வெற்றுப் பொருமல்


நான் சமீபத்தில் நடந்த கவுரவக் கொலை குறித்து ஏதும் சொல்ல விரும்பவில்லை.

நட்பு வட்டத்தில்இருக்கும் பல நண்பர்கள் தொடர்ந்து கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு என்றால் இந்நேரம் வார்த்தைகளை செருப்பு மாலைகளாய் தொடுத்து சாதிவெறி நாய்களை சவட்டி எடுத்திருப்பேன்..

இப்போது எல்லாம் மரத்து போய்விட்டது...

இளவல் ஒருவரின் காதல் திருமணம் அது தொடர்பான மிககசப்பான அனுபவங்கள்தான் காரணம்.

இரண்டு இளம் இதயங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் கசப்பை இங்கே கொட்ட முடியவில்லை.

சரி நான் விசயத்திற்கு வருகிறேன்.

நல்ல மனிதர்கள் ஒருபோதும் காதலை எதிர்ப்பதில்லை.

எனது வட்டத்தில், எனது வாழ்வனுபவங்களுக்குள் நான் சந்தித்த மனிதர்களில் பலர் தங்கள் குழந்தைகள் ஒருபோதும் தவறான தேர்வை செய்யவே மாட்டார்கள் எனவேதான் திருமணத்திற்கு சம்மதித்தேன் என்று சொன்ன உயர்ந்த உள்ளங்களாக இருக்கிறார்கள்.

காதலை கடுமையாக எதிர்பவர்களும் எனது வட்டத்தில் இருக்கிறார்கள்.
பொதுவாக அவர்கள் குடிகார்கள், மனைவி உயிருடன் இருக்கையில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்துவிட்டு சபையில் ஒழுக்கம் தூய்மை என்று பேசி கண்ணீர் விட்டு அழுவார்கள். இத்தகு ஜந்துக்களை நான் சந்தித்துள்ளேன்.

மேலும் ஒரு கசப்பாக இந்த சாதியத்தை காப்பதில் பெண்களின் பங்கு அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால் சூழலின் அழுத்தம் காரணமாக.
சுற்றத்தார் என்ன சொல்வார்களோ என்ற பயம் இவர்களைத் தின்ன இவர்கள் விசத்தை தாங்கள் பெற்று வளர்த்த குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு அவர்களை குலதெய்வமாக வழிபடத்துவங்குகிறார்கள்.

தீப்பாஞ்சி அம்மன்களும், வெள்ளயம்மாள்களும் பலியாகத்தான்  வேண்டும் .
தொடர்பே இல்லாவிட்டாலும் இது நமது அறுபதுஆண்டு கல்வி முறையி்ன் அருவருப்பான தோல்விதான்.
எனக்கு இதில் சந்தேகமே இல்லை.
சக மனித உயிரைவிட எப்படி நாய்களா சாதியும் சாமியும் பெரிதாக இருக்க முடியும் என்று எளிதாக கேட்க முடிந்தாலும் தீர்வுகள் கேள்வியில் இல்லை.

இதுபோன்று  உயிர்களை  சாதியின்  பெயரால் காவு  வாங்கும் கலாச்சாரம் நமக்கு தேவையே இல்லை. அப்படி ஒரு மரபு இருக்க வேண்டும் என்றால் அது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது.

என்னளவில் என்ன செய்ய முடியுமோ அதை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வருகிறேன்.

அது சரி நீ என்ன பண்ற என்கிறீர்களா?

அது இன்னொரு முறை இன்னொரு இடத்தில் வரும்.

Comments

 1. அருமையான பதிவு...நானும் எழுத நினைத்து எழுதி என்ன செய்தோம் என்ற ஒரு வருத்தம் இயலாமை, ஆதங்கம் ஆட்கொள்ள, விட்டுவிட்டேன்.

  //இதுபோன்று உயிர்களை சாதியின் பெயரால் காவு வாங்கும் கலாச்சாரம் நமக்கு தேவையே இல்லை. அப்படி ஒரு மரபு இருக்க வேண்டும் என்றால் அது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது.// உண்மை...சேர்த்துக் கொள்ளுங்கள் எங்களையும் உங்கள் கருத்தில்..

  நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம், சுதந்திர நாடு??!!! ஹும்... கொலை செய்வதற்கும், சுடுவதற்கும், சாதி பேசவும், சாதிகளால் அரசியல் நடத்தவும் சுதந்திரம் அதிகமாகவே உள்ளது அதனால் சுதந்திர நாடு...ஹும்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தோழர்
   ஏற்கனவே இணைத்து விட்டோம்

   Delete
 2. எத்தனை நாள் தொடருமோ? இந்த கவுரவ கொலைகள்?

  ReplyDelete
  Replies
  1. மாற்று குறித்து சிந்திக்க செயல்பட வேண்டும் தோழர்

   Delete
 3. வலுவான சிந்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அய்யா

   Delete
 4. ஐந்து வெறி நாய்கள் சூழ்ந்து நிகழ்த்திய வன்முறையை நூறுக்கும் மேற்பட்டோர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததுதான் மிச்சம் . படு கொலை நிகழ்த்தி விட்டு சாவகாசமாய் அந்தக் கும்பல் தப்பித்ததை பத்திரிக்கைகளில் தெரிந்து கொண்டேன். கையில் கிடைத்ததை கொண்டு வெறியர்களை தாக்குவதற்கு யாரும் முயலவில்லை. வேடிக்கை மனிதர்கள் ....வேடிக்கை மட்டும்தானே பார்க்க முடியும். பெரும் பாதகம் கண நேரத்தில் நடந்து முடிந்தது. சாதி மீண்டும் கொலை வெறி ஆடிவிட்டு போய்விட்டது. நாடு எங்கே போகிறது?

  ReplyDelete
  Replies
  1. நான் மூன்று பேர் வண்டியில் போவதைப் பார்த்தேன் நீங்கள் நுட்பமாக ஐந்து பேர் என்று சொல்கிறீர்கள்..
   நான் உன்னித்து பார்க்கவும் விரும்பவில்லை
   கற்காலம்,
   இதுதான் இந்துத்துவம்

   Delete
 5. //உயிர்களை சாதியின் பெயரால் காவு வாங்கும் கலாச்சாரம் நமக்கு தேவையே இல்லை. அப்படி ஒரு மரபு இருக்க வேண்டும் என்றால் அது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது// - இப்படி ஒரு பண்பாடோ மரபோ நமக்கு இல்லை தோழரே! கண்ணோடு கண் நோக்கிக் காதலுற்று, தோழி மூலம் குறிப்பறிந்து, பறவைகள் மூலம் தூது விட்டு, செம்புலப் பெயல் நீர்போல் அன்புடை நெஞ்சங்கள் தம் விருப்பப்படி கலத்தலும் வாழ்தலுமே நம் மரபு, நம் பண்பாடு. அதில் சாதி ஏது, சமயம் ஏது? இப்பொழுது நடப்பது சாதி எனும் திணிக்கப்பட்ட அடையாளத்தின் உச்சக்கட்ட விளைவு! ஆனால், விடக்கூடாது இதை. தங்களைப் போன்றவர்கள் இப்படிச் சலித்துப் பேசக்கூடாது. தொடர்ந்து போராடுவோம்!

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...