அழுத்தங்கள் ஆயிரம்

தேர்வுக் காலம் மாணவர்களை அழுத்துவதைவிட பெற்றோரை அழுத்துவது அதிகம் என்பதே நடைமுறை உண்மை. தனியார் பள்ளிகளில் ஒழுக்கம் பேணப்படும் பள்ளிகளில் ஆசிரியருக்கு அழுத்தம் குறைவு. அவர்கள் சந்திக்கும் அழுத்தம் பள்ளி நிர்வாகத்தில் இருந்து மட்டுமே இருக்கும். மாணவர்கள் பள்ளி விதிகளுக்குக் கட்டுப்பட்டு பாடத்தை ஒழுங்காக படித்து வந்துவிடுவார்கள். 



ஆனால் அரசுப் பள்ளிகள் அப்படி அல்ல. ஒரு நாள் கூட மாணவர்கள் வீட்டுபாடம் செய்வதே இல்லை! கல்வி என்பது பள்ளியின் வளாகத்தில் துவங்கி வளாகத்திலேயே முடிந்துவிடும் என்று நினைகிறார்கள் அவர்கள். போதக் குறைக்கும் வீட்டில் எப்போதும் சண்டையிடும் பெற்றோர்கள். காரணம் தனியே சொல்லவேண்டியதில்லை. மதுப் பழக்கம்தான். 

ஆறுமணிக்கு மேல் இன்று தமிழகத்தில் யாரிடமும் பேசவதோ, விவாதிப்பதோ அபாயகரமானது. ஆம் அப்படி ஊடுருவியிருக்கிறது சாராயம் நமது மாநிலத்தை. கிராமங்களில் இது இன்னும் கூடுதலாய். எனவே நன்கு படிக்கும் மாணவ மாணவியர் கூட வீட்டில் படிக்க முடிவதில்லை. 

இதில் ஏண்டா வீட்டுப் பாடம் செய்யல, தேர்வுக்குப் படிக்கலை என்று கேட்பது ஆசிரியரின் கடமையாக இருந்தாலும் நிச்சயமாக அது அறமில்லை. சூழல் இப்படி இருக்கையில் நூறு சத கேரட்டுக்கு பின்னால் ஓடும் முயல்களால் ஆகியிருக்கிறது சிஸ்டம். 

சில ஆண்டுகளுக்கு முன்னர் மறுநாள் தேர்வுக்கு சிறப்பு வகுப்பு இரவுவரை நீண்டது. திடீர் என ஒரு மாணவர் குறைந்து விட்டார்! இரவு நேரம் மாணவரைக் காணவில்லை என்றால்? 

தேர்வு அக்கரையில் பயின்றுகொண்டிருந்த அவர் அருகமை தனியார் நர்சரிப் பள்ளியின் ஆண்டுவிழா கொண்டாட்டங்களை பார்க்கப் போய் விட்டார். மெல்ல வண்டியை எடுத்துக் கொண்டு போய் அவரை பிடித்துக் கொண்டு வந்து வகுப்பில் அமர வைக்கிற வரை பதட்டம்தான். 

இன்னொரு நாள் இன்னொரு மாணவர் மாயாவியானர். சரி என அவனது வீட்டிற்கு போனால் வாய் நிறைய கறியுடன் வெளியில் வந்தார் அவர். என்னடா இப்படி என்றால் கிளிப்பிள்ளை மாதிரி சார் கறிச்சோறு கறிச்சோறு என்று மட்டுமே பித்தம் பிடித்தவன் மாதிரி சொல்லிக் கொண்டிருந்தார். 

சவால் மாணவர்களின் நிலை இப்படி இருக்க ஊடகங்களும், இணயவாசிகளும் தொடர்ந்து அரசுப் பள்ளிகளை நிந்தித்து வருவதை அவர்கள் பிறவிக் கடன் போல செய்துவருகிறார்கள். 

அவர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் 

அய்யா சாமிகளா முடிஞ்ச ஏதாவது ஒரு பள்ளி மாணவருக்கு மாதம் ஒரு புத்தகத்தை அனுப்புங்கள். இல்லைனா வேற பொழப்ப பாருங்க. 

சவாலாக இருக்கும் மாணவர்கள் சிலர் எனக்குத் தந்த அனுபவங்களை குறித்து தொடர்ந்து எழுதுவேன்.  

அன்பன் 
மது

Comments

  1. அரசுப் பள்ளிகளின் நிலை பற்றி இன்னும் எழுதுங்கள் மது.....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தோழர்

      Delete
  2. அனுபவங்களை அறியக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி முனைவரே

      Delete
  3. இன்னும் எழுதுங்கள் சார்...

    ReplyDelete
  4. ஆனால் அரசுப் பள்ளிகள் அப்படி அல்ல. ஒரு நாள் கூட மாணவர்கள் வீட்டுபாடம் செய்வதே இல்லை! கல்வி என்பது பள்ளியின் வளாகத்தில் துவங்கி வளாகத்திலேயே முடிந்துவிடும் என்று நினைகிறார்கள் அவர்கள். போதக் குறைக்கும் வீட்டில் எப்போதும் சண்டையிடும் பெற்றோர்கள். காரணம் தனியே சொல்லவேண்டியதில்லை. மதுப் பழக்கம்தான்.

    //ஆறுமணிக்கு மேல் இன்று தமிழகத்தில் யாரிடமும் பேசவதோ, விவாதிப்பதோ அபாயகரமானது. ஆம் அப்படி ஊடுருவியிருக்கிறது சாராயம் நமது மாநிலத்தை. கிராமங்களில் இது இன்னும் கூடுதலாய். எனவே நன்கு படிக்கும் மாணவ மாணவியர் கூட வீட்டில் படிக்க முடிவதில்லை. // உண்மை உண்மை..இதைப்பற்றி நானும் மைதிலியும் கூட நிறைய பேசியிருக்கிறோம்.

    //சவால் மாணவர்களின் நிலை இப்படி இருக்க ஊடகங்களும், இணயவாசிகளும் தொடர்ந்து அரசுப் பள்ளிகளை நிந்தித்து வருவதை அவர்கள் பிறவிக் கடன் போல செய்துவருகிறார்கள். //

    பளீர்! யதார்த்தம் இதுதானே! நல்ல அறை இது! எழுதுங்கள் ப்ளீஸ் கஸ்தூரி...பலருக்கும் இது சென்றடைய வேண்டும்.

    புத்தகங்கள் அனுப்புவதை விட நான் நினைப்பது நம்மால் முடிந்த அளவு அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தல். வீட்டருகில். நான் அப்படித்தான் செய்து கொண்டிருந்தேன். இத்தனைக்கும் அவர்களை அட்ராக்ட் செய்ய நமது அரசு செய்யும் இலவசங்கள் போல சில சின்ன சின்ன ட்ரீட் கொடுத்து ஊக்குவித்து...ஆனால் பாருங்கள் கடைசியில் ட்ரீட் மட்டுமே வென்றது...நான் மீண்டும் தேடிப் போனால் அவர்கள் பள்ளியிலிருந்தே நின்றுவிட்டார்கள். மனம் வேதனை அடைகிறது இங்கு நகரத்திலேயே இப்படி என்றால் கிராமங்களைக் கேட்க வேண்டுமா....

    கீதா

    ReplyDelete
  5. நாம் படித்த காலத்தில் முதல் வகுப்பு மாணவனைக் கூட பெயில் ஆக்குவார்கள். அடுத்தடுத்து அவன் கல்வியில் சிறந்தவனாக உருவாகி விடுவான் என்பதே அதில் மறைந்திருந்த உண்மை . இப்போது எட்டாம் வகுப்பு வரை பெயில் ஆக்கக் கூடாது என்ற அரசின் கொள்கையால் மழுங்கிப் போன மாணவர்கள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தன் பெயரைக் கூட ஆங்கிலத்தில் சரியாக எழுதத் தெரியாத மாணவர்கள் பத்தாம் வகுப்பிலும் இருப்பதாக கேள்வியுற்றிருக்கிறேன் . இந்த நிலையில் 100 சத தேர்ச்சியை மட்டுமே இலக்கு ஒன்றாக அரசும் கல்வித்துறையும் கையில் எடுத்துக் கொண்டு ஆசிரியர்களை பாடாய்ப் படுத்துகின்றன.

    ஆசிரியரைப் பார்த்து மாணவர் பயந்த நிலை மாறி மாணவரைப் பார்த்து ஆசிரியர் பயப்படும் காலம் வந்துள்ளதால் கல்வி சரிவைக் கண்டு வருகிறது. அரசு பள்ளிக் கூட ஆசிரியர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் மலையேறி விட்டது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக