதும் காதலை எதிர்ப்பதில்லை.

எனது வட்டத்தில், எனது வாழ்வனுபவங்களுக்குள் நான் சந்தித்த மனிதர்களில் பலர் தங்கள் குழந்தைகள் ஒருபோதும் தவறான தேர்வை செய்யவே மாட்டார்கள் எனவேதான் திருமணத்திற்கு சம்மதித்தேன் என்று சொன்ன உயர்ந்த உள்ளங்களாக இருக்கிறார்கள்.

காதலை கடுமையாக எதிர்பவர்களும் எனது வட்டத்தில் இருக்கிறார்கள்.
பொதுவாக அவர்கள் குடிகார்கள், மனைவி உயிருடன் இருக்கையில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்துவிட்டு சபையில் ஒழுக்கம் தூய்மை என்று பேசி கண்ணீர் விட்டு அழுவார்கள். இத்தகு ஜந்துக்க…

மாறாப் புன்னகை

Image
மனசு றெக்கை கட்டிப்பறந்தது. சீரான தட் தட்டில் மிதந்தது புல்லட். ஆசை ஆசையாக வாங்கியது.

நட்பு வட்டத்தில் இசை

Image
சில நாட்கள் முன்பு இரவு வீட்டில் புத்தக அலமாரி ஒன்றைச் சரிசெய்து கொண்டிருந்தேன்.

ஒரு விடைபெறல்

Image
பிரியத்திற்குரிய  சகோதரி இளமதியின் கணவர், நெடிய  போராட்டத்திற்கு  பிறகு  இறையடி சேர்ந்தார்  என்கிற செய்தி  இன்று  காலைதான்  எனக்குத்  தெரிய வந்தது.

ஒரு தமிழனின் அமெரிக்க கோவில் அனுபவம் !

Image
சிறப்பு வகுப்பில்  இருக்கும்  பொழுது  ஒரு  அலைபேசி  அழைப்பு! எதிர்பாரா  அழைப்பு  சீனு. சரியாக  தேர்வு நேரத்தில்  பலரும்  பயன்பெறும்  வகையில்   ஒரு  அசத்தல்  பதிவை  எழுதிவர் பதிவின்  பின்னூட்டத்தை  அவரது  வலையில்  தருமுன்னே  அமேரிக்கா  சென்று விட்டார்!

டெக்ஸ்சாஸில்  இருக்கும்  அவரின் ஒரு  பதிவை  இங்கே  பகிர்கிறேன்.

எது தேசவிரோதம்? - கரன் தாப்பர்

Image
இந்த முக்கியமான கட்டுரையை தமிழாக்கம்  செய்தவர் வெள்ள நிவாரண நட்சத்திரம் திரு ஷாஜகான், புது தில்லி.
எது தேசவிரோதம்?
- கரன் தாப்பர்
(இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்) நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் ரோகித் வெமுலா குறித்து நடைபெற்ற விவாதமும், கடந்த வாரம் ஜேஎன்யு விவகாரத்தில் கன்னையா குமாருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி அளித்த கருத்துகளும் வியப்புக்குரிய ஒரு கேள்வியை எழுப்பியுள்ளன : எது தேச விரோதம், எது தேசவிரோதம் இல்லை என்பது குறித்து நமக்கு தெளிவாகத் தெரியுமா? இல்லை என்றே நினைக்கிறேன். இரண்டு தரப்பிலும் நாம் பிடிவாதமான கருத்துகளைக் கொண்டிருக்கிறோம், ஆனால் நமது தீர்ப்பில் நமது ஆர்வங்களின் தாக்கம் ஏற்பட்டு, நாம் முன்பைவிட குழம்பிப் போகிறோம்.