இற்றைகள்

1
விரையும் பேருந்தின்
ஜன்னலில் விரிந்த உலகை 
தவிர்த்து
அலைபேசியின் 
மெய்நிகர் உலகில்
விருப்பக் குறியிட்டு
பயணிக்கும்
தலைமுறை
இழந்தது என்ன?

2
தலைமையை விமர்சிப்பது ஜனநாயக உரிமை அது மறுக்கப்படும் இடங்களில் சர்வாதிகாரத்தின் கோர நிழல் விரிகிறது. 
அதே சமயம் 
விமர்சனங்கள் மாண்போடு இருக்கவேண்டும், புரியாதவர்கள் இந்த வார ஆனந்த விகடன் போட்டூன் பார்க்கவும் ... 
இது பொது வாழ்வில் இருக்கிற ஆசிரிய சங்கங்களில் வீச்சுடன் செயல்படும் அனைவருக்குமே பொருந்தும்

3
நாட்கள் பூத்துக் கொண்டிருக்கின்றன
மலர்களாகவே
வண்ண இதழ்களை
ரசிக்காத
அவன்
முட்கள் குறித்தே
வருந்துகிறான்
இனிய காலை வணக்கம்
வாருங்கள் இதழ்களை ரசிப்போம்
4
சிறகுகள் 
சித்தித்தாலும்
பறக்க
நினைப்பதில்லை
பன்றிகள்

5
வணக்கம்
கல்வியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஓர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி என்பது எவ்வளவு பெரிய வரம் !
பல்மருத்துவக் கல்லூரியும் வருகிறதாமே..
நன்றி நன்றி
தமிழக முதல்வருக்கு
கூடவே இன்னொரு வேண்டுகோளும்
பொன்னமராவதி பகுதியில், கரம்பக்குடி பகுதியில் மகளிர் கல்லூரிகளும் வரவேண்டியதும்..
தகவலை முதலில் சொன்ன மருத்துவர் சலீம் அவர்களுக்கு நன்றிகள்
இந்த நாள் இனிய நாள்

6
ஒருமுறை புதுகை கல்வி வரலாற்றை மொழிபெயர்க்க பணிக்கப்பட்டேன். சில வரிகள் என்னை வியப்பில் தள்ளின.
அன்று நாடுமுழுதும் இஸ்லாமியரின் கல்வி அறிவு பொதுவாக அதிகமாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தது.
தற்போதைய தமிழக நிலையை வைத்து ஒரு தட்டைப் புத்தியில் இருந்த எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.
தொடர்ந்து வாசிக்க வாசிக்க விரிகிறதோர் சித்திரம்.
கிலாபத் இயக்கத்தின் பின்னரும், ஒத்துழையாமை இயக்கத்தின் பின்னரும் இவர்களின் கல்வி மறுப்பின் துவக்கம் அதிகப்பட்டு இப்போது இருக்கிற நிலையை வந்தடைந்துள்ளார்கள்.
இவர்களை கல்வி பால் திருப்ப நமது அரசுகள் ஊக்குவிக்க வில்லை
இன்னொரு சமூக உளவியல் காரணமும் இருக்கிறது...
ஆங்கில வருகை வரை ஆட்சியை ருசித்த, அதிகாரத்தை சுவைத்த இவர்களின் பீடு சுக்குநூறாய் உடைந்ததும், கடைசி சக்கரவர்த்தி நாடுகடத்தப் பட்டதும் ஒரு சமூக உளவியல் காரணியாகி சுய பச்சாதாபத்திலும் கழிவிரக்கத்திலும் இவர்களைத் தள்ளியுள்ளதாக நான் கருதுகிறேன்.
வெறுப்பை இவர்கள் கல்வி மீது காட்டியிருக்கலாம்.
இப்படியே நூல் பிடித்துப் போகும் எனது சிந்தனை திருவள்ளுவனும், கணியனும் ஏன் தாழ்த்தப் பட்டோர் பட்டியலில் இருக்கிறார்கள் என்பதில் போய் முடிகிறது...
சிந்திக்கும் மனதில் சித்திரங்கள் எழும்
7
இன்னும் வரலை IFB சர்வீஸ் .....
இந்தியாஎன்றால் தனது சேவையைக் குறைத்துக் கொள்ளுமோ நிறுவனங்கள் ...
இருபது நாட்கள் இன்றோடு

8
Selva Kumar அவர்களின் கவிதை நூல் விமர்சனம் ஒரு கவிதையாகவே இருந்தது.
கலைஇலக்கிய பெருமன்றத்தின் முக்கிய புள்ளி என்றாலும் என்போன்ற வாசகர்களுக்கு இவ்வளவுநாள் இவர் எங்கு இருந்தார் என தெரியாது.
அறிமுகப்படுத்திய வீதிக்கு நன்றி ...
அப்புறம் செல்வா இப்போது ஒரு வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறார் ...
எழுத்தின் நடைக்கு நான் அடிமையாகிவிடுவேன் போல் இருக்கிறது ...
ராச நீங்க இருக்க புதுக்கோட்டையில்தான் நானும் இருந்தேனா
சந்தேகமாக இருக்குப்பு

9
ஒருநாளாவது 
மூலவரிடம் நிற்கலாமா 
ஏங்குகிறார் 
தலித் அர்ச்சகர் 
ஒருநாளாவது 
கடவுளாவோமா
ஏங்குகிறார்
மூலவர்

10
பணிக்குக் காத்திருக்கிறார்கள் 
தலித் அர்ச்சகர்கள் 
காத்திருக்கின்றன 
கற்சிலைகளும் 
கடவுள்களாக
11
கவிஞர் தனிக்கொடி அவர்களின் மேடை பேச்சை நேற்றுதான் கேட்டேன் பத்தாயிரம் மணி நேரப் பயிற்சிதான் நினைவில் வந்தது.வெகு இயல்பாக லாவகமாக மேடையில் பேசுபவர்களை கண்டு பொறாமைப்படும் குணம் என்றுதான் போகுமோ..

12
இன்னும் கொஞ்சம் வீதி ..
நேற்றைய நிகழ்வில் ஒரு கவிதைப் போட்டி நடத்தப் பட்டது கவிஞர் ஒருவரின் ஆலோசனை இது.
தணலில் வளரும் சாதி
மாங்கு மாங்குனு எழுதினேன் தேர்வாகவே இல்லை 
நட்டு தேர்வாகி பரிசுபெற்றான் ...
(http://uplanderstn.blogspot.in/)
நட்டு என் மாணவர் ...
வீதிக்கு நன்றிகள்
பின்னர் இது குறித்து அவன் சொன்னது இன்னும் ஹைலைட்
ஆமா
நீங்க கமல் மாதிரி எதாவது புரியாம எழுதியிருபீங்க ...
கவிதையா இதுன்னு தூக்கிப் போட்டுருப்பாங்க ..
பசங்க இப்படிதான் பட்டுன்னு போட்டு உடைச்சுருவாங்க
கவிதைப் போட்டியும், சிறப்பு விருந்தினர்களுக்கு வழக்கப் பட்ட ஷீல்டும் நல்ல ஆலோசனை...
போட்டிகள் தொடர்ந்து நடக்கும் என்று நினைக்கிறன்

13
Vaikarai Vaikarai ஒரு பெரும் வீச்சுக்கொண்ட கவிஞர் என்பதையும் தாண்டி இலக்கிய நிகழ்வுகளை ஒன்றிணைப்பதிலும் அவற்றை மேம்படுத்துவதிலும் நுட்பங்களை செய்கிறார்.
வாழ்த்துக்கள் கவிஞரே
#வீதி நினைவுகள்

Comments

  1. 5, 6 ம் நல்ல தகவல்கள். தெரியாத தகவல்கள்

    ReplyDelete

Post a Comment

வருக வருக