எளிது எளிது ஆங்கிலம் ஞானசேகரன் அவர்களின் முகநூல் பதிவு 2

முன்னோடி  ஆசிரியர் திரு ஞானசேகரன்  அவர்களின்  முகநூல் பகிர்வு  ஒன்று

August என்பதற்கும் august என்பதற்கும் வித்தியாசம் உண்டா?
உண்டு. This is called Capitonym. (euponym, antonym, synonym, homonym எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.)



ஒரு வார்த்தை (August என்று) Capital Letter- ல் தொடங்க, மற்றொன்று ‘august’ என்று Capital Letter இல்லாமல் தொடங்குகிறது. இதுபோன்ற வார்த்தைகளை ஆங்கிலத்தில் Capitonym என்பார்கள்.
அதாவது முதல் எழுத்தை Capital ஆக மாற்றிவிட்டால் அந்த வார்த்தையின் அர்த்தம் மாறிவிடும்.
சில சமயம் உச்சரிப்புகூட மாறிவிடும். August என்பது ஒரு மாதத்தின் பெயர். ரோமானியச் சக்கரவர்த்தி Augustus என்பவர் பெயரிலிருந்து உருவானது.
ஆனால், august என்ற வார்த்தைக்குப் பொருள் மரியாதைக்குரிய மற்றும் கவரக்கூடிய என்பதாகும்..
அதாவது Respected, distinguished, renowned, prestigious போன்ற வார்த்தைகளுக்குச் சமமானது. I was in an august company என்றோ It was an august performance என்றோ குறிப்பிடலாம்.
வேறொரு மாதம் கூட இந்த வகையைச் சேர்ந்ததாகிறது. March என்ற வார்த்தை வருடத்தின் மூன்றாவது மாதத்தைக் குறிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அதே நேரம் march என்பது ராணுவத்தில் நடப்பதுபோல சீரான இடைவெளிகளில் நடப்பது என்று அர்த்தம்.
சில சமயம் ஒரு குறிப்பிட்ட பொருளை அதே போன்ற பிற பொருள்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும் Capitonym பயன்படும். பிரபஞ்சத்தில் பல சூரியன்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைக் குறிப்பிட sun என்றும் பூமி போன்ற கிரகங்கள் சுற்றும் சூரியனை Sun என்றும் குறிப்பிடுவார்கள். அதேபோல பூமியைச் சுற்றும் நிலவுக்கு மட்டும் Moon என்று ஸ்பெஷல் அந்தஸ்து. பிற கிரகங்களைச் சுற்றும் பொருள் moon. இப்படி வானியல் நூல்களில் குறிப்பிடுவதுண்டு.
Church என்றால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகக் கூடி இருக்கும் மக்கள் குழு. முதல் எழுத்தைச் சிறியதாக்கி church என்றால் அது ஒரு கட்டிடத்தை மட்டுமே குறிக்கிறது.
Liberal என்றால் அது லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்களைக் குறிக்கிறது. மாறாக liberal என்றால் அது தாராளமயமான என்பதைக் குறிக்கிறது.
Cancer என்பது ஒரு குறிப்பிட்ட வானியல் கூட்டம் அல்லது ராசிகளில் ஒன்று. புற்றுநோயைக் குறிக்க cancer என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். ( தூள் படத்தின் ரீமா சென் விவேக் மயில்சாமி நினைவுக்கு வருகிறார்களா?)
Titanic என்றால் நீரில் மூழ்கிய அந்தப் பிரம்மாண்டக் கப்பலைக் குறிக்கும் என்பது தெரிந்திருக்கும். முதல் எழுத்தைச் சிறியதாக்கி titanic என்றால் பிரம்மாண்டமான என்று மட்டுமே பொருள். அதே சமயம் capital அல்லாத வார்த்தைகளை வாக்கியத்தின் தொடக்கத்தில் அமைப்பது மா.....பெரும் தவறு.
இந்த வாக்கியம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
A turkey may march in Turkey in May or March!

Comments

  1. இது இன்று நான் படித்த புது செய்தி. முக நூலில் பதிவு செய்த உங்கள் நண்பருக்கு நன்றி. அதைப் பதிவு செய்த உங்களுக்கும் நன்றி . உங்களிடமிருந்து நிறைய புதிதாய் கற்கலாம் போலிருக்கிறதே!

    ReplyDelete
  2. ஆங்கில சுவாரசியங்கள். வாக்கியத்தின் வார்த்தை ஜாலம் அருமை அருமை

    ReplyDelete
  3. ஆகா
    அறியாததை அறிந்து கொண்டேன் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  4. It may rain in May.
    உங்களுக்குத் தெரிந்திருக்கும் இந்த ஆங்கிலக் கவிதை வரிகள். ரிச்சார்ட் லீடரின் "த வேர்ட் சர்க்கஸ்"
    In August, an august patriarch
    Was reading an ad in Reading, Mass. (Reading, Massachusetts) ரீடிங்க் என்பது ஒரு சிறிய நகரம் மசாசுசெட்ஸ் மாகாணத்தில் .-அமெரிக்கா..
    Long-suffering Job secured a job
    To polish piles of Polish brass.

    Bill hasn't paid the bill yet.

    Nothing will be lent by some people during Lent.

    Frank is not frank!

    இப்படி நிறைய சொல்லலாமோ கஸ்தூரி. அருமையான பதிவு. தங்கள் மாணவர்களையும் வாசிக்கச் சொன்னீர்களா கஸ்தூரி மிகவும் உபயோகமாக இருக்கும்.

    இது போன்று தொடருங்கள்...

    ReplyDelete

Post a Comment

வருக வருக